என் மலர்
கடலூர்
கடலூரில் 500 ரூபாய்க்கு இ-பாஸ் வழங்கியது தொடர்பாக டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்:
கொரோனா பரவி வருவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு வருகிற 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல வேண்டுமானால் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதுவும் திருமணம், இறப்பு, மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே இ-பாஸ் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அத்தியாவசிய தேவைகளுக்காக பொதுமக்கள் இ-பாஸ் பெற்று, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்கின்றனர். இருப்பினும் சிலருக்கு இ-பாஸ் கிடைப்பதில்லை. இந்நிலையில் கடலூரில் அரை மணி நேரத்தில் இ-பாஸ் பெற்று தரப்படும். அதற்காக சேவை கட்டணமாக ரூ.500 வசூலித்து வருவதாக டிராவல்ஸ் உரிமையாளர் ஒருவர் பேசியதாக ஆடியோ ஒன்று வாட்ஸ்-அப், முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி, இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி, கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார், அந்த ஆடியோ வெளியிட்ட நபர் பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கடலூர் சாவடியை சேர்ந்த முனுசாமி மகன் ராஜாராம் (வயது 38) என்றும், அவர் டிரைவராக இருப்பதும் தெரிய வந்தது.
தொடர்ந்து அவரை போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருமணம், இறப்பு, மருத்துவம் போன்ற ஆவணங்களை வைத்து சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அசல் இ-பாஸ் எடுத்து கொடுத்ததோடு, அந்த சான்றிதழ்களை போலியாக வைத்து மற்றவர்களுக்கும் இ-பாஸ் பெற்று கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டது தெரிந்தது. இவ்வாறாக மொத்தம் 30 இ-பாஸ் பெற்றுள்ளார். அரசுக்கு எதிராக அவர் இ-பாஸ் வாங்கி கொடுத்து, அதற்கு தலா ரூ.500 வீதம் கட்டணமாக பெற்றதும் தெரிய வந்தது.
அவருக்கு உடந்தையாக அவரது உறவினர் சக்கரவர்த்தி மகன் மணிகண்டன் (36) என்பவர் செயல்பட்டதும் தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம் அருகே கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டி தரக்கோரி பள்ளி மாணவர்களுடன், பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரம்:
சிதம்பரம் அருகே நக்கரவந்தன்குடி ஊராட்சி கோழிப்பள்ளம் கிராமத்தில் ஆதிதிராவிடர் நலப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் குமராமங்கலம், நடராஜபுரம், கணக்கரப்பட்டு, உத்தமசோழமங்கலம், ராதாவிளாகம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 66 மாணவ-மாணவிகள் வந்து கல்வி பயின்று வருகின்றனர். 3 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பள்ளி ஆங்கிலவழி கல்வியை பயிற்றுவிக்கும் பள்ளியாகவும் உள்ளது.
1926-ம் ஆண்டு கட்டப்பட்ட இப்பள்ளி கட்டிடம், மிகவும் சேதமடைந்து காணப்பட்டதால், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்டது. அதன் பிறகு ஒரே ஒரு அறை கொண்ட கட்டிடம் கட்டி கொடுக்கப்பட்டது. அந்த அறையில் மாணவர்கள் அனைவரும் இருக்க போதிய இடவசதி இல்லை. பெரும் இடநெருக்கடிக்கு மத்தியில் கல்வி பயின்று வந்தனர்.
மேலும் மழைக்காலங்களில் அந்த வகுப்பறைக்குள் தண்ணீர் புகுவதாகவும் கூறப்படுகிறது. தற்போது 3 வகுப்புகள் வரையுள்ள மாணவர்கள், பஞ்சாயத்து யூனியன் கட்டிடமான அங்கன்வாடி மையத்தில் அமர்ந்து படித்து வந்தனர். இதனால் மாணவர்களின் பெற்றோர், கூடுதல் கட்டிடம் கட்டி தரக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி செயல்படவில்லை. இருப்பினும் கொரோனா ஊரடங்கு முடிந்து பள்ளி திறக்கப்பட்டால், மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாமல், கடும் இடநெருக்கடிக்கு மத்தியில் நெருக்கமாக அமர்ந்து படிக்க வேண்டிய நிலை ஏற்படும்.இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மாணவர்களுடன் சேர்ந்து நேற்று காலை பள்ளி முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், பள்ளிக்கூடத்துக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும் எனவும், இதுவரை நடவடிக்கை எடுக்காத ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகளை கண்டித்தும் கோஷங் களை எழுப்பினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றியம் மற்றும் வடலூர் நகர விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆலோசனை கூட்டம் வடலூரில் நடந்தது.
குறிஞ்சிப்பாடி:
குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றியம் மற்றும் வடலூர் நகர விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆலோசனை கூட்டம் வடலூரில் நடந்தது. கூட்டத்திற்கு குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய செயலாளர் சிவசக்தி தலைமை தாங்கினார். வடலூர் நகர செயலாளர் கண்ணன், பங்க் சுரேஷ், சசி, சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய பொருளாளர் பார்த்திபன் வரவேற்றார்.
கூட்டத்தில் வருகிற 17-ந் தேதி தொல்.திருமாவளவன் பிறந்தநாள் விழாவினை குறிஞ்சிப்பாடி பகுதி ஒன்றிய கிராமங்கள் தோறும் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கி, ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் வக்கீல் பாண்டியன், துணை செயலாளர்கள் வீராசாமி, எம்.ஜி.ஆர். ஜெயச்சந்திரன், சிற்றரசு, பாக்கியராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் வருவாய்துறை ஊழியர்களின் ஒட்டு மொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் இரண்டாவது நாளாக தொடர்கிறது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் வருவாய்துறை ஊழியர்களின் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் இரண்டாவது நாளாக தொடர்கிறது.
கொரோனா தடுப்பு பணியில் உயிரிழந்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்களுக்கு அறிவித்த இழப்பீடு தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும், அனைவருக்கும் உயர்தர தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இரண்டாவது நாளாக கடலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களும் வெறிச்சோடி காணப்படுகிறது.

கடலூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகள் மூலம் 14 லட்சம் முக கவசம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக குடிமை பொருள் அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடலூர்:
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். நன்றாக சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும் என்றும் அறிவுரை வழங்கி வருகிறது.
இதற்கிடையில் முக கவசங்களை பொதுமக்கள் பணம் கொடுத்து வாங்கி அணிந்து வருகின்றனர். இதை தவிர்க்கும் வகையில் அனைத்து ரேஷன் கடைகளிலும் நபர் ஒருவருக்கு தலா 2 முக கவசங்கள் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டார். தொடர்ந்து இந்த முக கவசம் வழங்கும் திட்டத்தை கடந்த 27-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். மேலும் அனைத்து மாவட்டங்களிலும் 5-ந்தேதி ரேஷன் கடைகளில் பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதன்படி கடலூர் மாவட்டத்தில் முக கவசம் வழங்குவதற்காக டோக்கன் வழங்கப்பட்டது. ஆனால் நேற்று திட்டமிட்டபடி முக கவசங்கள் ரேஷன் கடைகளில் வழங்கவில்லை. மாறாக வழக்கமாக அரிசி, பருப்பு போன்ற உணவு பொருட்கள் வழங்கப்பட்டன. இது பற்றி குடிமை பொருள் அலுவலக அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, கடலூர் மாவட்டத்தில் 7 லட்சத்து 30 ஆயிரத்து 289 ரேஷன் கார்டுகள் உள்ளன. இவற்றில் முதல் கட்டமாக நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள மக்களுக்கு மட்டும் முக கவசம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் தயாரிக்கும் இடமான திருப்பூரில் இருந்து முக கவசங்கள் கடலூர் மாவட்டத்திற்கு வரவில்லை. வந்தவுடன் முதல் கட்டமாக நபர் ஒருவருக்கு தலா 2 முக கவசங்கள் வீதம் 13 லட்சத்து 95 ஆயிரம் முக கவசங்கள் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. 2-ம் கட்டமாக ஊராட்சி பகுதி மக்களுக்கு முக கவசங்கள் வழங்கப்படும் என்றார்.

கடலூரில் 500 ரூபாய் கொடுத்தால் அரைமணி நேரத்தில் இ-பாஸ் கிடைக்கும் என்று சமூக வலைதளங்களில் ஆடியோ வெளியிட்ட டிராவல்ஸ் உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கொரோனா பரவி வருவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு வருகிற 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்ல வேண்டுமானால் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதுவும் திருமணம், இறப்பு, மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே இ-பாஸ் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பலர் அத்தியாவசிய தேவைகளுக்காக இ-பாஸ் பெற்று, மற்ற மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக சமீபத்தில் புகார் கூறப்பட்டது.
இந்நிலையில் கடலூரில் அரைமணி நேரத்தில் இ-பாஸ் பெற்று தரப்படும். அதற்காக சேவை கட்டணமாக ரூ.500 வசூலித்து வருவதாக டிராவல்ஸ் உரிமையாளர் ஒருவர் பேசிய ஆடியோ வாட்ஸ்-அப், முக நூல் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த ஆடியோவில் டிராவல்ஸ் உரிமையாளர் பேசியதாவது:-
கடலூரை சேர்ந்த எங்கள் டிராவல்ஸ் மூலம் பயணிகளுக்கும், டாக்சி சேவையில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும், இ-பாஸ் தேவைப்பட்டால் என்னுடைய செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம். அரைமணி நேரத்தில் இ-பாஸ் போட்டு தருகிறேன். அசல் இ-பாஸ் தான். போலி கிடையாது. ஆகவே யாரும் பயப்பட தேவையில்லை. யார் பயணம் செய்கிறார்களோ அவர்களுடைய அசல் ஆதார் கார்டை புகைப்படம் எடுத்து எனது வாட்ஸ்-அப் எண்ணுக்கு அனுப்புங்கள். அதிகபட்சம் அரைமணி நேரத்தில் பாஸ் எடுத்து கொடுத்து விடுவேன். இதற்கான சேவை கட்டணமாக ரூ.500 வாங்கி வருகிறேன். இது வரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாஸ் எடுத்து கொடுத்து இருக்கிறோம். இந்த மாதத்திற்கு தேவைப்படும் டிரைவர்கள் எண்ணுடைய செல்போனில் தொடர்பு கொள்ளலாம் என்று கூறி, தன்னுடைய செல்போன் எண்ணையும் குறிப்பிடுகிறார்.
இது பற்றி மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் இது பற்றி விரிவான விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி கடலூர் புதுநகர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த டிராவல்ஸ் உரிமையாளர் கடலூர் சாவடியை சேர்ந்த 24 வயது வாலிபர் என்று தெரிய வந்தது. அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ்விடம் கேட்டபோது, அந்த ஆடியோவில் பேசிய நபர் மற்றும் அவரது நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். அவர் உண்மையில் இ-பாஸ் பெற்று உள்ளாரா? அல்லது போலி இ-பாஸ் வழங்கினாரா? அப்படியானால் அதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, இது வரை எவ்வளவு பணம் பெற்று உள்ளார்? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணையின் முடிவில் தான் அதன் உண்மை தன்மை தெரிய வரும் என்றார்.

காட்டுமன்னார்கோவிலில் லாட்டரி விற்றபனையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்டுமன்னார்கோவில்:
காட்டுமன்னார்கோவிலில் உள்ள பெரியகுளம் பகுதியில் ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் காட்டுமன்னார்கோவில் சப்-இன்ஸ்பெக்டர் தனசேகரன் தலைமையிலான போலீசார் பெரியகுளம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது அங்கு ஆன்லைனில் லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த காட்டுமன்னார்கோவில் இந்திரா நகரை சேர்ந்த ராகுல் (வயது 27) என்பவரை போலீசார் பிடிக்க முயன்றனர். இதில் அவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் போலீசாரை தாக்க முயன்றார். இதில் சுதாரித்துக் கொண்ட போலீசார் ராகுலை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
ஒப்பந்ததாரர்களுக்கு நிலுவைத்தொகையை 2 முறை வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக சிதம்பரம் நகராட்சி ஊழியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சிதம்பரம்:
சிதம்பரம் நகராட்சியில் பணிபுரியும் ஊழியர்கள், பல்வேறு முறைகேட்டில் ஈடுபடுவதாக நகராட்சி ஆணையருக்கு புகார்கள் சென்றன.
இது தொடர்பாக அப்போதைய நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா விசாரணை நடத்தினார். இதில் நகராட்சியில் பணிபுரியும் நிர்வாக உதவியாளர் (பொறுப்பு) காசாளர் கனிமொழி, இளநிலை உதவியாளர் அசோக்குமார் ஆகியோர் தார் சாலை அமைக்கும் பணிக்காக ஒப்பந்ததாரர்களுக்கு நிலுவைத்தொகையை 2 முறை வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுதொடர்பாக நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, அறிக்கை தயார் செய்தார். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி நிர்வாக உதவியாளர் கனிமொழி, இளநிலை உதவியாளர் அசோக்குமார் ஆகியோரை நேற்று நகராட்சி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதற்கான உத்தரவு ஆணையை புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஆணையர் அஜிதா பர்வீனிடம், நகராட்சி ஊழியர்கள் வழங்கினர்.
மேலும் ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்கப்பட்ட நிலுவைத்தொகையில் யார், யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்று அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நகராட்சி ஊழியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் சிதம்பரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிறுபாக்கம் அடுத்த மலையனூரில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
சிறுபாக்கம்:
சிறுபாக்கம் அடுத்த மலையனூரில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சுவாமிதுரை தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் தேவராஜ் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரண பொருட்கள் மற்றும் முக கவசங்களை வழங்கினார். இதில் அமைப்பாளர் பாரதி, பள்ளி மேலாண்மை குழு தலைவி தெய்வமணி, ஊராட்சி செயலர் கருப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விருத்தாசலத்தில் உள்ள பணிமனை 2-ல் 50-க்கும் மேற்பட்ட பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இங்கு கடந்த 4 மாதங்களாக ஒரே இடத்தில் பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் ஒரு குருவி, தனது வீடாக பஸ்சை மாற்றி உள்ளது.
விருத்தாசலம்:
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. வருகிற 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் பஸ், ரெயில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 4 மாதத்திற்கும் மேலாக அரசு பஸ்கள் அனைத்தும், அந்தந்த போக்குவரத்து பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், விருத்தாசலம், வடலூர், சிதம்பரம் உள்ளிட்ட பணிமனைகளிலும் பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அரசு ஊழியர்கள் பணிக்கு சென்று வர மட்டும் மாவட்டத்தில் 12 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதில் விருத்தாசலத்தில் உள்ள பணிமனை 2-ல் 50-க்கும் மேற்பட்ட பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இங்கு கடந்த 4 மாதங்களாக ஒரே இடத்தில் பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் ஒரு குருவி, தனது வீடாக பஸ்சை மாற்றி உள்ளது. ஆம், இந்த பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஒரு பஸ்சில் குருவி ஒன்று கூடு கட்டி வசித்து வருகிறது. அதாவது டிரைவர் இருக்கையின் அருகில் உள்ள கண்ணாடியின் பின்புறம் குச்சிகளால் கூடு கட்டி, அதில் முட்டையிட்டு அடைகாத்து வருகிறது. இதற்கிடையே அதை பார்த்த பணிமனையில் உள்ள ஊழியர்கள், குருவி கூட்டை அகற்ற மனமின்றி, அதை பாதுகாத்து வருகின்றனர்.

வடலூர் அருகே கரும்புத்தோட்டத்தில் மனித எலும்புக்கூடுகள் கிடந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடலூர்:
கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள ராசாக்குப்பத்தை சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு சொந்தமான தோட்டத்தை உள்மருவாய் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவர், குத்தகைக்கு எடுத்து, அதில் கரும்பு சாகுபடி செய்திருந்தார். தற்போது அவை நன்கு வளர்ந்துள்ளதால், அறுவடை செய்ய முடிவு செய்தார். அதன்படி நேற்று தொழிலாளர்கள் கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கரும்பு தோட்டத்துக்குள் மனிதனின் மண்டை ஓடும், எலும்புகளும் கிடந்தன. இதை பார்த்த தொழிலாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் இதுபற்றி போலீசாருக்கும், கிராம நிர்வாக அலுவலருக்கும் தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் வடலூர் போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் கரும்புத்தோட்டத்தில் கிடந்த மண்டை ஓடு மற்றும் எலும்புக்கூடுகளை பார்வையிட்டனர். அப்போது எலும்புக்கூடுகள் கிடந்த இடத்தின் அருகில் முதியவர்கள் பயன்படுத்தும் ஊன்றுகோல் ஒன்றும், செருப்பு, கைலி ஆகியவை கிடந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றினர்.
பின்னர் அந்த எலும்புகளையும், மண்டை ஓட்டையும் போலீசார் கைப்பற்றி, அதை ஆய்வு செய்வதற்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து போலீசார் அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அரங்கமங்கலம் கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வேல்முருகனின் தந்தை வைத்தியலிங்கம் (வயது 80), அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறுவதும், பிறகு உறவினர்கள் யார் வீட்டிலாவது தங்கிவிட்டு, சிறிது நாட்களில் வீட்டுக்கு திரும்பி வருவதுமாக இருந்து வந்துள்ளார். அவ்வாறு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்றவர், அதன் பிறகு வீட்டுக்கு திரும்பி வரவில்லை. குடும்பத்தினரும் வீட்டுக்கு திரும்பி வந்து விடுவார் என்ற எண்ணத்தில் இருந்து வந்துள்ளனர்.
ஆனால் நீண்ட நாட்களாகியும் அவர் திரும்பி வரவில்லை. மேலும் போலீசாரால் கைப்பற்றப்பட்டது வைத்தியலிங்கம் பயன்படுத்தும் ஊன்றுகோல் மற்றும் அவர் கடைசியாக அணிந்திருந்த கைலி என்பது தெரியவந்தது. இதனால் வீட்டை விட்டு வெளியேறிய வைத்தியலிங்கம் தான் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள், போலீசாரிடம் தெரிவித்தனர்.
ஆனால் மருத்துவ பரிசோதனையின் அறிக்கை முடிவு வந்த பிறகே, இறந்தது வைத்தியலிங்கமா? அல்லது வேறு யாராவதா? என தெரியவரும். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரும்புத்தோட்டத்தில் மனித எலும்புக்கூடுகள் கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் அருகே படகுகளுக்கு தீ வைத்து, வீடுகளை சூறையாடிய 19 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்:
கடலூர் அருகே உள்ள தாழங்குடா கிராமத்தை சேர்ந்தவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாசிலாமணி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மதியழகன் என்பவருக்கும் இடையே தேர்தல் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் சென்ற மாசிலாமணியின் தம்பி மதிவாணனை, 17 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து வெட்டி படுகொலை செய்தது.
இதைக் கேள்விப்பட்டு ஆத்திரம் அடைந்த மாசிலாமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாழங்குடா கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 25 பைபர் படகுகளை தீ வைத்து எரித்தனர். மீன்பிடி வலைகள் மற்றும் ஒரு சுருக்குமடி வலைகளையும் சேதப்படுத்தினர். 4 வீடுகளை சூறையாடியதோடு, வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 கார்கள், 12 மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் அடித்து நொறுக்கினர். இதன் மொத்த சேத மதிப்பு ரூ.5 கோடி என கூறப்படுகிறது.
மேலும் தாழங்குடா வேல்டுவிஷன் தெருவை சேர்ந்த நாகமுத்து மனைவி ராதா(50) என்பவரின் வீட்டுக்குள் புகுந்த கும்பல், ராதாவை மிரட்டி வீட்டில் இருந்த 2 பவுன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றையும் திருடிச்சென்றதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் தேவனாம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த சம்பவம் தொடர்பாக தாழங்குடாவை சேர்ந்த குப்புராஜ் மகன் குருநாதன், கன்னியப்பன் மகன் சிவக்குமார், பாவாடைசாமி மகன் பிச்சை, மாரியப்பன் மகன் மணிமாறன், ராமன் மகன் தினேஷ், மணிமாறன் மகன் மதி, அங்கப்பன் மகன் வனசேகர், காளியப்பன் மகன் நவீன்ராஜ், தங்கவேல் மகன் சூரியமூர்த்தி, கனகராஜ் மகன் கலைச்செல்வன், ராஜ் மகன் அருண்குமார், மணிமாறன் மகன் மகேந்திரன், விநாயகமூர்த்தி மகன் கமல், அங்கப்பன் மகன் மாரி, பெருமாள் மகன் தீனதயாளன், கிருஷ்ணராஜ் மகன் சுதர்சன், மாரியப்பன் மகன் புகழரசன், சக்திவேல் மகன் அஜித்குமார், மாரியப்பன் மகன் ஜான்சன் ஆகிய 19 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாசிலாமணி, இவரது தம்பி மகாதேவன் உள்பட 6 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.