என் மலர்
செங்கல்பட்டு
- பரனூரில் உள்ள அரசு மறுவாழ்வு மையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
- தங்கியுள்ள முதியவர்களிடம் குறைகளை கேட்டறிந்து நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலையில் புறப்பட்டு சென்றார்.
செல்லும் வழியில் செங்கல்பட்டு அருகே உள்ள பரனூரில் உள்ள அரசு மறுவாழ்வு மையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு தங்கியுள்ள முதியவர்களிடம் குறைகளை கேட்டறிந்து நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
- நடுநிலை பள்ளிக்கு ரூ.1.15 கோடி ரூபாய் செலவில் நான்கு வகுப்பறை கட்டிடம் கட்டப்படுகிறது
- கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அணுமின் நிலையம் சார்பில் மாமல்லபுரம் அடுத்த எடையூர் ஊராட்சி கொக்கிலமேடு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு ரூ.1.15 கோடி ரூபாய் செலவில் நான்கு வகுப்பறை கட்டிடம் கட்டப்படுகிறது.
இதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. இதில் அணுமின் நிலைய இயக்குனர் சுதிர் பாபன்ராவ் ஷெல்கே, முதன்மை கண்காணிப்பாளர் செந்தாமரக்சன், சுபா மூர்த்தி, ஜெகன், எடையூர் ஊராட்சி தலைவர் சாமுண்டீஸ்வரி, பள்ளி தலைமை ஆசிரியை கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- நீரை வீணாக்காமல் அருகில் உள்ள ஆதனூர் ஏரிக்கு கொண்டு சென்று, சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- கோடை காலம் என்பதால் ஏரியின் நீரை வெளியேற்றினால் சுற்று வட்டார பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் மற்றும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
வண்டலூர்:
கூடுவாஞ்சேரி ஏரி புனரமைப்பு பணிக்காக ஏரியில் உள்ள நீரை வெளியேற்றுவது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
இதில் 9 விவசாயிகள் மட்டுமே பங்கேற்றனர். பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் யாரும் பங்கேற்கவில்லை. இதில் நீரை வீணாக்காமல் அருகில் உள்ள ஆதனூர் ஏரிக்கு கொண்டு சென்று, சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி, கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் அருகில் உள்ள ஏரியின் கொள்ளளவையும் கரையை உயர்த்தியும் ஏரியில் உள்ள ஆகாய தாமரையை அகற்றியும் ஏரியின் கரை மீது நடை பாதைகள் அமைத்து அதில் நடைபயிற்சி மேற்கொள்வதற்காகவும் நீர்வள ஆதாரத்துறை சார்பில் பணிகளை மேற்கொள்ள நபார்டு வங்கி ரூ.6 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கியது. இதற்கான பணியை கடந்த மார்ச் 15-ந்தேதி அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து பணிகளை மேற்கொள்ள வசதியாக ஏரியில் உள்ள நீரை வெளியேற்றும் நட வடிக்கைக்கு அப்பகுதியை சேர்ந்த சமூக நல ஆர்வலர்கள், விவசாயிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ஏரி பராமரிப்பு பணி நிறுத்தப்பட்டது.
இது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் 9 விவசாயிகள் மட்டுமே கலந்து கொண்டனர். இதேபோல் அதிகாரிகள் தரப்பில் உதவி செயற்பொறியாளர் வெங்கடேஷ், உதவி பொறியாளர் தெ.குஜராஜ், வண்டலூர் தாசில்தார் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூடுவாஞ்சேரி ஏரியில் உள்ள நீரை அருகில் உள்ள ஆதனூர் ஏரிக்கு கொண்டு சென்று அங்கு தேக்கி வைத்து, நீரை வீண்டிக்காமல் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் அதற்கு சம்மதம் தெரிவித்தனர்.
தற்போது கோடை காலம் என்பதால் ஏரியின் நீரை வெளியேற்றினால் சுற்று வட்டார பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் மற்றும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். தற்போது ஏரியின் நீரை அருகில் உள்ள ஆதனூர் ஏரிக்கு கொண்டு சென்று தேக்கி வைப்பதாக தெரிவித்துள்ளதால் இந்த திட்டத்தை வரவேற்கிறோம். மேலும் தற்போது அறுவடைகள் நடைபெற்று வருவதால், விவசாயத்துக்கு தண்ணீர் தேவைப்படாது என்பதா லும் சீரமைப்பு பணியை தொடர ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.
- விவசாயிகள் அடமானமாக வைத்த நகை மற்றும் சொத்து ஆவணங்கள் அங்குள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு உள்ளது.
- சரியான நேரத்தில் அலாரம் ஒலித்ததால் கூட்டுறவு வங்கியில் இருந்த பலலட்சம் மதிப்பு உள்ள அடமான நகை, மற்றும் ஆவணங்கள் தப்பியது.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அடுத்த மேலேரிபாக்கம் கிராமத்தில் வேளாண்மை கூட்டுறவு வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் விவசாயிகளுக்கு பயிர் கடன் மற்றும் நகைகடன் வழங்கப்படும்.
விவசாயிகள் அடமானமாக வைத்த நகை மற்றும் சொத்து ஆவணங்கள் அங்குள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் மர்மநபர்கள் 2 பேர் கூட்டுறவு வங்கியின் ஜன்னல் கம்பியை உடைத்து உள்ளே புகுந்தனர். அவர்கள் நகை உள்ள அறையின் கதவை உடைக்க முயன்றனர்.
இதனால் அங்கிருந்த அலாரம் ஒலித்தது. சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் ஏராளமானோர் அங்கு திரண்டு வந்தனர். உடனே கொள்ளையர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதற்கிடையே மர்ம நபர்கள் லாக்கரை உடைக்க முயற்சி செய்ததும் அதில் பொருத்தப்பட்ட கருவி மூலம் கூட்டுறவு வங்கி தலைவர் சத்குருவின் செல்போனிற்கும் குறுந்தகவல் வந்தது. இதுபற்றி அவர் கூட்டுறவு வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அவர்களும் கூட்டுறவு வங்கிக்கு விரைந்து வந்தனர்.
இது குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சரியான நேரத்தில் அலாரம் ஒலித்ததால் கூட்டுறவு வங்கியில் இருந்த பலலட்சம் மதிப்பு உள்ள அடமான நகை, மற்றும் ஆவணங்கள் தப்பியது. அலாரம் சத்தம் கேட்டு பொதுமக்கள் திரண்டு வந்ததும் கொள்ளையர்கள் இரும்பு கம்பிகள், கதவை உடைக்க கொண்டு வந்து இருந்து எந்திரங்களை அங்கேயே போட்டு விட்டு சென்று இருந்தனர். அதனை போலீசார் கைப்பற்றினர்.
வங்கியில் உள்ள கண்காணிப்பு காமராவில் கொள்யைர்கள் 2 பேரின் உருவம் பதிவாகி உள்ளது. கொள்ளையர்கள் புகுந்ததும் முதலில் கண்காணிப்பு கேமிரா வயர்களை துண்டித்து இருந்தனர். கேமராவில் பதிவான உருவத்தை வைத்து கொள்ளையர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.
வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- காந்திரூபன் திடீரென மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கழுக்குன்றம் நால்வர்கோயில் பேட்டையை சேர்ந்தவர் காந்திரூபன் (வயது48).தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். வீட்டில் இருந்தபோது, காந்திரூபன் திடீரென மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். குடும்ப தகராறில் அவர் தற்கொலை செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மறைமலைநகர் அரசு மேல்நிலை பள்ளியில் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
- பள்ளி மாடிப்படியின் கீழ் பகுதியில் ஒரு பாம்பு ஊர்ந்து சென்று கொண்டிருந்தது.
மறைமலைநகர்:
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அரசு மேல்நிலை பள்ளியில் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவர்கள் பள்ளி வகுப்பறைக்கு செல்லும்போது திடீரென பள்ளி மாடிப்படியின் கீழ் பகுதியில் ஒரு பாம்பு ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. இதை பார்த்த மாணவர்கள் அலறியடித்து கொண்டு பள்ளி தலைமை ஆசிரியரிடம் தகவல் தெரிவித்தனர். உடனே பள்ளி தலைமை ஆசிரியர் மறைமலைநகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மாடிப்படி கீழ் பகுதியில் மின்சார மீட்டர் அருகே மறைந்திருந்த 3 அடி நீளமுள்ள நல்ல பாம்பை லாவகமாக பிடித்து அருகில் உள்ள வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர்.
- நகர இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் ஆர்.வினோத்குமார் ஏற்பாடு செய்திருந்தார்.
- செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் சா.இராசேந்திரன் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மறைமலைநகர் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் நகர இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் ஆர்.வினோத்குமார் ஏற்பாட்டில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. தண்ணீர் பந்தலை செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் சா.இராசேந்திரன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களும் பழரசங்களும் கொடுத்தார்.
நிகழ்ச்சியில் நகர செயலாளர் டிஎஸ் ரவிக்குமார், மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், வடக்கு ஒன்றிய செயலாளர் கஜா (எ) கஜேந்திரன், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் ஏஎஸ் சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
- மறைமலைநகர் நகராட்சியில் சொத்துவரி வசூல் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
- சொத்துவரி செலுத்துவோர் தங்கள் அரையாண்டு கணக்குகளை ஏப்ரல் மாதம் இறுதிக்குள் கட்டினால் ஊக்கத் தொகை வழங்கப்படும்.
மறைமலைநகர் நகராட்சியில் சொத்துவரி வசூல் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் சொத்துவரி செலுத்துவோர் தங்கள் அரையாண்டு கணக்குகளை ஏப்ரல் மாதம் இறுதிக்குள் கட்டினால் அவர்களுக்கு 5 சதவீதம் முதல் ரூ.5ஆயிரம் வரை ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் அறிவித்து உள்ளது.
- மாரிமுத்து தூங்கிய போது அவரது தலையில் கல்லைப்போட்டு மர்ம நபர்கள் கொடூரமாக கொலை செய்து உள்ளனர்.
- பல்வேறு கோணங்களில் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டை சேர்ந்தவர் மாரி என்கிற மாரிமுத்து (வயது 30). எலக்ட்ரீசியன். நேற்று இரவு அவர் செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே உள்ள எம்.எல்.ஏ. அலுவலகம் அருகே வந்தார். பின்னர் மாரிமுத்து அங்குள்ள பார்த்தசாரதி தெருவில் இருக்கும் பாழடைந்த ஒரு வீட்டின் திண்ணையில் படுத்து தூங்கினார்.
இந்த நிலையில் இன்று காலை மாரிமுத்து தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் செங்கல்பட்டு டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. மாரிமுத்து தூங்கிய போது அவரது தலையில் கல்லைப்போட்டு மர்ம நபர்கள் கொடூரமாக கொலை செய்து உள்ளனர்.
மாரிமுத்துவுக்கு யாருடனும் மோதல் உள்ளதா? மர்ம நபர்கள் பணம் கேட்டு மிரட்டியதால் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்ததா? என்று பல்வேறு கோணங்களில் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து ஒரு ஆண் வெள்ளை புலியை கர்நாடகா மாநிலத்தில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு கொடுத்து உள்ளனர்.
- ஆண் சிங்கத்தை தனி கூண்டில் வைத்து பூங்கா மருத்துவர்கள் அனைத்து பரிசோதனையையும் செய்து வருகிறார்கள்.
வண்டலூர்:
வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள், ஏராளமான பறவைகள் உள்ளன.
இதனைக்காண தினந்தோறும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து செல்கிறார்கள்.
கடந்த 2021-ம் ஆண்டு கொரோனா தொற்று பரவல் அதிகரித்த கால கட்டத்தில் பூங்காவில் பராமரித்து வந்த நீலா, பத்ம நாபன் ஆகிய இரண்டு சிங்கங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது. அதே ஆண்டில் உடல் நலக்குறைவால் கவிதா, புவனா மற்றும் விஜி ஆகிய சிங்கங்களும், பூங்கா மறுவாழ்வு மையத்தில் பராமரிக்கப்பட்டு வந்த மணி என்ற சிங்கமும் பரிதாபமாக இறந்தன.
இதனால் பூங்காவில் இருந்த சிங்கங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வந்தது. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பார்வையாளர்கள் வேனில் சென்று சிங்கங்கள் உலாவிடங்களில் பார்க்கும் பகுதி தடை செய்யப்பட்டது.இதனை மீண்டும் திறக்க வேண்டும் என்று பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து வண்டலூர் பூங்கா அதிகாரிகள் பூங்காவில் உள்ள சிங்கங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டனர். விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்திடம் அனுமதி பெற்று மற்ற மாநிலத்தில் உள்ள பூங்காவில் இருந்து சிங்கங்களை பெறுவதற்கு தொடர்ந்து முயற்சி செய்தனர்.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் இருந்து விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் ஒரு ஆண் சிங்கம் சாலை மார்க்கமாக வாகனத்தில் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டது.
இதற்கு பதிலாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து ஒரு ஆண் வெள்ளை புலியை கர்நாடகா மாநிலத்தில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு கொடுத்து உள்ளனர். புதிதாக கொண்டு வந்து உள்ள ஆண் சிங்கத்தை தனி கூண்டில் வைத்து பூங்கா மருத்துவர்கள் அனைத்து பரிசோதனையையும் செய்து வருகிறார்கள்.
பின்னர் சில வாரங்களில் இந்த புதிய சிங்கம் பூங்காவில் உள்ள மற்ற சிங்கங்களுடன் பழகிய பிறகு பார்வையாளர்கள் கண்டுகளிக்கும் வகையில் அதன் உலாவிடம் பகுதியில் விடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி மயங்கி விழுந்தனர்.
- மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் உரிமையாளர் வனமுத்து, கழிவுநீர் லாரி உரிமையாளர் யுவராஜ், டிரைவர் குப்பன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த புது கல்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மணிஷ் (வயது22). இவர் அதே பகுதியை சேர்ந்த அண்ணாமலை என்பவருடன் வடநெம்மேலி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 18-ந் தேதி கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய சென்றார். இருவரும் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி மயங்கி விழுந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு திருப்போரூர் அடுத்த அம்மாபேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மணி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் உரிமையாளர் வனமுத்து, கழிவுநீர் லாரி உரிமையாளர் யுவராஜ், டிரைவர் குப்பன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
- காப்புக்காடு பகுதியில் மரம், செடி, கொடிகள் எரியும்போது பலத்த காற்று வீசியதால் தீ மேலும் வேகமாக பரவியது.
- தடை செய்யப்பட்ட காப்புக்காடு பகுதியில் எப்படி தீ விபத்து ஏற்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த ஊனமாஞ்சேரி தமிழ்நாடு போலீஸ் அகாடமி பயிற்சி மையம் எதிரே உள்ள வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காடு பகுதியில் நேற்று திடீரென செடி, கொடிகள், மரங்கள் கொழுந்து விட்டு எரிந்தது.
இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக மறைமலைநகர் தீயணைப்பு நிலையத்திற்கும் ஓட்டேரி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதற்கு இடையே காப்புக்காடு பகுதியில் மரம், செடி, கொடிகள் எரியும்போது பலத்த காற்று வீசியதால் தீ மேலும் வேகமாக பரவியது.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மறைமலைநகர் தீயணைப்பு வீரர்கள் எரிந்து கொண்டிருந்த செடி, கொடி, மரத்தின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து போராடி தீயை முழுமையாக அணைத்தனர். தடை செய்யப்பட்ட காப்புக்காடு பகுதியில் எப்படி தீ விபத்து ஏற்பட்டது என்பது குறித்து ஓட்டேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதே போல சமூகவிரோதிகள் யாராவது காட்டுக்கு தீ வைத்தார்களா? என்று வனத்துறையினரும் விசாரித்து வருகின்றனர்.






