search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cuddalore padaleeswarar temple"

    வைகாசி பெருவிழாவையொட்டி கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் பந்தக்கால் நடும் விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதன்படி இந்த ஆண்டிற்கான வைகாசி பெருவிழா வருகிற 9-ந்தேதி (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    முன்னதாக வண்ணார மாரியம்மன் விழா, எல்லைக்கட்டுதல், விக்னேஸ்வர பூஜை, வீதி உலா காட்சி நடக்கிறது. இதையொட்டி நேற்று பந்தக்கால் நடும் விழா நடந்தது. தொடர்ந்து பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சூரிய பிரபை, சிம்மம், பல்லக்கு, பூத, காமதேனு, நாக வாகனத்தில் சாமி வீதி உலா நடக்கிறது. வருகிற 13-ந்தேதி அதிகாரநந்தி கோபுர தரிசனம், தெருவடைச்சான், 14-ந்தேதி யானை வாகனம், நால்வர் புறப்பாடு, வெள்ளி ரதம், இந்திர விமானம், 15-ந்தேதி கைலாச வாகனம், கோபுர தரிசனம், திருக்கல்யாணம், பரிவேட்டை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    16-ந்தேதி குதிரை வாகனத்தில் சாமி வீதி உலாவும், முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா வருகிற 17-ந்தேதியும் நடக்கிறது. அன்று காலை சாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடக்கும். தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் சாமி எழுந்தருளுவார். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுப்பார்கள். பின்னர் தேர் நிலையை வந்தடையும்.

    மறுநாள் (18-ந்தேதி) நடராஜர் தரிசனமும், தீர்த்தவாரியும், 19-ந்தேதி தெப்ப உற்சவமும், 20-ந்தேதி திருஞான சம்பந்தர் ஞானப்பால் உண்ட ஐதீகமும் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை தக்கார் ரேணுகாதேவி, செயல் அலுவலர் முத்துலட்சுமி மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா வருகிற 4-ந் தேதி(திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.
    சிவனுக்கு உகந்த சிவராத்திரி அன்று இரவு முழுவதும் விழித்திருந்து இறைவனை வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும். இதனால் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி அன்று சிவஸ்தலங்களில் விடியவிடிய சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

    அந்த வகையில், கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா வருகிற 4-ந் தேதி(திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.

    சிவராத்திரி அன்று இரவு பெரியநாயகி உடனுறை பாடலீஸ்வரருக்கு 4 காலமும் விசேஷ அபிஷேக பூஜைகளும், மறுநாள்(செவ்வாய்கிழமை) அதிகாலை 5 மணிக்கு அதிஉன்னத அதிகார நந்தி கோபுரதரிசனமும் நடைபெறுகிறது. இதுதவிர மாலை 5 மணி முதல் வாய்பாட்டு, மாணவ-மாணவிகளின் பரதநாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும், நள்ளிரவு 12.45 மணிக்கு ஓய்வுபெற்ற ஆசிரியர் கலியபெருமாளின் மகா சிவராத்திரி பெருமை என்ற ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மற்றும் தக்கார் ரேணுகாதேவி, செயல் அலுவலர் முத்துலட்சுமி மற்றும் கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
    வைகாசி பெருவிழாவையொட்டி கடலூர் பாடலீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பழமையும், பெருமையும் வாய்ந்த பாடலீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி பெருவிழா 13 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான வைகாசி பெருவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    வைகாசி பெருவிழாவின் 9-வது நாளான நேற்று காலையில் தேரோட்டம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், தீபாராதனையும் நடந்தது. பின்னர் பஞ்சமூர்த்திகளுக்கு அலங்காரமும் தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து பஞ்சமூர்த்தி சாமிகள், கோவிலை வலம் வந்து, வெளிமண்டபத்துக்கு வந்தனர். தொடர்ந்து மேளதாளங்கள், கைலாய வாத்தியங்கள் முழங்க பஞ்சமூர்த்தி சாமிகள் தேரை வந்தடைந்தனர்.

    பின்னர் தேரின் சக்கரங்களுக்கு பூஜைகள் நடந்தது. இதைத்தொடர்ந்து தேரோட்டத்தை சப்-கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.


    பாடலீசுவரர் கோவில் வைகாசி திருவிழாவில் நடந்த தேரோட்டத்தில், தேரில் எழுந்தருளுவதற்காக பஞ்ச மூர்த்திகள் கோவிலில் இருந்து ஊர்வலமாக வந்த போது எடுத்த படம்.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். அப்போது பக்தர்கள் பாடலீஸ்வரா, பரமேஸ்வரா என்ற பக்தி கோஷங்கள் முழங்க திருத்தேர் வலம் வந்தது. அலங்கரிக்கப்பட்ட பெரியதேரில் பிரியாவிடையுடன் பாடலீஸ்வரரும், சிறிய தேரில் அம்மனும், இன்னொரு தேரில் முருகப்பெருமானும் ராஜவீதிகளில் வலம் வந்தனர்.

    தேரடித்தெருவில் இருந்து புறப்பட்ட திருத்தேர், சுப்புராய செட்டித்தெரு, சங்கர நாயுடு தெரு, சஞ்சிவிநாயுடு தெரு, போடி செட்டித்தெரு வழியாக மதியம் ஒரு மணி அளவில் நிலையை வந்தடைந்தது. திருத்தேர் வலம் வந்த ராஜவீதிகளில் பக்தர்களுக்கு பல்வேறு அமைப்பினர் நீர், மோர் வழங்கினார்கள். தேரோட்டம் நடந்த போது கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

    தேரோட்டத்துக்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி ஆணையர் ரேணுகாதேவி, கோவில் செயல் அலுவலர்கள் முத்துலட்சுமி, நாகராஜன், கோவில் குருக்கள் நாகராஜ் மற்றும் கோவில் ஊழியர்கள், உபயதாரர்கள் செய்திருந்தனர்.
    கடலூரில் உள்ள பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    கடலூரில் உள்ள பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான வைகாசி பெருவிழா 20-ந்தேதி முதல் வருகிற 1-ந்தேதி வரை 13 நாட்கள் நடைபெற உள்ளது.

    இத்திருவிழா நேற்று காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக காலை 6 மணிக்கு பாடலீஸ்வரர்-பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், உற்சவர் பஞ்சமூர்த்திக்கு சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடந்தது. இதைத்தொடர்ந்து கொடிமரம் அருகில் உற்சவர் பஞ்சமூர்த்தி கொண்டு வரப்பட்டார். தொடர்ந்து காலை 8 மணிக்கு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு, உற்சவ மூர்த்திகளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதன்பிறகு ராஜவீதியில் இந்திர விமானத்தில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு உற்சவமூர்த்திகள் கோவிலை வந்தடைந்தனர். திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் பஞ்சமூர்த்திகள் வெவ்வேறு வாகனங்களில் ராஜவீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.

    5-ம் திருவிழாவான 24-ந்தேதி காலையில் அதிகார நந்தி தரிசனமும், இரவில் தெருவடைச்சான் நிகழ்ச்சியும் நடக்கிறது. 9-ம் திருவிழாவான 28-ந்தேதி காலை 9 மணி முதல் 10-30 மணிக்குள் தேரோட்டமும் நடக்கிறது.

    11-ம் திருவிழாவான 30-ந்தேதி இரவில் முருகப்பெருமான் சிவகரதீர்த்தக்குளத்தில் தெப்பத்தில் காட்சி தரும் நிகழ்ச்சியும், 31-ந்தேதி காலை திருஞானசம்பந்தர் ஞானப்பால் உண்ட ஐதீக நிகழ்ச்சியும், இரவில் திருஞானசம்பந்தர் திருக்கல்யாணம் மற்றும் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடக்கிறது. 1-ந்தேதி சண்டிகேசுவரர் வீதியுலாவுடன் விழா நிறைவடைகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி ஆணையர் ரேணுகாதேவி, கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி, நாகராஜ் குருக்கள் மற்றும் கோவில் ஊழியர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர். 
    கடலூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா வருகிற 20-ந்தேதி ( ஞாயிற்று கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    கடலூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி பெருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு திருவிழா வருகிற 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இதையொட்டி, நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஸ்ரீவண்ணாரமாரியம்மன் திருவிழா தொடங்குகிறது. இதையடுத்து 14-ந் தேதி இரவு 11 மணிக்கு எல்லை கட்டுதல் உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து 15-ந் தேதி பிடாரி அம்மன் காப்பு கட்டுதல் உற்சவமும் நடைபெறுகிறது. 18-ந் தேதி பிடாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், வீதிஉலாவும் நடக்கிறது.

    வருகிற 19-ந் தேதி விநாயகருக்கு ஒரு நாள் உற்சவம் நடைபெறுகிறது. பின்னர் பாடலீஸ்வரர் கோவிலில் 20-ந் தேதி வைகாசி பெருவிழா கொடியேற்றம் நடக்கிறது. இதையொட்டி அன்று காலை கோவில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகிறது. தொடர்ந்து பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள் கோவில் கொடிமரத்தில் பெருவிழா கொடி ஏற்றப்படுகிறது. விழாவை தொடர்ந்து தினமும் காலை, மாலை இருவேளைகளும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதிஉலா நடைபெறுகிறது.

    விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக 24-ந்தேதி அதிகாரநந்தி கோபுர தரிசன நிகழ்ச்சியும், இரவு தெருவடைச்சான் உற்சவமும், 26-ந்தேதி கைலாசவாகனம் கோபுர தரிசனமும், இரவு திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது.

    தொடர்ந்து 28-ந் தேதி விழாவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. 29-ந் தேதி காலை தீர்த்தவாரி உற்சவமும், இரவு முத்து பல்லக்கில் சாமி வீதிஉலாவும், 30-ந் தேதி இரவு முருகன் தெப்ப உற்சவமும், 31-ந் தேதி காலை திருஞானசம்பந்தர் ஞானப்பால் உண்ட ஐதீக நிகழ்ச்சியும், இரவு திருஞானசம்பந்தர் திருக்கல்யாண உற்சவமும், பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரேணுகாதேவி, செயல் அலுவலர் (கூடுதல் பொறுப்பு) முத்துலட்சுமி மற்றும் கோவில் பணியாளர்கள், சிவாச்சாரியார்கள் செய்து வருகின்றனர். 
    ×