search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெற்றோர் ஆர்ப்பாட்டம்"

    • பர்கூர் பஸ் நிலையம் அருகில் உண்ணாவிரதம் நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டது.
    • இன்று காலை உணணாவிரதம் இருக்க மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர், பொதுமக்கள் திரண்டு வந்தனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூரில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் 1961-ம் ஆண்டு பழங்குடியினர் உண்டு உறைவிட தொட க்கப்பள்ளி தொடங்கப்ப ட்டது.

    இப்பள்ளி யானது 1993-ம் ஆண்டு நடுநிலைப் பள்ளி யாகவும், 2009-ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாகவும், 2016-ம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள இந்த மேல்நிலைப்பள்ளியில் 380 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    தொடக்க காலம் முதலே, ஆசிரியர் பற்றாக்குறை ஒரு பெரும் பிரச்சனையாக இருந்து வருவதாக கூறப்படு கிறது. 380 பேர் படிக்கும் இந்த பள்ளியில் 11 வகுப்புகள் செயல்படுகி ன்றன. இந்த 11 வகுப்புக ளுக்கும் ஒரே ஒரு தமிழா சிரியர் மட்டுமே உள்ளார். அதேபோல ஆங்கில பாடத்திற்கும் ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளார்.

    மேல்நிலைப் பள்ளிக்கு தமிழ்,ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப்பாடங்களுக்கு இதுவரை ஆசிரியர் பணியி டங்களே உருவாக்கப்பட வில்லை. இவ்வாறாக இந்த பள்ளியில் 10 ஆசிரியர் பணியிடங்களும், ஆசிரியர் அல்லாத 5 பணியிடங்களும் உருவாக்கப்படப் பட வில்லை.

    இந்த பணியிடங்களை உடனடியாக உருவாக்கி, உரிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் எனக் கோரி 2017-ம் ஆண்டு இப்பள்ளி மாணவ மாணவிகளும், பெற்றோ ர்களும், அரசியல் கட்சி நிர்வாகிகளும் ஒன்றி ணைந்து ஒரு நாள் அடை யாள உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

    இதன் தொடர்ச்சியாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர்களுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் தொடர்ச்சியாக முறையீடுகள் அனுப்பப்பட்டன.

    இந்த ஒரு பள்ளி மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் 17 மாவட்ட ங்களில் பழங்குடியினர் நலத்துறை மூலம் நடத்த ப்படும் 320 பள்ளிகளிலும் ஆசிரியர் பற்றாக்குறை, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இன்மை, இப்பள்ளி களை கண்காணி ப்பதற்கான போதிய கட்டமைப்பு வசதிகள் இன்மை உள்ளி ட்டவை குறித்து கல்வியா ளர்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

    அதன் அடிப்படையில் அரசு ஆய்வு மேற்கொண்டு, நலத்துறை பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையில் கொண்டு வரப்படும் எனும் அறிவிப்பை கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக அரசு அறிவித்தது.

    அந்த அறிவிப்பு இன்னும் செயல்படுத்தப்படாமல் உள்ளது. அதனை செயல்படுத்தினால் தான் இந்த பிரச்சினை தீரும்.

    எனவே அந்த அறிவிப்பை உடனடியாக செயல்படுத்த கோரியும், ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க கோரியும் தமிழக அரசை வலியுறுத்தி பர்கூர் பஸ் நிலையம் அருகில் உண்ணா விரதம் நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை உணணாவிரதம் இருக்க மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர், பொதுமக்கள் திரண்டு வந்தனர்.

    அப்போது அவர்களிடம் அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார். பர்கூர் வருவாய் ஆய்வாளர் பாலமுருகன், கிராம நிர்வாக அலுவலர் பாலு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். உங்கள் கோரி க்கை குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

    மேலும் உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்தனர்.

    இதையடுத்து பொதுமக்கள், மாணவ, மாணவி கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    ×