என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இலக்கியம்பட்டி அரசு பள்ளியில்  போதை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு
    X

    இலக்கியம்பட்டி அரசு பள்ளியில் போதை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு

    • தொடர்ந்து இந்நிகழ்ச்சி இன்று இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
    • மாணவர்கள் தினேஷ், நவீன்குமார், பிரவீனா ஆகியோர் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்து பேசினர்.

    தருமபுரி,

    சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போதை பொருள் இல்லாத தமிழ்நாடு என்ற விழிப்பு ணர்வு நிகழ்ச்சியினை காணொளி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.

    அதனை தொடர்ந்து இந்நிகழ்ச்சி இன்று இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை வகித்து போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு குறித்து விழிப்புணர்வு உரை யாற்றினார்.

    மாவட்ட எஸ்.பி. ஸ்டீபன் ஜேசுபாதம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், மாவட்ட கல்வி அலுவலர் விஜியகுமார், மருத்துவர் அபிராமி ஆகியோர் விழிப்புணர்வு செய்தனர்.

    மேலும் மாணவர்கள் தினேஷ், நவீன்குமார், பிரவீனா ஆகியோர் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்து பேசினர்.

    பின்னர் போதை பொருள் விழிப்புணர்வு குறித்து குறும்படம் காண் பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து போதை பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இருபால் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

    முன்னதாக தலைமை ஆசிரியர் பழணிச்சாமி வர வேற்றார். உதவி தலைமை ஆசிரியர் அருண்குமார் நன்றி கூறினார்.

    Next Story
    ×