என் மலர்
நீங்கள் தேடியது "ஊழியர்கள் சஸ்பெண்டு"
- வார்டில் இருந்து வாகன நிறுத்துமிடம் நீண்ட தூரம் இருந்ததால் அவர் நடக்க முடியாது என்று கூறினார்.
- ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்தும் சக்கர நாற்காலி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
கோவை:
கோவை அரசு தலைமை ஆஸ்பத்திரியில் தினமும் 5000 வெளி நோயாளிகள் வந்து சிகிச்சை பெறுகிறார்கள். 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட நோயாளிகள், உள் நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் ஒவ்வொரு சிகிச்சை பிரிவுக்கும் சென்று நோயாளிகள் சிகிச்சை பெறவும், சிகிச்சை முடிந்த நோயாளிகள் வார்டுக்கு அழைத்துச் செல்லவும் அங்கு ஸ்ட்ரக்சர் மற்றும் சக்கர நாற்காலிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் 70 வயதான தனது தந்தைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை அளிக்க வந்த அவரது மகன், தந்தைக்கு காலில் சிகிச்சை அளிக்கப்பட்டு கட்டு போடப்பட்டிருந்த நிலையில் அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தார். வார்டில் இருந்து வாகன நிறுத்துமிடம் நீண்ட தூரம் இருந்ததால் அவர் நடக்க முடியாது என்று கூறினார்.
எனவே ஆஸ்பத்திரியில் சக்கர நாற்காலி வழங்கும்படி அவரது மகன் கேட்டுள்ளார். அப்போது ஊழியர்கள் அவரை காத்திருக்கும் படி கூறியுள்ளனர். ஆனால் ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்தும் சக்கர நாற்காலி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் அவரது மகன் தந்தையை தனது உடலில் சாய்த்துக் கொண்டு மேல் தளத்திலிருந்து இறங்கி கீழே வந்தார். பிறகு அவரை இழுத்தபடியே ஆஸ்பத்திரி வாசலில் நின்ற வாகனத்திற்கு கொண்டு சென்றார்.
ஆஸ்பத்திரியில் சக்கர நாற்காலி வழங்கப்படாததால் தந்தையை மகன் தோளில் சாய்த்துக் கொண்டு இழுத்து சென்ற காட்சியை அங்கிருந்த சிலர் செல்போனில் படம் பிடித்தனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக அரசு மருத்துவக்கல்லூரி டீன் விசாரணை மேற்கொண்டார்.
அதன்பேரில் ஊழியர்கள் எஸ்தர்ராணி, மணிவாசகம் ஆகிய 2 பேரை சஸ்பெண்டு செய்து அவர் உத்தரவிட்டுள்ளார். அவர்கள் 5 நாட்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
- வி.ஏ.ஓ. கோவிந்தராஜ் அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
- அதியமான்கோட்டை தாதம்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் மொத்தமாக வாங்கி வந்து, மது விற்பனை செய்தது தெரியவந்தது.
தருமபுரி:
தருமபுரி மது விலக்கு போலீசார், தீவிர மதுவிலக்கு வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதியமான் கோட்டை கக்கன்ஜிபுரம் பகுதியை சேர்ந்த ரவி (வயது39), என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர்.
அப்போது அவரது வீட்டில் மதுபதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, 20-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், மீண்டும் ரவி வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக, கலெக்டர் சாந்திக்கு நேற்று புகார் சென்றது.
இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில், நல்லம்பள்ளி தாசில்தார் ஆறுமுகம், டி.எஸ்.பி. செந்தில்குமார் மற்றும் போலீசார் ரவி வீட்டில் மீண்டும் சோதனை நடத்தினர்.
அப்போது, அவரது வீட்டில் 70 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இது குறித்து, வி.ஏ.ஓ. கோவிந்தராஜ் அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் ரவியின் மனைவி மேனகா (35), ரவியின் தாய் ராணி (58) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அதியமான்கோட்டை தாதம்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் மொத்தமாக வாங்கி வந்து, மது விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து டாஸ்மாக் மேலாளர் மகேஸ்வரி, சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தபோது, அந்த கடையில் இருந்து மொத்தமாக மதுபானங்களை விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து 2 மேற்பார்வையாளர், 5 விற்பனையாளர் உள்பட 7 பேரை, சஸ்பெண்ட் செய்து டாஸ்மாக் மேலாளர் மகேஸ்வரி நேற்று இரவு உத்தரவிட்டார்.
- நுகர்பொருள் வாணிப கழகத்தின் அலுவலர்கள் கடந்த வாரம் ஆய்வு மேற்கொண்டனர்.
- கிட்டங்கி பொறுப்பாளர் உள்பட 5 பேர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான உணவு பொருள் கிட்டங்கி உள்ளது. இங்கு நுகர்பொருள் வாணிப கழகத்தின் அலுவலர்கள் கடந்த வாரம் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது இருப்பில் இருக்க வேண்டிய 900 அரிசி மூட்டைகள் குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது. இது குறித்து அலுவலர்களிடம் விளக்கம் கேட்டபோது அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து கிட்டங்கி பொறுப்பாளர் உள்பட 5 பேர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டது.
அதன் பேரில் பொறுப்பாளர் தர்மராஜ், உதவி பொறுப்பாளர் ஜெய்சங்கர், இளநிலை உதவியாளர் ரெங்கசாமி, எழுத்தர்கள் ஆறுமுகம் மற்றும் உலகநாதன் ஆகிய 5 பேரை பணியிடை நீக்கம் செய்து திண்டுக்கல் மண்டல மேலாளர் உத்தரவிட்டார்.






