என் மலர்
உள்ளூர் செய்திகள்

மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளில் குற்றச்செயலில் ஈடுபட்ட 6 பேர் கைது
- சோத்துப்பாக்கத்தை சேர்ந்தவர் அசோக் குமார். தனது இருசக்கர வாகனம் திருடப்பட்டதாக அச்சரப்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.
- அச்சரப்பாக்கம் மற்றும் மேல்மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
மதுராந்தகம்:
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர், தனது வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்ததாக அச்சரப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். அதேபோல் சோத்துப்பாக்கத்தை சேர்ந்தவர் அசோக் குமார். தனது இருசக்கர வாகனம் திருடப்பட்டதாக அச்சரப்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். பால் வியாபாரியான பிரகாஷ் குமார் மேல்மருவத்தூர் ராமாபுரம் சாலையில், தான் வந்த போது தன்னை வழிமறித்து தனது தலையில் வெட்டி பாக்கெட்டில் இருந்த ரூ. 500 மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறித்து கொண்டு சென்றதாக அவர் மேல்மருவத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் அச்சரப்பாக்கம் மற்றும் மேல்மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் பிரதீப் உத்தரவின் பேரில் மதுராந்தகம் துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமேகலை தலைமையில் மேல்மருவத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த், அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார், சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன், பாலமுருகன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் நேற்று போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது மடிப்பாக்கம் அண்ணா நகரை சேர்ந்த செல்வா (22), மடிப்பாக்கம் ஈசாக் என்கிற சந்தோஷ் குமார் (22), கீழ்கட்டளையை சேர்ந்த பிரான்ராஜ் (23), கருப்பு என்கிற அந்தோணி(27), சிவா (24), கிழட்டு என்கிற அஜித் (24) ஆகியோர் அந்த வழியாக வந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் குற்றச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனம், செல்போன், ரூ.500 போன்றவற்றை கைப்பற்றினர்.






