என் மலர்
உள்ளூர் செய்திகள்

4 குழந்தைகளின் தாய் மாயம்
- சத்யராஜ் தனது மனைவியை கண்டித்து அவரை குழந்தை களுடன் ஏரியூரில் கொண்டு வந்து விட்டார்.
- பதறிப்போன அவர் உறவினர்கள் வீடுகளில் தேடிபார்த்தார்.
கு தருமபுரி,
தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே பட்டகாரன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யராஜ் (வயது35). இவரது மனைவி ரோஜா (27). இவர்களுக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர்.
கட்டிட மேஸ்திரியான சத்யராஜ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் திருவண்ணாமலையில் தங்கி வேலை செய்து வந்தார். அங்கு ரோஜாவுக்கும், பழனி என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாக தெரிகிறது.
இதுகுறித்து சத்யராஜ் தனது மனைவியை கண்டித்து அவரை குழந்தைகளுடன் ஏரியூரில் கொண்டு வந்து விட்டார். இந்த நிலையில் சத்யராஜ் சம்பவத்தன்று வேலைக்காக வெளியூருக்கு சென்று விட்டு ஏரியூரில் உள்ள வீட்டிற்கு வந்து பார்த்தபோது 4 குழந்தைகள் மட்டும் இருந்தனர். தனது மனைவியை காணவில்லை. இதனால் பதறிப்போன அவர் உறவினர்கள் வீடுகளில் தேடிபார்த்தார். எங்கு தேடியும் ரோஜா கிடைக்காததால், அவர் மாயமானது தெரியவந்தது.
இதுகுறித்து சத்யராஜ் ஏரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






