என் மலர்
உள்ளூர் செய்திகள்

காட்டுசிகல அள்ளி கிராமத்தில் ரூ.40 லட்சம் மதிப்பில் சாலை அமைக்க பூமி பூஜை
- ரூ.40 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை மற்றும் பவர் பிளாக் சாலை அமைக்க பூமி பூஜை போடும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
- ரூ.40 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகளுக்கு காரிமங்கலம் பேரூராட்சி தலைவர் பி.சி.ஆர். மனோகரன் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
காரிமங்கலம்,
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் 1-வது வார்டை சேர்ந்த காட்டுசிகல அள்ளி கிராமத்தில் ரூ.40 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை மற்றும் பவர் பிளாக் சாலை அமைக்க பூமி பூஜை போடும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் காட்டுசிகல அள்ளி 1-வது வார்டில் உள்ள சின்னான்டியூர், பட்டாதாரன் கொட்டாய் ஆகிய பகுதிகளில் ரூ.17 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கவும், அதே பகுதியில் 2023-24 மாநில நிதி ஆணைய திட்டத்தின் கீழ் ரூ.23 லட்சம் மதிப்பில் பவர் பிளாக் சாலை அமைத்தல் என ரூ.40 லட்ச மதிப்பிலான திட்ட பணிகளுக்கு காரிமங்கலம் பேரூராட்சி தலைவர் பி.சி.ஆர் மனோகரன் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் துணைத் தலைவர் சீனிவாசன், செயல் அலுவலர் ஆயிஷா, கவுன்சிலர்கள் சத்திரமேஷ், ராதா ராஜா, சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் முருகன், தலைமை எழுத்தர் ரவி, பஞ்சாயத்து தலைவர் கண்ணபெருமாள், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பிரபு, முன்னாள் கவுன்சிலர் சண்முகம், ஒன்றிய பிரதிநிதி கோவிந்தராஜ், தகவல் தொழில்நுட்ப அணி சம்பத் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்






