என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோட்டார் சைக்கிள் மோதி கிளீனிர் சாவு
    X

    மோட்டார் சைக்கிள் மோதி கிளீனிர் சாவு

    • அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அவர் மீது மோதியது.
    • அவரை பரிசோதித்த டாக்டர்கள் சுதேஷ்குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பொம்மரத்தாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகன் சுதேஷ்குமார் (வயது17). இவர் சுற்றுலா பஸ்சில் கிளீனராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று சுதேஷ்குமார் சோகத்தூர் கூட்ரோடு அருகே பெட்ரோல் வாங்க நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சுதேஷ்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சுதேஷ்குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×