என் மலர்
உள்ளூர் செய்திகள்

பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது
- பாலக்கோடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரையும் கைது செய்தனர்.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் சூதாட்டம் நடப்பதாக பாலக்கோடு டி.எஸ்.பி சிந்து இரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் பாலக்கோடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பாலக்கோடு அருகே காவாப்பட்டி புளியமரத்தடியில் சூதாடி கொண்டிருந்த 4 பேரையும் போலீசார் பிடித்து விசாரித்ததில் வேளாவல்லியை சேர்ந்த தமிழரசன் (வயது 23), மாதேஷ் (45) காவாப்பட்டியை சேர்ந்த விக்னேஷ் (23), சிவா (28) என்பதும் தெரியவந்தது.
இதே போன்று பாலக்கோடு தக்காளி மார்க்கெட் அருகே சூதாடிய முத்து கவுண்டர் தெருவை சேர்ந்த சத்தியராஜ் (28), வேல்முருகன் (45) தீர்த்தகிரி நகரை சேர்ந்த சரவணன் (38), சுகுமார் (40) என்பதும் தெரியவந்தது.
உடனே போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்த சீட்டு கட்டுக்களையும். 3 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.






