என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகளுக்கு பரிசு"

    • புதிய வேளாண்மை கருவி கண்டுபிடிப்புகளுக்கு ரூ.1 லட்சமும் என வேளாண்மைத்துறைக்கு இந்த திட்டத்தில் மொத்தம் ரூ.2 லட்சம் மட்டும் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
    • போட்டியில் கலந்து கொள்ளும் உள்ளூர் தொழில்நுட்பமானது அனைத்து விவசாயிகளும் எளிதில் கடைபிடிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி, வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

    தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் மாநில அளவில் சிறப்பாக செயல்படும் விவசாயிகளுக்கு விருது வழங்கிடும் திட்டமானது அறிவிக்கப்பட்டு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின்படி புதிய வேளாண் தொழில் நுட்ப உள்ளூர் கண்டுபிடிப்புக்கு ரூ.1 லட்சமும், புதிய வேளாண்மை கருவி கண்டுபிடிப்புகளுக்கு ரூ.1 லட்சமும் என வேளாண்மைத்துறைக்கு இந்த திட்டத்தில் மொத்தம் ரூ.2 லட்சம் மட்டும் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

    மேலும் இயற்கை விவசாயத்தில் சிறந்து விளங்கும் விவசாயிக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், இரண்டாவது பரிசாக ரூ.60 ஆயிரமும், மூன்றாவது பரிசாக ரூ.40 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது. வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிக்கு ரூ.2 இலட்சம் பரிசாக வழங்கப்பட உள்ளது.

    இத்திட்டத்தில் தகுதியுடைய விவசாயிகள் பெருமளவில் கலந்து கொள்ள கேட்டு கொள்ளப்படு கிறார்கள்.

    இத்திட்டத்தில் பங்கு பெற விரும்பும் விவசாயிகள் தங்களது பெயரை உழவன் செயலி மூலம் பதிவு செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சம்மந்த ப்பட்ட வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வழங்க வேண்டும்.

    இதற்கான பதிவு கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். விவசாயிகள் தங்கள் சாதனை குறித்த விவரங்களை மாவட்ட அளவிலான தேர்வுக்குழுவிடம் உரிய ஆவணங்களுடன் விளக்க வேண்டும்.

    போட்டியில் கலந்து கொள்ளும் விவசாயியின் கண்டுபிடிப்பானது அவரது சொந்தக் கண்டுபிடிப்பாக இருக்க வேண்டும்.

    இதற்கு முன்னர் இந்த கண்டுபிடிப்பு அல்லது தொழில்நுட்பம் வேறு எந்த போட்டியிலும் கலந்து கொண்டு பரிசு எதுவும் பெற்றதாக இருக்கக் கூடாது.

    விருதுக்கு சமர்ப்பிக்கப்படும் இயந்திரம் வேறு ஒரு தனிநபருடைய அல்லது ஒரு கண்டுப்பிடிப்பின், தயாரிப்பின் அசலாகவோ, சாயலாகவோ, மேம்படுத்தப்பட்டதாகவோ இருக்கக்கூடாது.

    இதற்கான குறிப்புரை வேளாண் பொறியியல் துறையின் மூலம் பெறப்பட வேண்டும்.

    போட்டியில் கலந்து கொள்ளும் உள்ளூர் தொழில்நுட்பமானது அனைத்து விவசாயிகளும் எளிதில் கடைபிடிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

    அது போல உள்ளூர் கண்டுபிடிப்பானது விவசாயிகளால் எளிதில் உபயோகப்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும்.

    தனிப்பட்ட விவசாயி களின் தொழில் நுட்ப கண்டுபிடிப்பை மதிப்பாய்வு செய்து இதற்கான குறிப்புரை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விஞ்ஞானிகளிடம் பெறப்பட வேண்டும்.

    போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாள ர்கள் உள்ளூர் தொழில் நுட்ப கண்டுபிடிப்பு விவசா யிகளின் வேளாண்மை செலவினத்தைக் குறைக்க கூடியதாகவும், விலை குறைவானதாகவும், அதிக விளைச்சலை தரக்கூடியதாகவும் பயன்படுத்தக் கூடிய கருவியாகவும் இருக்க வேண்டும்.

    வெற்றியாளர்களை அறிவிப்பதில் வேளாண்மை இயக்குநர் தலைமையிலான மாநில அளவிலான குழுவின் முடிவே இறுதியானது என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் சாந்தி, தெரிவித்துள்ளார்.

    ×