என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரூர் சுப்பிரமணிய சிவா சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
    X

    தொழிலாளர் பாதுகாப்பு, சம்பள உயர்வு, தற்காலிக தொழிலாளர்களை நிரந்தர தொழிலாளர்களாக மாற்றுவது மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரூர் சுப்பிரமணிய சிவா சர்க்கரை ஆலை முன்பு தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அரூர் சுப்பிரமணிய சிவா சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

    • 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு வருகின்றனர்.
    • இவர்கள் அரசின் கவனத்திற்கு செல்வதற்காக பல்வேறு கோரிக்கைகளை முழக்கங்களாக பேசி வருகின்றனர்.

    பாப்பிரெட்டிபட்டி,

    அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் இருப்பதற்கு ஏ, பள்ளிப்பட்டு போலீசார் 20-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கோபாலபுரத்தில் சுப்பிரமணிய சிவா சர்க்கரை ஆலை அரசு நிறுவனம் சுமார் 35 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றது.

    இந்த ஆலையில் 800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு தொழிலாளர் பாதுகாப்பு, சம்பள உயர்வு, தற்காலிக தொழிலாளர்களை நிரந்தர தொழிலாளர்களாக மாற்றுவது மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழில் சார்ந்த கூட்டமைப்பு சுப்பிரமணிய சிவா சர்க்கரை ஆலை சார்பில் அடையாள ஒரு நாள் உண்ணாவிரதம் வியாழக்கிழமை இன்று காலை தொடங்கினர்.

    இதில் 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு வருகின்றனர். இவர்கள் அரசின் கவனத்திற்கு செல்வதற்காக பல்வேறு கோரிக்கைகளை முழக்கங்களாக பேசி வருகின்றனர்.

    அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் இருப்பதற்கு ஏ, பள்ளிப்பட்டு போலீசார் 20-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.

    Next Story
    ×