என் மலர்
உள்ளூர் செய்திகள்

கர்நாடகா அரசை கண்டித்து தருமபுரியில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- மத்திய அரசை கண்டித்தும் பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன் நேற்று ஆர்பாட்டம் நடந்தது.
- கோகுல்ராஜ், நகர செயலாளர் சீனிவாசன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தருமபுரி,
தருமபுரி கிழக்கு மாவட்ட தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சி சார்பில் காவிரியின் குறுக்கே அணை கட்ட துடிக்கும் கர்நாடகா அரசை கண்டித்தும் மற்றும் மத்திய அரசை கண்டித்தும் பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன் நேற்று ஆர்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் பிரசாந்த் தலைமை வகித்தார். மாநில துணை பொது செயலாளர் தவமணி, முன்னாள் மாவட்ட செயலாளர் முனி ரத்தினம், மேற்கு மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில ஊடகப்பிரிவு தலைமை ஒருங்கிணைப்பாளர் குமரவேல், தலைமையில் கோஷங்கள் எழுப்பினர். தலைமை நிலைய செயலாளர் ராயநல்லூர் கனல் கண்ணன், தலைமை நிலைய பேச்சாளர் திருவெற்றியூர் மாரிமுத்து, மாநில கொள்கைபரப்பு செயலாளர் திருப்பூர் சுடலை ஆகியோர் பேசினர்.
நிர்வாகிகள் மெடிக்கல் சரவணன், திருப்பதி, ரங்கசாமி, மதுபாலா, நாகம்மாள், கோகுல்ராஜ், நகர செயலாளர் சீனிவாசன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






