என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மர்ம சூட்கேஸ்"

    • சூட்கேசில் வெடிகுண்டு இருக்குமோ? என்று அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    • கடலில் விழுந்து யாரேனும் தற்கொலை செய்தனரா? என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம், ஒத்தவாடை தெருவில் உள்ள கடற்கரை அருகே உள்ள கோயில் பகுதியில் நேற்று இரவு மர்ம சூட்கேஸ் ஒன்று நீண்ட நேரமாக கேட்பாரற்று கிடந்தது.

    இதனை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சூட்கேசில் வெடிகுண்டு இருக்குமோ? என்று அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்த மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று மர்ம சூட்கேசை கைப்பற்றி பத்திரமாக போலீஸ் நிலையம் எடுத்து சென்றனர்.

    இன்ஸ்பெக்டர் ருக்மாந்தகன் மற்றும் போலீசார் சூட்கேசை திறந்து சோதனை செய்தபோது அதில், குத்துவிளக்கு, குடை, கல்லூரி சான்றிதழ், குங்குமம், குழந்தைகள் நோட்டு என வீட்டு உபயோக பொருட்கள் இருந்தன.

    இதனை விட்டு சென்றது யார்? இந்த சூட்கேஸ் எப்படி இங்கு வந்தது? எதற்காக விட்டு சென்றனர்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடலில் விழுந்து யாரேனும் தற்கொலை செய்தனரா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

    ×