என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • திடீரென்று அங்கு வந்த கிராம மக்கள் வண்டியை சிலர் வழி மறித்தனர்.
    • வனகாப்பாளர் ரகுராமன் ஒகேனக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியில் 3 காட்டு யானைகள் வனத்துறையினருக்கு உலா வருவதாக தகவல் கிடைத்தது.

    உடனே மாவட்ட வனசரக வனகாப்பாளர் ரகுராமன் (வயது35) தலைமையில் பிரதிவ்ராஜ், ராமலிங்கம், அய்யண்ணன், ராஜபதி, செல்வம் ஆகிய வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது வனத்துறையினர் பென்னாகரம் அருகே தேவனூரை அடுத்த பூதிபட்டி பிரிவு சாலையில் ஜீப்பில் ரோந்து சென்றபோது திடீரென்று அங்கு வந்த கிராம மக்கள் வண்டியை சிலர் வழி மறித்தனர்.

    அப்போது கிராம மக்கள், மீண்டும் இந்த பகுதியில் யானைகள் வந்தால், அந்த யானைகளை சுட்டு கொல்லுவோம் அல்லது மின்சாரம் பாய்ச்சி கொல்லுவோம் என்றும், வனத்துறையினரை ஆபாசமாக திட்டியும், மிரட்டல் விடுத்தனர்.

    இதுகுறித்து வனகாப்பாளர் ரகுராமன் ஒகேனக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் போலீசார் வனத்துறையினரை மிரட்டியதாக பூதிபட்டியைச் சேர்ந்த அல்லிமுத்து (50), ராம சந்திரன் (45) உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார்.
    • அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே புனிதவதி இறந்து விட்டார் என்று தெரிவித்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பெரும்பாலை அருகே சாமத்தாள் கிராமத்தைச் சேர்ந்தவர் முனிராஜ். இவரது மனைவி புனிதவதி (வயது26).

    இவர் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். இதனை கண்ட உறவினர்கள் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே புனிதவதி இறந்து விட்டார் என்று தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த பெரும்பாலை போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு சென்று புனிதவதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து புனிதவதி என்ன காரணத்திற்காக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விரதமிருந்த ஏராளமான பக்தர்கள் மேல தாளம் முழங்க கஞ்சி கலயத்தை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக சென்று கோவிலை வந்தடைந்தனர்.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம், அரூர் அருகே தரிப்பள்னி ஏழுமலை நகரில் சேலத்து மாரியம்மன் கோவில் உள்ளது. சுற்றுவட்டாரத்தில் பிரசித்திபெற்ற இக்கோயிலின் நடப்பாண்டு ஆடிமாத திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது.

    இதனை தொடர்ந்து அம்மனுக்கு மூன்று கால பூஜை நடைபெற்றது. கடந்த 1-ம் தேதி ஆடி பவுணர்மி அன்று அம்மனுக்கு கூல் கூற்றும் நிகழ்ச்சி நடந்து.

    இதனை தொடர்ந்து நேற்று திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கஞ்சி கலய ஊர்வலம் நடைபெற்றது. இதில் காப்புகட்டி விரதமிருந்த ஏராளமான பக்தர்கள் மேல தாளம் முழங்க கஞ்சி கலயத்தை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக சென்று கோவிலை வந்தடைந்தனர்.

    இதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தருமபுரி ‌கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அமைதி பேரணி நடைபெற்றது.
    • தி.மு.க.வினர் கலைஞர் அறிவலாயத்தில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    தருமபுரி,

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கருணாநிதியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    நவீன தமிழகத்தின் சிற்பி முத்தமிழ் அறிஞர், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அமைதி பேரணி நடைபெற்றது. தருமபுரி நகரசெயலாளர் நாட்டான் மாது தலைமையில் ராஜகோபால் கவுண்டர் பூங்காவிலிருந்து தொடங்கிய அமைதி பேரணி புறநகர் பஸ் நிலையம் கடைவீதி வழியாக வந்து 4 ரோட்டில் உள்ள அண்ணா சிலை முன்பு அலங்கரிக்கப்பட்ட கருணாநிதியின் உருவ படத்திற்கு தி.மு.க. நிர்வாகிகள் அனைவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    இதைத்தொடர்ந்து தி.மு.க.வினர் கலைஞர் அறிவலாயத்தில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    நிகழ்ச்சியில் மாநில வர்த்தகர்அணி துணை செயலாளர் தரும செல்வன், மகளிர் அணி அமைப்பாளர் முத்துலட்சுமி, மாவட்ட பொருளாளர் தங்கமணி, மாணவர் அணி அமைப்பாளர் பெரியண்ணண், தடங்கம் இளைய சங்கர், மாவட்ட தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கி–ணைப்பாளர் கவுதம் உள்பட பகுதி செயாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் தி.மு.க. தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழகத்தில் மற்ற மாவட்டங்களிலும், கா்நாடக மாநிலத்தில் விவசாயிகள் சின்னவெங்காய விதைப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
    • தருமபுரி உழவர் சந்தையில் கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

    தருமபுரி,

    தமிழ்நாடு முழுவதும் தக்காளி மற்றும் சின்னவெங்காயத்தின் விலை கடந்த சில நாள்களாக தொடா்ந்து அதிகரித்து வந்தது. கா்நாடகத்தில் இருந்து வரத்து குறைந்ததால் சின்னவெங்காயத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, சில்லறை விற்பனையில் கிலோ ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    இந்நிலையில், தற்போது தென்மேற்குப் பருவமழையின் தீவிரம் குறைந்துள்ளதால் தருமபுரி மாவட்டம் மற்றும் தமிழகத்தில் மற்ற மாவட்டங்களிலும், கா்நாடக மாநிலத்தில் விவசாயிகள் சின்னவெங்காய விதைப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

    மேலும் மாவட்டத்தில் விவசாயிகள் சாகுபடி செய்த சின்னவெங்காயம் அறுவடை முடிந்து மார்க்கெட்டிற்கு வர தொடங்கியுள்ளதால் மாா்க்கெட்டுகளுக்கு சின்னவெங்காயம் வரத்து அதிகரித்துள்ளது.

    கிலோ ரூ.180 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த சின்னவெங்காயம், தற்போது தருமபுரி உழவர் சந்தையில் கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

    • தொப்பூர் ஊராட்சியில் ஒன்றிய செயலாளர் கே.பி.மல்லமுத்து கருணாநிதியின் உருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
    • சிவன், மணி, ரமேஷ், மகி, கலையரசன், கார்த்தி, சசிகுமார், பிரபாகரன், தினகரன் மற்றும் கழக உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    தொப்பூர்,

    கருணாநிதி நினைவு நாளையொட்டி இன்று தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி மத்திய ஒன்றியம் தொப்பூர் ஊராட்சியில் ஒன்றிய செயலாளர் கே.பி.மல்லமுத்து கருணாநிதியின் உருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    இதில் கட்சி நிர்வாகிகள் மாவட்ட பிரதிநிதி ராமநாதன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தனபால், ஒன்றிய துணைச் செயலாளர் கலாராணி கண்ணன், ஒன்றிய பொருளாளர் மோகன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வர், சவுளூர் மா.தங்கம், ஜம்பு, வடிவேல், முருகன், கவிராஜ், கிருஷ்ணன், நாராயணன், ராஜேஷ், கண்ணன், பிரபு, செல்வகுமார், சிவகுமார், சிவன், மணி, ரமேஷ், மகி, கலையரசன், கார்த்தி, சசிகுமார், பிரபாகரன், தினகரன் மற்றும் கழக உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.எஸ் சண்முகம் தலைமையில் கருணாநிதி நினைவு நாள் நல்லம்பள்ளி பேருந்து நிறுத்தம் பகுதியில் அனுசரிக்கப்பட்டது.
    • கருணாநிதியின் உருவப்படத்திற்கு கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.எஸ் சண்முகம் தலைமையில் கருணாநிதி நினைவு நாள் நல்லம்பள்ளி பேருந்து நிறுத்தம் பகுதியில் அனுசரிக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    அதனை தொடர்ந்து கட்சிக்காக பல போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்ற கட்சியின் நிர்வா கிகளின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம், மாவட்ட பிரதிநிதி மகேஷ், சின்னபெருமாள், மோகன், ஒன்றிய துணைச் செயலாளர் ரங்கநாதன், அவை தலைவர்கள் வீரமணி, மணி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முத்தமிழ், ஒன்றிய துணை செயலாளர் வெங்கடேசன், கிளை செயலாளர் துரை, மத்திய ஒன்றிய அவைத் தலைவர் மணி, சைக்கிள் ஷாப் மணி, அதியமான் கோட்டை ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தமிழ்நிதி, அன்பரசு, பூக்கடை செந்தில், மாவட்ட தொழிற்சங்க தலைவர் ராஜா, ஒன்றிய கவுன்சிலர் சசிகுமார், வேடியப்பன், ராமன், முனிரத்தினம், மஞ்சுநாத், கிளை செயலாளர் கஜேந்திரன், குறிஞ்சி மாதையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • வாழைத்தோட்டம், கல்கூடஹள்ளி உள்ளிட்ட கிராம பகுதியில் கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களை 2 ஆண் யானைகள் சேதப்படுத்தியது.
    • இரண்டு காட்டு யானைகள் ஒரே இடத்தில் தஞ்சம் அடைந்துள்ளதால் சுற்றுவட்டார கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே அண்ணாமலைஅள்ளி காப்புக்காடு, மோரனஅள்ளி காப்புக் காட்டிலிருந்து தண்ணீர் மற்றும் உணவு தேடி அவ்வப்போது ஊருக்குள் யானைகள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருகிறது.

    இதையடுத்து இன்று அதிகாலை மணியக்காரன் கொட்டாய், வாழைத்தோட்டம், கல்கூடஹள்ளி உள்ளிட்ட கிராம பகுதியில் கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களை 2 ஆண் யானைகள் சேதப்படுத்தியது.

    அந்த யானையின் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடி சென்று பார்த்த போது இரண்டு காட்டு யானைகள் கரும்பு தோட்டத்திற்குள் தஞ்சம் அடைந்து இருந்தது.

    இது குறித்து பாலக்கோடு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் இரண்டு காட்டு யானைகளையும் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இரண்டு காட்டு யானைகள் ஒரே இடத்தில் தஞ்சம் அடைந்துள்ளதால் சுற்றுவட்டார கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    • இன்றுகாலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து அதே அளவு நீடித்து வந்தது.
    • ஒகேனக்கல் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐவர்பாணி ஆகிய அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது.

    ஒகேனக்கல், 

    கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.

    அங்கு கனமழை பெய்து வருவதால் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணைகளில் இருந்து தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதனால் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று மாலை வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

    இன்றுகாலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து அதே அளவு நீடித்து வந்தது.

    ஒகேனக்கல் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐவர்பாணி ஆகிய அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. பரிசலில் பயணம் மேற்கொண்டு சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றின் அழகை ரசித்து பார்த்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்றவாறு அருவியில் விழும் தண்ணீரை பார்த்து ரசித்தனர். பின்னர் இளைஞர்கள் எண்ணைய் மசாஜ் செய்து மெயின் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

    தமிழக-கர்நாடகா எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    • ஏரியில் மீன் பிடிப்பதற்காக தனி நபர் ஒருவர் சட்ட விரோதமாக ஏரியிலிருக்கும் தண்ணீரை ராட்சத மி்ன் மோட்டார் வைத்து வெளியேற்றி வருகிறார்.
    • இது போன்ற செயல்களில் யார் ஈடுபட்டாலும் சம்மந்தப் பட்டவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள பந்தாரஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட கரகப்பட்டி பெரிய ஏரியில் மீன் பிடிப்பதற்காக தனி நபர் ஒருவர் சட்ட விரோதமாக ஏரியிலிருக்கும் தண்ணீரை ராட்சத மி்ன் மோட்டார் வைத்து வெளியேற்றி வருகிறார்.

    எந்த ஒரு அரசு அதிகாரியின் உத்தரவையும் பெறாமல் இவ்வாறு செய்து வருவதால் ஏரி நீரை ஆதாரமாக கொண்டு விவசாயம் செய்து வரும் 300 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்ப–டும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து தனிநபர் மீது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, ஏரி நீரை பாதுகாத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தங்களின் வாழ்வாதராமாக உள்ள கரகப்பட்டி பெரிய ஏரி நீர் ஆதாரத்தை காக்க வேண்டும். இதற்கு தருமபுரி மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என் ஒட்டப்பட்டியை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயி கூறியதாவது:-

    தனிப்பட்ட ஒருவரின் சுயநலத்திற்காக நீர் நிலைகளில் பாதிப்பை ஏற்படுத்தினால் அது கிராமத்தினுடைய விவசாயத்தை, கால்நடை வளர்ப்பை பாதிக்கும்.

    இது போன்ற செயல்களில் யார் ஈடுபட்டாலும் சம்மந்தப் பட்டவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அப்போது தான் இயற்கை வளத்தை காப்பாற்றிட முடியும். கரகம்பட்டியில் உள்ள பெரிய ஏரியில் மீன் பிடிப்பதற்காக தனி நபர் ஒருவர் நீரை வீணாக வெளியேற்றுவதை தருமபுரி மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், விவசாயிகளை ஒன்று திரட்டி, ஆர்பாட்டம், போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தார்.

    • அம்பேத்கர், பெரியார் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • தருமபுரி மத்திய மாவட்ட செயலாளராக பொறுப்பேற்ற பாண்டியனுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாலை அணிவித்தும், பட்டாசு வெடித்தும், கோஷங்கள் எழுப்பியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி மத்திய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தும் பட்டாசு வெடித்து, கோஷங்கள் எழுப்பியும் புதிய பொறுப்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் அறிவிப்பின் பெயரில் புதிதாக மண்டல செயலாளர் மற்றும் மண்டல துணை செயலாளர், மாவட்ட செயலாளர் பட்டியலை கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டார்.

    அந்த அறிவிப்பின்படி தருமபுரியை சார்ந்த பாண்டியன் மத்திய மாவட்ட செயலாளராகவும், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த தமிழ் அன்வர் கிருஷ்ணகிரி, தருமபுரி மண்டல செயலாளராகவும், மோகன் என்கிற தமிழ் வளவன் மண்டல துணை செயலாளராகவும் பொறுப்பு வழங்கி அறிவித்தார். இதன் அடிப்படையில் பொறுப்பேற்ற புதிய நிர்வாகிகள் தருமபுரி நகரில் உள்ள அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தருமபுரி மத்திய மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ள பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தருமபுரி இந்தியன் வங்கி முன்பு இருந்து 4 ரோடு வழியாக ஊர்வலமாக சென்று அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அருகில் உள்ள அம்பேத்கர், பெரியார் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    பின்னர் தர்மபுரி மத்திய மாவட்ட செயலாளராக பொறுப்பேற்ற பாண்டியனுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாலை அணிவித்தும், பட்டாசு வெடித்தும், கோஷங்கள் எழுப்பியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    • அருவியின் பாதுகாப்பு கம்பிகளின் மீது ஏறிய போது நிலை தடுமாறி காவிரி ஆற்றில் விழுந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
    • தொங்கு பாலத்தின் அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பரிசல் ஓட்டிகள் சுற்றுலாப் பயணியை ஆற்றில் அடித்து வருவதை கண்டதும் உடனடியாக அவரை மீட்டனர்.

    ஒகேனக்கல்,

    தமிழகத்தின் முதன்மை சுற்றுலாத் தலமான தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று விடுமுறை நாள் என்பதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்தனர்.

    சுற்றுலாப் பயணிகள் எண்ணை தேய்த்து மெயின் அருவி, காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனர். கடந்த ஆண்டு காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் மெயின் அருவியின் ஒரு பகுதி முற்றிலுமாக சேதம் அடைந்ததால், மறுப்பகுதி மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

    ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் சிலர் தனியார் பார்களில் இருந்து மது பாட்டில்களை வாங்கி கொண்டு தடை செய்யப்பட்ட இடங்களில் மது குடித்து விட்டு காவிரி கரையோரத்தில் ஆபத்தான இடங்களில் குளித்தனர்.

    இந்த நிலையில் நேற்று ஒகேனக்கல்லுக்கு வந்திருந்த சுற்றுலா பயணி ஒருவர் மது போதையில் மெயின் அருவியில் குளித்துக் கொண்டிருக்கும்போது, அருவியின் பாதுகாப்பு கம்பிகளின் மீது ஏறிய போது நிலை தடுமாறி காவிரி ஆற்றில் விழுந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

    அப்போது தொங்கு பாலத்தின் அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பரிசல் ஓட்டிகள் சுற்றுலாப் பயணியை ஆற்றில் அடித்து வருவதை கண்டதும் உடனடியாக அவரை மீட்டு கரையோரப் பகுதிக்கு எடுத்துச் சென்று முதலுதவி செய்து அவசர சிகிச்சைக்காக ஊட்டமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்ற சுற்றுலாப் பயணி குணமடைந்து வீடு திரும்பினார்.

    வார விடுமுறை நாட்க–ளில் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டுமே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு–படுத்தப்பட்டு வருவதாலும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்ப–டும் மெயின் அருவி, தொங்கு பாலம் உள்ளிட்ட பகுதிகளில் போதுமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படாத–தாலும், தனியார் பார்களில் விற்கப்படும் மது–பானங்களை சில பயணிகள் வாங்கி குடித்துவிட்டு இதுபோன்று தவறான செயல்களில் ஈடுபடுவதால் உயிரிழப்பு நிகழ்வுகளுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

    எனவே, அதனை தடுக்கும் விதமாக மெயின்அருவியில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பான முறையில் குளிப்பதற்காக கடினமான தடுப்புகளை ஏற்படுத்த வேண்டும்.

    மேலும், மெயின்அருவி, சினிபால்ஸ் மற்றும் காவிரி ஆற்றங்கரை–யோரம் ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பின் போது போலீ–சார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×