என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • மகளிர் உரிமைத்துறை சார்பில் முதல்-அமைச்சரின் பெண்குழந்தை பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது.
    • முதல்-அமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த 72 பயனாளி களுக்கு இணையவழியில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

    தருமபுரி,  

    முதல்-அமைச்சரின் பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம் இரண்டு பெண் குழந்தைகளுடன் அல்லது ஒருபெண் குழந்தையுடன் அல்லது முதல் பிரசவத்தில் ஒருபெண்குழந்தையும் இரண்டாவது பிரசவத்தில் 2 பெண்குழந்தையும் பிறந்து பெற்றோரில் ஒருவர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொண்ட குடும்பங்களுக்கு ஒரு பெண் குழந்தைக்கு தலா ரூ.25,000 வீதம் வழங்கப்படுகிறது.

    மேலும் ஒரே பெண் குழந்தை எனில் ரூ.50,000 என தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் வைப்புத்தொகை ரசீது வழங்கப்பட்டு, குழந்தைகளுக்கு 18 வயது முடிந்தவுடன் முதிர்வுத்தொகை பெற்று கொள்ளும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின்மூலம் பெண் சிசுக்கொலை தடுக்கப்படு கிறது. பெண் கல்வி ஊக்கு விக்கப் படுகிறது.குழந்தை திரு மணம் தடுக்கப்படுகிறது.

    அதனடிப்படையில் தருமபுரி மாவட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், 2023-2024 ஆம் நிதியாண்டில் முதல்-அமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த 72 பயனாளி களுக்கு இணையவழியில் ஒப்புதல் வழங்கப்பட்டு, விண்ணப்பம் ஏற்பு செய்யப்பட்டு தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை மேம்பாட்டு நிறுவனத்திற்கு அனுப்பி யதற்கான செயல்முறை ஆணைகளை மாவட்ட கலெக்டர் சாந்தி வழங்கி னார்.

    கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் செவ்வாய் கிழமை அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் முதல்-அமைச்சரின் பெண்குழந்தை பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது.

    அதன்படி, நேற்று நடைபெற்ற சிறப்பு குறைதீர் முகாமில் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் விண்ணப்பித்து வைப்புத்தொகை ரசீதுகள் கிடைக்கபெறாமல் உள்ள பயனாளிகள் மற்றும் 18 வயது பூர்த்தியடைந்தும் முதிர்வுதொகை கிடைக்கபெறாமல் உள்ள பயனாளிகள் ஆகியோர் உரிய சான்றுகளோடு ஆஜராகி பயனடைந்தனர்.

    இந்நிகழ்வுகளின் போது, மாவட்ட சமூக நல அலுவலர் பவித்ரா மற்றும் தொடர்பு டைய அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.

    • மத்திய அரசை கண்டித்தும் பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன் நேற்று ஆர்பாட்டம் நடந்தது.
    • கோகுல்ராஜ், நகர செயலாளர் சீனிவாசன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தருமபுரி,  

    தருமபுரி கிழக்கு மாவட்ட தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சி சார்பில் காவிரியின் குறுக்கே அணை கட்ட துடிக்கும் கர்நாடகா அரசை கண்டித்தும் மற்றும் மத்திய அரசை கண்டித்தும் பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன் நேற்று ஆர்பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் பிரசாந்த் தலைமை வகித்தார். மாநில துணை பொது செயலாளர் தவமணி, முன்னாள் மாவட்ட செயலாளர் முனி ரத்தினம், மேற்கு மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில ஊடகப்பிரிவு தலைமை ஒருங்கிணைப்பாளர் குமரவேல், தலைமையில் கோஷங்கள் எழுப்பினர். தலைமை நிலைய செயலாளர் ராயநல்லூர் கனல் கண்ணன், தலைமை நிலைய பேச்சாளர் திருவெற்றியூர் மாரிமுத்து, மாநில கொள்கைபரப்பு செயலாளர் திருப்பூர் சுடலை ஆகியோர் பேசினர்.

    நிர்வாகிகள் மெடிக்கல் சரவணன், திருப்பதி, ரங்கசாமி, மதுபாலா, நாகம்மாள், கோகுல்ராஜ், நகர செயலாளர் சீனிவாசன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • நேற்று 1,871 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.
    • மொத்தம் ரூ.8 லட்சத்து 28 ஆயிரத்து 7 மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.

    இந்த அங்காடிக்கு நேற்று 1,871 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. இந்த அங்காடியில் நேற்று ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.570-க்கும், குறைந்தபட்சமாக ரூ.207-க்கும், சராசரியாக ரூ.442.41-க்கும் விற்பனையானது.

    மொத்தம் ரூ.8 லட்சத்து 28 ஆயிரத்து 7 மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.

    • நேற்று காலை வீட்டை விட்டு வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை.
    • எங்கு தேடியும் மாணவி கிடைக்காததால், மாயமானது தெரியவந்தது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே தேக்கல் நாய்க்கன் பட்டியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் கடத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

    இந்த நிலையில் அந்தமாணவி நேற்று காலை வீட்டை விட்டு வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன மாணவியின் பெற்றோர் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடிபார்த்தனர். எங்கு தேடியும் மாணவி கிடைக்காததால், மாயமானது தெரியவந்தது.

    இதுகுறித்து மாணவியின் தந்தை கடத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடிவருகின்றனர்.

    • கரக செல்லியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்டு கோவிலுக்கு வருவாய் பெருக்க பொது ஏலம் விட வேண்டும்.
    • கோவிலுக்கு சொந்தமான 32.5 ஏக்கர் நிலம் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தாலுகா சிக்கார்தனஅள்ளி கிராமத்தை சேர்ந்த ஊர் பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    எங்கள் ஊரில் பழமை வாய்ந்த கரக செல்லியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான 32.5 ஏக்கர் நிலம் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

    இந்த நிலத்தை பரம்பரை அறங்காவலர் மட்டும் அனுபவித்து வருகிறார். மேலும் திருவிழா காலங்களில் திருவிழா நடத்துவதற்கு கோவில் நிலத்தை பயன்படுத்து வதற்கும், திருவிழா நடத்துவதற்கும், உண்டான செல வினங்களை ஏற்றுக்கொள்ளாமல் கோவிலில் வரும் வருமானத்தையும் கோவில் நிலத்தையும் பல ஆண்டுகளாக ஒருவரே அனுபவித்து வருகிறார்.

    கோவில் திருப்பணி செய்வதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறார். ஊர் மக்களாகிய நாங்கள் எங்களுடைய சொந்த செலவில் திருவிழாக்களை நடத்தி வருகிறோம்.

    மேலும் கரக செல்லியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்டு கோவிலுக்கு வருவாய் பெருக்க பொது ஏலம் விட வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கோவில் சொத்தை மீட்டெடுக்க வேண்டும். கோவில் திருவிழாவை சிறப்பாக நடத்த வழிவகை செய்ய வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • மத்திய அரசை கண்டித்தும் பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன் நேற்று ஆர்பாட்டம் நடந்தது.
    • கோகுல்ராஜ், நகர செயலாளர் சீனிவாசன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தருமபுரி,  

    தருமபுரி கிழக்கு மாவட்ட தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சி சார்பில் காவிரியின் குறுக்கே அணை கட்ட துடிக்கும் கர்நாடகா அரசை கண்டித்தும் மற்றும் மத்திய அரசை கண்டித்தும் பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன் நேற்று ஆர்பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் பிரசாந்த் தலைமை வகித்தார். மாநில துணை பொது செயலாளர் தவமணி, முன்னாள் மாவட்ட செயலாளர் முனி ரத்தினம், மேற்கு மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில ஊடகப்பிரிவு தலைமை ஒருங்கிணைப்பாளர் குமரவேல், தலைமையில் கோஷங்கள் எழுப்பினர். தலைமை நிலைய செயலாளர் ராயநல்லூர் கனல் கண்ணன், தலைமை நிலைய பேச்சாளர் திருவெற்றியூர் மாரிமுத்து, மாநில கொள்கைபரப்பு செயலாளர் திருப்பூர் சுடலை ஆகியோர் பேசினர்.

    நிர்வாகிகள் மெடிக்கல் சரவணன், திருப்பதி, ரங்கசாமி, மதுபாலா, நாகம்மாள், கோகுல்ராஜ், நகர செயலாளர் சீனிவாசன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ஊராட்சி மன்ற தலைவரும், அவருடன் இரண்டு நபர்களும் சேர்ந்து தாழ்த்தப்பட்ட உங்களுக்கு தனிநபர் கழிப்பிடம் எதற்கு எனக் கூறி கட்ட விடாமல் தடுத்து வருகின்றனர்.
    • புகார் கொடுத்தவர்கள் மீது மிரட்டும் காவல்துறை மீதும், தனிநபர் கழிப்பிடம் கட்ட விடாமல் எங்களுக்கு கொலை மிரட்டல் விடும் பஞ்சாயத்து தலைவர், மற்ற இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த மஞ்சாரஹள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட ஏர்கோள்பட்டி கிராமத்து பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் எங்கள் பட்டா நிலத்தில் தனிநபர் கழிப்பிட கழிவறை கட்ட உள்ளோம். இதனை ஊராட்சி மன்ற தலைவரும், அவருடன் இரண்டு நபர்களும் சேர்ந்து தாழ்த்தப்பட்ட உங்களுக்கு தனிநபர் கழிப்பிடம் எதற்கு எனக் கூறி கட்ட விடாமல் தடுத்து வருகின்றனர்.

    இது குறித்து பென்னாகரம் தாசில்தாரிடமும், ஏரியூர் காவல் நிலையத்திலும் புகார் கொடுத்தோம். ஏரியூர் காவல் நிலைய போலீசார் நீங்கள் தனிநபர் கழிப்பிடம் கட்டினால் உங்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என மிரட்டுகிறார்.

    புகார் கொடுத்தவர்கள் மீது மிரட்டும் காவல்துறை மீதும், தனிநபர் கழிப்பிடம் கட்ட விடாமல் எங்களுக்கு கொலை மிரட்டல் விடும் பஞ்சாயத்து தலைவர், மற்ற இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு தனிநபர் கழிப்பிடம் கட்ட அனுமதி வழங்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
    • இந்த விபத்தில் அதிர்ஷ்ட வசமாக டிரைவர் பிரபு காயங்களுடன் உயிர் தப்பினார்.

    மத்தூர், 

    ஆந்திரா மாநிலத்தில் இருந்து கோயம்புத்தூர் பகுதிக்கு பழைய பேப்பர் லோடு ஏற்றி சென்ற லாரி ஒன்று புறப்பட்டு வந்தது. அந்த லாரியை சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பிரபு (வயது 38) என்பவர் ஓட்டி வந்தார்.

    அந்த லாரி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை-சேலம் செல்லும் சாலையில் வெப்பாலம் பட்டி என்ற பகுதியில் இன்று அதிகாலை நேரத்தில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்ட வசமாக டிரைவர் பிரபு காயங்களுடன் உயிர் தப்பினார்.

    இதைகண்ட அக்கம் பக்கத்தினர் உடனே ஓடி வந்து விபத்தில் சிக்கிய டிரைவர் பிரபுவை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த ஊத்தங்கரை போலீசார் உடனே அங்கு விரைந்து வந்து சாலையின் நடுவே கவிழ்ந்து கிடந்த லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலை நடந்த விபத்து இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பின்பகுதியில் இருந்து வேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று இவரது சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
    • தூக்கி வீசப்பட்ட சுருட்டையன் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்தார்.

     பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பட்டவர்த்தி கிராமத்தைச் சார்ந்தவர் சுருட்டையன் (வயது 55). இவர் சைக்கிளில் தோட்ட த்தில் இருந்து வட்டவர்த்தி கிராமத்தில் உள்ள தன் வீட்டிற்கு சாலையில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது பின்பகுதியில் இருந்து வேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று இவரது சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட சுருட்டையன் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பாப்பிரெ ட்டிப்பட்டி அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர்.

    அங்கு அவரை பரிசோ தித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர்.

    இச்சம்பவம் குறித்து ஏ.பள்ளிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தியவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • சமீப காலங்களில் ஒகே னக்கல் வளர்ச்சி நிதியை சுமார் ரூ.2 கோடிக்கு மேல் மறைமுக ஒப்பந்தம் அடிப்படையில் பணிகள் மேற்கொள்ள முறைகேடு செய்துள்ளார்.
    • இதனால் பா.ம.க. கவுன்சிலர்களே பா.ம.க. தலைவரை நீக்க கோரி மனு அளித்ததால் பென்னா கரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பென்னாகரம், 

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்தில் தி.மு.க. 6, அ.தி.மு.க. 7, பா.ம.க. 4, சி.பி.எம், 2 என மொத்தம் 19 கவுன்சிலர்கள் உள்ளனர்.

    ஒன்றிய குழு தலைவராக பா.ம.க.வை சேர்ந்த கவிதா ராமகிருஷ்ணன் உள்ளார். இதில் தி.மு.க, அ.தி.மு.க, சி.பி.எம், பா.ம.க உள்ளிட்ட 17 ஒன்றிய கவுன்சிலர்கள் சேர்ந்து ஒன்றியக்குழு தலைவர் மீது நம்பிக்கை யில்லா தீர்மானம் கொண்டு வருவது தொடர்பாக பென்னாகரம் துணை வட்டார வளர்ச்சி அலுவல ரிடம் மனு வழங்கினார்கள்.

    அந்த மனுவில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூறியி ருப்பதாவது:-

    ஒன்றிய குழு தலைவர் கவிதா, ஒன்றிய குழு உறுப்பினர்களிடம் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச் சையாக செயல்படுகிறார்.

    ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மேற் கொள்ளப்படும் நலத்திட்டங்கள், மக்கள் பணிகளை முறைக்கேடாக வட்டார வளர்ச்சி அலுவலர் உடன் சேர்ந்து ஒப்பந்தங்கள் குறித்து யாருக்கும் தெரி யாமல் ஒருதலைபட்சமாக அவரது கணவர் பெயரிலும் தனக்கு வேண்டப்பட்ட ஒப்பந்ததாரர்களை வைத்து மேற்கொள்கிறார்.

    சமிபகாலங்களில் ஒகே னக்கல் வளர்ச்சி நிதியை சுமார் ரூ.2 கோடிக்கு மேல் மறைமுக ஒப்பந்தம் அடிப்படையில் பணிகள் மேற்கொள்ள முறைகேடு செய்துள்ளார்.

    அப்படி வழங்கப்படும் பணிகள் அனைத்தும் அவரது கணவர் அதிக கமிஷன் கேட்டு பெறுவதால் தரமற்ற வேலைகளையே ஒப்பந்த தாரர்கள் செய்கின்றனர்.

    மேலும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தால் ஒதுக்கப்படும் பொது நிதி மற்றும் 15-வது நிதிமானியம் உட்பட அனைத்து திட்ட பணிகளும் ஒன்றிய குழு உறுப்பினர்களின் ஒப்புதல் இல்லாமலும், ஆலோ சனைகள் மேற்கொள்ளா மலும் தீர்மானங்கள் இன்றி ஒன்றிய குழு தலைவர் முறைகேடு செய்துள்ளார்.

    ஆகவே, ஒன்றிய குழு உறுப்பினர்கள் நாங்கள் அனைவரும் ஒன்றிய குழு தலைவர் மீது நம்பிக்கை யில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்து உள்ளோம். எனவே உடனடியாக சிறப்பு கவன ஈர்ப்பு கூட்டம் ஏற்பாடு செய்து நம்பிக்கை யில்லா தீர்மானம் மீது குரல் வாக்கெடுப்பு நடத்திட வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் அதில் கூறியிருந்தனர்.

    இதனால் பா.ம.க. கவுன்சிலர்களே பா.ம.க. தலைவரை நீக்க கோரி மனு அளித்ததால் பென்னா கரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 429 மனுக்கள் வரப்பெற்றன.
    • கொடிநாள் நிதி அதிகமாக வசூல் புரிந்த 3 மாவட்ட அலுவலர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் சாந்தி வழங்கினார்கள்.

    தருமபுரி,

    தருமபுரி கலெக்டர் அலு வலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி, தலைமையில் நடை பெற்றது.

    இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிட மிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு, கலெக்டர் தெரி வித்ததாவது:-

    கூட்டத்தில் பொது மக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம், பட்டா வேண்டுதல், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலை வாய்ப்பு, இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 429 மனுக்கள் வரப்பெற்றன.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சாந்தி அரூர் ஊராட்சி ஒன்றியத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்துதல் திட்டத்தின் கீழ், 67 பயனாளிகளுக்கு தலா ரூ.4,37,430- வீதம் மொத்தம் ரூ.2,93,07,810- மதிப்பீட்டில் வீடுகள் கட்டுவதற்கான வேலை உத்தரவு ஆணை களையும், பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் சார்பில் 11 பயனாளிகளுக்கு ரூ.72,072- மதிப்பீட்டில் சலவை பெட்டிகளையும், கிறித்துவ மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் சிறுதொழில் செய்வதற்கு 15 பயனாளி களுக்கு ரூ.3 இலட்சம் மதிப்பீட்டில் மானிய நிதிஉதவிகளையும் என மொத்தம் 93 பயனாளி களுக்கு ரூ.2.97 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    மேலும், கொடிநாள் நிதி அதிகமாக வசூல் புரிந்த 3 மாவட்ட அலுவலர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் சாந்தி வழங்கினார்கள்.

    கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தீபனாவிஸ்வேஸ்வரி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) (பொ) நசீர் இக்பால், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஜெயக்குமார், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறும்பான்மையினர் நல அலுவலர் ராஜசேகரன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கண்ணன், முன்னாள் படைவீரர் நல அலுவலர் வெங்கடேஷ் குமார் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

    • வி.ஏ.ஓ. கோவிந்தராஜ் அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • அதியமான்கோட்டை தாதம்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் மொத்தமாக வாங்கி வந்து, மது விற்பனை செய்தது தெரியவந்தது.

    தருமபுரி:

    தருமபுரி மது விலக்கு போலீசார், தீவிர மதுவிலக்கு வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதியமான் கோட்டை கக்கன்ஜிபுரம் பகுதியை சேர்ந்த ரவி (வயது39), என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர்.

    அப்போது அவரது வீட்டில் மதுபதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, 20-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இந்நிலையில், மீண்டும் ரவி வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக, கலெக்டர் சாந்திக்கு நேற்று புகார் சென்றது.

    இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில், நல்லம்பள்ளி தாசில்தார் ஆறுமுகம், டி.எஸ்.பி. செந்தில்குமார் மற்றும் போலீசார் ரவி வீட்டில் மீண்டும் சோதனை நடத்தினர்.

    அப்போது, அவரது வீட்டில் 70 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இது குறித்து, வி.ஏ.ஓ. கோவிந்தராஜ் அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் ரவியின் மனைவி மேனகா (35), ரவியின் தாய் ராணி (58) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அதியமான்கோட்டை தாதம்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் மொத்தமாக வாங்கி வந்து, மது விற்பனை செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து டாஸ்மாக் மேலாளர் மகேஸ்வரி, சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தபோது, அந்த கடையில் இருந்து மொத்தமாக மதுபானங்களை விற்பனை செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து 2 மேற்பார்வையாளர், 5 விற்பனையாளர் உள்பட 7 பேரை, சஸ்பெண்ட் செய்து டாஸ்மாக் மேலாளர் மகேஸ்வரி நேற்று இரவு உத்தரவிட்டார்.

    ×