என் மலர்
கோயம்புத்தூர்
- 3 நாட்களாக நாகராஜனின் வீட்டில் பெயிண்ட் அடிக்கும் பணியை மேற்கொண்டு வந்தனர்.
- நாகராஜன் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார்.
குனியமுத்தூர்,
கோவை குனியமுத்தூர் அருகே உள்ள சுகுணா புரத்தை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 50). இவர் தமிழ் புத்தாண்டையொட்டி தனது வீட்டில் பெயிண்ட் அடித்து புதுப்பித்தார். பெயிண்ட் அடிக்கும் வேலைக்காக செல்வபுரம் அசோக் நகரை சேர்ந்த சஞ்சீவ்குமார் (26), ராஜேஸ்வரி நகரை சேர்ந்த சூர்யா (24) ஆகியோர் வந்து இருந்தனர். அவர்கள் கடந்த 3 நாட்களாக நாகராஜனின் வீட்டில் பெயிண்ட் அடிக்கும் பணியை மேற்கொண்டு வந்தனர்.
சஞ்சீவ்குமார், சூர்யா ஆகியோர் பெயிண்ட் அடிக்கும் பணியை மேற்கொண்டு வந்தனர். அப்போது நாகராஜன் பொருட்கள் வாங்குவதற்காக வெளியே சென்றார். இதனை சாதகமாக பயன்படுத்திய சஞ்சீவ்குமார், சூர்யா ஆகியோர் வீட்டில் இருந்த 2 கிராம் கம்மல், 1 கிராம் மூக்குத்தி, வெள்ளி கொலுசு, பித்தளை குடம், ரூ.6,500 ரொக்க பணம் உள்ளபட ரூ. 15 ஆயிரம் மதிப்பிலான தங்கம், வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை திருடி வெளியே மறைத்து வைத்தனர்.
பின்னர் வழக்கம் போல மாலையில் வேலை முடிந்ததும் திருடிய பொருட்களை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றனர்.
தனது வீட்டில் உள்ள பீரோவை நாகராஜன் பார்த்த போது அதில் இருந்த நகை, பணம் ஆகியவை திருட்டு போயிருப்பது தெரியவந்தது.
இது குறித்து அவர் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சஞ்சீவ்குமார், சூர்யா ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் வேலைக்கு சென்ற வீட்டில் திருடியதை ஒப்புக் கொண்டனர். பின்னர் போலீசார் அவர்களிடம் இருந்த திருடப்பட்ட பொருட்களை மீட்டனர்.இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- கணேசன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
- தெய்வா சாணிப்பவுடரை குடித்து விட்டதாக கூறி மயங்கினார்.
கோவை,
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள சின்னவேடப்பட்டியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி தெய்வா (வயது 46). இவரது கணவர் கோவை மாநகர போலீசில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவர் சஸ்பெண்டு செய்யப் பட்டார்.
இதன் காரணமாக தெய்வா மிகுந்த மனவே தனை அடைந்து காணப் பட்டார். இதனால் அவரது உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டது.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த தெய்வா திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து சாணிப்பவுடரை கரைத்து குடித்தார். சிறிது நேரத்தில் அவர் வாந்தி எடுத்தார். இதனை பார்த்த கணேசன் என்ன ஆச்சு என்று கேட்டார் அதற்கு தெய்வா சாணிப்பவுடரை குடித்து விட்டதாக கூறி மயங்கினார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் தனது மனைவியை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் தெய்வா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பிரவீன் பாண்டியன் சூலூர் பிரிவில் உள்ள தனியார் நிறுவ னத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
- 3 பேர் மீது கொலை முயற்சி மற்றும் ஆள் கடத்தல் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
சூலூர்,
சூலூர் தாசில்தார் அலுவலகம் அருகே ஜி.கே.எஸ் நகரை சேர்ந்தவர் பிரவீன் பாண்டியன்.
இவர் சூலூர் பிரிவில் உள்ள தனியார் நிறுவ னத்தில் ஊழியராக பணி யாற்றி வருகிறார்.இவர் சம்பவத்தன்று தன்னுடன் பணிபுரியும் தனது நண்பர்களான ஹரி ஹரனுடன், சூலூர் படகுத்து றையில் அமர்ந்து பேசி கொண்டிருந்தார்.
அப்போது அங்கு 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று வந்தது. அவர்கள் பிரவீன் பாண்டியன் மற்றும் ஹரிஹரனிடம் பணம் கேட்டனர். அவர்கள் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல், அவர்கள் 2 பேரையும் தாக்கி, ஆட்டோவில் ஏற்றி கடத்தி சென்றனர்.
இந்த நிலையில் வேலைக்கு சென்ற அண்ணன் வெகுநேரமாக வராததால் சந்தேகம் அடைந்த பிரவீன் பாண்டியனின் சகோதரர் மோகன பாண்டியன் அவரை பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் ஹரிஹரன் மற்றும் பிரவீன் பாண்டியனை ஒரு கும்பல் சூலூர் பெரிய குளம் அருகே தாக்கி கொண்டிருப்பதாக தகவல் வந்தது.
அப்போது அங்கு 3 பேர் கத்தி, மரக்கட்டை இரும்பு உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி கொண்டிருந்தனர். இதையடுத்து மோகன பாண்டியன் விரைந்து சென்று, அந்த கும்பலை மடக்கி பிடித்து சூலூர் போலீசில் ஒப்படைத்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில், வாலிபர்களை தாக்கியது, சிங்காநல்லூர் கள்ளிமடை காமராஜர் நகரை சேர்ந்த ஹரிகிருஷ்ணன்(27), பள்ளபாளையம் கன்னியாத்தா தோப்பை சேர்ந்த மணி விக்னேஷ்(20), பீளமேட்டை சேர்ந்த பாலாஜி(24) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 3 பேர் மீதும் கொலை முயற்சி மற்றும் ஆள் கடத்தல் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- ஏப்ரல் 16-ந் தேதி ஒருங்கிணைந்த ராணுவத் தேர்வுகள் (தொகுதி-1) நடத்தப்படுகிறது.
- 162 அறை கண்காணிப்பாளர்கள் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை,
கோவையில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் ஒருங்கிணைந்த ராணுவத் தேர்வை 6 மையங்களில் 1,939 பேர் எழுத உள்ளனர் என்று கலெக்டர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஏப்ரல் 16-ந் தேதி ஒருங்கிணைந்த ராணுவத் தேர்வுகள் (தொகுதி-1) நடத்தப்படுகிறது. இத்தேர்வை, கோவை மாவட்டத்தில் 6 மையங்களில் 1,939 பேர் எழுகின்றனர்.
தேர்வைக் கண்காணிக்க மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய மாவட்ட ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர் மற்றும் கலெக்டர் தலைமையில், துணை கலெக்டர் நிலையில் இரண்டு உதவி ஒருங்கிணைப்பு மேற்பார்வை யாளர்கள், தாசில்தார் நிலையில் தலா ஒரு தேர்வு மைய ஆய்வு அலுவலர், துணை தாசில்தார் நிலையில் 8 தேர்வு மைய உதவி கண்காணிப்பாளர்கள், 162 அறை கண்காணிப்பாளர்கள் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், தேர்வைப் பார்வையிடும் வகையில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் செயலர் நிலையில் ஒரு அலுவலரும் நியமிக்கப்பட் டுள்ளார். அனைத்து தேர்வு மையங்களிலும் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வு மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரிய அதிகாரி களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. உக்கடம், காந்திபுரம், சிங்காநல்லூர், கவுண்டம்பாளைம், சூலூர் மற்றும் பொள்ளாச்சி பஸ் நிலையங்களில் இருந்து தேர்வு மையங்களுக்கு சிறப்பு பஸ் வசதிகள் ஏற் பாடு செய்யப்பட்டுள்ளன.
தேர்வர்கள் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் நுழைவு சீட்டுடன், தேர்வரின் புகைப்படத்துடன் கூடிய மத்திய, மாநில அரசுகளால் வழங்கப் பட்டுள்ள அடையாள அட்டை (ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பான்கார்டு, கடவுச்சீட்டு),ஒரு கடவுச்சீட்டு அளவு புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- ஆண்டுதோறும் வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.
- இறுதியாக 2012-ம் ஆண்டு ஜனவரி மாதம் மலர் கண்காட்சி நடத்தப்பட்டது.
கோவை,
கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில், 11 ஆண்டுக்கு பின், மீண்டும் மலர் கண்காட்சியை வருகிற ஆகஸ்டு மாதம் நடத்த பல்கலை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
முன்பு ஆண்டுதோறும் வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். உள்நாட்டில் அனைத்து ரக மலர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் மலர்கள் வரவழைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படும். இக்கண்காட்சியில் பல்வேறு அரிய மலர்களை காணமுடியும்.பல்கலைக்கழகத்தில் இறுதியாக 2012-ம் ஆண்டு ஜனவரி மாதம் மலர் கண்காட்சி நடத்தப்பட்டது. மலர் கண்காட்சி நடத்துவதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து அந்நிகழ்ச்சிக்கு அப்போதைய துணைவேந்தர்கள் பெரிதாக ஆர்வம் காட்டாமல் நிறுத்தப்பட்டது.
தற்போது மீண்டும் மலர் கண்காட்சி பிரமாண்டமாக நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
மலர் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கவும், மலர்கள் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இக்கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இந்நிகழ்ச்சிக்காக பல்கலைக்கழகத்தில் பல்ேவறு பணிகள் நடந்து வருகின்றன.
துணைவேந்தர் கீதா லட்சுமியிடம் கேட்டபோது பல்கலைக்கழகத்தில் வரும் ஆகஸ்டு மாதம் மலர் கண்காட்சி நடத்த திட்டமிட்டுள்ளோம். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன என்றார்.
- கமலேஷ் சேலம் மாவட்டம் மசக்காளியூரை சேர்ந்தவர்.
- உடலுக்கு ராணுவ வீரர்களும், முன்னாள் ராணுவத்தினரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
கோவை:
பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் உள்ள ராணுவ முகாமில் துப்பாக்கி சூடு நடந்தது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் பீரங்கி படைப் பிரிவை சேர்ந்த கமலேஷ்(வயது24), யோகேஷ் குமார்(24), சந்தோஷ் நகரல்(25) மற்றும் சாகர் பன்னே(25) ஆகியோர் உயிரிழந்தனர்.
இதில் கமலேஷ் சேலம் மாவட்டம் மசக்காளியூரை சேர்ந்தவர். கமலேசின் உடல் இன்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையம் கொண்டு வரப்பட்டது.
கோவை விமான நிலைய சரக்கு முனையத்தில் ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் கமலேசின் உடலை பெற்று கொண்டனர்.
பின்னர் கோவை விமான நிலைய சரக்கு முனையத்தில் கமலேஷின் உடலுக்கு ராணுவ வீரர்களும், முன்னாள் ராணுவத்தினரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் கோவையில் இருந்து ராணுவ வீரர் கமலேசின் உடல் அமரர் ஊர்தி மூலம் சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே பெரிய வனவாசி மசக்காளியூர் கிராமத்திற்கு சாலை மார்க்கமாக எடுத்து செல்லப்பட்டது.
கமலேசின் உடலை அடக்கம் செய்ய அவரது சொந்த கிராமத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
- பெண்கள், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் தான் நிலவி வருகிறது.
- பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை, ஊழல் பட்டியலை வெளியிட்ட பிறகுதான் அதுபற்றி கருத்து கூற முடியும்.
கோவை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு கோவை வந்தார். விமான நிலையத்தில் அவரை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, அம்மன் அர்ச்சுனன் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் திரண்டு வரவேற்றனர்.
பின்னர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை, ஊழல் பட்டியலை வெளியிட்ட பிறகுதான் அதுபற்றி கருத்து கூற முடியும். அரசுக்கு எதிராக குறைகளை எடுத்துரைத்தாலும், எதுவும் மக்களிடத்தில் செல்வதில்லை. சட்டமன்றத்தில் அ.தி.மு.க. சார்பில் மக்கள் குறைகளை எடுத்து கூறும் போது அதனை சட்டமன்ற குறிப்பில் இருந்து நீக்கி வெளியிடுகிறார்கள்.
என்னுடைய கருத்துக்களை சட்டசபையில் தெரிவிக்க சபாநாயகர் அனுமதி கொடுப்பதில்லை. தொடர்ந்து சட்டமன்றத்தில் இதற்கான குரலை எழுப்பி வருகிறோம். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரி இல்லை என பலமுறை கூறி உள்ளேன். சட்டம் - ஒழுங்கு தமிழகத்தில் அடியோடு கெட்டு விட்டது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை நடந்து கொண்டு வருகிறது.
விருத்தாசலம் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்த 13 மணி நேரத்துக்கு பிறகு தான் முதல் தகவல் அறிக்கையை போலீசார் பதிவு செய்துள்ளனர். ஆனால் சட்டசபையில் முதலமைச்சர், தகவல் கிடைத்த உடனேயே வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். ஆனால் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு அந்த எப்.ஐ.ஆர். போலீசாரால் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கடந்த காலங்களில் தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் அ.தி.மு.க. அரசால் கொடுக்கப்பட்டு வந்தது. தி.மு.க. எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் மின்சார தட்டுப்பாடு தமிழகத்தில் ஏற்படுகிறது. நிர்வாக திறமையின்மையே இதற்கு காரணம்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து பேசாமல் பழைய செய்திகள் குறித்து தி.மு.க. அரசு பேசி வருகிறது. தற்போது உள்ள பிரச்சினையை பேச வேண்டும். அதற்கு எப்படி தீர்வு காண வேண்டும் என்பது குறித்து பேச வேண்டும்.
தமிழகத்தில் எந்தெந்த பார்களில் விற்பனை அதிகமாக இருக்கிறதோ அந்தந்த பார்களை குறிப்பிட்ட சிலர் டெண்டர் எடுத்து 24 மணி நேரமும் மதுபான விற்பனையை செய்து வருகிறார்கள். எங்கள் அரசு இருக்கும் போது மதுபார்கள் செயல்பாட்டை கட்டுக்குள் வைத்திருந்தோம். ஆனால் இப்போது 24 மணி நேரமும் மதுபார்கள் செயல்படுகிறது.
அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை சரியில்லை என கூறி போலீசார் போராட்டம் நடத்தக் கூடிய நிலை தான் தமிழகத்தில் தற்போது இருந்து வருகிறது. தமிழகத்தில் ஜனநாயகம் சுத்தமாக இல்லாமல் போய் விடடது. பெண்கள், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் தான் நிலவி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ் மக்களுக்கு விவசாயத்தில் மிகவும் ஆழமான அனுபவம் உள்ளது.
- சிறுதானியங்கள் வளரும் இடத்தின் மண் வளமாகவே இருக்கும்.
கோவை:
ஈஷா நிறுவனர் சத்குரு வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தி பின்வருமாறு:
உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள். நம் தமிழ்க் கலாச்சாரத்தில், மண்ணை 'தாய் மண்' எனச் சொல்லுகிறோம். ஏனெனில், அந்தக் காலத்திலிருந்தே மண் நம் உயிருக்கு மூலமானது, நம் தாய் போல என்று உணர்ந்து, நாம் பல்லாயிரம் வருடங்களாக விவசாயம் செய்து வருகிறோம். தமிழ் மக்களுக்கு விவசாயத்தில் மிகவும் ஆழமான அனுபவம் உள்ளது. அப்படி இருப்பினும், கடந்த இருபது, முப்பது வருடங்களில் நம் மண்ணைக் காப்பாற்றாமல் விட்டுவிட்டோம்.
நம் மண்ணைக்காக்க, நாம் அனைவரும் கம்பு, வரகு, சாமை, ராகி உள்ளிட்ட சிறுதானியங்களை நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், சிறுதானியங்கள் வளரும் இடத்தின் மண் வளமாகவே இருக்கும்.
மேலும், தமிழ் என்பது வெறும் மொழி மட்டுமல்ல. இது ஒரு பெருமை, இது ஒரு திறமை. திறமை என்றால் ஏதோ ஒரு செயல் மட்டும் இல்லை. நாம் வாழும் முறையிலேயே நம் திறமை காட்டப்படவேண்டும். நம் தமிழ் கலாச்சாரத்தில், இலக்கியத்தில், எல்லா இடங்களிலும், சித்தர், யோகிகள் என இருந்தனர். உள்நிலையில் எப்படி இருக்கிறோம் என்பது முக்கியம் என்பதால், ஒரு ஊரை உருவாக்கும் முன்னரே அங்கு கோயிலை உருவாக்கினோம்.
பொருளாதாரம், குடும்ப வாழ்க்கை என எல்லாவற்றையும்விட முக்கியமானது நமது ஆன்மீகம். நாமே ஒரு கோயிலாக வாழவேண்டும் என்பதாலேயே, தமிழ்நாட்டின் குறியீடாக ஒரு கோயிலை வைத்துள்ளோம். இதுதான் தமிழ் கலாச்சாரம். இந்த தமிழ் புத்தாண்டில் உங்கள் அனைவருக்கும் எனது ஆசியும், வாழ்த்துக்களும்.
இவ்வாறு சத்குரு கூறி உள்ளார்.
- பஸ் நிலையங்களில் இன்று கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- விஷேச தினங்களில் கோவையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம்.
கோவை,
நாளை 14-ந் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. மேலும் அதன் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுைற வருகிறது.
இதன் காரணமாக கோவையில் தங்கி வேலை பார்த்து வரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இவர்கள் கோவையில் இருந்து செல்லும் பஸ்கள் மற்றும் ரெயில்களில் பயணிக்க தயாராகி வருகின்றனர்.
இதனால் பஸ் நிலையங்களில் இன்று கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஷேச தினங்களில் கோவையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், தமிழ்புத்தாண்டையொட்டி இன்று முதல் கோவையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, தேனி, ராஜபாளையம், தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு 110 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதேபோல கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில் இருந்து சேலம், ஈரோடு மார்க்கமாக பிற ஊர்களுக்கு செல்ல 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மொத்தமாக கோவையில் இருந்து 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
மேலும் பயணிகளின் வருகை ஏற்றபடி பஸ்களின்எண்ணிக்கை அதிகரிக்கவும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.
- கோவை விமான நிலையத்தில் வேலை வாங்கி தருகிறேன் என மணிகண்டன், ராதாகிருஷ்ணனிடம் தெரிவித்தார்.
- போலீசார் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை,
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(வயது59).
இவருக்கு கோவை நீலிகோனாம்பாளையம் மகாலட்சுமி நகரை சேர்ந்த மணிகண்டன் (42) என்பவர் அறிமுகம் ஆனார்.
ராதாகிருஷ்ணன் கோவை வந்த போது மணிகண்டனை சந்தித்து பேசினார். அப்போது அவர் தனது மகனுக்கு வேலை தேடி வருவதாக தெரிவித்தார்.
இதைக் கேட்ட மணிகண்டன் தனக்கு கோவை விமான நிலையத்தில் உயர் அதிகாரியுடன் நெருக்கமான பழக்கம் உள்ளது. சிலருக்கு நான் வேலை வாங்கித் கொடுத்து இருக்கிறேன்.
நீங்கள் பணம் கொடுத்தால் நான் கோவை விமான நிலையத்தில் வேலை வாங்கி தருகிறேன் என ஆசை வார்த்தை கூறினார்.
இதனை ராதாகிருஷ்ணனும் உண்மை என நம்பி கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் கடந்த ஜனவரி மாதம் வரை பல்வேறு தவணைகளில் ரூ.12.50 லட்சத்தை மணிகண்டனிடம் கொடுத்தார்.
பணத்தை பெற்று கொண்ட மணிகண்டன் கூறியபடி வேலையை வாங்கி கொடுக்கவில்லை. அது குறித்து கேட்டால் சரியாக பதில் சொல்லவும் இல்லை. இதனால் ராதாகிருஷ்ணன், தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டார். ஆனால் பணத்ைதயும் கொடுக்காமல் இழுத்தடித்து வந்தார்.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராதாகிருஷ்ணன் இதுகுறித்து பீளமேடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோவை டி.கே.மார்க்கெட்டிற்கு இன்று காலை முதலே பொதுமக்கள் அதிகமாக வந்தனர்.
- மல்லிப்பூ கிலோ ரூ.800க்கு விற்பனையானது.
கோவை,
நாளை தமிழ்புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. புத்தாண்டையொட்டி மக்கள் தங்கள் வீடுகளில் சாமி படங்களுக்கு மாலை அணிவித்து, கனிகள் உள்பட பல்வேறு பொருட்களை படைத்து சாமி கும்பிடுவது வழக்கம்.
இதையடுத்து பொதுமக்கள் மார்க்கெட்டுகளுக்கு சென்று பூஜைக்கு தேவையான பழம், பூக்கள் வாங்கி வருகின்றனர்.
கோவை டி.கே.மார்க்கெட்டிற்கு இன்று காலை முதலே பொதுமக்கள் அதிகமாக வந்தனர். அவர்கள் அங்கு புத்தாண்டுக்கு சாமி கும்பிடுவதற்கு தேவையான பழங்கள், காய்கனிகள் உள்ளிட்டவற்றை பார்த்து வாங்கினர்.
மேலும் பூஜைக்கு தேவையான பொருட்களையும் வாங்கி கொண்டனர்.
இதேபோல் கோவை பூமார்க்கெட்டில் காலை முதலே பூக்கள் விற்பனை களைகட்டியது. வழக்கத்தை விட இன்று மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மக்கள் தங்களுக்கு தேவையான பூக்களை தேர்ந்தெடுத்து வாங்கி சென்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
தமிழ்புத்தாண்டை யொட்டி கோவையில் பழங்கள், பூக்களின் விலையும் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக பூக்களின் விலை சற்று அதிகமாகவே காணப்பட்டது. மல்லிப்பூ கிலோ ரூ.800க்கு விற்பனையானது.
கோவை மார்க்கெட்டுகளில் விற்பனையாகும் பழங்கள் மற்றும் பூக்களின் விலை கிலோவில் வருமாறு:-
மாம்பழம்(செந்தூரம்)-ரூ.120, மல்கோவா மாம்பழம்-ரூ.180, சாத்துகுடி-ரூ.70, கொய்யா-ரூ.80, மாதுளை-ரூ.180, ஆரஞ்சு-ரூ.100, திராட்சை-ரூ.100, ஆப்பிள்-ரூ.200, அன்னாசி-ரூ.60, எலுமிச்சை-ரூ.120க்கு விற்பனையானது.
மல்லி பூ-ரூ.800, செவ்வந்தி-ரூ.320, தாமரை 1-ரூ.10, ரோஜா(ரெட்)-ரூ.160, ரோஜா(கலர்)-ரூ.240, அரளி-ரூ.320, சம்பங்கி-ரூ.240, முல்லை-ரூ.800, கனகாம்பரம்-ரூ.400, செண்டுமல்லி-ரூ.60க்கு விற்பனையாகி வருகிறது.
- நேற்றைய ஏலத்தில் நேந்திரன் வாழைத்தார் கிலோ ஒன்றுக்கு ரூ.15 முதல் 22 வரையும், கதளி கிலோ ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.40 வரையும் விற்பனையானது.
- நேந்திரன் வாழைக்கு போதிய விலை கிடைக்காத நிலையில் விவசாயிகள் அதனை கால்நடைகளுக்கு எடுத்து சென்று போடும் நிலையில் உள்ளது.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூர் செல்லும் சாலையில் தென்திருப்பதி நால்ரோடு பகுதியில் வாழைக்காய் ஏலம் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு மேட்டுப்பாளையம், அன்னூர், புளியம்பட்டி, சிறுமுகை, காரமடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த வாழைத்தார்களை கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.
அதனை உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர் வியாபாரிகளும் மொத்த விலைக்கு வாங்கி செல்வது வழக்கம். இம்மையத்தில் புதன், ஞாயிற்றுக்கிழமைகளில் ஏலம் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் நேந்திரன், கதளி, பூவன், தேன் வாழை, ரஸ்தாளி, ரோபஸ்டா, செவ்வாழை உள்ளிட்ட பல்வேறு வகை வாழைத்தார்கள் விவசாயிகளால் இந்த மையத்திற்கு கொண்டு வரப்பட்டன.
நேற்றைய ஏலத்தில் நேந்திரன் வாழைத்தார் கிலோ ஒன்றுக்கு ரூ.15 முதல் 22 வரையும், கதளி கிலோ ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.40 வரையும் விற்பனையானது. மேலும் பூவன் ரூ.500 வரையும், தேன் வாழை ரூ.600, ரஸ்தாளி ரூ.400, ரோபஸ்டா ரூ.400, செவ்வாழை ரூ.600 வரையும் ஏலம் போனது. குறிப்பாக நேந்திரன் விலை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கிலோ ஒன்றிற்கு ரூ.35 வரை விற்பனையான நிலையில் தற்போது கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனிடையே நேந்திரன் வாழைக்கு போதிய விலை கிடைக்காத நிலையில் விவசாயிகள் அதனை கால்நடைகளுக்கு எடுத்து சென்று போடும் நிலையில் உள்ளது. இதனால விவசாயிகள் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளனர்.
இதுகுறித்து ஏல மையத்தின் நிர்வாகிகள் சின்னராஜ் மற்றும் வெள்ளியங்கிரி கூறுகையில் நெல்லை, திருச்சி, கர்நாடக மாநிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கேரள வியாபாரிகள் நேரடியாக சென்று விவசாயிகளிடம் விலை பேசி எடுத்துச் செல்கின்றனர். இதனால் மேட்டுப்பாளையம், அன்னூர், புளியம்பட்டி, சிறுமுகை, காரமடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விளைவிக்கப்பட்ட நேந்திரன் வாழைத்தார்கள் வரத்து அதிகமாக இருந்தாலும் கடும் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. தற்போது கேரளா வியாபாரிகள் வருவதே இல்லை. இதனால் நேந்திரன் வாழைத்தாரின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதாக கூறினர்.






