என் மலர்
உள்ளூர் செய்திகள்

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
- நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார்.
- அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே புனிதவதி இறந்து விட்டார் என்று தெரிவித்தனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பெரும்பாலை அருகே சாமத்தாள் கிராமத்தைச் சேர்ந்தவர் முனிராஜ். இவரது மனைவி புனிதவதி (வயது26).
இவர் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். இதனை கண்ட உறவினர்கள் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே புனிதவதி இறந்து விட்டார் என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த பெரும்பாலை போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு சென்று புனிதவதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து புனிதவதி என்ன காரணத்திற்காக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






