என் மலர்
தர்மபுரி
- வழி பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 103 புகார் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
- இந்த முகாமில் 96 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 7 மனுக்கள் தொடர் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் வாரந்தோறும் புதன்கிழமை தர்மபுரியில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது.
அதன்படி நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசு பாதம் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் முன்னிலை வகித்தார்.
இந்த முகாமில் மாவட்டம் முழுவதும் 33 போலீஸ் நிலையங்களில் இருந்து புகார் மனுதாரர்கள் நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நிலத்தகராறு, சொத்து, அடிதடி தகராறு, பொது வழி பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 103 புகார் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. போலீஸ் அதிகாரிகள் மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
இந்த முகாமில் 96 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 7 மனுக்கள் தொடர் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய அதிகாரிக்கு புகார் மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு விரைவில் தீர்வு காண அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த முகாமில் பெரும்பாலான மனுக்கள் குடும்ப பிரச்சினை மற்றும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான புகார் மனுக்களை அதிகம் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முகாமில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரங்கசாமி, செந்தில்குமார் உள்ளிட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.
- மீண்டும் சில முறை சிறுமியை தனிமையில் சந்தித்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
- மருத்துவ பரிசோதனைக்காக சிறுமியை தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தபோது அந்த சிறுமிக்கு 15 வயதே ஆவது தெரியவந்தது.
அரூர்,
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி 10-ம் வகுப்பு படித்து வந்தார். தொழிலாளர்களான இவருடைய பெற்றோர் கோவையில் தங்கி வேலை பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் 10-ம் வகுப்பில் படிப்பை பாதியில் நிறுத்திய சிறுமி அரூர் அருகே உள்ள கிராமத்தில் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த வினோத் (22) என்ற வாலிபர் சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி நெருங்கி பழகி உள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு உறவினர் வீட்டிற்கு வந்த சிறுமி தனியாக இருந்தபோது அவரை சந்தித்த வினோத் சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அதன்பின் மீண்டும் சில முறை சிறுமியை தனிமையில் சந்தித்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சிறுமி 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வினோத்தின் குடும்பத்தினர் யாருக்கும் தெரியாமல் சிறுமியை பவானி அருகே உள்ள ஒரு கோவிலுக்கு அழைத்துச் சென்று குழந்தை திருமணம் செய்துள்ளார்.
பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக சிறுமியை தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தபோது அந்த சிறுமிக்கு 15 வயதே ஆவது தெரியவந்தது.
இது குறித்து செவிலியர்கள் அரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரோஜா மற்றும் போலீசார் சிறுமி மற்றும் சிறுமியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து வாலிபர் வினோத் மீது போக்சோ மற்றும் குழந்தை திருமண தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.
- இருசக்கர வாகனத்தினை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் நாட்டுத் துப்பாக்கியுடன் மான்கறி இருப்பது தெரியவந்தது.
- கள்ளத் துப்பாக்கி வைத்திருப்போர் தாமாக முன்வந்து காவல்துறை மற்றும் வனத்துறையுடன் ஒப்படைக்க வேண்டும்.
ஒகேனக்கல்,
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் வன சரக்கத்திற்கு உட்பட்ட ஒட்டப்பட்டி பிரிவு பகுதியில் ஒகேனக்கல் வனச்சரக அலுவலர்கள் ராஜ்குமார் (ஒகேனக்கல்), செந்தில்குமார் (பென்னாகரம்), ஆலயமணி (வேட்டை தடுப்பு ) மற்றும் வனப்பணியாளர்கள் கொண்ட குழுவினர் ஊட்டமலை பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தினை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் நாட்டுத் துப்பாக்கியுடன் மான்கறி இருப்பது தெரியவந்தது.
அவர் கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே சேசுராஜபுரம் பூமரத்துகுழி பகுதியை சேர்ந்த கோபால் மகன் சக்தி (வயது28) என்பதும், நாட்டுத் துப்பாக்கி கொண்டு வனப்பகு தியில் மான் வேட்டையாடியதாக ஒப்பு கொண்டார்.
இதனை அடுத்து வனத்துறையினர் சக்தியை கைது செய்து பென்னாகரம் மாவட்ட உரிமையியல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.
மேலும் கள்ளத் துப்பாக்கி வைத்திருத்தல், வனவிலங்குகளை வேட்டையாடுதல் போன்ற குற்றங்களில் ஈடுபடுதல், கள்ளத்துப்பாக்கி வைத்திருப்போர் தாமாக முன்வந்து காவல்துறை மற்றும் வனத்துறையுடன் ஒப்படைக்க வேண்டும்.
வனத்துறை மூலமாக கள்ளத்துப்பாக்கி வைத்திருப்பது தெரிந்தாலோ, வன விலங்குகளை வேட்டையாடுதல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டாலோ சம்பந்தப்பட்ட நபர் மீது குண்டர் சட்டம் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
வன உயிரினங்களையும், வனத்தையும் பாதுகாக்க கிராமங்கள் தோறும் வனத்துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அணிவகுப்பு நடத்தி வருகிறது.
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் தேவையின்றி அத்துமீறி உள்ளே நுழைந்து குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது வனஉயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு குறைந்தபட்சமாக மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கவும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
மேலும் கள்ளத்துப்பாக்கி வைத்திருப்பது தெரிந்தாலோ வனவிலங்குகளை வேட்டையாடுதல் போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதாக இருப்பின் பொதுமக்கள் தருமபுரி மாவட்ட வனத்துறை இலவச கைப்பேசி எண் 18 00 425 4586 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம். தகவல் அளிப்பவரின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும் என மாவட்ட வனத்துறையினர் தெரிவித்தனர்.
- நேற்று திடீரென 12 பேர் கொண்ட கும்பல், ஆனந்த குமாரின் அலுவலகத்துக்குள் புகுந்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
- கத்தியை காட்டி மிரட்டி அவரை காரில் கடத்தி சென்றதுடன், அலுவலகத்தில் இருந்த, 70 மொபைல் போன்கள், 5 லேப்டாப்புக்களையும் தூக்கி சென்றுள்ளனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், லளிகம் அடுத்த தம்மனம்பட்டியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது31). இவர், தருமபுரி பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே யு-டியூப் சானல் அலுவலகம் நடத்தி வருகிறார்.
நேற்று திடீரென 12 பேர் கொண்ட கும்பல், ஆனந்த குமாரின் அலுவலகத்துக்குள் புகுந்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
மேலும் கத்தியை காட்டி மிரட்டி அவரை காரில் கடத்தி சென்றதுடன், அலுவலகத்தில் இருந்த, 70 மொபைல் போன்கள், 5 லேப்டாப்புக்களையும் தூக்கி சென்றுள்ளனர்.
இதுகுறித்து, ஆனந்த குமார் அலுவலகத்தில் பணியாற்றிய தருமபுரியை சேர்ந்த பிரேம்குமார் என்பவர், தருமபுரி டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதைனை அடுத்து, தருமபுரி எஸ்.பி. ஸ்டீபன்ஜேசுபாதம், தருமபுரி டி.எஸ்.பி. செந்திகுமார், தருமபுரி டவுன் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார், ஆனந்த குமாரை கடத்தி சென்றவர்களை தேடிவந்தனர்.
இந்த நிலையில், தருமபுரி அடுத்த குண்டல்பட்டியில் ஆனந்தகுமாரை கடத்தி சென்ற 12 பேர் கொண்ட கும்பலை போலீசார் ஒரு மணி நேரத்தில் மடக்கி பிடித்தனர்.
பின்னர் விசாரணை மேற்கொண்டதில் ஆனந்தகுமாரை கடத்திய சின்னச்சாமி யு–டியூப் சானல் நடத்தி வந்தது தெரியவந்தது.
மேலும், ஆனந்தகுமார் தங்களது யுடியூப் சானலில் அதிக பார்வையாளர்கள் உள்ளது போல் பொய்யான தகவலை பதிவிட்டுள்ளதாகவும், இதனால், தங்களது சானலை யுடியூப் நிறுவனம் தடை செய்துள்ளது.
இதனால், அவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதற்கு ஆனந்தகுமார் தான் காரணம் என அவரை கடத்தி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து கடத்தலுக்கு முக்கிய காரணமாக இருந்த பழைய தருமபுரியை சேர்ந்த சின்னச்சாமி (38), இவருடைய கூட்டாளிகளான அதகபாடியை சேர்ந்த சீராளன் (30), கோடியூரை சேர்ந்த சுந்தரம் (30), சுரேஷ் (39), எ.ஜெட்டிஹள்ளியை சேர்ந்த முருகன் (26), ராமு (30), மல்லிக்குட்டையை சேர்ந்த சதீஷ் (35), பெரியசாமி (27), கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சந்திரன் (29), தருமபுரியை சேர்ந்த தினேஷ்குமார் (23), சோளப்பட்டியை சேர்ந்த மணி (25) உள்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மாருதி கார், 6 பைக்குகள் மற்றும் ஆனந்தகுமார் அலுவலகத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்ட 70 மொபைல் போன்கள், 5 லேப்டாப்புக்களை பறிமுதல் செய்தனர். பின்னர் 12 பேரையும் தருமபுரி சிறையில் அடைத்தனர்.
- மாணவிகளின் கல்வி திறனை மேம்படுத்த அரசு சார்பில் வழங்கப்படும் புத்தகங்கள் மற்றும் செய்தி தாள்கள் மாணவிகளுக்கு வழங்கப்படுகிறதா? என்பதை குறித்தும் ஆய்வு செய்தார்.
- புத்தகங்கள் மற்றும் நாளிதழ்களை தினசரி மாணவிகளுக்கு படிக்க கொடுக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
மொரப்பூர்,
தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மாணவ, மாணவிகள் விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் சாந்திக்கு தொட ர்ந்து புகார்கள் வந்தன.
இதன் அடிப்படையில் மொரப்பூரில் உள்ள ஆதிதிராவிடர் அரசு மகளிர் விடுதிக்கு நேற்று திடீரென்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.
மாவட்ட கலகெ்டர் சாந்தி விடுதியில் மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமாக உள்ளதா எனவும், விடுதியில் உள்ள உணவு இருப்பு வைப்பு, அறையில் இருப்பில் உள்ள பொருட்கள் குறித்தும் அவற்றின் கணக்கு வழக்குகள் குறித்தும், மாணவிகளின் கல்வி திறனை மேம்படுத்த அரசு சார்பில் வழங்கப்படும் புத்தகங்கள் மற்றும் செய்திதாள்கள் மாணவிகளுக்கு வழங்கப்படுகிறதா? என்பதை குறித்தும் ஆய்வு செய்தார்.
அதன்பின்னர் அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம் அவற்றின் விவரங்களை கேட்டறிந்தார்.
புத்தகங்கள் மற்றும் நாளிதழ்களை தினசரி மாணவிகளுக்கு படிக்க கொடுக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சகிலா, ரங்கநாதன், மற்றும் உதவி பொறியாளர் அன்பழகன், விடுதி காப்பாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
- ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- 4 இரும்பு கட்டில்கள் மற்றும் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை சாமான் பொருட்களை வழங்கி பேசினார்.
தருமபுரி,
எர்ரப்பட்டியில் உள்ள முதியோர் காப்பக இல்லத்தில், தி.மு.க. சார்பில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே எர்ரப்பட்டி கிராமத்தில் உள்ள முதியோர் காப்பகத்திற்கு, தி.மு.க. சார்பில், ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 4 இரும்பு கட்டில்கள் மற்றும் ஒரு மாதத்திற்க்கு தேவையான மளிகை சாமான் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஏ.எஸ்.சண்முகம் தலைமை தாங்கி, காப்பகத்திற்கு ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 4 இரும்பு கட்டில்கள் மற்றும் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை சாமான் பொருட்களை வழங்கி பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம், முன்னாள் ஒன்றிய செயலாளர் துரைசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ், கிராம வளர்ச்சி குழு தலைவர் பொன்னரசு, ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் காசிலிங்கம், அவைதலைவர் வீரமணி, இலக்கிய அணி நிர்வாகி வெங்கட்ராமன், காப்பக பொறுப்பாளர் திலகவதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் காப்பக பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு வருகின்றனர்.
- இவர்கள் அரசின் கவனத்திற்கு செல்வதற்காக பல்வேறு கோரிக்கைகளை முழக்கங்களாக பேசி வருகின்றனர்.
பாப்பிரெட்டிபட்டி,
அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் இருப்பதற்கு ஏ, பள்ளிப்பட்டு போலீசார் 20-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கோபாலபுரத்தில் சுப்பிரமணிய சிவா சர்க்கரை ஆலை அரசு நிறுவனம் சுமார் 35 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றது.
இந்த ஆலையில் 800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு தொழிலாளர் பாதுகாப்பு, சம்பள உயர்வு, தற்காலிக தொழிலாளர்களை நிரந்தர தொழிலாளர்களாக மாற்றுவது மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழில் சார்ந்த கூட்டமைப்பு சுப்பிரமணிய சிவா சர்க்கரை ஆலை சார்பில் அடையாள ஒரு நாள் உண்ணாவிரதம் வியாழக்கிழமை இன்று காலை தொடங்கினர்.
இதில் 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு வருகின்றனர். இவர்கள் அரசின் கவனத்திற்கு செல்வதற்காக பல்வேறு கோரிக்கைகளை முழக்கங்களாக பேசி வருகின்றனர்.
அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் இருப்பதற்கு ஏ, பள்ளிப்பட்டு போலீசார் 20-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.
- கையெழுத்து இயக்கத்தை தி.மு.க. தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.
- பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய துணை செயலாளர் வள்ளி, நிர்வாகிகள் தங்கராஜ், சசிகுமார், பிலிப், நந்தகுமார், முரளி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மொரப்பூர்,
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய கோரி ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடை பெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய ம.தி.மு.க. சார்பில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை தி.மு.க. தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் குணசேகரன், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய ம.தி.மு.க. செயலாளர் சுகவனம், கடத்தூர் ஒன்றிய செயலாளர் லியாகத், தருமபுரி நாடாளுமன்ற தொகுதி இணையதள பொறுப்பாளர் குமரவேல், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய துணை செயலாளர் வள்ளி, நிர்வாகிகள் தங்கராஜ், சசிகுமார், பிலிப், நந்தகுமார், முரளி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- 'விழிப்புடன் இருங்கள் பெண்களே...யாரையும் நம்பாதீர்கள்...நம்பி உங்கள் பணத்தை கொடுக்காதீர்கள்...
- எனது சொந்த அண்ணன் பெட்ரோல் பங்க் வைக்க வேண்டி கேட்டதால் பணம் ஏற்பாடு செய்து கொடுத்தேன். அந்த பணத்தை திருப்பி கேட்டபோது அவர் தர மறுத்தார்.
அரூர்,
தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த நாசம் கொட்டாய் என்ற பகுதியை சேர்ந்தவர் அருண்பிரசாத். இவரது சகோதரி விஜயபாரதி. ஐ.டி. ஊழியரான விஜயபாரதி திருமணமாகி மும்பையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கொரோனா காலத்தில் அருண்பிரசாத் ஊரில் பெட்ரோல் பங்க் வைப்பதற்காக தங்கை விஜயபாரதியிடம் பணம் கேட்டார்.
இதையடுத்து தனது சொந்த அண்ணன் தானே கேட்கிறார் என எண்ணி விஜயபாரதி அண்ணனுக்கு ரூ.25 லட்சம் கொடுத்தார். கொரோனா காலம் என்பதால் அப்போது ஆன்லைன் மூலம் இந்த பணம் அனுப்பப்பட்டது. அதன்பிறகும் அருண்பிரசாத் தங்கையிடம் பணம் கேட்டார். இதையடுத்து விஜயபாரதி தனது மாமியார் மூலம் ரூ.15½ லட்சம் ஏற்பாடு செய்து கொடுத்தார்.
பணத்தை பெற்ற அருண்பிரசாத் தனது மனைவி பெயரில் பெட்ரோல் பங்க் வைத்து நடத்தி வருகிறார். இதை தொடர்ந்து விஜயபாரதி கொடுத்த பணத்தை அண்ணனிடம் திருப்பி கேட்டார். அதற்கு அருண்பிரசாத் மறுத்ததாக தெரிகிறது. இதையடுத்து விஜயபாரதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்தார். இதை தொடர்ந்து அவர் ரூ.25 லட்சத்தை திருப்பி கொடுத்தார்.
மீதம் உள்ள ரூ.15½ லட்சத்தை கேட்டபோது அதை திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதையடுத்து விஜயபாரதி அரூருக்கு வந்தார். அங்கு அண்ணனின் பெட்ரோல் பங்க் முன்பாக அமர்ந்து பிச்சை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
அவர் போராட்டம் நடத்திய இடத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் 'விழிப்புடன் இருங்கள் பெண்களே... யாரையும் நம்பாதீர்கள்... நம்பி உங்கள் பணத்தை கொடுக்காதீர்கள்... முக்கியமாக உடன்பிறப்புகளை நம்பினால் இதுவே நிலைமை...' என்று எழுதப்பட்டிருந்தது.
அண்ணனுக்கு பணத்தை கொடுத்துவிட்டு பெண் பிச்சை எடுத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த இடத்தில் ஏராளமானோர் கூடினார்கள். இது தொடர்பாக விஜயபாரதி கூறியதாவது:-
எனது சொந்த அண்ணன் பெட்ரோல் பங்க் வைக்க வேண்டி கேட்டதால் பணம் ஏற்பாடு செய்து கொடுத்தேன். அந்த பணத்தை திருப்பி கேட்டபோது அவர் தர மறுத்தார். இதனால் எஸ்.பி.யிடம் புகார் கொடுத்தேன். அதன்பிறகு ரூ.25 லட்சத்தை தந்த அவர் மீதி பணத்தை தர மறுக்கிறார்.
அண்ணனுக்கு பணம் கொடுத்ததால் எனது குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு வீதியில் தவிக்கும் நிலை உருவாகிவிட்டது. பொதுவாக அண்ணன்கள் அக்காள், தங்கையை வாழவைத்து பார்ப்பார்கள். ஆனால் இந்த அண்ணன் எனக்கு அநீதி இழைத்துவிட்டார்.
இவ்வாறு அவர் கூறினார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பெய்த மழையால் தருமபுரியில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை உருவாகி யுள்ளது.
- கடந்த 2 வாரமாக வெப்ப சலனத்தால் அவதிப்பட்டு வந்த பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து 2 வாரமாக அதிக வெப்ப சலனம் நிலவு வந்தது. இந்த வெப்ப சலனத்தால் பொதுமக்கள் இரவு நேரங்களில் தூக்கமின்றி அவதிக்குள்ளாகி வந்தனர். இந்த நிலையில் நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் தேனி, திண்டுக்கல், மதுரை, ஈரோடு, கோயம்புத்தூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, பாண்டிச்சேரி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்யக் கூடும் என அறிவித்திருந்தது.
தருமபுரியில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. திடீரென மாலை 6 மணியளவில் கருமேகம் சூழ்ந்து பலத்த காற்று வீசியது. பின்னர் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மேலும் தருமபுரி, இலக்கியம் பட்டி, அன்னசாகரம், அரூர், கோட்டப்பட்டி, வெள்ளப்புடையாம்பட்டி, உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.
இந்த கனமழையால் தருமபுரி நகர் நேதாஜி பைபாஸ் சாலையில் மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து சாலைகளில் ஆறாக ஓடியதால் போக்குவரத்து செல்லமுடியாமல் ஊர்ந்து சென்றதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர். 108 ஆம்புலன்ஸ் செல்வதற்கு வழி இன்றி வாகன நெரிசலில் மிதந்து சென்றது.
இந்த மழையால் தருமபுரியில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை உருவாகியுள்ளது. இதன்காரணமாக கடந்த 2 வாரமாக வெப்பசலனத்தால் அவதிப்பட்டு வந்த பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- மீண்டும் சாமி தெப்பக்குளத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
- விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தருமபுரி,
தருமபுரி குமாரசாமிப் பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் ஆடி கிருத்திகை விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.
விழாவையையொட்டி அதிகாலை சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு தங்க கவச அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதைத் தொடர்ந்து மாலை சிவசுப்பிரமணிய சாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்னர் மேளதாளங்கள் முழங்க சாமி திருவீதி உலா நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற இந்த ஊர்வலம் கோவிலை வந்தடைந்தது. பின்னர் மீண்டும் சாமி தெப்பக்குளத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடி கிருத்திகை தெப்ப உற்சவம் நடைபெற்றது. விழாவில் தர்மபுரி தீயணைப்பு துறை வீரர்களின் உதவியுடன் சாமி தெப்பக்குளத்திற்குள் 7 முறை வலம் வந்தார். இதையடுத்து சாமி தெப்பக்குளத்தில் பக்தர்க ளுக்கு அருள் பாலித்தார்.
பின்னர் சிறப்பு பூஜை களும், மகாதீபாரதனையும் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. தெப்ப உற்சவத்தின் போது லேசான மழை பெய்ததையும் பொருட்படுத்தாமல் கொட்டும் மலையில் இந்த தெப்ப உற்சவம் நடந்தது.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை செங்குந்தர் சமூகத்தினர், அறங்காவலர் குழுவினர், அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் விழா குழுவினர் செய்து இருந்தனர்.
- தருமபுரியில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது.
- மழையால் தருமபுரியில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை உருவாகியுள்ளது.
தருமபுரி:
தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து 2 வாரமாக அதிக வெப்ப சலனம் நிலவி வந்தது. இந்த வெப்ப சலனத்தால் பொதுமக்கள் இரவு நேரங்களில் தூக்கமின்றி அவதிக்குள்ளாகி வந்தனர். இந்த நிலையில் நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் தேனி, திண்டுக்கல், மதுரை, ஈரோடு, கோயம்புத்தூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, பாண்டிச்சேரி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்யக்கூடும் என அறிவித்திருந்தது.
தருமபுரியில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. திடீரென மாலை 6 மணியளவில் கருமேகம் சூழ்ந்து பலத்த காற்று வீசியது. பின்னர் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மேலும் தருமபுரி, இலக்கியம் பட்டி, அன்னசாகரம், அரூர், கோட்டப்பட்டி, வெள்ளப்புடையாம்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.
இந்த கனமழையால் தருமபுரி நகர் நேதாஜி பைபாஸ் சாலையில் மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து சாலைகளில் ஆறாக ஓடியதால் போக்குவரத்து செல்லமுடியாமல் ஊர்ந்து சென்றதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர். 108 ஆம்புலன்ஸ் செல்வதற்கு வழி இன்றி வாகன நெரிசலில் மிதந்து சென்றது.
இந்த மழையால் தருமபுரியில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக கடந்த 2 வாரமாக வெப்ப சலனத்தால் அவதிப்பட்டு வந்த பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






