என் மலர்
தர்மபுரி
- கம்பாலை பகுதியைச் சேர்ந்த தருமன், சரவணன் ஆகியோர் என்பதும் வனவிலங்குகளை வேட்டையாட முயன்றதும் தெரியவந்தது.
- 2 பேரையும் வனத்துறை யினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 2 நாட்டு துப்பாக்கி கள் பறிமுதல் செய்யப் பட்டன.
தருமபுரி,
தருமபுரி மண்டல வன பாதுகாவலர் ராகுல் உத்தரவுப்படி மாவட்ட வன அலுவலர் அப்பல்லநாயுடு மேற்பார்வையில் மாவ ட்டத்தில் உள்ள வனப்பகுதி களில் வன விலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுக்க தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தீர்த்தமலை வனச்சரகர் பெரியண்ணன் தலைமை யில் வனவர்கள் கணபதி, வடிவேல், வனக் காப்பா ளர்கள் வெங்கடேசன், மதன்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் கத்திரிப்பட்டி, கம்பாலை வனப்பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது உரிமம் பெறாத நாட்டுத்துப்பாக்கிகளுடன் வனப்பகுதியில் சென்ற 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அவர்கள் கம்பாலை பகுதியைச் சேர்ந்த தருமன், சரவணன் ஆகியோர் என்பதும் வனவிலங்குகளை வேட்டையாட முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் வனத்துறை யினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 2 நாட்டு துப்பாக்கி கள் பறிமுதல் செய்யப் பட்டன.
வனவிலங்குகளை வேட்டை யாட முயன்ற 2 பேருக்கும் தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.2 லட்சம் அபராதம் விதித்தனர்.
- மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் சார்பில் ரூ.11 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள எந்திரங்கள் வழங்கப் பட்டது.
- பள்ளி தலைமை ஆசிரியர் ரெஜினா மேரி மாணவ, மாணவியருக்கு எந்திரங்களை வழங்கினார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், ரயில் நிலையம் அருகே உள்ள பார்வை திறன் குறையுடையோருக்கான அரசு தொடக்கப்பள்ளியில் படிக்கும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு, ஒலி வடிவில் எண், எழுத்துக் களை டிஜிட்டல் முறையில் காண நவீன எந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் சார்பில் ரூ.11 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள எந்திரங்கள் வழங்கப் பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நிறுவனத்தின் பொது மேலாளர் பாலு கலந்து கொண்டு, பள்ளி தலைமை ஆசிரியர் ரெஜினா மேரி மாணவ, மாணவியருக்கு எந்திரங்களை வழங்கினார்.
- தருமபுரி அடுத்த இலக்கியம்பட்டி புத்து நாகர் கோவிலில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
- அனைத்து பக்தர்களும் பிரசாதமாக கொண்டு வந்திருந்த கூல், வெண்பொங்கல், பால் பாயாசம் இனிப்பு வகைகளை அம்மனுக்கு படைத்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
தருமபுரி,
இன்று ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை யொட்டி தருமபுரி அடுத்த இலக்கியம்பட்டி புத்து நாகர் கோவிலில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
புற்றுக்கோவிலில் தல விருட்சமாக ஓங்கி செழித்து வளர்ந்த வேப்ப மரத்தை சுற்றி அமைந்துள்ள பாம்பு புற்றில் பெண்கள் முட்டை வைத்து பால் ஊற்றியும், சிலைகளுக்கு அபிசேகம் செய்து மஞ்சள், குங்குமம் இட்டு வழிபாடு நடத்தினர்.
விரதம் இருந்து பூஜை செய்த சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள் கயிறு வழங்கப்பட்டது. பின்னர் அனைத்து பக்தர்களும் பிரசாதமாக கொண்டு வந்திருந்த கூல், வெண்பொங்கல், பால் பாயாசம் இனிப்பு வகைகளை அம்மனுக்கு படைத்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
- குவாரிகளில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களை கண்டறிந்து அவர்கள் பணிபுரியும் இடங்களுக்கு நேரில் சென்று சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.
- முகாம்களில் ஆங்கிலம் மற்றும் வட மொழியில் (இந்தி) அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரம் வழங்கி விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் முத்து வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம், சுரங்கம் மற்றும் குவாரிகளில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களை கண்டறிந்து அவர்கள் பணிபுரியும் இடங்களுக்கு நேரில் சென்று சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.
மேற்படி முகாம்களில் ஆங்கிலம் மற்றும் வட மொழியில் (இந்தி) அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரம் வழங்கி விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இவ்வாரியத்தின் மூலம் வழங்கப்படும் நலத்திட்டங்களான நடமாடும் மருத்துவ ஊர்தி வசதி, தமிழ்நாட்டில் வாழும் புலம்பெயர்ந்த கட்டுமான தொழிலாளர்கள் பணியிடத்தில் விபத்தினால் உயிரிழக்க நேரிட்டால் அவர்களின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல அரசு அமரர் ஊர்தி, தொடர்வண்டி அல்லது ஆகாயவிமானம் மூலம் எடுத்துச் செல்வதெனில் அதிக பட்சமாக ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவியாக சம்மந்தப்பட்ட மாவட்ட ககர் வாயிலாக வழங்கப்படும்.
மேலும் பணியிடத்தில் விபத்து மரணம் ஏற்பட்டால் ரூ.5,00,000 அவரது வாரிசு தாருக்கு வழங்கப்படும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
எனவே மேற்படி வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய தனிநபர் ஆதார் எண், குடும்ப அட்டை நகல், வயதிற்கான ஆவணம், வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைபேசி எண் உள்ளிட்ட நகல்களுடன் tnuwwb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது நேரடியாக தருமபுரி, தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் விண்ணப் பிக்கலாம் என தொழி லாளர் உதவி ஆணையர் முத்து தெரிவித்துள்ளார்.
- தொடர்ந்து இந்நிகழ்ச்சி இன்று இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
- மாணவர்கள் தினேஷ், நவீன்குமார், பிரவீனா ஆகியோர் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்து பேசினர்.
தருமபுரி,
சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போதை பொருள் இல்லாத தமிழ்நாடு என்ற விழிப்பு ணர்வு நிகழ்ச்சியினை காணொளி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து இந்நிகழ்ச்சி இன்று இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை வகித்து போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு குறித்து விழிப்புணர்வு உரை யாற்றினார்.
மாவட்ட எஸ்.பி. ஸ்டீபன் ஜேசுபாதம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், மாவட்ட கல்வி அலுவலர் விஜியகுமார், மருத்துவர் அபிராமி ஆகியோர் விழிப்புணர்வு செய்தனர்.
மேலும் மாணவர்கள் தினேஷ், நவீன்குமார், பிரவீனா ஆகியோர் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்து பேசினர்.
பின்னர் போதை பொருள் விழிப்புணர்வு குறித்து குறும்படம் காண் பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து போதை பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இருபால் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
முன்னதாக தலைமை ஆசிரியர் பழணிச்சாமி வர வேற்றார். உதவி தலைமை ஆசிரியர் அருண்குமார் நன்றி கூறினார்.
- சாலையில் நடந்து சென்றபோது அறுந்து கிடந்த மின் கம்பியை தெரியாமல் மிதித்ததால் அடுத்தடுத்து 3 பேர் பலியாகினர்.
- கனமழை பெய்ததால் மின் கம்பி அறுந்து விழுந்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
காரிமங்கலம்:
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே திண்டல் ஊராட்சிக்குட்பட்ட ஒடச்சகரை கிராமத்தை சேர்ந்தவர் மாதம்மாள் (வயது55). இவரது மகன் பெருமாள் (33). இவருக்கு திருமணமாகி மோகனா என்கிற மனைவி உள்ளார். பெருமாளின் அத்தை சரோஜா (70).
இந்த நிலையில் நேற்று மாலை காரிமங்கலம் பகுதியில் கனமழை பெய்துள்ளது.
அப்போது மாதம்மாள் வீட்டின் முன்பு மின்கம்பத்தில் இருந்து கொய்யா மரத்திற்கு துணி காய வைக்க ஒரு கம்பி கட்டியுள்ளார்.
இன்று காலை அந்த கம்பியில் ஈர துணியை மாதம்மாள் காய போட்டுள்ளார். அப்போது அவரை மின்சாரம் தாக்கியது.
இதனை பார்த்த அருகில் இருந்த பெருமாள், சரோஜா ஆகியோர் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்கள் 3 பேர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டது. இதில் அவர்கள் 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுபற்றி காரிமங்கலம் போலீசாருக்கும், பண்ணந்தூர் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன், மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
மின்சாரம் தாக்கி இறந்த மாதம்மாள், பெருமாள், சரோஜா ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்சாரம் தாக்கியதில் தாய்-மகன் உள்பட 3 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டைவிட்டு வெளியே சென்றார்.
- மாலை நீண்டநேரமாகியும் சிறுமி வீடு திரும்பிவர வில்லை.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் அரூர் கோபால்பட்டியைச் சேர்ந்தவர் 17வயது சிறுமி.
இவர் பிளஸ்-2 வரை முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டைவிட்டு வெளியே சென்றார். மாலை நீண்டநேரமாகியும் சிறுமி வீடு திரும்பிவரவில்லை. இதனால் பதறிப்போன சிறுமியின் பெற்றோர் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடிபார்த்தனர். எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததால், அவர் மாயமானது தெரியவந்தது.
இதுகுறித்து சிறுமியின் தந்தை அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 2 குழந்தைகளுடன் வீட்டைவிட்டு வெளியே சென்ற கவுசல்யா மீண்டும் வீடு திரும்பிவரவில்லை.
- பதறிபோன விஜய் கணபதி தனது மனைவி, 2 குழந்தைகளை உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடி பார்த்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் கக்கன்ஜி புரத்தைச் சேர்ந்தவர் விஜய்கணபதி. இவர் வெல்டிங் பட்டறையில் வெல்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி கவுசல்யா (வயது 24) என்ற மனைவியும், ஜெயபிரீத்தி (7), ஜீவிதா என்ற (4) என்ற மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி 2 குழந்தைகளுடன் வீட்டைவிட்டு வெளியே சென்ற கவுசல்யா மீண்டும் வீடு திரும்பிவரவில்லை. இதனால் பதறிபோன விஜய் கணபதி தனது மனைவி, 2 குழந்தைகளை உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடி பார்த்தார். எங்கு தேடியும் அவர்கள் கிடைக்காததால், மாயமானது தெரியவந்தது.
இதுகுறித்து விஜய்கணபதி பாலக்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருவிழா கடந்த 7 ஆம் தேதி பொன்னியம்மன் கோவிலுக்கு கரகம் எடுத்தல் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது.
- 8-ஆம் தேதி அம்மன் ஊர்வலம் மற்றும் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடும் நிகழ்ச்சி நடந்தது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே இலளிகம் கிராமத்தில் குறிஞ்சி மாரியம்மன் கோவில் உள்ளது.
இக்கோவில் திருவிழா கடந்த 7 ஆம் தேதி பொன்னியம்மன் கோவிலுக்கு கரகம் எடுத்தல் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது.
தொடர்ந்து பால்குட ஊர்வலம் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது, 8-ஆம் தேதி அம்மன் ஊர்வலம் மற்றும் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடும் நிகழ்ச்சி நடந்தது.
விழாவின் முக்கிய நாளான நேற்று பம்ப வாத்தியங்கள் வானவேடிக்கை முழங்க, குறிஞ்சி மாரியம்மனுக்கு, பல்வேறு சமூகத்தை சேர்ந்த திரளான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு, மாவிளக்கை ஊர்வலமாக எடுத்து சென்று அம்மனுக்கு படைத்து வழிபடும் நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெற்றது.
தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் மகாதீபாரதனை நிகழ்ச்சி நடந்தது. இன்று மஞ்சள் நீராடுதல் மற்றும் எருதாட்டத்துடன் கோயில் விழா நிறைவுபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.
- 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 165 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகளை பேரூராட்சி தலைவரும், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவருமான வெங்கடேசன் வழங்கினார்
- உடற்கல்வி ஆசிரியர்கள் நாகராஜ், ஜெயபிரகாஷ் நாராயணன், மற்றும் பள்ளி ஆசிரியர் ஆசிரியைகள் மாணவர்கள் உள்ளிட்டோர் பலர்கலந்து கொண்டனர்.
மாரண்டஅள்ளி,
தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 165 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகளை பேரூராட்சி தலைவரும், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவருமான வெங்கடேசன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திகா பன்னீர் செல்வம், கவுன்சிலர்கள் கீதா வடிவேல், கார்த்திகேயன், வேலு, வெங்கடேசன், அபிராமி காந்தி மற்றும் சௌந்தர வைத்திஸ், மாவட்ட பிரதிநிதி பன்னீர்செல்வம், தலைமை ஆசிரியர் தேவராஜ், உதவி தலைமை ஆசிரியர் பழனிசாமி, ஆசிரியர்கள் தமிழ் ஆசிரியர் மகேஷ், ரங்கநாதன், உடற்கல்வி ஆசிரியர்கள் நாகராஜ், ஜெயபிரகாஷ் நாராயணன், மற்றும் பள்ளி ஆசிரியர் ஆசிரியைகள் மாணவர்கள் உள்ளிட்டோர் பலர்கலந்து கொண்டனர்.
- பாலக்கோடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரையும் கைது செய்தனர்.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் சூதாட்டம் நடப்பதாக பாலக்கோடு டி.எஸ்.பி சிந்து இரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் பாலக்கோடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பாலக்கோடு அருகே காவாப்பட்டி புளியமரத்தடியில் சூதாடி கொண்டிருந்த 4 பேரையும் போலீசார் பிடித்து விசாரித்ததில் வேளாவல்லியை சேர்ந்த தமிழரசன் (வயது 23), மாதேஷ் (45) காவாப்பட்டியை சேர்ந்த விக்னேஷ் (23), சிவா (28) என்பதும் தெரியவந்தது.
இதே போன்று பாலக்கோடு தக்காளி மார்க்கெட் அருகே சூதாடிய முத்து கவுண்டர் தெருவை சேர்ந்த சத்தியராஜ் (28), வேல்முருகன் (45) தீர்த்தகிரி நகரை சேர்ந்த சரவணன் (38), சுகுமார் (40) என்பதும் தெரியவந்தது.
உடனே போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்த சீட்டு கட்டுக்களையும். 3 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
- நேற்று முன்தினம் 674 கிலோவாக இருந்த பட்டுக்கூடுகள் வரத்து நேற்று 922 கிலோவாக அதிகரித்தது.
- மொத்தம் ரூ.4 லட்சத்து 43 ஆயிரத்து 543 மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.
தருமபுரி,
தருமபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக் கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்ட ங்களில் இருந்து விவ சாயிகள் பட்டுக் கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.
இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 674 கிலோவாக இருந்த பட்டுக்கூடுகள் வரத்து நேற்று 922 கிலோவாக அதிகரித்தது. நேற்று அதிகபட்சமாக ரூ.616-க்கும், குறைந்தபட்சமாக ரூ.258-க்கும், சராசரியாக ரூ.481.04-க்கும் விற்பனையானது.
மொத்தம் ரூ.4 லட்சத்து 43 ஆயிரத்து 543 மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.






