என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி  இலக்கியம்பட்டி புத்து நாகர்  கோவிலில் பெண்கள் வழிபாடு
    X

    ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி இலக்கியம்பட்டி புத்து நாகர் கோவிலில் பெண்கள் வழிபாடு

    • தருமபுரி அடுத்த இலக்கியம்பட்டி புத்து நாகர் கோவிலில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
    • அனைத்து பக்தர்களும் பிரசாதமாக கொண்டு வந்திருந்த கூல், வெண்பொங்கல், பால் பாயாசம் இனிப்பு வகைகளை அம்மனுக்கு படைத்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

    தருமபுரி,

    இன்று ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை யொட்டி தருமபுரி அடுத்த இலக்கியம்பட்டி புத்து நாகர் கோவிலில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

    புற்றுக்கோவிலில் தல விருட்சமாக ஓங்கி செழித்து வளர்ந்த வேப்ப மரத்தை சுற்றி அமைந்துள்ள பாம்பு புற்றில் பெண்கள் முட்டை வைத்து பால் ஊற்றியும், சிலைகளுக்கு அபிசேகம் செய்து மஞ்சள், குங்குமம் இட்டு வழிபாடு நடத்தினர்.

    விரதம் இருந்து பூஜை செய்த சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள் கயிறு வழங்கப்பட்டது. பின்னர் அனைத்து பக்தர்களும் பிரசாதமாக கொண்டு வந்திருந்த கூல், வெண்பொங்கல், பால் பாயாசம் இனிப்பு வகைகளை அம்மனுக்கு படைத்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

    Next Story
    ×