என் மலர்
நீங்கள் தேடியது "சுற்றுலா நிறுவனங்கள்"
- தமிழகத்தில் புராதன நினைவு சின்னங்கள், இயற்கை எழில் சூழ்ந்த மலை வாழிடங்கள், அருவிகள் உள்ளிட்ட சுற்றுலா பகுதிகள் நிறைந்து உள்ளன.
- பதிவு செய்ய தவறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் எச்சரித்து உள்ளார்.
மாமல்லபுரம்:
தமிழகத்தில் புராதன நினைவு சின்னங்கள், இயற்கை எழில் சூழ்ந்த மலை வாழிடங்கள், அருவிகள் உள்ளிட்ட சுற்றுலா பகுதிகள் நிறைந்து உள்ளன. இவற்றை கண்டுகளிக்க ஆண்டுதோறும் ஏராளமான வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் வருகின்றனர். இப்படி வரும் சுற்றுலா பயணிகளில் பாதுகாப்பு மற்றும் அவர்களின் நலன் கருதி சுற்றுலாத்துறை அனுமதியுடன் உண்டு உறைவிடம் நடத்துபவர்கள், சாகச சுற்றுலா நடத்துபவர்கள், முகாம் நடத்துபவர்கள், கேரவன் பார்க் சுற்றுலா நடத்துபவர்கள் என தனியார் நிறுவனத்தினர் பலர் இந்த பணிகளை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அத்தகைய நிறுவனங்கள் செயல்பாட்டிற்கு தமிழக அரசு வழிகாட்டி நெறிமுறைகளை கடந்த ஆண்டு அறிவித்து, தற்போது அவை நடைமுறையில் உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மாமல்லபுரம் உள்ளிட்ட பல இடங்களில் சுற்றுலா முகவர் பிரிவுக்கு உட்பட்டோர் வழிகாட்டு நெறிமுறைகளின்படி சுற்றுலாத்துறையில் முறையாக பதிவு செய்யாமல் இயங்குவதும் சுற்றுலாத்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
எனவே வருகிற 31-ந்தேதிக்குள் www.tntourismtors.com என்ற இணைய தளத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், தனியார் சுற்றுலா நிறுவனத்தினர் பதிவு செய்ய வேண்டும் என்றும், பதிவு செய்ய தவறினால் அந்த நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் எச்சரித்து உள்ளார்.






