என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • எருமை ஒன்று திடீரென எதிரே வந்ததை அறிந்த ஓட்டுநர் காட்டெருமை மீது மோதாமல் இருக்க வாகனத்தை திடீரென திருப்பியதில் பள்ளத்தில் கவிழ்ந்தது.
    • வாகனத்தின் முன் பகுதியில் அமர்ந்து பயணம் செய்த பெருமாயி தலையில் பலத்த காயமடைந்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், அரூர் தாலுகாவிற்கு உட்பட்ட சித்தேரி நொச்சிக் கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் வேடியப்பன். இவரது மனைவி பெருமாயி (64).

    இவர் கடந்த 21-ம் தேதியன்று நொச்சிகுட்டை கிராமத்தைச் சேர்ந்த தனது உறவினரான பெருமாள் என்பவருக்கு சொந்தமான வாகனத்தில் சுத்தியல் சந்தைக்கு சமையல் பொருட்கள் வாங்க சென்று கொண்டிருந்தார்.

    சந்தைக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது சித்தேரியில் இருந்து நொச்சிக்கோட்டை செல்லும் சாலையில் காட்டு எருமை ஒன்று திடீரென எதிரே வந்ததை அறிந்த ஓட்டுநர் காட்டெருமை மீது மோதாமல் இருக்க வாகனத்தை திடீரென திருப்பியதில் பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இதில் வாகனத்தின் முன் பகுதியில் அமர்ந்து பயணம் செய்த பெருமாயி தலையில் பலத்த காயமடைந்தார்.

    அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சித்தேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் அரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து அரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உணவு பொருள் பாக்கெட் லேபில்களில் காண வேண்டிய அம்சங்கள் குறித்து நேரடி செயல் விளக்கமும், விழிப்புணர்வு பிரசுரங்களும் வழங்கினர்.
    • நடமாடும் பகுப்பாய்வு வாகனத்தை முன் நிறுத்தி உணவுப் பொருட்களை களத்திலேயே ஆய்வு செய்து கலப்படத்தை கண்டறிய வசதிகள் உள்ளன.

    காரிமங்கலம், 

    தருமபுரி மாவட்டத்தில், உணவு பாதுகாப்பு துறை சார்பாக உணவு பகுப்பாய்வு வாகனம் மூலம் மாவட்டம் முழுவதும் சென்று உணவு பொருள்களில் கலப்படம் கண்டறிதல், தரம் அறிதல் மற்றும் உணவு பாக்கெட்டுகளில் காண வேண்டிய அம்சங்கள் குறித்த விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது.

    காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் இளநிலை பொது பகுப்பாய்வாளர் கோபி உள்ளிட்டோர் குழுவாக சென்று காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு, உணவு பொருட்களில் கலப்படம் கண்டறிதல், உணவு பொருள் பாக்கெட் லேபில்களில் காண வேண்டிய அம்சங்கள் குறித்து நேரடி செயல் விளக்கமும், விழிப்புணர்வு பிரசுரங்களும் வழங்கினர்.

    இதில் காரிமங்கலம் அரசு மகளிர் அறிவியல் கலைக் கல்லூரியில் ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டு துறை பேராசிரியர் செந்தில்குமார், தமிழ் துறை பேராசிரியர் செந்தில்குமார் மற்றும் கவுரவ விரிவுரையாளர் தனலட்சுமி, கல்லூரி முதல்வர் கீதா தலைமையில் கல்லூரி மாணவிகள் 700-க்கும் மேற்பட்டோர் பங்கேற்புடன் உணவு பொருட்களில் கலப்படம் கண்டறிதல் குறித்து விளக்கம் அளித்தனர். மேலும் நடமாடும் பகுப்பாய்வு வாகனத்தை முன் நிறுத்தி உணவுப் பொருட்களை களத்திலேயே ஆய்வு செய்து கலப்படத்தை கண்டறிய வசதிகள் உள்ளன.

    வாகனத்தில் உள்ள ஆய்வக பரிசோதனை மூலம் உணவுப் பொருட்கள் கலப்படம் கண்டறிந்து உணவு பாதுகாப்புத்துறை உரிய நடவடிக்கை மேற் கொண்டு தரமான பொருட்கள் நுகர்வோரை சென்றடைய முயற்சி மேற்கொள்ளும் என உணவு பாதுகாப்பு துறையினர் தெரிவித்தனர்.

    விழிப்புணர்வு தொடர்ச்சி யாக மாவட்டம் முழுவதும் நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக உணவு பாது காப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் தெரி வித்தார்.

    • வேகத்தடையை கவனிக்காமல் தங்கப்பன் வண்டியை வேகமாக ஓட்டி வந்தார்.
    • அவர் வண்டியில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சின்கம்மாளபட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாது. இவரது மகன் தங்கப்பன் (வயது24). இவர் தீர்த்தமலையில் உள்ள பேக்கரி கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல் கடையில் வேலையை முடித்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் தங்கப்பன் வீட்டிற்கு திரும்பிவந்தார். அப்போது அவர் தருமபுரி-பாலக்கோடு சாலையில் உள்ள காட்டம்பட்டி அருகே வந்தபோது அங்குள்ள ஒரு வேகத்தடையை கவனிக்காமல் தங்கப்பன் வண்டியை வேகமாக ஓட்டி வந்தார்.

    இதில் அவர் வண்டியில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்தார். இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பாலக்கோடு போலீசார் உடனே அங்கு விரைந்து வந்து தங்கப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இவர்கள் இருவர் மீதும் குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய, தருமபுரி மாவட்ட எஸ்.பி ஸ்டீபன் ஜேசுபாதம், மாவட்ட கலெக்டர் சாந்தி யிடம் பரிந்துரை செய்தார்.
    • இதற்கு மாவட்ட கலெக்டர் குண்டர் சட்டத்தில் இருவரையும் அடைக்க உத்தரவிட்டார்.

    தருமபுரி,

    தருமபுரி பஸ் நிலையம் வழியாக கஞ்சா கடத்தி செல்லப்படுவதாக, தருமபுரி மாவட்ட மது விலக்கு அமல்பிரிவு போலீசாருக்கு கடந்த மாதம் 2-ம் தேதி தகவல் கிடைத்தது.

    அதை தொடர்ந்து, மது விலக்கு அமல்பிரிவு ஆய்வாளர் கவிதா, தலைமையிலான போலீசார் பஸ் நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டி ருந்தனர்.

    அன்று இரவு சந்தேகத்து க்கு இடமாக கையில் பையுடன் நின்றிருந்த 2 நபர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

    அப்போது அவர்களிடம் 8 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (33), ரமேஷ் (39) என்பது தெரிய வந்தது.

    இவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் சதீஷ்குமார் மீது ஏற்கனவே, கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒரு கஞ்சா வழக்கும், சங்ககிரி போலீஸ் நிலையத்தில் ஓரு அடி, தடி வழக்கும் பதிவாகி இருப்பது தெரியவந்தது.

    அதே போல, ரமேஷ் மீது ஆந்திரா மாநிலத்தில் ஒரு கஞ்சா வழக்கு பதிவாகி இருப்பதும் தெரியவந்தது.

    எனவே, இவர்கள் இருவர் மீதும் குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய, தருமபுரி மாவட்ட எஸ்.பி ஸ்டீபன் ஜேசுபாதம், மாவட்ட கலெக்டர் சாந்தி யிடம் பரிந்துரை செய்தார்.

    இதற்கு மாவட்ட கலெக்டர் குண்டர் சட்டத்தில் இருவரையும் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அதற்கான ஆணை சேலம் மத்திய சிறை அதிகாரி களிடம் வழங்கப்பட்டது.

    • இங்கு படிக்கும் மாணவர்கள் உயர்கல்வி யில் சிறந்து விளங்க வேண்டும்.
    • மாணவர்கள் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை பயன் படுத்தி நன்கு படித்து முன்னேற வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், நல்லம் பள்ளி ஊராட்சி ஒன்றியம், அதியமான் கோட்டை அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவி களுக்கு அரசு இலவச மிதி வண்டி வழங்கும் திட்டம் பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிகளில் சிறப்பு அழைப்பாளராக தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் கலந்துக்கொண்டு 158 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசுகை யில் இந்த பள்ளியில் கடந்த ஆண்டு படித்த சதீஷ்குமார் என்பவர் கோயம்புத்தூர் தனியார் மருத்துவ கல்லூரியிலும், இளங்கோ வன் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி யிலும், மருத்துவம் படிக்க தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

    எனவே இங்கு படிக்கும் மாணவர்கள் உயர்கல்வி யில் சிறந்து விளங்க வேண்டும்.

    மாணவர்கள் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை பயன் படுத்தி நன்கு படித்து முன்னேற வேண்டும் என்றார்.

    விழாவில் உதவி தலைமை ஆசிரியர் பிரான்சிஸ் சேவியர், நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் ஏ.எஸ்.சண்முகம், எஸ்.எம்.சி. தலைவி கண்ணகி, முருகன், சிவக்குமார், தமிழ் ஆசிரியர் ஜெயவேல், கோவிந்தம்மாள், ஜெய்சங்கர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இவருக்கு அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் அவதிபட்டு வந்தார்.
    • பட்டாளம்மன்கோவில் ஏரியில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    தேன்கனிக்கோட்டை,  

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே குட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி (73). கூலித்தொழிலாளியான இவருக்கு அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் அவதிபட்டு வந்தார். இதற்காக அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் காணப்பட்டார். இந்த நிலையில் இவர் கடந்த 3-ந் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்றார். அப்போது பட்டாளம்மன்கோவில் ஏரியில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோன்று ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அங்கீட்புனியா (28) என்பவர் ஓசூரில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது தெரிகிறது. இந்த நிலையில் அங்கீட்புனியா கடந்த 6-ந் தேதி அதேபகுதியில் நடந்து சென்றபோது அங்கு தரைமட்டமான நீர்தேக்கதொட்டியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சின்னசாமிக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருப்பதால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
    • மனைவி வீட்டின் வெளியே இருந்தபோது அவர் உள்ளே சென்று திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தருமபுரி,  

    தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள மணலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சின்னசாமி (வயது30). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி சரஸ்வதி (23).

    இந்த நிலையில் சின்னசாமிக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருப்பதால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று மதுக்குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதனால் மனவேதனை அடைந்த சின்னசாமி, தனது மனைவி வீட்டின் வெளியே இருந்தபோது அவர் உள்ளே சென்று திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து சரஸ்வதி உள்ளே சென்று பார்த்தபோது தனது கணவர் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்து அலறினார்.

    இந்த சம்பவம் குறித்து சரஸ்வதி பொம்மிடி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து சின்னசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள சிக்கபடகாண்டஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் காசிலிங்கம் (வயது40). தொழிலாளி. இவரது மனைவி கலைவாணி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள்.

    இந்த நிலையில் காசிலிங்கத்திற்கு அடிக்கடி மதுக்குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கலைவாணி கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 பெண் குழந்தைகளை விட்டு அவரது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மனவேதனை அடைந்த காசிலிங்கம் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த சம்பவம் குறித்து காசிலிங்கத்தின் தந்தை நாராயணன் மாரண்டஅள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காசிலிங்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஞானசேகர், நக்கல் பட்டியை நந்தகுமார், கணபதி உள்பட 7 பேரை கைது செய்தனர்.
    • அவர்களிடமிருந்து 58 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் லாட்டரி சீட்டுக் களை பறிமுதல் செய்தனர்.

    பாலக்கோடு,  

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு நகர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப் பட்ட கேரளா லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்வதாக மாவட்ட காவல் துறைக்கு புகார் வந்தது.

    இதையடுத்து மாவட்ட எஸ்.பி.ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவின் பேரில் பாலக்கோடு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது பாலக்கோடு பஸ் நிலையம், முருகன் கோவில் தெரு, எம்.ஜி.ரோடு, ஸ்தூபி மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்று கொண்டிருந்த மேல் தெருவை சேர்ந்த சக்தி (45), திருமல்வாடியை சேர்ந்த ராஜ்குமார் (30), நக்கல் பட்டியை சேர்ந்த விஜய குமார் (31), அகராகரத் தெருவை சேர்ந்த அருளான ந்தம் (27), சுகர்மில் பகுதியை சேர்ந்த ஞானசேகர் (27) , நக்கல் பட்டியை நந்தகுமார் (23), கணபதி (32) ஆகிய 7 பேரை கைது செய்தனர்.

    பின்னர் அவர்களிடமிருந்து 58 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் லாட்டரி சீட்டுக் களை பறிமுதல் செய்தனர்.

    மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்த னர்.

    • இந்த கொலை சம்பவம் தொடர்பாக தொப்பூர் போலீசார் பழனிக்கு உடந்தையாக இருந்த தந்தை அய்யாவு உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    • இந்த கொலை வழக்கில் தொடர்புடைய காசி, ரேவதி, தனபாக்கியம், ஆகியோர் விடுதலை செய்யப் பட்டனர்.

    தருமபுரி,  

    தருமபுரி மாவட்டம், தொப்பூர் தர்கா பகுதியைச் சேர்ந்தவர் அய்யாவு, விவசாயி யான இவருக்கு முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஈஸ்வரன் (45), லாரி டிரைவர் பழனி (42), ராமன் (40), காசி (35) ஆகிய நான்கு மகன்கள் உள்ளனர். அனை வருக்கும் திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

    அய்யாவுக்கு வீட்டின் அருகே நாலு ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தை தனித்தனியாக பத்திர பதிவு செய்யாமல் நான்கு பேரும் அனுபவித்துக் கொள்ளு ங்கள் என பிரித்துக் கொடுத்து ள்ளார்.

    பிரித்து கொடுத்துள்ள நிலத்தில் கடந்த சில ஆண்டு களாக தகராறு இருந்து வந்தது. இதில் முன்னாள் ராணுவ வீரர் ஈஸ்வர னுக்கும், அவரது தம்பி பழனிக்கும் தண்ணீர் பாய்ச்சுவது உள்ளிட்ட நிலத்தகராறில் முன் விரோதம் இருந்தது.

    இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை 15-ந் தேதி முன்னாள் ராணுவ வீரர் ஈஸ்வர னுக்கும், லாரி டிரைவர் பழனிக்கும் தகராறு ஏற்பட்டது.

    இதில் பழனி தான் வைத்திருந்த அறிவாளை எடுத்து ஈஸ்வரன் தலையை வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே ஈஸ்வரன் உயிரிழந்தார். இதனை தடுக்க வந்த ஈஸ்வரன் மனைவி சரண்யாவுக்கும் வெட்டு விழுந்தது.

    இந்த கொலை சம்பவம் தொடர்பாக தொப்பூர் போலீசார் பழனிக்கு உடந்தையாக இருந்த தந்தை அய்யாவு உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்த வழக்கு தருமபுரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. நேற்று இறுதி விசாரணை நடந்தது.

    இதில் நீதிபதி மோனிகா முன்னாள் ராணுவ வீரரை கொலை செய்த லாரி டிரை வர் பழனி, அவரது தந்தை அய்யாவு ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு கூறினார்.

    மேலும் சரண்யாவை வெட்டிய வழக்கில் பழனிக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், 2000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

    இந்த கொலை வழக்கில் தொடர்புடைய காசி, ரேவதி, தனபாக்கியம், ஆகியோர் விடுதலை செய்யப் பட்டனர். அரசு தரப்பில் வக்கீல் சக்திவேல் ஆஜராகி வாதாடினார்.

    • நேற்று காலை விடிந்து எழுந்து பார்த்தபோது வீட்டிற்குள் பீரோவில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்தன.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி, 

    தருமபுரி பெரியாண்டிச்சி கோவில் தெரு வள்ளி நகரைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி வசந்தா (வயது38). இவர் சேலம் மாவட்டம் இளம்பிள்ளை நகராட்சியில் எழுத்தராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது கணவர் செல்வம் இறந்து விட்டார். இதனால் வசந்தா தனது குழந்தைகளுடன் தருமபுரியில் தனியாக வசித்து வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு வசந்தா வீட்டில் தூங்க சென்றார். நேற்று காலை விடிந்து எழுந்து பார்த்தபோது வீட்டிற்குள் பீரோவில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்தன. அப்போது அவர் பீரோவில் வைத்திருந்த 3½ பவுன் நெக்லஸ், 2 பவுன் செயின், 2பவுன் வளையல்கள், 3பவுன் தோடு, 1½ பவுன் 5 மோதிரங்கள் உள்பட 13 பவுன் தங்க நகைகளும், 2 ஜோடி வெள்ளி கொலுசையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    இந்த சம்பவம் குறித்து வசந்தா தருமபுரி டவுன்போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். உடனே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய்சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்களை வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

    இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் தொடர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில் நகராட்சி எழுத்தர் வீட்டில் 13 பவுன் நகைகளை கொள்ளையடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    • சம்பவத் தன்று பெண் வீட்டில் தனியாக இருந்தார்.
    • குடி போதையில் பொன்ரங்கன், மனநலம் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    மத்தூர்,  

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த திருவனப்பட்டி ஊராட்சி பெரியகாமாட்சி பட்டி கிராமத்தை சேர்ந்தவர் 35 வயது மனநலம் பாதிக்கப் பட்ட பெண். இவர் சம்பவத் தன்று வீட்டில் தனியாக இருந்தார்.

    அதே பகுதியை சேர்ந்தவர் பொன்ரங்கன் (வயது47). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றி பணி நீக்கம் செய்யப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் குடி போதையில் பொன்ரங்கன், மனநலம் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் அந்த பெண் கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பொன்ரங்கனை கையும் களவுமாக பிடித்து தர்ம அடி கொடுத்து பின்னர் அவரை கல்லாவி போலீசில் ஒப்படைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பொன்ரங்கனை கைது செய்து கிருஷ்ணகிரி சிறையில் அடைத்தனர்.

    • சிறிது நாட்கள் கழித்து பணி வழங்க அதிகாரி ஒருவர் என்னிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.
    • என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. அதனால் பணம் தராத காரணத்தால் வேறு நபரை அப்பணிக்கு அமர்த்தியுள்ளனர்.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த ஏரியூர் அடுத்த பத்ரஅள்ளி ஊராட்சி பூவன்காடு காலனி பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    பத்ரஅள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் பணிக்கு நான் விண்ணப்பித்தேன். எனக்கு இரண்டு நாள் பயிற்சிக்காக அழைத்து பயிற்சியையும் அளித்துள்ளனர்.

    அதன் பின்னர் சிறிது நாட்கள் கழித்து பணி வழங்க அதிகாரி ஒருவர் என்னிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டார். என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. அதனால் பணம் தராத காரணத்தால் வேறு நபரை அப்பணிக்கு அமர்த்தியுள்ளனர்.

    எனவே லஞ்சம் கேட்கும் அதிகாரி மீது நடவடிக்கை எடுத்து எனக்கு அந்த பணியை வழங்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    ×