என் மலர்tooltip icon

    கடலூர்

    கடலூரில் தேர்தல் முன்விரோதம் காரணமாக முதியவர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் மாநகராட்சி தேர்தல் கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, யார்- யார்? வெற்றி பெற்றவர்கள் என தெரிவிக்கப்பட்டது.

    கடலூர் புதுப்பாளையத்தை சேர்ந்த புண்ணியமூர்த்தி (வயது 50) . அதே பகுதியை சேர்ந்த அருள் என்பவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக போட்டியிட்டவருக்கு ஏன் ஓட்டு போடவில்லை என்று கேட்டு, புண்ணிய மூர்த்தியை தாக்கினார்.

    இதனை தடுக்க வந்த அவரது மனைவி ஜெயந்தியையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் புண்ணிய மூர்த்தி காயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருள் என்பவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    கணவர் இறந்த துக்கத்தை மறைத்துக்கொண்டு ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குச்சாவடிக்கு வந்த பெண் வரிசையில் நின்று வாக்களித்த சம்பவம் வாக்காளர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சி 4-வது வார்டில் வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏற்பட்ட பழுதால் இன்று மறுவாக்குப்பதிவு நடந்தது. இந்த வார்டை சேர்ந்த வனிதா என்பவரது கணவர் சங்கர் நேற்று இறந்து விட்டார். ஆனாலும் துக்கத்தை மறைத்துக்கொண்டு தனது ஜனநாயக கடமையை நிறைவேற்ற இன்று காலை வாக்குச்சாவடிக்கு வந்த வனிதா வரிசையில் நின்று வாக்களித்தார்.

    இந்த சம்பவம் வாக்காளர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    கடலூர் அருகே சாலையில் மயங்கிய கிடந்த காவலாளி திடீரென உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் மஞ்சகுப்பம் பகுதியை சேர்ந்தவர் கண்ணதாசன் (வயது 58). இவர் புதுவை மாநிலம் கிருமாம்பாக்கம் தனியார் கம்பெனியில்காவலாளியாக வேலை செய்து வந்தார்.

    சம்பவத்தன்று கடலூர் புதுச்சேரி சாலை சின்ன கங்கணாங்குப்பம் பகுதியில் மயங்கிய நிலையில் சாலையில் விழுந்து கிடந்தார். அப்போது அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அவருடைய மகன் முருகதாசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் முருகதாஸ் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது தந்தை கண்ணதாசன் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் கிடந்தார். இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புவனகிரி பேரூராட்சி 4-வது வார்டில் இன்று வாக்குப்பதிவு முடிந்ததும், அதே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வைத்து வாக்கு எண்ணிக்கை தொடங்கி, தேர்தல் முடிவு உடனே அறிவிக்கப்பட உள்ளது.
    புவனகிரி:

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி மற்றும் 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளுக்கான தேர்தல் நடந்தது. இதில் புவனகிரி பேரூராட்சியில் 18 வார்டுகளுக்கான பதவிகளுக்கு 78 பேர் போட்டியிட்டனர்.

    கடந்த 19-ந் தேதி நடைபெற்ற தேர்தலில் 1,170 வாக்காளர்களை கொண்ட 4-வது வார்டில் 927 வாக்காளர்கள் வாக்களித்தனர். வாக்குப்பதிவு முடிந்தவும், அன்று இரவு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும், வாக்கு எண்ணிக்கை மையமான புவனகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

    இதையடுத்து நேற்று முன்தினம், புவனகிரி பேரூராட்சியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.

    அப்போது 4-வது வார்டில் உள்ள வாக்குச்சாவடி எண் 4-ல் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரம் திடீரென பழுதானது. பின்னர் பெல் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் சரிபார்த்தும், அதனை சரி செய்ய முடியவில்லை. இதனால் 4-வது வார்டுக்கான வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது.

    எனவே இந்த வார்டுக்கான மறுதேர்தல் இன்று (24-ந்தேதி) நடைபெறும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    அதன்படி இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது. ஏராளமான ஆண்களும், பெண்களும் ஆர்வத்துடன் நீண்டவரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் மாலை 5 மணி முதல் 6 மணி வரை ஒரு மணி நேரம் கொரோனா அறிகுறி உள்ளவர்கள், அதற்கான சான்றிதழை அளித்து வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

    பின்னர் வாக்குப்பதிவு முடிந்ததும், அதே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வைத்து வாக்கு எண்ணிக்கை தொடங்கி, தேர்தல் முடிவு உடனே அறிவிக்கப்பட உள்ளது. இந்த பணியில் தேர்தல் நடத்தும் அலுவலரும், புவனகிரி பேரூராட்சி செயல் அலுவலருமான அருள்குமார் மேற்பார்வையில் 15 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    மறுவாக்குப்பதிவையொட்டி வாக்குப்பதிவு மையத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் அசம்பாவித சம்பவம் ஏதும் நிகழாமல் தடுக்கும் வகையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் மேற்பார்வையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ரமேஷ்ராஜ், சுந்தரம் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நெல்லிக்குப்பம் நகராட்சி 25-வது வார்டில் சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி சார்பில் நகர செயலாளர் ஒரு ஓட்டு கூட பெறவில்லை.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சி 25-வது வார்டில் சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி சார்பில் நகர செயலாளர் சதீஷ்குமார் போட்டியிட்டார். அந்த வார்டில் இவருக்கு ஓட்டு இல்லை. தேர்தலில் சதீஷ்குமார் ஒரு ஓட்டு கூட பெறவில்லை.

    மேலும் 3 வது வார்டில் அ.ம.மு.க. மாயகிருஷ்ணன், 11 வது வார்டில் பா.ஜ., செந்தில்குமார் ஆகியோர் ஒரு ஓட்டு மட்டுமே பெற்றனர். விருத்தாசலம் நகராட்சியில் 17- வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்ட அருண்குமார் ஒரு ஓட்டு கூட பெறவில்லை. 
    கடலூர் மாநகராட்சியில் போட்டியிட்ட 286 பேரில் 182 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

    கடலூர்:

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடலூர் மாவட்டத்தில் கடந்த 19-ம் தேதி ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள் மற்றும் 14 பேரூராட்சிகளில் ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது.

    இதனை தொடர்ந்து கடலூர் மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று கடலூர் புனித வளனார் பள்ளியில் நடைபெற்றது. இந்த உள்ளாட்சி தேர்தலில் 45 வார்டுகளில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க. அ.ம.மு.க., முஸ்லிம் லீக், நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், சுயேட்சைகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் போட்டியிட்டனர்.

    கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகளில் 286 பேர் போட்டியிட்டனர். இதனை தொடர்ந்து நேற்று காலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கை மாலை விறுவிறுப்புடன் நடந்து முடிந்தது.

    கடலூர் பெருநகராட்சியை தி.மு.க. தேர்தல் அறிக்கையின் படி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டு முதல் முறையாக தேர்தல் நடைபெற்றதால் வழக்கத்தைவிட அதிகம் பேர் இத்தேர்தலில் போட்டியிட்டதாக தெரிய வருகிறது. மேலும் முக்கிய கட்சிகளில் உள்ள நிர்வாகிகளுக்கு தேர்தலில் போட்டியிட தலைமை எடுத்த முடிவுக்கு பல்வேறு எதிர்ப்பு தெரிவித்து பல பேர் சுயேட்சையாக போட்டியிட்டு ஒரு சிலர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

    இந்த நிலையில் நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் கடலூர் மாநகராட்சியில் போட்டியிட்ட 286 பேரில் 182 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் 45 வார்டுகளில் 3-வது வார்டு திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட பிரகாசை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க, பா.ம.க. நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அனைவரும் டெபாசிட் இழந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

    கடலூர் மாநகராட்சிக்கு மறுதேர்தல் நடத்த வேண்டும் என்றும், அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    கடலூர்:

    கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. கடந்த 19-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அன்று இரவு கடலூர் மஞ்சக்குப்பம் புனித வளனார் பள்ளி வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் 45 வார்டுகளிலும் பதிவான வாக்கு பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டன.

    அதிகாரிகள், வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்பாக அந்த அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து துப்பாக்கி ஏந்திய போலீசார் உள்பட 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    நேற்று காலை 8 மணிக்கு வாக்குபதிவு தொடங்கிய நிலையில் இந்த பாதுகாப்பு அறையை திறந்து வாக்கு எந்திரங்களை, வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்ல அதிகாரிகள் வேட்பாளர்கள், முகவர்கள் வந்தனர்.

    அப்போது அந்த பாதுகாப்பு அறையின் கதவில் பூட்டப்பட்டிருந்த பூட்டிற்கான சாவி தொலைந்து விட்டதாக ஊழியர்கள் கூறினர். இதனால் எந்திரம் மூலம் அந்த அறை பூட்டை அறுத்து கதவை திறந்து மின்னணு எந்திரங்களை வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு சென்றனர். இதனால் காலை 8.50 மணிக்கு பிறகு கடலூர் மாநாகராட்சி பகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை முடிவில் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளில் தி.மு.க. கூட்டணி 34 வார்டுகளிலும், அ.தி.மு.க. 6 வார்டுகளிலும், பா.ஜ.க., சுயேட்சைகள் 5 வாடுகளிலும் வெற்றி பெற்றனர்.

    இன்று கடலூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி. சம்பத் தலைமையில், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சேவல் குமார், மீனவர் அணி துணை செயலாளர் தங்கமணி மற்றும் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள், நிர்வாகிகள், அ.தி.மு.க. மகளிர் அணியை சேர்ந்தவர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கடலூர் திருப்பாதிரிபுலியூர் உழவர்சந்தை அருகே திரண்டனர்.

    பாதுகாப்பு அறையின் பூட்டை எந்திரம் மூலம் அறுத்து திறந்தது குறித்து அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கும், முகவர்களுக்கும் எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை. அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவெடுத்து அந்த அறையை திறந்துள்ளனர். நேற்றே இதற்கு அ.தி.மு.க. சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த பள்ளி வளாகத்தில் அதிகாரிகள் சிலர் ஒத்துழைப்போடு இரவு நேரத்தில் மர்ம நபர்கள் நுழைந்து வாக்கு எந்திரங்களை மாற்றியுள் ளனர்.

    எனவே கடலூர் மாநகராட்சிக்கு மறுதேர்தல் நடத்த வேண்டும் என்றும், அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து துணை போலீஸ்சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர் மற்றும் போலீசார் அந்த இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினரிடம் சமரச பேச்சுவார்த் தை நடத்தினர்.

    அப்போது திடீரென ஒரு பெண் மண்எண்ணை கேனுடன் போராட்டம் நடந்த இடத்தில் புகுந்தார். தன்மீது மண்எண்ணையை ஊற்றி தீ குளிக்கப்போவதாக ஆவேசத்துடன் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அ.தி.மு.க.வினரும், போலீ சாரும் அந்த பெண்ணை தடுத்து அவரிடம் இருந்த மண்எண்ணைகேனை பறித்து அப்புறப்படுத்தினர்.

    பின்னர் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றனர். அப்போது அ.தி.மு.க. வேட்பாளர்கள் தாங்கள் அனைவரையும் உள்ளே அனுதிக்கவேண்டும் என்று கேட்டனர். ஆனால் உங்கள் பிரதிநிதியாகத்தான் முன்னாள் அமைச்சர் உள்ளிட்டோர் கலெக்டரை சந்திக்கிறார்கள். 

    எனவே உங்களுக்கு அனுமதி இல்லை என்று போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பிறகு கலெக்டர் பாலசுப்பிரமணியத்தை சந்தித்து முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் தங்களது கோரிக்கை குறித்து எடுத்துரைத்தனர். அப்போது கலெக்டரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் மின்னணு எந்திரங்கள் மாற்றப்பட்டது, அதிகாரிகள் தன்னிச்சையாக அறையின் பூட்டை அறுத்து திறந்தது, கடலூர் மாநகராட்சியின் அனைத்து வார்டுகளுக்கும் மறுதேர்தல் நடத்தவேண்டும் உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளை குறிப்பிட்டிருந்தனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்தார். அ.தி.மு.க.வினர் நடத்திய இந்த திடீர் போராட்டத்தால் கடலூரில் பரபரப்பு ஏற்பட்டது.
    தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பூங்குழலி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளரை விட 1115 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

    பண்ருட்டி:

    பண்ருட்டி நகராட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 33 வார்டுகளில் தி.மு.க. கூட்டணி 24 வார்டுகளில் வெற்றி பெற்று உள்ளது. இதில் பண்ருட்டி நகராட்சி 7-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பூங்குழலி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளரை விட 1115 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

    இவர் இதன்மூலம் பண்ருட்டி நகராட்சி தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று கவுன்சிலராக ஆகியுள்ளார்.

    இதேபோல 20- வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட பிரபு என்கிற பிரபாகரன் 19 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.இதன் மூலம் இவர் பண்ருட்டி நகராட்சி தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தவராவார்.

    திட்டக்குடி அருகே தூங்கிய பெண்ணிடம் 7 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தொளார் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கரிகால்சோழன். இவர் தனியார் பால் கம்பெனியில் டிரைவாக உள்ளார். இவர் அன்றாடம் பணி முடிந்து இரவு 2 மணி அளவில் வீட்டுக்கு வருவது வழக்கம்.

    நேற்றிரவு இவரது மனைவி ரமாராணி (32) தனது 1 மாத கைக்குழந்தை மற்றும் கணவரின் அக்காள் மகள் அனுஷா ஆகியோருடன் வீட்டில் உறங்கி கொண்டிருந்தனர்.

    நள்ளிரவு சமயம் வீட்டின் பின்புறம் கடப்பாரை மூலம் கதவை உடைத்து நூதன முறையில் துணிகளைத் கிழித்து அதனை கதவின் சந்து வழியாக உள்ளே செலுத்தி தாழ்ப்பாளை மர்ம நபர்கள் கழட்டி உள்ளனர். பின் உள்ளே சென்ற மர்மநபர் ஒருவர் மட்டும் அங்கு உறங்கிக்கொண்டிருந்த ரமாராணி கழுத்திலிருந்த 7 பவுன் தாலி சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓட முயன்றார்.

    அதிர்ச்சி அடைந்த ரமாராணி நகையை கையில் பிடித்துள்ளார். இதில் சிறிதளவும் செயின் மட்டும் ரமாராணி கையில் உள்ளது. உடன் உறங்கிக் கொண்டிருந்த அனுஷா அணிந்திருந்த வெள்ளி செயின் ஒன்றையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர் . மர்ம நபர்கள் பயன்படுத்திய கடப்பாரை அவர்கள் அணிந்திருந்த ஆரஞ்சு கலர் மேல் சட்டை ஆகியவற்றை வீட்டின் பின்புறம் போட்டுவிட்டு சென்றுள்ளனர் . மர்மநபர்கள் பிடித்து இழுத்ததில் அனுஷா கழுத்தில் வலதுபுறம் காயம் ஏற்பட்டுள்ளது .

    பதறிபோன ராமராணி கைக்குழந்தையுடன் ரமாராணி தெருபகுதியில் வந்து நின்று கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆட்கள் வருவதை அறிந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இதுகுறித்து ஆவினங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    கடலூர் பாடலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணி கம்மியம் பேட்டையில் தொடங்கியது.
    கடலூர்:

    இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமாக கடலூர் மாவட்டத்தில் சுமார் 22 ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தை அளவீடு செய்து கல் நடும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.

    அந்த வகையில் கடலூர் பாடலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணி கம்மியம் பேட்டையில் தொடங்கியது. இதில் இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் அசோக்குமார் தலைமையில் உதவி ஆணையர் பரணிதரன், துறை செயற்பொறியாளர் கலையரசு, உதவி கோட்ட பொறியாளர் அசோகன், உதவி பொறியாளர் சிவசங்கரி, கோயில் செயல் அலுவலர் சங்கர் முன்னிலையில் கோவில் நிலம் அளவீடு செய்யும் பணி நடந்தது.

    பின்னர் சுமார் 2.5 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டு அதில் கல் நடும் பணி நடைபெற்றது. இதில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    கடலூர் மாநாகராட்சிக்கு மறுதேர்தல் நடத்த வேண்டும் என்றும், அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    கடலூர்:

    கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. கடந்த 19-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அன்று இரவு கடலூர் மஞ்சக்குப்பம் புனிதவளனார் பள்ளி வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் 45 வார்டுகளிலும் பதிவான வாக்குபதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டன.

    அதிகாரிகள், வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்பாக அந்த அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து துப்பாக்கி ஏந்திய போலீசார் உள்பட 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    நேற்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் இந்த பாதுகாப்பு அறையை திறந்து வாக்கு எந்திரங்களை, வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்ல அதிகாரிகள் வேட்பாளர்கள், முகவர்கள் வந்தனர்.

    அப்போது அந்த பாதுகாப்பு அறையின் கதவில் பூட்டப்பட்டிருந்த பூட்டிற்கான சாவி தொலைந்து விட்டதாக ஊழியர்கள் கூறினர். இதனால் எந்திரம் மூலம் அந்த அறை பூட்டை அறுத்து கதவை திறந்து மின்னணு எந்திரங்களை வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு சென்றனர். இதனால் காலை 8.50 மணிக்கு பிறகு கடலூர் மாநாகராட்சி பகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை முடிவில் மாநாகராட்சியில் உள்ள 45 வார்டுகளில் தி.மு.க. கூட்டணி 34 வார்டுகளிலும், அ.தி.மு.க. 6 வார்டுகளிலும், பா.ஜ.க., சுயேட்சைகள் 5 வாடுகளிலும் வெற்றி பெற்றனர்.

    இன்று கடலூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் தலைமையில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கடலூர் திருப்பாதிரிபுலியூர் உழவர்சந்தை அருகே திரண்டனர்.

    பாதுகாப்பு அறையின் பூட்டை எந்திரம் மூலம் அறுத்து திறந்தது குறித்து அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கும், முகவர்களுக்கும் எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை. அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவெடுத்து அந்த அறையை திறந்துள்ளனர்.

    எனவே கடலூர் மாநாகராட்சிக்கு மறுதேர்தல் நடத்த வேண்டும் என்றும், அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து போலீசார் அந்த இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அ.தி.மு.க.வினர் நடத்திய இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    அதிமுக சார்பில் போட்டியிட்ட கல்பனா 111 வாக்குகளும், பாமக சார்பில் போட்டியிட்ட கல்பனாவின் மகன் ஸ்ரீராம் 26 ஓட்டுகளும் பெற்று தோல்வி அடைந்தனர்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட 20 -வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளராக விருத்தாசலத்தை சேர்ந்த கல்பனா போட்டியிட்டார். இவரது மகன் ஸ்ரீராம் பா.ம.க. சார்பில் 21- வது வார்டில் போட்டியிட்டார்.

    நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கல்பனா 111 வாக்குகளும், பாமக சார்பில் போட்டியிட்ட கல்பனாவின் மகன் ஸ்ரீராம் 26 ஓட்டுகளும் பெற்று தோல்வி அடைந்தனர்.

    ×