என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • இளம்பெண்ணின் பெற்றோர் பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் அளித்தனர்.
    • 2 பெண்களை திருமணம் செய்த பிறகும் 3-வதாக ஒரு பெண்ணை கடத்திச் சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மானூரை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவர் பிளஸ்-2 வரை படித்து முடித்துவிட்டு பொள்ளாச்சி தொழிற்பேட்டையில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை செய்துவந்தார்.

    சம்பவத்தன்று வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த இளம்பெண் பீரோவில் இருந்த ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வங்கி புத்தகம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு மாயமானார். இதுகுறித்து இளம்பெண்ணின் பெற்றோர் பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் அளித்த னர்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இளம்பெண்ணுக்கு பொள்ளாச்சி கொள்ளுபாளையத்தை சேர்ந்த ஏற்கனவே 2 முறை திருமணமான 27 வயது வாலிபருடன் பழக்கம் இருந்தது தெரியவந்தது.

    இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. வாலிபரின் 2-வது மனைவி பிரசவத்திற்கு அவரது தாய் வீட்டிற்கு சென்று இருந்தார். அப்போது வாலிபர் இளம்பெண்ணை அவரது வீட்டுக்கே அழைத்து சென்று உல்லாசமாக இருந்தது தெரியவந்தது.

    தற்போது 2 பேரும் மாயமாகி விட்டனர். 2 பெண்களை திருமணம் செய்த பிறகும் 3-வதாக ஒரு பெண்ணை கடத்திச் சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • மழை காரணமாக கடந்த 6-ந் தேதி வால்பாறையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
    • மாணவியின் தந்தை அவரிடம் என்ன நடந்தது என்று விசாரித்தார்.

    கோவை:

    கோவை மாவட்டம் வால்பாறை பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    மாணவிக்கு அதே பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் மாணவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர்.

    மழை காரணமாக கடந்த 6-ந் தேதி வால்பாறையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அன்று மாணவியின் தாய் மற்றும் தந்தை வேலைக்கு சென்று விட்டனர். மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

    இதையறிந்த மாணவர், மாணவியின் வீட்டிற்கு சென்றார். தனியாக இருந்த மாணவியிடம் உன்னையே திருமணம் செய்து கொள்வேன் என ஆசைவார்த்தை கூறினார். பின்னர் மாணவியை அவர் பாலியல் பலாத்காரம் செய்தார். மாலையில் மாணவியின் தந்தை வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பினார். மாணவியின் தந்தை வருவதை பார்த்த மாணவர் வீட்டின் பின்புறமாக ஓடி தப்பிச் சென்றார். இதனை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். மகளை பார்த்தபோது அவர் பதட்டமாக இருந்தார்.

    மாணவியின் தந்தை அவரிடம் என்ன நடந்தது என்று விசாரித்தார். அதற்கு மாணவி தன்னுடன் படிக்கும் மாணவர் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக கூறி அழுதார்.

    இதுகுறித்து மாணவியின் தந்தை வால்பாறை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த மாணவரை கைது செய்தனர்.

    • கடந்த 2009-ம் ஆண்டு ஐ.பி.எஸ். தேர்ச்சி பெற்று காவல்துறை பணியில் இணைந்தார்.
    • திருவள்ளூரில் துணை கமிஷனராக பணியாற்றி இருக்கிறார்.

    கோவை:

    கோவை சரக டி.ஐ.ஜி.யாக பதவி வகித்து வந்த விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல் துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தற்கொலை செய்துகொண்ட டி.ஐ.ஜி. விஜயகுமார் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

    இவர் கடந்த 2009-ம் ஆண்டு ஐ.பி.எஸ். தேர்ச்சி பெற்று காவல்துறை பணியில் இணைந்தார். நெல்லை மாவட்டம் வள்ளியூரில் ஏ.டி.எஸ்.பி.யாக பணியாற்றினார். அப்போது அங்கு கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராட்டம் தொடங்கியுள்ளது. அங்கும் அவர் சிறப்பான பணியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

    பின்னர் திருவள்ளூரில் துணை கமிஷனராக பணியாற்றி இருக்கிறார்.

    தொடர்ந்து காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் சென்னை சி.பி.சி.ஐ.டி., திருவாரூர் போன்ற இடங்களிலும் போலீஸ் சூப்பிரண்டாகவும் பணியாற்றியுள்ளார். மேலும் இவர் நீட் தேர்வு மோசடி மற்றும் சிவசங்கர் பாபா வழக்குகளில் சிறப்பு விசாரணையும் நடத்தியுள்ளார்.

    சென்னையில் அண்ணா நகர் துணை கமிஷனராக பணியாற்றி வந்த இவருக்கு கடந்த ஜனவரி மாதம் தான் டி.ஐ.ஜியாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் கோவை சரக டி.ஐ.ஜி-யாக கடந்த ஜனவரி மாதம் 6-ந் தேதி கோவை சரக டி.ஐ.ஜி.யாக பதவியேற்றதும் குறிப்பிடத்தக்கது.

    • நிகழ்ச்சிக்கு தி.மு.க. கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமை தாங்கினார்.
    • 30 வகையான சீர்வரிசைகளும் வழங்கப்பட்டது.

    வடவள்ளி,

    தமிழகம் முழுவதும் இன்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இலவச திருமணங்கள் நடைபெற்றது.

    அதன் ஒரு பகுதியாக கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 23 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு தி.மு.க. கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமை தாங்கினார். இதில் கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 23 திருமண ஜோடிகள் பங்கேற்றனர். அவர்களுடன் அவர்களது உறவினர்களும் வந்திருந்தனர்.

    விழாவில், மணமகன்கள் மணப்பெண்களுக்கு தாலிகட்டி, குங்குமம் வைத்து விட்டனர். தொடர்ந்து அம்மி மிதித்து, மெட்டி அணிவித்தனர்.

    திருமணத்தையொட்டி மணமக்களுக்கு 1/2 பவுன் தங்கத்தில் தாலி, மற்றும் கட்டில் மெத்தை, பாத்திரங்கள் உள்பட 30 வகையான சீர்வரிசைகளும் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமேஷ் செய்திருந்தார்.

    இன்று நடந்த திருமணவிழாவில், வால்பாறை, பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 5 ஜோடிகளும், நீலகிரி மாவட்டத்தில் இருந்து 3 ஜோடிகளும். கோவையில் 15 ஜோடிகள் என மொத்தம் 23 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.

    • சம்பவத்தன்று மாலை மாணவி, டியூசன் செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளார்.
    • மாணவியின் பெற்றோர் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று மாலை மாணவி, டியூசன் செல்வதாக கூறி விட்டு சென்றவர் அதன்பின்னர் வெகுநேரமாகியும் திரும்ப வரவில்லை.

    இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில், மேட்டுப்பாளையம் அடுத்த காட்டூர் பகுதியில் மாணவி ஓட்டிச்சென்ற சைக்கிளும், நெல்லித்துறை சாலை ரெயில்வே கேட் அருகே உள்ள பவானியாற்று ெரயில்வே பாலத்தின் மேல் மாணவி அணிந்திருந்த துப்பட்டா மற்றும் காலணிகள் இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி. பாலாஜி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சைக்கிள், துப்பட்டா, காலணி ஆகியவற்றை மீட்டனர்.

    தொடர்ந்து மாணவியை பவானியாற்றில் காட்டூர் ெரயில்வே கேட் முதல் கரட்டுமேடு வரை தேடி பார்த்தனர். ஆனால் நேற்று மாலை வரை தேடியும் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை. இன்று காலை காவல்துறையினர் மீண்டும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து போலீசார் கூறும்போது, மாணவி காட்டூர் ெரயில்வே கேட் வழியாக டியூசன் செல்லும் பொழுது ஆற்றினை பார்க்க சென்றிருக்கலாம். அப்போது, தவறி ஆற்றில் விழுந்திருக்கலாமோ ? என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.

    இன்றும் தேடும் பணி நடந்து வருகிறது என்றனர். 

    • பேரிடர் மீட்புபணியினை மேற்கொள்ள மொத்தம் 106 பேர் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் தயார்நிலையில் உள்ளனர்.
    • மக்களை பத்திரமாக மீட்டு தங்க வைப்பதற்காக 10 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    வால்பாறை,

    கோவை மாவட்டம் வால்பாறையில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, கலெக்டர் கிராந்திகுமார் பாடி, பொள்ளாச்சி சப்-கலெக்டர் பிரியங்கா, உதவி காவல் கண்காணிப்பாளர் பிருந்தா, வால்பாறை நகராட்சி தலைவர் அழகு சுந்தரவள்ளி, நகர்மன்ற துணைத் தலைவர் ச.செந்தில் குமார், வட்டாட்சியர் அருள்முருகன், உள்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

    முன்னதாக, ஊமையான்டி முடக்கு பகுதியில் சாலையில் மரம் விழுந்ததையடுத்து நெடுஞ்சாலை துறையினரால் மரம் அகற்றப்பட்டு வருவதையும், வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக நிவாரண முகாமினையும், கூழாங்கல் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினையும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும், வால்பாறை நகராட்சி சமுதாய கூடத்தில் முகாமிட்டுள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினரை நேரில் பார்வையிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

    பின்னர் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் உத்தரவுப்படி, வால்பாறையில் மழை பாதிப்புகள் குறித்து இன்று நேரில் ஆய்வு செய்யப்பட்டது. வால்பாறை பகுதிகளில் கனமழை வரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள காரணத்தால், பேரிடர் ஏற்பட்டால் அதிலிருந்து மக்களை மீட்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மின்சாரத்துறை, தீயணைப்புத்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருகின்றன.

    தேவையான மீட்புக்கருவிகளும் தயார் நிலையில் உள்ளன. பேரிடர் மீட்புபணியினை மேற்கொள்ள, ஒரு துணை காவல் கண்காணிப்பாளர், ஒரு காவல் உதவி ஆய்வாளர், மீட்பு படையினர் 104 காவலர்கள் என மொத்தம் 106 பேர் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் தயார்நிலையில் உள்ளனர்.

    மழையினால் 6 இடங்களில் விழுந்த மரங்களையும், 2 இடங்களில் ஏற்பட்ட மண்சரிவையும், நெடுஞ்சாலைத்துறை மூலம் உடனடியாக அகற்றப்பட்டுள்ளன. சுகாதாரத்துறை சார்பில் மருத்துவமனையில் தேவையான மருத்துவர்கள், படுக்கைவசதிகள், மருந்துகளும் தயார் நிலையில் உள்ளன. மழையினால் பாதிக்கப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்களை பத்திரமாக மீட்டு தங்க வைப்பதற்காக 10 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து முன்னேற்ப்பாட்டு பணிகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரம் கன அடியாக உள்ளது.
    • தற்போதைய அணையின் நீர்மட்டம் 80 அடியில் உள்ளது.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டத்தில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு அணைகளுக்கும் தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    அதன் ஒருபகுதியாக காரமடை அருகே உள்ள பில்லூர் அணையின் மொத்த கொள்ளளவு 100 அடி ஆகும். கோவை,திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பில்லூர் அணை விளங்கி வருகிறது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான கேரள மாநிலம் அட்டப்பாடி மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அப்பர்பவானி, அவலாஞ்சி, குந்தா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இன்று காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரம் கன அடியாக உள்ளது. அதே நேரத்தில் நீர் வெளியேற்றம் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடியாக உள்ளது. இந்த நிலையில் பில்லூர் அணைப்பகுதியில் 1 மி.மீ மழையும்,கெத்தை பகுதியில் 2 மி.மீ,பரளி பகுதியில் 2 மி.மீ,அவலாஞ்சி பகுதியில் 144 மி.மீ மழையும், பதிவாகியுள்ளது.

    தொடர் மழையின் காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போதைய அணையின் நீர்மட்டம் 80 அடியில் உள்ளது. மேலும், அணையில் இருந்து மின் உற்பத்திக்காக வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் பவானி ஆற்றில் திறந்து விடப்படுவதால் பவானி ஆற்றின் இரு கரைகளையும் தொட்டவாறு தண்ணீர் நிரம்பி செல்கிறது.

    • முறையற்ற வகையில் பயணிப்பவர்களை கண்டறிந்து, அதிகாரிகள் மூலமாக அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
    • பதிவு செய்யாமல் சரக்குகளை ரெயிலில் கொண்டு சென்ற 105 பேரிடம் இருந்து ரூ55 ஆயிரத்து 283 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    கோவை,

    சேலம் ெரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட ரெயில் நிலையங்களில் நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டில் பயணச்சீட்டு வாங்காமல் பயணித்தவர்கள், முறையற்ற பயணம் மேற்கொண்டவர்களிடம் இருந்து ரூ.3.27 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு,

    சேலம் ரெயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் பயணச்சீட்டு இல்லாமல் ரெயிலில் பயணிப்பவர்கள், முறையற்ற வகையில் பயணிப்பவர்கள், பதவு செய்யாமல் சரக்குகளை ரெயிலில் கொண்டு செல்பவர்களைக் கண்டறிந்து, ரெயில்வே பரிசோதனை அதிகாரிகள் மூலமாக அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி, 2023 ஆம் ஆண்டு நடப்பு காலாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரை, சேலம் கோட்டத்துக்கு உள்பட்ட ரயில் நிலையங்களில், பயணச்சீட்டு இல்லாமல் பயணித்த 31 ஆயிரத்து 475 பேரிடம் இருந்து ரூ.2 கோடியே 43 லட்சத்து 9 ஆயிரத்து 875 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. முறையற்ற பயணம் மேற்கொண்டதாக 16 ஆயிரத்து 515 பேரிடம் இருந்து ரூ.83 லட்சத்து 59 ஆயிரத்து 362 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யாமல் சரக்குகளை ரெயிலில் கொண்டு சென்ற 105 பேரிடம் இருந்து ரூ55 ஆயிரத்து 283 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    மொத்தமாக, இந்தாண்டின் முதல் காலாண்டில் ரூ.3 கோடியே 27 லட்சத்து 24 ஆயிரத்து 520 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கபட்டுள்ளது.

    • செம்மொழி பூங்கா ரூ.172 கோடியில் அமைய உள்ளது.
    • 18 மாதத்தில் இத்திட்டப்பணி நிறைவுபெறும்.

    கோவை,

    கோவை மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவையில் தென்ேமற்கு பருவமழை துவங்கியுள்ளதால், டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல்களை உருவாக்கும் கொசு ஒழிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முன்பு, வார்டு தோறும் இப்பணியில் 6 ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர்.

    இது, தற்போது 10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. டெங்கு கொசு ஒழிப்புக்கு தேவையான மருந்து உள்ளிட்ட உபகரணங்கள் போதுமான அளவு இருப்பு உள்ளது. கணபதி, பீளமேடு, செட்டி வீதி போன்ற பகுதிகளில் டெங்கு கொசு பரவல் அதிகம் உள்ளது. இதை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மாநகரில் பாதாள சாக்கடை பணி நிறைவு பெற்ற இடங்களில் தார்ச்சாலை புதுப்பிப்பு பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. முதல் கட்டமாக, வார்டு தோறும் 50 சதவீத தார்ச்சாலைகளை புதுப்பிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கான பணி நடந்து வருகிறது.

    கோவை மாநகரில் தெருநாய் பெருக்கத்தை கட்டுப்படுத்த, அவற்றை பிடித்து குடும்ப கட்டுப்பாடு செய்யும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. கடந்த 10 நாட்களில் 500 தெருநாய்கள் பிடிக்கப்பட்டு, குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது. அடுத்த 2 மாதத்தில் 5 ஆயிரம் தெருநாய்களை பிடித்து குடும்ப கட்டுப்பாடு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஆர்.எஸ்.புரம் புரூக் பீல்டு சாலை, மேட்டுப்பாளையம் ரோடு, கவுண்டம்பாளையம் ரோடு. ரத்தினபுரி, தடாகம் ரோடு-டி.பி.ரோடு சந்திப்பு, சிங்காநல்லூர் காமராஜர் ரோடு உள்ளிட்ட மழைநீர் அதிகம் தேங்கும் இடங்களை கண்டறிந்து, ரூ.12.63 கோடியில் மழைநீர் வடிகால் கட்டுமான பணி மிக விரைவில் தொடங்க உள்ளது.

    காந்திபுரம் சத்தி ரோட்டில் உள்ள ஆம்னி பஸ்நிலையம் ரூ.3.5 கோடியில் புனரமைக்கப்பட உள்ளது. சரவணம்பட்டியில் சுமார் 1 ஏக்கர் நிலத்தில் ரூ.1.2 கோடியில் "சயின்ஸ் பார்க்" கட்டப்பட உள்ளது. பீளமேடு டைடல் பார்க் பகுதியில் ரூ.15 கோடியில் தார்ச்சாலை, பூங்கா, நடைபாதை உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. கோவையில் உள்ள குளங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, குளக்கரையில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் நடந்து வருகிறது.

    ஏற்கனவே, 2 இடங்களில் இப்பணி நிறைவடைந்துள்ளது. இன்னும் 4 இடங்களில் இப்பணி நடந்து வருகிறது. ஆர்.எஸ்.புரம் பூமார்க்கெட் உள்பட நகரில் பல்வேறு இடங்களில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கான பணியும் நடந்து வருகிறது.

    கோவை மத்திய சிறைவளாகத்தில், உலகத்தமிழ் செம்மொழி பூங்கா செம்மொழி மாநாடு நினைவாக, செம்மொழி பூங்கா ரூ.172 கோடியில் அமைய உள்ளது. இதற்கான டெண்டர் கடந்த மாதம் 28ம் தேதி விடப்பட்டது.

    தற்போது தொழில் நுட்ப ரீதியிலான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இம்மாதம் இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாதம், முதல் வாரத்தில் இத்திட்டப்பணி தொடங்கும். இதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார்.

    இப்பூங்கா பல்வேறு அடுக்குகளாக மிக பிரம்மாண்டமான முறையில், சர்வதேச தரத்தில் அமைய உள்ளது. 18 மாதத்தில் இத்திட்டப்பணி நிறைவுபெறும். இது, கோவையின் மற்றொரு அடையாளமாக இருக்கும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவில் கைகொடுக்கவில்லை. அதனால், சிறுவாணி அணையில் நீர் இருப்பு போதுமான அளவு இல்லை.

    ஆனாலும், சிறுவாணி பயன்பாட்டாளர்களுக்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, மாநகராட்சி தெற்கு மண்டல பகுதிகளில் பில்லூர் குடிநீர் திட்டக்குழாய் இணைப்பு இல்லாத இடங்களுக்கு சிறுவாணி மற்றும் ஆழியார் குடிநீர் தடையின்றி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு கமிஷனர் மு.பிரதாப் கூறினார்.

    • காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வரவே, அவர்கள் பெண்ணை கண்டித்தனர்.
    • இளம்பெண்ணின் பெற்றோர் செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    கோவை,

    கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் 20 வயது பெண். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் செல்போனில் பேசியும் நேரில் சந்தித்தும் தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வரவே, அவர்கள் கண்டித்துள்ளனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று இளம் பெண்ணை வீட்டில் காணவில்லை. உடனடியாக அக்கம் பக்கத்தினர் உறவினர் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடினர். அப்போது வீட்டில் இளம்பெண் தன் கைப்பட எழுதியிருந்த கடிதம் கிடைத்தது.

    அதில் தன்னை தேட வேண்டாம் என்று எழுதியிருந்தது. இதையடுத்து இளம்பெண்ணின் பெற்றோர் செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பெண்ணை தேடி வருகிறார்கள்.

    • மன உளைச்சல் காரணமாக டி.ஐ.ஜி. விஜயகுமார் வீட்டிலேயே முடங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
    • பிறந்தநாள் விழாவில் டி.ஐ.ஜி. விஜயகுமார் பங்கேற்று துணை கமிஷனர் மகனுக்கு பரிசுப்பொருள் வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    டி.ஐ.ஜி. விஜயகுமார் தான் தங்கியிருக்கும் முகாம் அலுவலகத்தில் தினமும் அதிகாலை வேளையில் நடைபயிற்சி செய்வது வழக்கம்.

    ஆனால் கடந்த 3 நாட்களாக அவர் நடைபயிற்சி செய்வதை தவிர்த்துள்ளார். மன உளைச்சல் காரணமாக அவர் வீட்டிலேயே முடங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இன்று காலையும் அவர் நடைபயிற்சி செய்யாமல் இருந்துள்ளார்.

    டி.ஐ.ஜி. விஜயகுமார் நேற்று மாலை கோவையில் நடந்த பிறந்தநாள் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார். இது தான் அவர் பங்கேற்ற கடைசி நிகழ்ச்சியாகும்.

    கோவை மாநகர வடக்கு போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றும் சந்தீசின் மகன் பிறந்தநாள் விழா நேற்று மாலை நடந்தது. இந்த விழாவில் பங்கேற்க டி.ஐ.ஜி. விஜயகுமாருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி பிறந்தநாள் விழாவில் டி.ஐ.ஜி. விஜயகுமார் பங்கேற்று துணை கமிஷனர் மகனுக்கு பரிசுப்பொருள் வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    விழாவில் அவர் அமைதியாக, இறுக்கமான மனநிலையிலேயே இருந்ததாக பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற போலீசார் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்தே இன்று காலை டி.ஐ.ஜி. தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    • கடந்த 2009-ம் ஆண்டு ஐ.பி.எஸ். பணியில் சேர்ந்த விஜயகுமார் மிகவும் திறமையான அதிகாரி.
    • டி.ஐ.ஜி. தற்கொலையில் அரசியல் செய்ய வேண்டாம்.

    கோவை:

    கோவையில் தற்கொலை செய்து கொண்ட டி.ஐ.ஜி விஜயகுமார் உடலுக்கு ஏ.டி.ஜி.பி. அருண் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

    கடந்த 2009-ம் ஆண்டு ஐ.பி.எஸ். பணியில் சேர்ந்த விஜயகுமார் மிகவும் திறமையான அதிகாரி. அர்ப்பணிப்புடன் தனது வேலையை செய்து வந்தவர் ஆவார். அவர் தற்கொலை செய்து கொண்டது எங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது.

    அவரது தற்கொலை தொடர்பாக நடத்திய விசாரணையில், அவர் கடந்த 2 ஆண்டுகளாக மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.

    இதற்காக தொடர்ந்து டாக்டரிடம் சிகிச்சையும் பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மிகுந்த மன அழுத்தத்தில் அவர் இருந்ததாக தெரிகிறது.

    இதனை அறிந்ததும் அவரது மனைவி கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் சென்னையில் இருந்து உடனே கோவைக்கு வந்து கணவருடன் தங்கி உள்ளார். அவரிடம் ஐ.ஜி. உள்பட உயர் அதிகாரிகளும் பேசி அவரை மன அழுத்தத்தில் இருந்து மீட்க அறிவுரைகளை வழங்கினர்.

    ஆனாலும் அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டு விட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கு பணிச்சுமையோ, குடும்ப பிரச்சினையோ காரணம் இல்லை. மன அழுத்தத்தாலேயே அவர் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலையில் அரசியல் செய்ய வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×