என் மலர்
உள்ளூர் செய்திகள்

கரகப்பட்டி பெரிய ஏரியில் மீன் பிடிப்பதற்காக நீரை வெளியேற்றப்படுகிறது. அதற்காக பயன்படுத்தப்படும் குழாய்களை படத்தில் காணலாம்.
மீன் பிடிப்பதற்காக ஏரி நீரை வீணாக வெளியேற்றுவதை தடுக்க வேண்டும்
- ஏரியில் மீன் பிடிப்பதற்காக தனி நபர் ஒருவர் சட்ட விரோதமாக ஏரியிலிருக்கும் தண்ணீரை ராட்சத மி்ன் மோட்டார் வைத்து வெளியேற்றி வருகிறார்.
- இது போன்ற செயல்களில் யார் ஈடுபட்டாலும் சம்மந்தப் பட்டவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள பந்தாரஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட கரகப்பட்டி பெரிய ஏரியில் மீன் பிடிப்பதற்காக தனி நபர் ஒருவர் சட்ட விரோதமாக ஏரியிலிருக்கும் தண்ணீரை ராட்சத மி்ன் மோட்டார் வைத்து வெளியேற்றி வருகிறார்.
எந்த ஒரு அரசு அதிகாரியின் உத்தரவையும் பெறாமல் இவ்வாறு செய்து வருவதால் ஏரி நீரை ஆதாரமாக கொண்டு விவசாயம் செய்து வரும் 300 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்ப–டும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தனிநபர் மீது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, ஏரி நீரை பாதுகாத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தங்களின் வாழ்வாதராமாக உள்ள கரகப்பட்டி பெரிய ஏரி நீர் ஆதாரத்தை காக்க வேண்டும். இதற்கு தருமபுரி மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என் ஒட்டப்பட்டியை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயி கூறியதாவது:-
தனிப்பட்ட ஒருவரின் சுயநலத்திற்காக நீர் நிலைகளில் பாதிப்பை ஏற்படுத்தினால் அது கிராமத்தினுடைய விவசாயத்தை, கால்நடை வளர்ப்பை பாதிக்கும்.
இது போன்ற செயல்களில் யார் ஈடுபட்டாலும் சம்மந்தப் பட்டவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்போது தான் இயற்கை வளத்தை காப்பாற்றிட முடியும். கரகம்பட்டியில் உள்ள பெரிய ஏரியில் மீன் பிடிப்பதற்காக தனி நபர் ஒருவர் நீரை வீணாக வெளியேற்றுவதை தருமபுரி மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், விவசாயிகளை ஒன்று திரட்டி, ஆர்பாட்டம், போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தார்.






