என் மலர்
நீங்கள் தேடியது "திருகல்யாண விழா"
- ஆடி மாத கடைசி வெள்ளியை அடுத்து கடத்தூரில் உள்ள மகாகாளியம்மன், மாரியம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
- அம்மனுக்கு மணப்பெண் அலங்காரமும், மகா மாரியம்மனுக்கு வெள்ளி காப்பு அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.
கடத்தூர்,
தருமபுரி மாவட்டம், கடத்தூரில் மகாகாளியம்மன், மகா மாரியம்மன் கோவிலில் காமடேஸ்வரர் காளிகாம்பாள் திருக்கல்யாணம் இன்று மாலை நடைபெறுகிறது.
ஆடி மாத கடைசி வெள்ளியை அடுத்து கடத்தூரில் உள்ள மகாகாளியம்மன், மாரியம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
இன்று மாலை திருக்கல்யாண விழா நடைபெறுவதை அடுத்து அம்மனுக்கு மணப்பெண் அலங்காரமும், மகா மாரியம்மனுக்கு வெள்ளி காப்பு அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.
திருக்கல்யாண நிகழ்ச்சியை அடுத்து மாலை 4.30 மணிக்கு காமடேஸ்வரர் ஸ்ரீ காளிகாம்பாள் திருக்கல்யாண சீர்வரிசை ஊர்வலம் கொண்டு வரும் நிகழ்ச்சியும், தொடர்ந்து மங்கல இசை வாத்தியங்களுடன் விக்னேஸ்வரர் பூஜை, , எஜமான சங்கல்பம் கலச ஆராதனை நடைபெறுகிறது.
இதனையொட்டி இன்று இரவு 7 மணிக்கு ஸ்ரீ காளியம்மன் காளிகாம்பாள் மணப்பெண்ணாக காட்சி தந்து, சுந்தரேஸ்வரர் காமடேஸ்வரராக அலங்காரத்தில் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.
விழாவிற்கான ஏற்பாடுகளை மகாகாளியம்மன், மகா மாரியம்மன் கோவில் கட்டிட திருப்பணி மற்றும் கும்பாபிஷேக திருவிழா குழுவினர் செய்து வருகின்றனர்.






