search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பில்லூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு
    X

    பில்லூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு

    • அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரம் கன அடியாக உள்ளது.
    • தற்போதைய அணையின் நீர்மட்டம் 80 அடியில் உள்ளது.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டத்தில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு அணைகளுக்கும் தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    அதன் ஒருபகுதியாக காரமடை அருகே உள்ள பில்லூர் அணையின் மொத்த கொள்ளளவு 100 அடி ஆகும். கோவை,திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பில்லூர் அணை விளங்கி வருகிறது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான கேரள மாநிலம் அட்டப்பாடி மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அப்பர்பவானி, அவலாஞ்சி, குந்தா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இன்று காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரம் கன அடியாக உள்ளது. அதே நேரத்தில் நீர் வெளியேற்றம் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடியாக உள்ளது. இந்த நிலையில் பில்லூர் அணைப்பகுதியில் 1 மி.மீ மழையும்,கெத்தை பகுதியில் 2 மி.மீ,பரளி பகுதியில் 2 மி.மீ,அவலாஞ்சி பகுதியில் 144 மி.மீ மழையும், பதிவாகியுள்ளது.

    தொடர் மழையின் காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போதைய அணையின் நீர்மட்டம் 80 அடியில் உள்ளது. மேலும், அணையில் இருந்து மின் உற்பத்திக்காக வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் பவானி ஆற்றில் திறந்து விடப்படுவதால் பவானி ஆற்றின் இரு கரைகளையும் தொட்டவாறு தண்ணீர் நிரம்பி செல்கிறது.

    Next Story
    ×