என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலக்கோடு அரசு பள்ளியில்  அப்துல்கலாம் உருவ சிலை- ராக்கெட் மாதிரி திறப்பு
    X

    பாலக்கோடு அரசு பள்ளியில் அப்துல்கலாம் உருவ சிலை- ராக்கெட் மாதிரி திறப்பு

    • உலக நாடுகளுக்கு விண்வெளி அறிவியலில் இந்தியா இருப்பது உறுதியாகியது.
    • விண்வெளி மட்டும் அல்லாமல் அனைத்து துறைகளிலும் இந்தியா முன்னேறி வருகிறது

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அப்துல்கலாம் உருவ சிலை மற்றும் ராக்கெட் மாதிரி திறப்பு விழா நிகழ்ச்சி மார்டின் பவுண்டேசன் இயக்குநர் லீமாரோஸ் மார்டின் தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஸ்பேஷ் ஜோன் இண்டியா நிர்வாக இயக்குநர் ஆனந்த் மேகலிங்கம், அப்துல் கலாம் பவுண்டேசன் துணை நிறு வனர் ஷேக் சலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு அப்துல் கலாம் உருவ சிலை மற்றும் ராக்கெட் மாதிரியை திறந்து வைத்து பேசியதாவது:-

    அறிவியலில் உலகமே நிலவில் தண்ணீர் இல்லை என தோல்வி அடைந்த போது, இந்தியா மட்டும் தான் சந்திராயன் விண்கலம் மூலம் தண்ணீர் உள்ளது என நிருபித்தது. இதன் மூலம் உலக நாடுகளுக்கு விண்வெளி அறிவியலில் இந்தியா முன்னோடியாக இருப்பது உறுதியாகியது.

    அப்துல் கலாம் கனவை மாணவர்கள் மற்றும் இளம் தலைமுறையினர் நனவாக்கி வருவது இப்பள்ளியில் நடக்கும் நிழ்ச்சிகளின் மூலம் உறுதியாகி உள்ளது.

    தொடர்ந்து விண்வெளி மட்டும் அல்லாமல் அனைத்து துறைகளிலும் இந்தியா முன்னேறி வருகிறது என தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் நீதியல் துறை அலுவலக மேலாளர் சுகுமார், மாவட்ட கல்வி அலுவலர் இளங்கோ, டாக்டர் கலாம் பசுமை நல அறக்கட்டளை நிர்வாகிகள், பள்ளி தலைமை ஆசிரியர் புனிதா, மற்றும் ஆசிரி யர்கள், மாணவர்கள் பெற் றோர்கள் கலந்து கொண்டனர்.

    இறுதியில் ஆசிரியை செல்வி நன்றி கூறினார்.

    Next Story
    ×