என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
    X

    காரில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

    • 9 மூட்டைகளில், 450 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.
    • வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிவர்மன் தலைமையிலான தனிப்படையினர் நேற்று கிருஷ்ணகிரி சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காட்டு வீர ஆஞ்சநேயர் கோயில் அருகே ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அதில் 50 கிலோ அளவிலான 9 மூட்டைகளில், 450 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்த கிருஷ்ணகிரி அடுத்த துறிஞ்சிப்பட்டியை சேர்ந்த கோவிந்தராஜ்(வயது 30), பெத்ததாளப்பள்ளி ஹரிஷ்(19) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இவர்கள் போச்சம்பள்ளி, சந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, கர்நாடகாவிற்கு கடத்தி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து கார் மற்றும் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×