என் மலர்
உள்ளூர் செய்திகள்

செங்கல்பட்டில் எம்.எல்.ஏ. அலுவலகம் அருகே எலக்ட்ரீசியன் கொலை
- மாரிமுத்து தூங்கிய போது அவரது தலையில் கல்லைப்போட்டு மர்ம நபர்கள் கொடூரமாக கொலை செய்து உள்ளனர்.
- பல்வேறு கோணங்களில் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டை சேர்ந்தவர் மாரி என்கிற மாரிமுத்து (வயது 30). எலக்ட்ரீசியன். நேற்று இரவு அவர் செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே உள்ள எம்.எல்.ஏ. அலுவலகம் அருகே வந்தார். பின்னர் மாரிமுத்து அங்குள்ள பார்த்தசாரதி தெருவில் இருக்கும் பாழடைந்த ஒரு வீட்டின் திண்ணையில் படுத்து தூங்கினார்.
இந்த நிலையில் இன்று காலை மாரிமுத்து தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் செங்கல்பட்டு டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. மாரிமுத்து தூங்கிய போது அவரது தலையில் கல்லைப்போட்டு மர்ம நபர்கள் கொடூரமாக கொலை செய்து உள்ளனர்.
மாரிமுத்துவுக்கு யாருடனும் மோதல் உள்ளதா? மர்ம நபர்கள் பணம் கேட்டு மிரட்டியதால் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்ததா? என்று பல்வேறு கோணங்களில் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.