என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நல்லம்பள்ளி தி.மு.க. சார்பில் முதியோர் காப்பகத்திற்கு நலத்திட்ட உதவிகள்
    X

    நல்லம்பள்ளி ஒன்றிய தி.மு.க செயலாளர் ஏ.எஸ்.சண்முகம் முதியோர் காப்பகத்திற்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய காட்சி.

    நல்லம்பள்ளி தி.மு.க. சார்பில் முதியோர் காப்பகத்திற்கு நலத்திட்ட உதவிகள்

    • ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • 4 இரும்பு கட்டில்கள் மற்றும் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை சாமான் பொருட்களை வழங்கி பேசினார்.

    தருமபுரி,

    எர்ரப்பட்டியில் உள்ள முதியோர் காப்பக இல்லத்தில், தி.மு.க. சார்பில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே எர்ரப்பட்டி கிராமத்தில் உள்ள முதியோர் காப்பகத்திற்கு, தி.மு.க. சார்பில், ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 4 இரும்பு கட்டில்கள் மற்றும் ஒரு மாதத்திற்க்கு தேவையான மளிகை சாமான் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஏ.எஸ்.சண்முகம் தலைமை தாங்கி, காப்பகத்திற்கு ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 4 இரும்பு கட்டில்கள் மற்றும் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை சாமான் பொருட்களை வழங்கி பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம், முன்னாள் ஒன்றிய செயலாளர் துரைசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ், கிராம வளர்ச்சி குழு தலைவர் பொன்னரசு, ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் காசிலிங்கம், அவைதலைவர் வீரமணி, இலக்கிய அணி நிர்வாகி வெங்கட்ராமன், காப்பக பொறுப்பாளர் திலகவதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் காப்பக பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×