என் மலர்
செங்கல்பட்டு
- தமிழகத்தில் புராதன நினைவு சின்னங்கள், இயற்கை எழில் சூழ்ந்த மலை வாழிடங்கள், அருவிகள் உள்ளிட்ட சுற்றுலா பகுதிகள் நிறைந்து உள்ளன.
- பதிவு செய்ய தவறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் எச்சரித்து உள்ளார்.
மாமல்லபுரம்:
தமிழகத்தில் புராதன நினைவு சின்னங்கள், இயற்கை எழில் சூழ்ந்த மலை வாழிடங்கள், அருவிகள் உள்ளிட்ட சுற்றுலா பகுதிகள் நிறைந்து உள்ளன. இவற்றை கண்டுகளிக்க ஆண்டுதோறும் ஏராளமான வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் வருகின்றனர். இப்படி வரும் சுற்றுலா பயணிகளில் பாதுகாப்பு மற்றும் அவர்களின் நலன் கருதி சுற்றுலாத்துறை அனுமதியுடன் உண்டு உறைவிடம் நடத்துபவர்கள், சாகச சுற்றுலா நடத்துபவர்கள், முகாம் நடத்துபவர்கள், கேரவன் பார்க் சுற்றுலா நடத்துபவர்கள் என தனியார் நிறுவனத்தினர் பலர் இந்த பணிகளை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அத்தகைய நிறுவனங்கள் செயல்பாட்டிற்கு தமிழக அரசு வழிகாட்டி நெறிமுறைகளை கடந்த ஆண்டு அறிவித்து, தற்போது அவை நடைமுறையில் உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மாமல்லபுரம் உள்ளிட்ட பல இடங்களில் சுற்றுலா முகவர் பிரிவுக்கு உட்பட்டோர் வழிகாட்டு நெறிமுறைகளின்படி சுற்றுலாத்துறையில் முறையாக பதிவு செய்யாமல் இயங்குவதும் சுற்றுலாத்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
எனவே வருகிற 31-ந்தேதிக்குள் www.tntourismtors.com என்ற இணைய தளத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், தனியார் சுற்றுலா நிறுவனத்தினர் பதிவு செய்ய வேண்டும் என்றும், பதிவு செய்ய தவறினால் அந்த நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் எச்சரித்து உள்ளார்.
- தமிழர் பாரிம்பரிய சித்த மருத்துவங்கள் குறித்து கலெக்டர் கேட்டறிந்தார்.
- விழாவில் திருப்போரூர் எம்.எல்.ஏ பாலாஜி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அரசு மருத்துவமனை ஆயுஷ் சித்தா பிரிவு சார்பில், 6வது தேசிய சித்த மருத்துவ தினம் கொண்டாடப்பட்டது., செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். பின்னர் அங்கிருந்த மூலிகை செடிகளின் கண்காட்சி, ஊட்டச்சத்து உணவு, மருத்துவ உபகரணங்கள், சித்தர் சிலைகள், கொரோனா தடுப்பு மருந்து, நோய் எதிர்ப்பு சக்தி நடவடிக்கை குறித்த வரைபடங்கள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு தமிழர் பாரிம்பரிய சித்த மருத்துவங்கள் குறித்து கேட்டறிந்தார்.
விழாவில் திருப்போரூர் எம்.எல்.ஏ பாலாஜி, மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்தராவ், காஞ்சிபுரம் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் அய்யாசாமி, மாமல்லபுரம் ஆயுஷ் சித்தா பிரிவு மருத்துவர் வானதி நாச்சியார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- சிறிது தூரம் ஆட்டோ சென்றதும் நான்கு வாலிபர்களும் சேர்ந்து திடீரென டிரைவர் ராஜாவை சரமாரியாக தாக்கினர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
தாம்பரம்:
சேலையூரை அடுத்த அகரம்தென் பகுதியை சேர்ந்தவர் ராஜா. ஆட்டோ டிரைவர். நேற்று இரவு இவரை 4 வாலிபர்கள் சவாரிக்கு அழைத்தனர். சிறிது தூரம் ஆட்டோ சென்றதும் நான்கு வாலிபர்களும் சேர்ந்து திடீரென டிரைவர் ராஜாவை சரமாரியாக தாக்கினர்.
பின்னர் அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.2500-யை பறித்து தப்பி சென்றுவிட்டனர். இந்த தாக்குதலில் ராஜாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து அவர் சேலையூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- இன்று காலை அவர் வீட்டில் உள்ள அறையில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கிடந்தார்.
- சேலையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாம்பரம்:
தாம்பரம் அடுத்த இரும்புலியூர், ஏரிகரை தெருவை சேர்ந்தவர் வெங்கடேச பெருமாள் என்கிற ஆகாஷ்(வயது22). இவர் வீட்டிலேயே அங்காள பரமேஸ்வரி கோவில் கட்டி அதில் பூசாரியாக இருந்து வந்தார்.
இன்று காலை அவர் வீட்டில் உள்ள அறையில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கிடந்தார். அவரது தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. இதுகுறித்து சேலையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சூட்கேசில் வெடிகுண்டு இருக்குமோ? என்று அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- கடலில் விழுந்து யாரேனும் தற்கொலை செய்தனரா? என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம், ஒத்தவாடை தெருவில் உள்ள கடற்கரை அருகே உள்ள கோயில் பகுதியில் நேற்று இரவு மர்ம சூட்கேஸ் ஒன்று நீண்ட நேரமாக கேட்பாரற்று கிடந்தது.
இதனை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சூட்கேசில் வெடிகுண்டு இருக்குமோ? என்று அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்த மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று மர்ம சூட்கேசை கைப்பற்றி பத்திரமாக போலீஸ் நிலையம் எடுத்து சென்றனர்.
இன்ஸ்பெக்டர் ருக்மாந்தகன் மற்றும் போலீசார் சூட்கேசை திறந்து சோதனை செய்தபோது அதில், குத்துவிளக்கு, குடை, கல்லூரி சான்றிதழ், குங்குமம், குழந்தைகள் நோட்டு என வீட்டு உபயோக பொருட்கள் இருந்தன.
இதனை விட்டு சென்றது யார்? இந்த சூட்கேஸ் எப்படி இங்கு வந்தது? எதற்காக விட்டு சென்றனர்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடலில் விழுந்து யாரேனும் தற்கொலை செய்தனரா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.
- அமீஷாகுமாரி ரீல்ஸ் செய்து பிரபலமாக உள்ளார். அவரது வீடியோவை பார்க்க தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.
- ரீல்ஸ் மூலமாக கிடைக்கும் வருமானம் போதுமானதாக இல்லை. எனவே ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு திருடினேன். திருடிய பணம் முழுவதையும் செலவு செய்துவிட்டேன் என்று கூறி உள்ளார்.
தாம்பரம்:
தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூர் புத்தர் நகரைச் சேர்ந்தவர் சபாபதி. இவரது மனைவி மாலதி. இருவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
கடந்த வாரம் தம்பதி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று இருந்தனர். மாலதி திரும்பி வந்தபோது வீட்டில் இருந்த 3 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் மாயமாகி இருந்தது. ஆனால் வீட்டின் பூட்டு உடைக்கப்படவில்லை. வீட்டின் அருகே மறைத்து வைத்திருந்த சாவியை நோட்டமிட்டு கைவரிசை காட்டி இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து பீர்க்கன்காரணை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் கொள்ளை நடந்த வீட்டின் அருகே உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
இதில் ஜீன்ஸ் பேண்ட், டி-சர்ட் அணிந்த இளம்பெண் பதிவு எண் இல்லாத மோட்டார் சைக்கிளில் செல்வது பதிவாகி இருந்தது. இதைத்தொடர்ந்து அந்த இளம்பெண் குறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள மொத்தம் 47 கண்காணிப்பு கேமிராக்களின் பதிவுகளை வைத்து விசாரித்தனர். இதில் அவர், மண்ணிவாக்கம் பகுதியில் வசித்து வரும் சமூகவலைதளத்தில் ரீல்ஸ் செய்து பிரபலமாக உள்ள அமீஷாகுமாரி (33) என்பது தெரிந்தது.
இதைதொடர்ந்து அமீஷா குமாரியின் வீட்டுக்கு போலீசார் சென்றனர். அப்போது அவர் சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதற்காக ரீல்ஸ் செய்து கொண்டிருந்தார். நகை திருட்டு சம்பந்தமாக விசாரிக்க வேண்டும் என்று போலீசார் கூறியதும் அமீஷாகுமாரி ஆவேசம் அடைந்தார்.
நான் திருடவில்லை என்றும், சமூகவலைதளத்தில் ரீல்ஸ் செய்து மாதம் ரூ.15 ஆயிரத்துக்கும் மேலாக சம்பாதிக்கிறேன்.எனக்கு திருட வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார்.
இதனால் விசாரணைக்கு சென்ற போலீசார் ஒரு நிமிடம் திகைத்தனர். தவறாக சந்தேகப்பட்டு விட்டோமோ என்று நினைத்தனர்.
எனினும் கண்காணிப்பு கேமிரா காட்சியை காட்டி அமீஷாகுமாரியிடம் போலீசார் கிடுக்கிப்பிடியாக விசாரித்தபோது அவர் வீடு புகுந்து நகை திருடியதை கொண்டார். இதையடுத்து அமீஷாகுமாரியை போலீசார் கைது செய்தனர்.
திருடிய நகையை அவரது வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியில் மறைத்து வைத்து இருந்தார். அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். பணம் குறித்து கேட்ட போது அனைத்தையும் செலவு செய்து விட்டதாக தெரிவித்தார். போலீசாரிடம் அமீஷாகுமாரி கூறும்போது, ரீல்ஸ் மூலமாக கிடைக்கும் வருமானம் போதுமானதாக இல்லை. எனவே ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு திருடினேன். திருடிய பணம் முழுவதையும் செலவு செய்துவிட்டேன் என்று கூறி உள்ளார்.
வீடுகளை பூட்டி செல்லும் போது சாவியை வீட்டின் அருகே மறைத்து வைத்து செல்லும் இடங்களை நோட்டமிட்டு அமீஷாகுமாரி கைவரிசை காட்டி உள்ளார். போலீசில் சிக்காமல் இருப்பதற்காக கொள்ளையடிக்க சென்ற போது தனது மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை கழற்றி வைத்து உள்ளார். எனினும் போலீசார் அப்பகுதியில் உள்ள 47 கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து அமீஷாகுமாரிவை கைது செய்தனர்.
அமீஷாகுமாரி ரீல்ஸ் செய்து பிரபலமாக உள்ளார். அவரது வீடியோவை பார்க்க தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அவரது சமூக வலைதள பக்கத்தை ஏராளமானோர் பின் தொடர்கிறார்கள். வித விதமாக ரீல்ஸ் செய்தும் எதிர்பார்த்த பணம் கிடைக்காததால் அவர் தடம் மாறி கொள்ளையில் ஈடுபட்டு உள்ளார். அமீஷாகுமாரி ஏற்கனவே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக சாலையில் நின்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடி ஆன்லைனில் விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப் பட்டவர் என்று போலீசார் தெரிவித்தனர். அவர் இது போல் வேறு எந்தெந்த இடங்களில் கைவரிசை காட்டி உள்ளார் என்பது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அனைத்து பகுதிகளிலும் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கின்ற வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் உத்தரவின் பேரில் 10 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
- தனிப்படை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கஞ்சா, குட்கா கடத்தல் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் மொத்தம் 84 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு நகரம், செங்கல்பட்டு தாலுக்கா, பாலூர், திருப்போரூர், கேளம்பாக்கம், மானாமதி, மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், சட்ராஸ், செய்யூர், சித்தாமூர், அச்சிறுபாக்கம், மேல்மருவத்தூர், படாளம் மற்றும் சாலவாக்கம் ஆகிய போலீஸ் நிலையங்கள் உள்ளன.
மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கின்ற வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் உத்தரவின் பேரில் 10 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
அதன்படி தனிப்படை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கஞ்சா, குட்கா கடத்தல் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் மொத்தம் 84 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விமல்குமார் வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென விஷம் குடித்து மயங்கினார்.
- மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த குழிப்பாந்தண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் கேசவன்.இவரது மகன் விமல்குமார் (வயது22). கடந்த சில நாட்களாக மனவேதனையில் இருந்த விமல்குமார் வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென விஷம் குடித்து மயங்கினார். உடனடியாக அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே விமல்குமார் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சோத்துப்பாக்கத்தை சேர்ந்தவர் அசோக் குமார். தனது இருசக்கர வாகனம் திருடப்பட்டதாக அச்சரப்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.
- அச்சரப்பாக்கம் மற்றும் மேல்மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
மதுராந்தகம்:
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர், தனது வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்ததாக அச்சரப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். அதேபோல் சோத்துப்பாக்கத்தை சேர்ந்தவர் அசோக் குமார். தனது இருசக்கர வாகனம் திருடப்பட்டதாக அச்சரப்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். பால் வியாபாரியான பிரகாஷ் குமார் மேல்மருவத்தூர் ராமாபுரம் சாலையில், தான் வந்த போது தன்னை வழிமறித்து தனது தலையில் வெட்டி பாக்கெட்டில் இருந்த ரூ. 500 மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறித்து கொண்டு சென்றதாக அவர் மேல்மருவத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் அச்சரப்பாக்கம் மற்றும் மேல்மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் பிரதீப் உத்தரவின் பேரில் மதுராந்தகம் துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமேகலை தலைமையில் மேல்மருவத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த், அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார், சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன், பாலமுருகன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் நேற்று போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது மடிப்பாக்கம் அண்ணா நகரை சேர்ந்த செல்வா (22), மடிப்பாக்கம் ஈசாக் என்கிற சந்தோஷ் குமார் (22), கீழ்கட்டளையை சேர்ந்த பிரான்ராஜ் (23), கருப்பு என்கிற அந்தோணி(27), சிவா (24), கிழட்டு என்கிற அஜித் (24) ஆகியோர் அந்த வழியாக வந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் குற்றச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனம், செல்போன், ரூ.500 போன்றவற்றை கைப்பற்றினர்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவளம் கடற்கரையில் மாபெரும் படகுப்போட்டி நடைபெற்றது.
- படகுப்போட்டியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று கோவளம் கடற்கரையில் மாபெரும் படகுப்போட்டி நடைபெற்றது.
காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஏற்பாடு செய்துள்ள இந்த படகுப்போட்டியில் 20 மீனவ கிராமங்களை சேர்ந்த 160 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
படகுப்போட்டியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார். கரைக்கு திரும்பும் போட்டியாளர்கள் அனைவருக்கும் ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படகுப்போட்டியில் போட்டியாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
- வேளாண்துறை சார்பில் செடி, நாற்று, விதைகள் மற்றும் விவசாய இயந்திரங்கள் வழங்கப்பட்டன.
- மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ், சப்-கலெக்டர் சாகிதா பர்வீன், தாசில்தார் ராஜேஸ்வரி பங்கேற்றனர்
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த வடகடம்பாடி ஊராட்சியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் நடைபெற்றது. இதில் வருவாய்த்துறை உழவர் பாதுகாப்பு திட்டத்தில் இரு நபர்களுக்கு விபத்து இறப்பு நிவாரணமாக 2 லட்சம் ரூபாய், இயற்கை இறப்பு நிவாரணமாக 31 பேருக்கு, 7.10 லட்சம் ரூபாய், நலிந்தோர் உதவித்தொகை 5 பேருக்கு, 1 லட்சம் ரூபாய், முதியோர், விதவை உதவித்தொகை 12 பேருக்கு 1.44 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ராகுல்நாத் வழங்கினார்.
மாற்றுத்திறனாளி துறை சார்பில் தையல் மிஷின், கூட்டுறவுத்துறை சார்பில் சிறுவணிக கடன், சுய உதவிக்குழு கடன், வேளாண்துறை சார்பில் செடி, நாற்று, விதைகள், நெல் நடவு இயந்திரம், உள்ளிட்ட விவசாய இயந்திரங்கள் வழங்கப்பட்டன.
மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ், சப்-கலெக்டர் சாகிதா பர்வீன், தாசில்தார் ராஜேஸ்வரி, ஊராட்சி தலைவர் பரசுராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- கூடுவாஞ்சேரி பெருமாள் பகுதியைச் சேர்ந்தவர் ஆதித்யா.
- ரெயில் மோதி வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம்:
கூடுவாஞ்சேரி பெருமாள் பகுதியைச் சேர்ந்தவர் ஆதித்யா (வயது 28). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி மார்க்கமாக பாண்டியன் எக்ஸ்பிரஸ் சென்று கொண்டிருந்தது இதை கவனிக்காமல் ஆதித்யா கூடுவாஞ்சேரியில் செல்போன் பேசிக் கொண்டே கவனக்குறைவாக தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார் அப்போது எதிர்பாராத விதமாக ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார்.






