என் மலர்
தர்மபுரி
- வைத்திருந்த பையை வாங்கி சோதனை செய்தபோது அதில் சந்தன கட்டைகள் இருப்பது தெரியவந்தது.
- 2 பேருக்கும் தலா ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வீதம் ரூ.3 லட்சம் அபராதம் விதித்து மாவட்ட வன அலுவலர் அப்பல்ல நாயுடு உத்தரவிட்டார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், இண்டூர் போலீசார் நாகர்கூடல்- பண்டஅள்ளி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள். அவர்கள் பாப்பாரப்பட்டி அருகே உள்ள சொரக்காப்பட்டியைச் சேர்ந்த நாகராஜ் (வயது 53), சஞ்சீவபுரத்தை சேர்ந்த சரவணன் (40) என்பது தெரிய வந்தது.
அப்போது அவர்கள் வைத்திருந்த பையை வாங்கி சோதனை செய்தபோது அதில் சந்தன கட்டைகள் இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக தருமபுரி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் சந்தன கட்டைகளுடன் சிக்கிய 2 பேரை கைது செய்து தருமபுரி வன அலுவலகத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினார்கள்.
அப்போது அவர்கள் சந்தன கட்டைகளை கடத்திச் செல்வது உறுதியானது.
இதையடுத்து 2 பேருக்கும் தலா ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வீதம் ரூ.3 லட்சம் அபராதம் விதித்து மாவட்ட வன அலுவலர் அப்பல்ல நாயுடு உத்தரவிட்டார்.
கடத்தப்பட்ட சந்தன கட்டைகள் மற்றும் அதற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை வனத்துறை யினர் பறிமுதல் செய்தனர்.
சந்தன கட்டை கடத்தலில் சிக்கிய 2 பேரும் அவற்றை எங்கே கொண்டு செல்கிறார்கள்? சந்தன கட்டைகளை வாங்கி விற்பவர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பதிவு செய்யப்படும் வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்ற வாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
- போலீஸ் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாகனங்கள் போதுமானதாக உள்ளதா? எனறும் கேட்டு அறிந்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட காவல்துறையின் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் தருமபுரியில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசு பாதம் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மாவட்டம் முழுவதிலும் இருந்து காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு அந்தந்த போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் தற்போதைய நிலை குறித்து விளக்கிக் கூறினர்.
சம்பந்தப்பட்ட வழக்கு களில் குற்றப்பத்திரிக்கை சரியான முறையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதா? என ஆய்வுமேற்கொள்ள பட்டது.
கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசு பாதம் பேசுகையில், தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பதிவு செய்யப்படும் வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்ற வாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
மேலும் அந்தந்த காவல் நிலையங்களில் தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியல் எடுத்து உடனடியாக அவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேங்கியுள்ள பழைய வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தந்த பகுதி களில் சட்டம் ஒழுங்கை முறையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
முன்னதாக தர்மபுரி மாவட்ட காவல் துறை சார்பில் போலீஸ் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ள போக்குவரத்து வாகனங்கள், வேன்கள், கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? அந்த வாகனங்களின் தற்போதைய செயல் திறன் குறித்தும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் ஆய்வு மேற்கொண்டார். மேலும் போலீஸ் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாகனங்கள் போதுமானதாக உள்ளதா? எனறும் கேட்டு அறிந்தார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் செந்தில்குமார், நாகலிங்கம், மகாலட்சுமி, சிந்து மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.
- இக்கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர்.
- தருமபுரி-திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் பழனி ஆண்டவர் நகர் பகுதியைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த பழனி ஆண்டவர் நகர் கிராமத்தில் சுமார் 45-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன.
இக்கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர்.
பல ஆண்டுகளாக கிராம மக்கள் பட்டா கேட்டு வட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
குடியிருந்து வரும் வீட்டிற்கு பட்டா இல்லாத காரணத்தால் மின் இணைப்பு இல்லாமல் மின்சாரம் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே தருமபுரி-திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் பழனி ஆண்டவர் நகர் பகுதியைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இப்பகுதியில் வசிக்கும் 46 குடும்பத்திற்கு உடனடியாக மாவட்ட நிர்வாகம் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். போச்சம்பள்ளி காவல்துறையினர் பேச்சுவார்த்தைக்கு பிறகு வட்டாட்சியரிடம் மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர்.
- உலக நாடுகளுக்கு விண்வெளி அறிவியலில் இந்தியா இருப்பது உறுதியாகியது.
- விண்வெளி மட்டும் அல்லாமல் அனைத்து துறைகளிலும் இந்தியா முன்னேறி வருகிறது
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அப்துல்கலாம் உருவ சிலை மற்றும் ராக்கெட் மாதிரி திறப்பு விழா நிகழ்ச்சி மார்டின் பவுண்டேசன் இயக்குநர் லீமாரோஸ் மார்டின் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஸ்பேஷ் ஜோன் இண்டியா நிர்வாக இயக்குநர் ஆனந்த் மேகலிங்கம், அப்துல் கலாம் பவுண்டேசன் துணை நிறு வனர் ஷேக் சலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு அப்துல் கலாம் உருவ சிலை மற்றும் ராக்கெட் மாதிரியை திறந்து வைத்து பேசியதாவது:-
அறிவியலில் உலகமே நிலவில் தண்ணீர் இல்லை என தோல்வி அடைந்த போது, இந்தியா மட்டும் தான் சந்திராயன் விண்கலம் மூலம் தண்ணீர் உள்ளது என நிருபித்தது. இதன் மூலம் உலக நாடுகளுக்கு விண்வெளி அறிவியலில் இந்தியா முன்னோடியாக இருப்பது உறுதியாகியது.
அப்துல் கலாம் கனவை மாணவர்கள் மற்றும் இளம் தலைமுறையினர் நனவாக்கி வருவது இப்பள்ளியில் நடக்கும் நிழ்ச்சிகளின் மூலம் உறுதியாகி உள்ளது.
தொடர்ந்து விண்வெளி மட்டும் அல்லாமல் அனைத்து துறைகளிலும் இந்தியா முன்னேறி வருகிறது என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் நீதியல் துறை அலுவலக மேலாளர் சுகுமார், மாவட்ட கல்வி அலுவலர் இளங்கோ, டாக்டர் கலாம் பசுமை நல அறக்கட்டளை நிர்வாகிகள், பள்ளி தலைமை ஆசிரியர் புனிதா, மற்றும் ஆசிரி யர்கள், மாணவர்கள் பெற் றோர்கள் கலந்து கொண்டனர்.
இறுதியில் ஆசிரியை செல்வி நன்றி கூறினார்.
- பிரச்சார ஊர்வலம் தருமபுரி நகரில் பைபாஸ் ரோடு மற்றும் முக்கிய வீதிகள் வழியாக டவுன் பஸ் நிலையத்தை வந்தடைந்தது.
- தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர் முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் எம்.எல்.ஏ. பிரசுரங்கள் மற்றும் இனிப்பு வழங்கினார்.
தருமபுரி,
மதுரையில் வருகிற 20-ம் தேதி அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து கட்சி நிர்வாகிகள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து அ.தி.மு.க. பொன் விழா எழுச்சி மாநாடு பிரசார வாகனம் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று வருகிறது.
இந்த பிரசார வாகனம் நேற்று தருமபுரி மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது.
இந்த பிரசார வாகனம் தொடக்க விழா தருமபுரியில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க. மாவட்ட செயலாளருமான கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பிரசார வாகனம் மற்றும் இருசக்கர வாகன பேரணி யை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்ப அணி வேலூர் மண்டல செயலாளர் ஜனனி சதீஷ்குமார், மாநில விவசாய பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன், எம்.எல்.ஏக்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், மாவட்ட அவைத் தலைவர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பூக்கடை ரவி வரவேற்றார்.
இந்த பிரச்சார ஊர்வலம் தருமபுரி நகரில் பைபாஸ் ரோடு மற்றும் முக்கிய வீதிகள் வழியாக டவுன் பஸ் நிலையத்தை வந்தடைந்தது. அங்கு மாநாடு குறித்து பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர் களுக்கு முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் எம்.எல்.ஏ. துண்டு பிரசுரங்கள் மற்றும் இனிப்பு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு ஒன்றிய தலைவர் பொன்னுவேல், ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாசம், பழனி, நீலாபுரம் செல்வம், வேலுமணி, மதிவாணன், சேகர், செந்தில்குமார், கோபால், செல்வராஜ், பசுபதி, விஸ்வநாதன், முருகன், மாவட்ட சார்பு அமைப்பு செயலாளர்கள் பழனிசாமி, தகடூர் விஜயன், கோவிந்தசாமி, வக்கீல் அசோக்குமார், தொழிற்சங்க நிர்வாகி சின்அருள்சாமி, நகர நிர்வாகிகள் அம்மா வடிவேல், பார்த்திபன், சுரேஷ், பலராமன், வேல்முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள், நகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
- சுதந்திர தின விழா வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
- மதுக்கடை களை திறந்தா லும், விற்றாலும் நடவடிக்கை எடுக்க ப்படும்.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியி ட்டுள்ள அறிக்கையில்:-
சுதந்திர தின விழா வருகிற 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் மது விற்பனை இல்லாத தினமாக கடைபிடிக்கப்படுகிறது. எனவே தருமபுரி மாவட் டத்தில் உள்ள அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகள், மது கூடங்கள், மது கூடங்களுக்கு உரிமம் பெற்றுள்ள அரசு மற்றும் தனியார் ஓட்டல்கள் அனைத்தும் வருகிற 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மூடப்படும். இந்த உத்தரவை மீறி விற்பனை யாளர்கள் மதுக்கடை களை திறந்தா லும், விற்றாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ப்படும். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவி த்துள்ளார்.
- 9 மூட்டைகளில், 450 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.
- வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிவர்மன் தலைமையிலான தனிப்படையினர் நேற்று கிருஷ்ணகிரி சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காட்டு வீர ஆஞ்சநேயர் கோயில் அருகே ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் 50 கிலோ அளவிலான 9 மூட்டைகளில், 450 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்த கிருஷ்ணகிரி அடுத்த துறிஞ்சிப்பட்டியை சேர்ந்த கோவிந்தராஜ்(வயது 30), பெத்ததாளப்பள்ளி ஹரிஷ்(19) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இவர்கள் போச்சம்பள்ளி, சந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, கர்நாடகாவிற்கு கடத்தி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து கார் மற்றும் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
- வெயிலில் நின்று பஸ்சில் ஏறி செல்லும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது.
- நிழற்கூடம் அமைக்க தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்க டேஸ்வரன் நிதி ஒதுக்கீடு செய்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், அதியமான் கோட்டை ஊராட்சி, தேவரசம்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராம மாணவ, மாணவிகள், கர்ப்பிணிகள், முதியோர்கள், நோயாளிகள் பஸ்சுக்காக செல்ல தேவர சம்பட்டி பஸ் நிறுத்தத்திற்கு வருகின்றனர். அவர்கள் வெயிலில் நின்று பஸ்சில் ஏறி செல்லும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது. பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்க டேஸ்வரன் நிதி ஒதுக்கீடு செய்தார். அப்பணிக்கான பூமிபூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்று பணியை தொடங்கி வைத்தார். இதேபோல்
தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முதல் மாவட்ட வன அலுவலர் அலுவலகம் வரையுள்ள பழுதடைந்த கிராம சாலையை முதல்-அமைச்சர் கிராம சாலைகள் விரிவாக்க திட்டத்தின் கீழ் ரூ.1கோடி 45 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலையாக அமைக்கும் பணிக்கு எஸ்.பி.வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. பூமிபூஜை செய்து, பணியை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பா.ம.க. கட்சியினர் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
- அதிகாலை முதல் இரவு வரை பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
தருமபுரி,
தருமபுரியில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை யொட்டி நேற்று அதிகாலை முதல் இரவு வரை பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
தருமபுரியில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை யொட்டி நேற்று அதிகாலை முதல் இரவு வரை பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
இதில் இலக்கியம்பட்டி புத்து நாகர்கோயில், சாலை மாரியம்மன் கோவில், செந்தில் நகரில் உள்ள அம்மன் கோவில், குமார சாமிப்பேட்டையில் உள்ள துர்க்கை அம்மன், உள்ளிட்ட கோவில்களில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து, மஞ்சள் குங்குமம் இட்டு சாமி தரிசனம் செய்தனர். பெண்க ளுக்கு மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்பட்டது.
அதேபோல் தருமபுரி நகரில் வரலாற்று சிறப்புமிக்க கோட்டை கல்யாண காமாட்சியம்மன் கோவிலில் ரேணுகாம்பாள் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றது. இதை யொட்டி கோவில் வளாகத்தில் பூப்பந்தல் அமைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.
தருமபுரி நெசவாளர் நகரில் உள்ள ஓம் சக்தி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அலங்கார சேவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
இதேபோல் தருமபுரி கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், குமாரசாமிப் பேட்டை உழவு தெரு மகா மாரியம்மன் கோவில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், பாரதி புரம் மாரியம்மன் கோவில், அன்னசாகரம் சக்தி மாரியம்மன் கோவில், மதிகோண்பாளையம் மகாசக்தி மாரியம்மன் கோவில், வட்டார வளர்ச்சி காலனி முத்து மாரியம்மன் கோவில், கடைவீதி புதூர் மாரியம்மன் கோவில், அரசு மருத்துவமனை எதிரில் உள்ள பச்சையம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் ஆடி மாத 4-வது வெள்ளிக் கிமையை யொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டு அலங்கார சேவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து வந்துள்ள யானைகள் ஜவளகிரி வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன.
- 3 குழுக்களாகப் பிரிந்து யானைகள் வாழை, அவரை செடி பயிர்களை நாசம் செய்து வருகிறது.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே தொடர்ந்து ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் யானை கூட்டத்தால் விவசாயிகள் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து வந்துள்ள யானைகள் ஜவளகிரி வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன. இதில் 3 குழுக்களாகப் பிரிந்து யானைகள் வாழை, அவரை செடி பயிர்களை நாசம் செய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக அகலகோட்டை, சிவன பள்ளி, சாவர பத்தம், பாலதோட்டனபள்ளி ஆகிய கிராமப்பகுதியில் சுற்றி வருகிறது. பகல் நேரங்களில் வயல்களில் புகுந்து பயிர்களை தின்றும் மிதித்தும் நாசம் செய்யும் யானையை பொதுமக்கள் தாரை, தப்பட்டை அடித்தும், பட்டாசு வெடித்தும் விரட்டினால் மீண்டும் கிராமங்களுக்குள் புகுந்து வனப்பகுதிக்குள் சென்று விடுகின்றது. இந்நிலையில் நேற்று மாலை பாலதோட்டப்பள்ளி அருகே உள்ள காந்திநகர், பாலே அக்கு ஆகிய கிராமத்தில் புகுந்து உலாவந்து அட்டகாசம் செய்து அங்கிருந்து வாழை, அவரை பயிர்களை தின்றும் நாசம் செய்து சாலையை கடந்து சென்றது. பட்டாசுகள் வெடித்தும், தாரை தப்பட்டை அடித்தும் யானைகளை காட்டுக்குள் விரட்டினர்.
இப்பகுதியில் யானைகள் உலா வருவதால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் சாலையில் செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் விவசாய பணிகளில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் பொதுமக்களும் விவசாய பணிகள் செய்ய முடியாமல் அச்சமடைந்துள்ளனர். இதனால் இந்த யானைகளை அடர்ந்த காட்டுக்குள் வனத்துறையினர் விரட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ரூ.40 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை மற்றும் பவர் பிளாக் சாலை அமைக்க பூமி பூஜை போடும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
- ரூ.40 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகளுக்கு காரிமங்கலம் பேரூராட்சி தலைவர் பி.சி.ஆர். மனோகரன் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
காரிமங்கலம்,
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் 1-வது வார்டை சேர்ந்த காட்டுசிகல அள்ளி கிராமத்தில் ரூ.40 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை மற்றும் பவர் பிளாக் சாலை அமைக்க பூமி பூஜை போடும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் காட்டுசிகல அள்ளி 1-வது வார்டில் உள்ள சின்னான்டியூர், பட்டாதாரன் கொட்டாய் ஆகிய பகுதிகளில் ரூ.17 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கவும், அதே பகுதியில் 2023-24 மாநில நிதி ஆணைய திட்டத்தின் கீழ் ரூ.23 லட்சம் மதிப்பில் பவர் பிளாக் சாலை அமைத்தல் என ரூ.40 லட்ச மதிப்பிலான திட்ட பணிகளுக்கு காரிமங்கலம் பேரூராட்சி தலைவர் பி.சி.ஆர் மனோகரன் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் துணைத் தலைவர் சீனிவாசன், செயல் அலுவலர் ஆயிஷா, கவுன்சிலர்கள் சத்திரமேஷ், ராதா ராஜா, சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் முருகன், தலைமை எழுத்தர் ரவி, பஞ்சாயத்து தலைவர் கண்ணபெருமாள், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பிரபு, முன்னாள் கவுன்சிலர் சண்முகம், ஒன்றிய பிரதிநிதி கோவிந்தராஜ், தகவல் தொழில்நுட்ப அணி சம்பத் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
- வனத்துறையினர் கத்திரிப்பட்டி, கம்பாலை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- கள்ளநாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.
அரூர்,
தருமபுரி மாவட்டம், தீர்த்தமலை அருகே தீர்த்தமலை வனச்சரகர் பெரியண்ணன் தலைமையிலான வனவர்கர் கணபதி, வடிவேல், வனக்காப்பாளர்கள் வெங்கடேசன், மதன்குமார் மற்றும் வனத்துறையினர் கத்திரிப்பட்டி, கம்பாலை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த சேட்டு மகன்கள் தருமன் (28), சரவணன் (20) இருவரும், கள்ளநாட்டு துப்பாக்கி வைத்து வனவிலங்குகளை வேட்டையாட முயற்சி செய்யும் போது கையும், களவுமாக பிடித்தனர்.
இதனையடுத்து அவர்களை தருமபுரி மாவட்ட வன அலுவலர் அப்பால நாயுடு முன் ஆஜர்படுத்த்தியதில் தலா ரூ,2,00,000 அபராதம் விதித்து எச்சரிக்கை செய்து அனுப்பினார்.
மேலும் கள்ளநாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.






