search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தருமபுரியில் அ.தி.மு.க. பொன்விழா மாநாடு பிரசார வாகனம்
    X

    தருமபுரியில் அ.தி.மு.க. பொன்விழா மாநாடு பிரசார வாகனத்தை முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் எம்.எல்.ஏ. கொடி அசைத்து தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

    தருமபுரியில் அ.தி.மு.க. பொன்விழா மாநாடு பிரசார வாகனம்

    • பிரச்சார ஊர்வலம் தருமபுரி நகரில் பைபாஸ் ரோடு மற்றும் முக்கிய வீதிகள் வழியாக டவுன் பஸ் நிலையத்தை வந்தடைந்தது.
    • தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர் முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் எம்.எல்.ஏ. பிரசுரங்கள் மற்றும் இனிப்பு வழங்கினார்.

    தருமபுரி,

    மதுரையில் வருகிற 20-ம் தேதி அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து கட்சி நிர்வாகிகள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து அ.தி.மு.க. பொன் விழா எழுச்சி மாநாடு பிரசார வாகனம் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று வருகிறது.

    இந்த பிரசார வாகனம் நேற்று தருமபுரி மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது.

    இந்த பிரசார வாகனம் தொடக்க விழா தருமபுரியில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க. மாவட்ட செயலாளருமான கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பிரசார வாகனம் மற்றும் இருசக்கர வாகன பேரணி யை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்ப அணி வேலூர் மண்டல செயலாளர் ஜனனி சதீஷ்குமார், மாநில விவசாய பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன், எம்.எல்.ஏக்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், மாவட்ட அவைத் தலைவர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பூக்கடை ரவி வரவேற்றார்.

    இந்த பிரச்சார ஊர்வலம் தருமபுரி நகரில் பைபாஸ் ரோடு மற்றும் முக்கிய வீதிகள் வழியாக டவுன் பஸ் நிலையத்தை வந்தடைந்தது. அங்கு மாநாடு குறித்து பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

    தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர் களுக்கு முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் எம்.எல்.ஏ. துண்டு பிரசுரங்கள் மற்றும் இனிப்பு வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு ஒன்றிய தலைவர் பொன்னுவேல், ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாசம், பழனி, நீலாபுரம் செல்வம், வேலுமணி, மதிவாணன், சேகர், செந்தில்குமார், கோபால், செல்வராஜ், பசுபதி, விஸ்வநாதன், முருகன், மாவட்ட சார்பு அமைப்பு செயலாளர்கள் பழனிசாமி, தகடூர் விஜயன், கோவிந்தசாமி, வக்கீல் அசோக்குமார், தொழிற்சங்க நிர்வாகி சின்அருள்சாமி, நகர நிர்வாகிகள் அம்மா வடிவேல், பார்த்திபன், சுரேஷ், பலராமன், வேல்முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள், நகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×