search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தக்காளி விலை கிடு,கிடு உயர்வு
    X

    தக்காளி விலை கிடு,கிடு உயர்வு

    • தக்காளி வரத்து குறைந்ததை அடுத்து விலை அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
    • 26 கிலோ தக்காளி கூடை 1500 ரூபாய்க்கும் வாங்கப்படுகிறது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு திருமல்வாடி, பெல்ரம்பட்டி, மாரண்டஅள்ளி, ஏரி பஞ்சப்பள்ளி, பெரியானூர், பாளையம், பென்னாகரம், அரூர் பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர்.

    மாவட்டத்தில் விளையும் தக்காளிகளை ராயக்கோட்டை, ஜிட்டான்டஅள்ளி, வெள்ளிச்சந்தை, பாலக்கோடு, கம்பைநல்லூர், மொரப்பூர், இருமத்தூர் உள்ளிட்ட இடங்களில் தக்காளி மண்டி செயல்பட்டு வருகிறது.

    தருமபுரி மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்படும் தக்காளிகளை சென்னை, பெங்களூர், கோவை, உள்ளிட்ட பகுதிகளுக்கு வியாபாரிகள் தினசரி வாங்கி செல்கின்றனர்.

    அதேபோல் உள்ளூர் வியாபாரிகளும் மண்டிகளில் இருந்து தக்காளியை வாங்கி செல்கின்றனர். கடந்த மாதம் 15 கிலோ கூடை தக்காளி 400 முதல் 450 வரை விவசாயிகள் இடத்தில் கொள்முதல் செய்யப்பட்டது. இன்று 15 கிலோ தக்காளி கூடை 800 ரூபாய்க்கும் 26 கிலோ தக்காளி கூடை 1500 ரூபாய்க்கும் வாங்கப்படுகிறது.

    மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்ட தக்காளி சில்லறையில் கிலோ 68 முதல் 70 வரை உழவர் சந்தையில் இன்று விற்பனை செய்யப்பட்டது. வெளிமார்க்கெட்டில் 85 முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

    தக்காளி வரத்து குறைந்ததை அடுத்து விலை அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இது குறித்து வியாபாரிகள் கூறுகையில் தற்போது ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருவதால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் வெகுவாக வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்வுக்கு காரணம் எனத் தெரிவித்தனர்.

    Next Story
    ×