என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • தண்ணீர் அருந்த வரும் யானை தொட்டியினை தேடி தாகத்துடன் வரும் யானையை சுற்றுலா பயணிகள் துன்புறுத்துவதால் மிரண்டு பிழியபடி சுற்றுலா பணியை தாக்க முயற்சி செய்கிறது.
    • வனப்பகுதியில் சுற்றி திரியும் ஒற்றை யானையின் நடமாட்டத்தை ஒகேனக்கல், பென்னாகரம் வனத்துறையினர் கண்காணிக்க வேண்டும்.

    பென்னாகரம்,

    கர்நாடக மாநிலங்களில் வறட்சி நிலவும் போது, வனப்பகுதியில் இருந்து யானைகள் கூட்டம் கூட்டமாக ஆண்டுதோறும் கர்நாடக தமிழக எல்லை பகுதியில் உள்ள கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட வனப்பகுதிகளுக்குள் இடம்பெயர்கின்றனர்.

    இந்த நிலையில் இந்தான்டில் ஒகேனக்கல் வனப்பகுதிக்குள் ஒற்றை யானை இடம் பெயர்ந்துள்ளது.

    இந்த யானை வனப்பகுதிகளில் உணவு அருந்திவிட்டு குடிநீருக்காக ஒகேனக்கல்லில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் பென்னாகரம் செல்லக்கூடிய சாலையின் ஓரத்தில் தமிழ்நாடு கூட்டுக் குடிநீர் குழாயின் வால்வுகளில் இருந்து வெளியேறப்படும் தண்ணீர் தொட்டியில் காலை மற்றும் மாலை வேளையில் நீர் அருந்துவதற்கு வருகிறது.

    தமிழகத்தின் முதன்மை சுற்றுலா தளமாக ஒகேனக்கல் பகுதிக்கு நாள்தோறும் சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணமாக உள்ள நிலையில் அடர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானையை சாலை ஓரத்தில் நின்று தண்ணீர் குடிப்பதை கண்டதும் அதன் அருகில் வாகனங்களை நிறுத்துவது, வாகனங்களில் அதிக ஒலியை எழுப்புவது, அருகில் சென்று செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

    கடந்த சில நாட்களாக ஒகேனக்கல் வனப்பகுதிகளில் தொடர் மழை பெய்து வந்தாலும், போதுமான குடிநீர் இல்லாததால் வழக்கமாக தண்ணீர் அருந்த வரும் யானை தொட்டியினை தேடி தாகத்துடன் வரும் யானையை சுற்றுலா பயணிகள் துன்புறுத்துவதால் மிரண்டு பிழியபடி சுற்றுலா பணியை தாக்க முயற்சி செய்கிறது.

    வனப்பகுதியில் சுற்றி திரியும் ஒற்றை யானையின் நடமாட்டத்தை ஒகேனக்கல், பென்னாகரம் வனத்துறையினர் கண்காணித்து, காலை மற்றும் மாலை வேளையில் சுற்றுலா வரும் பயணிகளின் துன்புறுத்தல் இன்றி எவ்வித இடையூறுகளும் இல்லாத வகையில், நீர் அருந்திய பின்னர் ஒற்றை யானையை வன பகுதிக்குள் இடையூரின்றி செல்ல சுற்றுலா பயணிகளிடம் வாகனங்களை சாலை ஓரம் நிறுத்த வேண்டாம் என வன அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும் என சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஒரு வாரத்திற்கு 5 குடம் தண்ணீர் மட்டுமே வழங்கப்படுவதாக அப்பகுதி பெண்கள் தெரிவித்தனர்.
    • ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் இன்று காலை காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் பாலஜங்கமனஹள்ளி பகுதியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு ஆழ்துளை கிணறுகள் மற்றும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குடிநீர் சரிவர வழங்கவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் தவித்து வந்தனர்.

    மேலும் ஒரு வாரத்திற்கு 5 குடம் தண்ணீர் மட்டுமே வழங்கப்படுவதாக அப்பகுதி பெண்கள் தெரிவித்தனர். இதனால் காலை நேரங்களில் பணிக்கு செல்வோர் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு மிகவும் சிரமம் அடைந்தனர்.

    இது குறித்து பால ஜங்கமனஹள்ளி ஊராட்சியில் அப்பகுதி பொதுமக்கள் புகார் கொடுத்தனர். ஆனால் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் இன்று காலை காலி குடங்களுடன் நல்லம்பள்ளி செல்லும் சாலையில் அரசு பேருந்து மற்றும் வாகனங்களை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அதியமான் கோட்டை போலீசார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பகுதிக்கு முறையாக குடிநீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதனால் பெண்கள் சாலை மறியல் கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • சத்யராஜ் தனது மனைவியை கண்டித்து அவரை குழந்தை களுடன் ஏரியூரில் கொண்டு வந்து விட்டார்.
    • பதறிப்போன அவர் உறவினர்கள் வீடுகளில் தேடிபார்த்தார்.

    கு தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே பட்டகாரன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யராஜ் (வயது35). இவரது மனைவி ரோஜா (27). இவர்களுக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    கட்டிட மேஸ்திரியான சத்யராஜ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் திருவண்ணாமலையில் தங்கி வேலை செய்து வந்தார். அங்கு ரோஜாவுக்கும், பழனி என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாக தெரிகிறது.

    இதுகுறித்து சத்யராஜ் தனது மனைவியை கண்டித்து அவரை குழந்தைகளுடன் ஏரியூரில் கொண்டு வந்து விட்டார். இந்த நிலையில் சத்யராஜ் சம்பவத்தன்று வேலைக்காக வெளியூருக்கு சென்று விட்டு ஏரியூரில் உள்ள வீட்டிற்கு வந்து பார்த்தபோது 4 குழந்தைகள் மட்டும் இருந்தனர். தனது மனைவியை காணவில்லை. இதனால் பதறிப்போன அவர் உறவினர்கள் வீடுகளில் தேடிபார்த்தார். எங்கு தேடியும் ரோஜா கிடைக்காததால், அவர் மாயமானது தெரியவந்தது.

    இதுகுறித்து சத்யராஜ் ஏரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிள் அங்குள்ள பட்டுகூடு விற்பனை செய்யும் அலுவலகம் அருகே வந்தபோது திடீரென்று முன்னால் சென்ற வாகனம் மீது மோதியது.
    • ஜோதி வண்டியில் இருந்து தவறி கீழே விழுந்து காயமடைந்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி மாக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மனைவி ஜோதி (வயது55). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்

    இந்த நிலையில் ஜோதி சம்பவத்தன்று தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் பாப்பாரப்பட்டிக்கு சென்றார். அப்போது ஜோதியின் மகன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் அங்குள்ள பட்டுகூடு விற்பனை செய்யும் அலுவலகம் அருகே வந்தபோது திடீரென்று முன்னால் சென்ற வாகனம் மீது மோதியது. இதில் ஜோதி வண்டியில் இருந்து தவறி கீழே விழுந்து காயமடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஜோதி நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நீர்வரத்து 6,500 கனஅடியாக இருந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து சற்று சரிந்து 5 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
    • சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்தும், எண்ணை மசாஜ் செய்து அருவிகளில் குளித்தும் மகிழ்ந்தனர்.

    ஒகேனக்கல்:

    கர்நாடக, கேரளா ஆகிய மாநிலங்களில் பருவ மழை காரணமாக கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் நீர்வரத்து அதிகரித்தது.

    இதன் காரணமாக காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களாக அதிகளவில் நீர் திறந்து விடப்பட்டது.

    இந்த தண்ணீர் பிலிக்குண்டுலு வழியாக தமிழகத்திற்கு வந்தடையும். இதன் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    தற்போது பருவமழை பெய்யாததாலும், கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டு தண்ணீரின் அளவும் குறைந்ததாலும், தற்போது ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது.

    நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 6,500 கனஅடியாக இருந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து சற்று சரிந்து 5 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

    இன்று விடுமுறை நாள் என்பதால் தருமபுரி மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலும் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு குவிந்தனர்.

    இதன் காரணமாக பரிசல் நிலையம், மீன் கடைகள், கடைவீதிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டன.

    சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்தும், எண்ணை மசாஜ் செய்து அருவிகளில் குளித்தும் மகிழ்ந்தனர்.

    வழக்கமாக ஜூலை முதல் ஆகஸ்ட் மாதம் வரை பருவ மழை காரணமாக கர்நாடகா அணைகள் நிரம்பி வழிந்து அதில் இருந்து உபரி நீர் திறப்பால் காவிரி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு, ஒகேனக்கல் மெயின்அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் பாறைகளே தெரியாத அளவிற்கு தண்ணீர் சீறிபாய்ந்து செல்லும், இதனால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுவிக்கப்பட்டு கரையோர மக்கள் வெளியேற்றபடுவார்கள். மேலும், குளிக்கவும், பரிசல் செல்லவும் சுற்றலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கும்.

    தற்போது பருவமழை சரிவர பெய்யாததால் கர்நாடகா அணைகளில் இருந்து நீர் வெளியேற்றமும் குறைந்துள்ளது.

    இதன்காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தளவே வந்து கொண்டிருக்கிறது.

    வழக்கத்திற்கு மாறாக இந்த மாதத்தில் ஒகேனக் கல்லில் காவிரி ஆற்றில் குறைவான அளவில் தண்ணீர் செல்வதால் இன்று சுற்றுலா பயணிகள் தடை ஏதுமில்லாமல் மெயின் அருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் குளித்தும், பரிசலில் சவாரி செய்தும் மகிழ்ந்தனர். 

    • காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அரசு அணைக்கட்டு கூடாது.
    • நாங்குநேரி சம்பவத்தில் குற்றவாளி–களை தண்டிக்க வேண்டும்.

    ஒகேனக்கல், 

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஒகேனக்கல்லில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் 13-ம்ஆண்டு தொடக்க விழா மற்றும் கொள்கை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் டி.சி.தவமணி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஏ.சரவணன் வரவேற்புரை–யாற்றினார். ஒன்றிய செய–லாளர் சண்முகம், மாவட்ட தலைவர் மாது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் தலைமை நிலைய செயலாளர்கள் கண்ணன், திருப்பூர் சுடலை, திருவொற்றியூர் மாரிமுத்து, மாநில ஊடகப் பிரிவு செய–லாளர் சோதி குமரவேல் ஆகியோர் சிறப்பு விருந்தி–னராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    அப்போது அவர்கள் பேசியதாவது:-

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அரசு அணைக்கட்டு கூடாது, தமிழகத்திற்கு வழங்கக்கூடிய உபரி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும், நாங்குநேரி சம்பவத்தில் குற்றவாளி–களை தண்டிக்க வேண்டும் என்றனர்.

    இதில் ஒன்றிய தலைவர் செந்தில்குமார், மாவட்ட துணைச் செயலாளர் சேட்டு, பாலக்கோடு ஒன்றிய செயலாளர் சண்முகம், பென்னாகரம் நகர செயலா–ளர் துரை, காரிமங்கலம் ஒன்றிய செயலாளர் சுரேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • காரிமங்கலம் சரக அளவில் நடைப்பெற்ற மேசைப் பந்து போட்டியில் அனைத்து பிரிவுகளிலும் வெற்றி பெற்று சாதனைப் படைத்தனர்.
    • 19 வயதிற்கு உட்பட்ட மாணவர் பிரிவில் பிரியதர்ஷன், அபிசேக்குமார் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் வெற்றிப்பெற்றனர்.

    மொரப்பூர், 

    தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் ஸ்ரீராம் பள்ளி மாணவர்கள் காரிமங்கலம் சரக அளவில் நடைப்பெற்ற மேசைப் பந்து போட்டியில் அனைத்து பிரிவுகளிலும் வெற்றி பெற்று சாதனைப் படைத்தனர்.

    14 வயதிற்கு உட்பட்ட மாணவர் பிரிவில் நரேன் குமார், கிரிஷ்வர்மா ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் வெற்றி பெற்றனர். 17 வயதிற்கு உட்பட்ட மாணவர் பிரிவில் கோகுல், கவிமணி ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் வெற்றிப் பெற்றனர்.

    19 வயதிற்கு உட்பட்ட மாணவர் பிரிவில் பிரியதர்ஷன், அபிசேக்குமார் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் வெற்றிப்பெற்றனர்.

    14 வயதிற்கு உட்பட்ட மாணவியர் பிரிவில் தேவிஸ்ரீ, சஞ்சனா ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் வெற்றி பெற்றனர். 17 வயதிற்கு உட்பட்ட மாணவியர் பிரிவில் ஓவியாஸ்ரீ மற்றும் தீபனா இரட்டையர் பிரிவில் வெற்றி பெற்றனர்.

    19 வயதிற்கு உட்பட்ட மாணவியர் பிரிவில் ஹேமாஸ்ரீ, ராகவி ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் வெற்றிப் பெற்றனர்.

    வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களை பள்ளியின் தாளாளர் வேடியப்பன், சாந்தி வேடியப்பன், பள்ளியின் நிர்வாக இயக்குநர் தமிழ்மணி மற்றும் பாவனி தமிழ்மணி, பள்ளி முதல்வர்கள் சாரதி மகாலிங்கம், ஜான்இருதயராஜ், வெற்றிவேல், ஆகியோர் பாராட்டினர்.

    மாணவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் செல்வம், தினேஷ், திருப்பதி, புவனேஷ்வரி ஆகியோர்களை பள்ளி நிர்வாகம் பாரட்டியது.

    • வாகனத்தை முன்னாள் முதல் -அமைச்சர் அ.தி.மு.க பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
    • பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட கடத்தூர் ஒன்றியத்திற்க்கு வருகை தந்த நிலையில் எம்.எல்.ஏ கோவிந்தசாமி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    கடத்தூர், 

    மதுரையில் நடைபெறும் நூற்றாண்டு பொன்விழா மாநாடு வரும் 20-ம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது.

    இதை அடுத்து பிரச்சார வாகனத்தை முன்னாள் முதல் -அமைச்சர் அ.தி.மு.க பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

    இந்த பிரச்சார வாகனம் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட கடத்தூர் ஒன்றியத்திற்க்கு வருகை தந்த நிலையில் எம்.எல்.ஏ கோவிந்தசாமி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்நிகழ்சியில் கிழக்கு ஒன்றிய செயலாளர் மதிவாணன் மேற்கு ஒன்றிய செயலாளர் முருகன், ஒன்றிய துணை செயலாளர் ரவீந்திரன், ஒன்றிய குழு துணை தலைவர் சக்திவேல், கடத்தூர் பேரூராட்சி கவுன்சிலர் சபியுல்லா, பொம்மிடி டோமினிக், அம்பேத், கட்டை முருகன், மாதன், சுரேஸ், மடத்தை தருமன், செண்ண கிருஷ்ணன், மாஸ்டர் முருகன், செந்தில், மாணிக்கம், மாது உள்ளிட்டிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

    • பாதசாரிகளும் அப்பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களும் துர்நாற்றத்தால் அவதிக்குள்ளாகினர்.
    • ரெட்டேரியில் பாதாள சாக்கடை குழாய் உடைந்து ஏரி முழுவதும் கழிவுநீர் தேங்குவதால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் நோய் தொற்றுக்கு ஆளாகி அவதிக்குள்ளாகி உள்ளனர்.

    தருமபுரி,

    தருமபுரி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    நகராட்சியில் உள்ள வீடுகள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சனத்குமார் நதியின் கால்வாய் மற்றும் ராமாக்காள் ஏரியில் கலந்து வந்த நிலையில் கடந்த 2010-ம் ஆண்டு, தி.மு.க. ஆட்சியில் தருமபுரி நகராட்சியில், ரூ.32 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம் தொடங்கியது.

    முதற்கட்டமாக 19 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை திட்ட கழிவுநீரை ஒருங்கிணைத்த மதிகோன்பாளையம் மற்றும் காந்திபாளையத்தில் உள்ள சுத்தகரிப்பு நிலையத்திற்கு சென்று அங்கிருந்து சுத்தகரிக்கப்பட்ட கழிவு நீர் சனத்குமார் நதியில் விடப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது நகராட்சி நிர்வாகத்தின் சரியான பராமரிப்பு இல்லாததால் தருமபுரி நகரில் உள்ள முகமது அலி கிளப் ரோடு, நேதாஜி பைபாஸ் சாலை, பிடமனேரி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி வருவதும், அதனை நகராட்சி நிர்வாகம் அடைப்பை சீர் செய்வதுமாக இருந்து வந்தது.

    இந்த நிலையில் தருமபுரி புறநகர் பஸ் நிலையம், நகர பஸ் நிலையத்திற்கு இடையே முகமது அலி கிளப் சாலையில் மாதக்கணக்கில் பாதாள சாக்கடை அடைப்பு சீர் செய்யப்படாமல் இருந்து வந்தது. பின்னர் நகராட்சி நிர்வாகம் பல மாதங்கள் கழித்து அடைப்பை சீர் செய்தது. வார்டுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் 4 ரோடு பகுதி, தருமபுரி-கிருஷ்ணகிரி சாலையில் சென்று மதிகோன்பாளையம் வழியாக சுத்தகரிப்பு நிலையத்திற்கு கழிவுநீர் சென்று வந்தது.

    இந்த நிலையில் நேற்று 4 ரோடு அருகே தருமபுரி-கிருஷ்ணகிரி சாலையில் பாதாள சாக்கடை கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் வெளியேறி சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வந்தது. சாலையில் வாகனத்தில் செல்வோரும், பாதசாரிகளும் அப்பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களும் துர்நாற்றத்தால் அவதிக்குள்ளாகினர்.

    இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, நகராட்சியின் பராமரிப்பின்மையால் தான் இது போன்ற அவலங்கள் நடந்தேறி வருகிறது. அதேபோல் ரெட்டேரியில் பாதாள சாக்கடை குழாய் உடைந்து ஏரி முழுவதும் கழிவுநீர் தேங்குவதால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் நோய் தொற்றுக்கு ஆளாகி அவதிக்குள்ளாகி உள்ளனர் என்றார்.

    தருமபுரி 4 ரோடு பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் ஆறாக ஓடும் கழிவு நீரால் பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவுவதற்குள் நகராட்சி நிர்வாகம் பாதாள சாக்கடையை முறையாக பராமரிக்க வேண்டுமென பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடலூர் மாவட்டம், காடாம் புலியூர் குறுவட்ட அளவர் மகேஸ்வரனை தாக்கிய கவுன்சிலரை கைது செய்ய வேண்டும்.
    • தருமபுரி கலெக்டர் அலுவலக வளா கத்தில் தருமபுரி நிலஅளவை அலுவலர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தருமபுரி,

    கடலூர் மாவட்டம், காடாம் புலியூர் குறுவட்ட அளவர் மகேஸ்வரனை தாக்கிய கவுன்சிலரை கைது செய்ய கோரி தருமபுரி கலெக்டர் அலுவலக வளா கத்தில் தருமபுரி நிலஅளவை அலுவலர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வெங்க டேசன் தலைமை தாங்கி னார். கோட்ட தலைவர் சங்கீதா அனை வரையும் வரவேற்றார். மாவட்ட இணை செயலாளர் தவமுனி முன்னிலை வகித்தார்.

    மாவட்ட தலைவர் சுருளிநாதன், செயலாளர் பிரபு, பொருளாளர் முருகன், அரூர் கோட்ட தலைவர் சக்திவேல், மாவட்ட துணை தலைவர் ராமமூர்த்தி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    இதில் மாநில செயலாளர் கல்பனா, துணை செயலாளர் பழனிய்ம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அரூர் கோட்ட செயலாளர் சின்னராசு நன்றி கூறினார். 

    • சம்பவத்தன்று டியூசன் செல்லாமல் வீட்டில் இருந்ததால் சங்கீதா மகனை கண்டித்துள்ளார்.
    • விரக்தியடைந்த ஹரிராம் வீட்டில் யாரும் இல்லாத போது சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மாரண்டஅள்ளி,

    தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி இ.பி. காலனி பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு 14 வயதில் மீனா என்ற மகளும், 15 வயதில் ஹரிராம் என்ற மகனும் உள்ளனர்.

    சந்திரன் கடந்த 4 வருடமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் சங்கீதா கூலி வேலைக்கு சென்று குழந்தைகளை வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் ஹரிராம் மாரண்ட அள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று டியூசன் செல்லாமல் வீட்டில் இருந்ததால் சங்கீதா மகனை கண்டித்துள்ளார்.

    இதனால் விரக்தியடைந்த ஹரிராம் வீட்டில் யாரும் இல்லாத போது சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவலறிந்த போலீசார் உடலை கைப்பற்றி பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • நேற்று ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.617-க்கும், குறைந்தபட்சமாக ரூ.238-க்கும், சராசரியாக ரூ.491. 83-க்கும் விற்பனையானது.
    • மொத்தம் ரூ.8 லட்சத்து 62 ஆயிரத்து 935-க்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.

    தருமபுரி, 

    தருமபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டு கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டு கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 1,709 கிலோவாக இருந்த பட்டுக்கூடுகள் வரத்து நேற்று 1,754 கிலோவாக அதிகரித்தது. நேற்று முன்தினம் ஒரு கிலோ அதிகப ட்சமாக ரூ.644-க்கு விற்பனையான பட்டுக்கூடு நேற்று கிலோவிற்கு ரூ.27 விலை குறைந்தது. நேற்று ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.617-க்கும், குறைந்தபட்சமாக ரூ.238-க்கும், சராசரியாக ரூ.491. 83-க்கும் விற்பனையானது.

    மொத்தம் ரூ.8 லட்சத்து 62 ஆயிரத்து 935-க்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.

    ×