என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • ஊட்டமலை அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
    • பயணிகளுக்கு போதைப்பொருள் குறித்த தீமைகளை எடுத்துரைக்க வேண்டும் என்பது குறித்து எடுத்துறைக்கப்பட்டது.

    ஒகேனக்கல்,

    தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் போலீஸ் துறை சார்பில் போதை பொருட்களை முற்றிலுமாக ஒழிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

    இதனைத் தொடர்ந்து பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளிடம் போதைப் பொருட்கள் உலா வருவதை தடுக்கும் விதமாக போதைப் பொருள் இல்லாத தமிழகம் என்ற பிரச்சாரத்துடன் ஊட்டமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒகேனக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் முன்னிலையில் நடைபெற்றது.

    இந்நிகழ்வில், போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள், போதைப் பொருட்களை தடுப்பதற்கு அரசு என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது என்பது குறித்து பள்ளி மாணவ, மாணவிகளிடம் எடுத்துக் கூறப்பட்டது.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் உறுதிமொழியை முன்மொழிய அதனைத் தொடர்ந்து ஊட்டமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    மேலும் இந்நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராசு மற்றும் போலீசார், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதே போன்று ஒகேனக்கல் பஸ் நிலையத்தில் போலீசார் சார்பில் ஆயில் மசாஜ் செய்பவர்களிடமும், பரிசல் இயக்கும் பரிசல் ஓட்டிகளிடமும், பொதுமக்களிடமும், சுற்றுலா பயணிகளிடமும் போதைப்பொருள் இல்லாத தமிழகம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் முன்னிலை வகித்தார். இதில் மசாஜ் செய்பவர்களும், பரிசல் இயக்குபவர்களும், வரும் சுற்றுலா பயணிகளுக்கு போதைப்பொருள் குறித்த தீமைகளை எடுத்துரைக்க வேண்டும் என்பது குறித்து எடுத்துறைக்கப்பட்டது.

    இந்த நிகழ்வில் ஒகேனக்கல் போலீசார் மற்றும் பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளர்கள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஒடசல்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.
    • தாயின் புடவையில் திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த ஒடசல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் காவேரி. இவரது மகன் சிவகிரி (வயது 14). இந்த சிறுவன் ஒடசல்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று சிவகிரி வீட்டில் யாரும் இல்லாதபோது தனது தாயின் புடவையில் திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிவகிரியின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    இந்த சம்பவம் குறித்து உறவினர்கள் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் கடத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சிவகிரியின் உடலை கைப்பற்றி தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவனுக்கு அஇஅமபள்ளியில் டார்சர் கொடுக்கப்பட்டதா? அல்லது வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

    மாணவன் இறந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • பிளாஸ்டிக் பைகள் சுற்றுச்சூழலுக்கு உலைவைக்கும் அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது.
    • பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மஞ்சள் துணிப்பையை அறிமுகப்படுத்தியது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு பரவலாக அதிகரித்து உள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்புகள் அதிகரிக்கும் என்றும் இயற்கை ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

    பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக ஒழிக்க முடியவில்லை. இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுக்கு முன்பு தமிழக அரசு பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்ச துணிப்பை திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. இந்த திட்டத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. விழிப்புணர்வும் பரவலாக இருந்தது.

    இந்தநிலையில் தருமபுரி மாவட்டத்தில் தற்போது திருவிழாக்காலம் என்பதால் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு அதிகரித்துள்ளது. இது சுற்றுச்சூழலுக்கு உலைவைக்கும் அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக தர்மபுரி நகரப் பகுதியில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. காய்கறி கடைகள், பிளாட்பார கடைகள், இறைச்சி கடைகள், உணவகங்கள், தள்ளுவண்டி உணவகங்கள், பழக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் அரசு தடை செய்யப்பட்ட 40 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகள் தாராளமாக புழக்கத்தில் இருந்து வருவதாக இயற்கை ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்.

    தருமபுரி நேதாஜி பைபாஸ் சாலையில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்த மருத்துவமனைக்கு தினந்தோறும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள் மற்றும் புறநோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள் வாங்கி வரும் தின்பண்டங்கள், உணவு வகைகளை தவிர சிகிச்சை பிரிவுக்கு தேவையான மருந்து வகைகள் உள்ளிட்டவைகளை பிளாஸ்டிக் கவர்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

    மருத்துவமனையில் தின்பண்டங்கள் உணவு உள்ளிட்டவைகளை பயன்படுத்திய பிறகு பிளாஸ்டிக் பைகளை ஆங்காங்கே வீசி எரிவதால் மருத்துவமனை முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகள் காணப்படுகிறது. இது மட்டுமின்றி நகரப் பகுதி மற்றும் தருமபுரி ஒன்றியத்துக்கு உட்பட்ட நகரங்களில் தெருவில் கொட்டப்படும் குப்பைகள் மற்றும் கழிவு நீர் கால்வாய்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் கழிவுகளை நிறைந்து காணப்படுகிறது.

    இது குறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது:

    இந்தியாவில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    நாள் ஒன்றுக்கு கொட்டப்படும் பிளாஸ்டிக் குப்பைகளின் அளவை கணக்கிட்டால், எதிர்காலத்தில் இந்தியா பெரும் சுகாதார கேடை சந்திக்க வேண்டியிருக்கும். இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்று மாநில அரசு தெரிவித்தது. இந்த அறிவிப்புக்கு பிறகு பெரும்பாலான மளிகைக் கடைகள், உழவர் சந்தை, ஜவுளிக்கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு குறைந்த நிலையில் இந்த நடைமுறை ஒரு சில மாதங்கள் மட்டுமே பின்பற்றப்பட்டது. பின்னர் மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியது.

    பிளாஸ்டிக் பைகள் பயன் பாட்டை குறைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் அரசை வலியுறுத்தினர். மாநில அரசு பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மஞ்சள் துணிப்பையை அறிமுகப்படுத்தியது.

    தற்போது தர்மபுரி மாவட்டத்தில் ஆடித் திருவிழாக்கள் கொண்டாடப் பட்டு வருகிறது. திருவிழா காலங்களில் அதிகளவில் பிளாஸ்டிக் பேக் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றை பயன்படுத்தி விட்டு மக்கள் ஆங்காங்கே வீசிச்செல்கின்றனர். எளிதில் மக்காத இதுபோன்ற பிளாஸ்டிக் பைகள் மண்ணின் வளத்தை சிதைத்து விடும். தருமபுரி நகரப் பகுதிகளிலும் இலக்கியம்பட்டி பஞ்சாயத்து 15 வார்டுகளிலும் பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்து காணப்படுகிறது. மத்திய மாநில அரசுகள் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியம் என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரசு விழாவில் பங்கேற்று விட்டு மதியம் மீண்டும் சென்னைக்கு செல்வதற்காக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காரில் புறப்பட்டார்.
    • பாதுகாப்பு பணிக்காக ஆஸ்பத்திரி முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

    தருமபுரி:

    அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று காலை சேலம் வந்தார். அவர் அரசு விழாவில் பங்கேற்று விட்டு மதியம் மீண்டும் சென்னைக்கு செல்வதற்காக காரில் புறப்பட்டார்.

    அப்போது அவர் தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே வந்தபோது அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவரை உடன் சென்ற அதிகாரிகள் மற்றும் போலீசார் காரிமங்கலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவலறிந்த அமைச்சர்கள் சக்கரபாணி, சிவசங்கர் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து மகேஷின் உடல் நிலை குறித்து விசாரித்தனர். மேலும் தருமபுரி மாவட்ட தி.மு.க செயலாளர்கள் தடங்கம் சுப்ரமணி, முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், மாநில பொறுப்பாளர் சூடபட்டி சுப்ரமணி, ஒன்றிய செயலாளர் அடிலம் அன்பழகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடனே அமைச்சரை பார்ப்பதற்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு திரண்டனர்.

    பின்பு மேல்சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அமைச்சருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் காட்டு தீ போல் பரவியது.

    • ஆடி மாத கடைசி வெள்ளியை அடுத்து கடத்தூரில் உள்ள மகாகாளியம்மன், மாரியம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
    • அம்மனுக்கு மணப்பெண் அலங்காரமும், மகா மாரியம்மனுக்கு வெள்ளி காப்பு அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம், கடத்தூரில் மகாகாளியம்மன், மகா மாரியம்மன் கோவிலில் காமடேஸ்வரர் காளிகாம்பாள் திருக்கல்யாணம் இன்று மாலை நடைபெறுகிறது.

    ஆடி மாத கடைசி வெள்ளியை அடுத்து கடத்தூரில் உள்ள மகாகாளியம்மன், மாரியம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    இன்று மாலை திருக்கல்யாண விழா நடைபெறுவதை அடுத்து அம்மனுக்கு மணப்பெண் அலங்காரமும், மகா மாரியம்மனுக்கு வெள்ளி காப்பு அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.

    திருக்கல்யாண நிகழ்ச்சியை அடுத்து மாலை 4.30 மணிக்கு காமடேஸ்வரர் ஸ்ரீ காளிகாம்பாள் திருக்கல்யாண சீர்வரிசை ஊர்வலம் கொண்டு வரும் நிகழ்ச்சியும், தொடர்ந்து மங்கல இசை வாத்தியங்களுடன் விக்னேஸ்வரர் பூஜை, , எஜமான சங்கல்பம் கலச ஆராதனை நடைபெறுகிறது.

    இதனையொட்டி இன்று இரவு 7 மணிக்கு ஸ்ரீ காளியம்மன் காளிகாம்பாள் மணப்பெண்ணாக காட்சி தந்து, சுந்தரேஸ்வரர் காமடேஸ்வரராக அலங்காரத்தில் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை மகாகாளியம்மன், மகா மாரியம்மன் கோவில் கட்டிட திருப்பணி மற்றும் கும்பாபிஷேக திருவிழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    • தேசிய கொடியை இணையதள முகவரியை பயன்படுத்தி ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம் என தபால் துறை அறிக்கை வெளியிட்டிருந்தது.
    • சுதந்திர தினவிழா கொண்டாடுவதற்காக ஆர்வமுடன் தேசியக்கொடிகளை வாங்கிச் சென்றனர்.

    தருமபுரி, 

    பிரதமர் மோடி சுதந்திர தின விழாவை யொட்டி அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை பறக்கவிட்டு கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    அனைவருக்கும் இந்திய தேசிய கொடி எளிதில் கிடைக்கும் பொருட்டு தருமபுரி கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் விற்பனை செய்ய உள்ளோம். இதன் விலை ரூ.25 மட்டுமே. ஜி.எஸ்.டி கிடையாது.

    தேசிய கொடியை https//www.epostoffice.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம் என தபால் துறை அறிக்கை வெளியிட்டிருந்தது.

    அதன் அடிப்படையில் தருமபுரி தபால் நிலையத்தில் தேசியக்கொடி விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. தேசிய கொடியினை தபால் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் தங்களுடைய வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தினவிழா கொண்டாடுவதற்காக ஆர்வமுடன் தேசியக்கொடிகளை வாங்கிச் சென்றனர்.

    • போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு பேருந்து நிலையத்தை தற்காலிகமாக இடமாற்றம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
    • தருமபுரி செல்லும் வாகனங்கள் நகரின் உட்புறம் வராமல் புறவழிச்சாலை வழியாக செல்லவும், பேரூராட்சி சார்பில் தற்காலிக நிழல்கூடம், குடிநீர் வசதி செய்து தருதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    பாலக்கோடு.

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சி அலுவலகத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைப்பது குறித்து நிர்வாக ரீதியான ஆலோசனைக் கூட்டம் பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமையில் நடைப்பெற்றது.

    கூட்டத்தில் பேருராட்சி செயல் அலுவலர் டார்த்தி முன்னிலை வகித்தார். பேருந்து நிலைய சீரமைப்பு கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு பேருந்து நிலையத்தை தற்காலிகமாக இடமாற்றம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    ஆலோசனையில் திரௌபதி அம்மன் கோவில் முன்பு தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கலாம் என்றும், ஏற்கனவே அப்பகுதியில் உள்ள ஜே.சி.பி வாகனங்கள், லாரிகள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் தற்காலிகமாக கோவில் உட்புறமாக வரிசைப்படுத்தி நிறுத்திக் கொள்ளவும்,

    தருமபுரி செல்லும் வாகனங்கள் நகரின் உட்புறம் வராமல் புறவழிச்சாலை வழியாக செல்லவும், பேரூராட்சி சார்பில் தற்காலிக நிழல்கூடம், குடிநீர் வசதி செய்து தருதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    மேலும் இது குறித்து வணிக நிறுவனங்கள், டிராவல்ஸ், ஆட்டோ மற்றும் லாரி உரிமையாளர்களுடன் ஆலோசித்து தற்காலிக பேருந்து நிலையம் இடமாற்றம் செய்வது குறித்து பொதுமக்களுக்கு விரைவில் அறிவிக்கப்படும் என ஆலோசனை கூட்ட முடிவில் பேருராட்சி தலைவர் பி.கே.முரளி தெரிவித்தார்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் டி.எஸ்.பி. சிந்து, மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி, அரசு போக்குவரத்து பணிமனை கிளை மேலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • பூங்கா, பயணிகளுக்காக புதிதாக ஏற்படுத்த ப்பட்டுள்ள லிப்ட் வசதிகள் உள்ளிட்டவைகளை தென்மேற்கு கோட்ட மேலா ளர் யோகேஷ் மோகன் பார்வையிட்டார்.
    • குறிப்பாக தருமபுரி ரெயில் நிலையத்தின் முன்பகுதியில் உள்ள பூங்கா, பயணிகளுக்காக புதிதாக ஏற்படுத்த ப்பட்டுள்ள லிப்ட் வசதிகள் உள்ளிட்டவைகளை தென்மேற்கு கோட்ட மேலா ளர் யோகேஷ் மோகன் பார்வையிட்டார்.

    தருமபுரி,

    தென் மேற்கு ரெயில்வே து றை சார்பில் தருமபுரி, சிவாடி, தொப்பூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள ப்பட்டு வருகிறது. மேலும் பயணிகளின் வசதிக்காக பல்வேறு நவீன வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த ரெயில் நிலை யங்களில் மேற்கொள்ளப் பட்டு வரும் மேம்பாட்டு பணிகள் மற்றும் நவீன வசதிகள் குறித்து பெங்க ளுரு தென் மேற்கு ரெயில்வே கோட்ட மேலா ளர் யோகேஷ் மோகன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அந்தந்த ரெயில் நிலைய ங்களில் உள்ள நடை மேடைகள், பயணிகள் அறை, டிக்கெட் முன்பதிவு மையங்கள் ஆகியவற்றை அவர் பார்வையிட்டார்.

    அப்போது ரெயில் நிலையத்துக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    குறிப்பாக தருமபுரி ரெயில் நிலையத்தின் முன்பகுதியில் உள்ள பூங்கா, பயணிகளுக்காக புதிதாக ஏற்படுத்த ப்பட்டுள்ள லிப்ட் வசதிகள் உள்ளிட்டவைகளை தென்மேற்கு கோட்ட மேலா ளர் யோகேஷ் மோகன் பார்வையிட்டார்.

    தருமபுரி ரெயில் நிலையத்தில் பயணிகளின் வசதி க்காக மேற்கொள்ள ப்பட பணிகள் குறித்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆய்வின் போது ரெயில்வே துறை உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • அனைத்து முகாம்களிலும் கட்சியின் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பென்சில், பேனா மற்றும் நோட்டுப் புத்தகங்களை வழங்க வேண்டும்.
    • ஆயிரம் தென்னங்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

    தருமபுரி,

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் 61 -ம் ஆண்டு பிறந்த நாளையும், மணிவிழாவின் நிறைவு நாளையும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று தருமபுரி மைய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பெரியார் மன்றத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் தலைவரின் மணிவிழா நிறைவு மற்றும் 61 -ம் ஆண்டு பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும்.

    அனைத்து முகாம்களிலும் கட்சியின் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பென்சில், பேனா மற்றும் நோட்டுப் புத்தகங்களை வழங்க வேண்டும்.

    மேலும் 61-ம் ஆண்டு பிறந்தநாள் விழா நினைவாக 61 நபர்கள் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரத்த தானம் செய்வது, 61 நபர்கள் உறுப்பு தானங்கள் செய்வது, ஆயிரம் தென்னங்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்திற்கு தருமபுரி மைய மாவட்ட செயலாளர் பாண்டியன், தலைமை வகித்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு தருமபுரி கிருஷ்ணகிரி மண்டல செயலாளர் தமிழ் அன்வர், துணை மண்டல செயலா ளர்கள் மின்னல் சக்தி, மாயவன், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில துணைச் செயலாளர் தனம், முன்னாள் மண்டல செயலாளர் நந்தன், மாவட்ட பொருளாளர் மன்னன், நாடாளுமன்ற மாநில துணைச் செயலாளர் கோட்டை கலைவாணன், முன்னாள் மாவட்ட செயலாளர் ராமன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

    • நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் தடங்கம் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் ஒரு நாள் முகாம் நடைபெற்றது.
    • இம்முகாமிற்கான அனைத்து ஏற்பாடு களையும் திட்ட அலு வலர்கள் பேரா சிரியர்கள் பழனிசாமி, கலை, மகேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி, தொன் போஸ்கோ கல்லூரி, நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் தடங்கம் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் ஒரு நாள் முகாம் நடைபெற்றது.

    கல்லூரிச் செயலாளர் ராபட் ரமேஷ் பாபு, கல்லூரி முதல்வர் ஆஞ்சலோ ஜோசப், துணை முதல்வர் பாரதி பெர்னாட்ஷா, ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்நிகழ்வில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவியர்கள் பள்ளி வளாகத்திலுள்ள குப்பைகள், செடி கொடிகள், நெகிழிகள் போன்றவற்றை அகற்றி, அப்பள்ளி மாணவ, மாணவியர்களிடையே தூய்மைக் குறித்த விழிப்பு ணர்வு ஏற்படுத்தி மரக்கன்றுகள் வழங்க ப்பட்டன.

    இம்முகாமிற்கான அனைத்து ஏற்பாடு களையும் திட்ட அலு வலர்கள் பேரா சிரியர்கள் பழனிசாமி, கலை, மகேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

    • தருமபுரி மறை மாவட்ட தலித் கிறிஸ்தவர்கள் சார்பில் பொம்மிடியில் உள்ள புனித அந்தோணி யார் ஆலய வளாகத்தில் அறப் போராட்டம் நடைபெற்றது.
    • தருமபுரி, கிருஷ்ணகிரி, தேன்கனி க்கோட்டை என பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற் பட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    பாப்பிரெட்டிபட்டி,

    நீதியரசர் மிஸ்ரா கமிசன் பரிந்துரை செய்த தலித் கிறிஸ்தவர்களை எஸ்சி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற பரிந்துறையை ஏற்று தலித் கிறிஸ்தவர்கள் நாடு முழுவதும் அகஸ்டு 10-ம் தேதியை கருப்பு தினமாக கடைபிடித்து வரு கின்றனர்.

    இதனையடுத்து தருமபுரி மறை மாவட்ட தலித் கிறிஸ்தவர்கள் சார்பில் பொம்மிடியில் உள்ள புனித அந்தோணி யார் ஆலய வளாகத்தில் அறப் போராட்டம் நடைபெற்றது.

    இந்த போராட்டத்தில் தருமபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் ஃபயர் தலைமை தாங்கினார்,

    தமிழக ஆயர் பேரவை யின் எஸ்சி. எஸ்டி பணிக்குழு மாநில பொரு ளாளர் எம்.எப்.ரமேஷ் வரவேற்புரை ஆற்றினார்.

    இதில் பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் , மற்றும் பொம்மிடி, பி.பள்ளி ப்பட்டி, தென்கரை க்கோட்டை , அரூர், பாப்பி ரெட்டிப்பட்டி, தருமபுரி, கிருஷ்ணகிரி, தேன்கனி க்கோட்டை என பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற் பட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்

    இறுதியாக தருமபுரி மறை மாவட்ட எஸ்சி.எஸ்டி பணிக்குழு செயலாளர் பாதர் மோசஸ் நன்றியுரை ஆற்றினார்.

    • ஒரு கிலோ ரூ.616-க்கு விற்பனையான பட்டுக்கூடு, நேற்று கிலோவிற்கு ரூ.31 விலை குறைந்தது.
    • மொத்தம் ரூ.5 லட்சத்து 32 ஆயிரத்து 522-க்கு பட்டுக் கூடுகள் விற்பனை யானது.

    தருமபுரி, 

    தருமபுரியில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் செயல்பட்டு வரும் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக் கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.

    இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 922 கிலோ பட்டுக்கூடு வந்தது. இது நேற்று 1,107 கிலோவாக அதிகரித்தது. இதேபோல ஒரு கிலோ ரூ.616-க்கு விற்பனையான பட்டுக்கூடு, நேற்று கிலோவிற்கு ரூ.31 விலை குறைந்தது.

    அதன்படி ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.585-க்கும், குறைந்த பட்சமாக ரூ.276-க்கும், சராசரியாக ரூ.480.90 -க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.5 லட்சத்து 32 ஆயிரத்து 522-க்கு பட்டுக் கூடுகள் விற்பனை யானது.

    ×