என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடத்தூரில் பள்ளி மாணவி மாயம்
- நேற்று காலை வீட்டை விட்டு வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை.
- எங்கு தேடியும் மாணவி கிடைக்காததால், மாயமானது தெரியவந்தது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே தேக்கல் நாய்க்கன் பட்டியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் கடத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
இந்த நிலையில் அந்தமாணவி நேற்று காலை வீட்டை விட்டு வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன மாணவியின் பெற்றோர் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடிபார்த்தனர். எங்கு தேடியும் மாணவி கிடைக்காததால், மாயமானது தெரியவந்தது.
இதுகுறித்து மாணவியின் தந்தை கடத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடிவருகின்றனர்.
Next Story






