என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    திட்டக்குடி அருகே தூங்கிய பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு

    திட்டக்குடி அருகே தூங்கிய பெண்ணிடம் 7 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தொளார் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கரிகால்சோழன். இவர் தனியார் பால் கம்பெனியில் டிரைவாக உள்ளார். இவர் அன்றாடம் பணி முடிந்து இரவு 2 மணி அளவில் வீட்டுக்கு வருவது வழக்கம்.

    நேற்றிரவு இவரது மனைவி ரமாராணி (32) தனது 1 மாத கைக்குழந்தை மற்றும் கணவரின் அக்காள் மகள் அனுஷா ஆகியோருடன் வீட்டில் உறங்கி கொண்டிருந்தனர்.

    நள்ளிரவு சமயம் வீட்டின் பின்புறம் கடப்பாரை மூலம் கதவை உடைத்து நூதன முறையில் துணிகளைத் கிழித்து அதனை கதவின் சந்து வழியாக உள்ளே செலுத்தி தாழ்ப்பாளை மர்ம நபர்கள் கழட்டி உள்ளனர். பின் உள்ளே சென்ற மர்மநபர் ஒருவர் மட்டும் அங்கு உறங்கிக்கொண்டிருந்த ரமாராணி கழுத்திலிருந்த 7 பவுன் தாலி சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓட முயன்றார்.

    அதிர்ச்சி அடைந்த ரமாராணி நகையை கையில் பிடித்துள்ளார். இதில் சிறிதளவும் செயின் மட்டும் ரமாராணி கையில் உள்ளது. உடன் உறங்கிக் கொண்டிருந்த அனுஷா அணிந்திருந்த வெள்ளி செயின் ஒன்றையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர் . மர்ம நபர்கள் பயன்படுத்திய கடப்பாரை அவர்கள் அணிந்திருந்த ஆரஞ்சு கலர் மேல் சட்டை ஆகியவற்றை வீட்டின் பின்புறம் போட்டுவிட்டு சென்றுள்ளனர் . மர்மநபர்கள் பிடித்து இழுத்ததில் அனுஷா கழுத்தில் வலதுபுறம் காயம் ஏற்பட்டுள்ளது .

    பதறிபோன ராமராணி கைக்குழந்தையுடன் ரமாராணி தெருபகுதியில் வந்து நின்று கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆட்கள் வருவதை அறிந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இதுகுறித்து ஆவினங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×