17வயது சிறுமி மாயம்

சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டைவிட்டு வெளியே சென்றார்.மாலை நீண்டநேரமாகியும் சிறுமி வீடு திரும்பிவர வில்லை.
17வயது சிறுமி மாயம்
Published on

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் அரூர் கோபால்பட்டியைச் சேர்ந்தவர் 17வயது சிறுமி.

இவர் பிளஸ்-2 வரை முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டைவிட்டு வெளியே சென்றார். மாலை நீண்டநேரமாகியும் சிறுமி வீடு திரும்பிவரவில்லை. இதனால் பதறிப்போன சிறுமியின் பெற்றோர் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடிபார்த்தனர். எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததால், அவர் மாயமானது தெரியவந்தது.

இதுகுறித்து சிறுமியின் தந்தை அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com