என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    கூடுவாஞ்சேரியில் இருந்து சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வடமாநிலத்தவர்கள் நடந்து செல்ல முயன்றனர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர், பொத்தேரி, மாடம்பாக்கம், கூடுவாஞ்சேரி, மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் தங்கி கட்டிட வேலைகளில் ஈடுபட்டு வந்தனர். 

    இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக கட்டிட வேலைகள் பெரும்பாலும் நடைபெறாத காரணத்தால், இந்த பகுதியில் உள்ள பீகார் மாநிலத்தை சேர்ந்த 28 தொழிலாளர்கள் நேற்று மாலை கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலை வழியாக சென்னை நோக்கி மூட்டை முடிச்சுகளுடன் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது கூடுவாஞ்சேரி சிக்னல் அருகே வாகன சோதனை செய்து கொண்டிருந்த கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் சாலையில் நடந்து சென்ற வட மாநிலத்தவர்களை மடக்கி பிடித்து விசாரித்தார். அப்போது அவர்கள் நடந்தே சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு சென்று அங்கிருந்து ரெயில் மூலம் பீகாருக்கு செல்லப்போவதாக அவரிடம் தெரிவித்தனர்.

    இதனையடுத்து இன்ஸ்பெக்டர் சென்னைக்கு நீங்கள் நடந்து செல்லக்கூடாது. அரசு அறிவித்தபடி இ.பாஸ் உள்ளவர்கள் மட்டுமே ரெயில் மூலம் தங்கள் ஊருக்கு செல்ல முடியும். மற்றவர்கள் செல்வதற்கு அனுமதி கிடையாது என்று அவர்களிடம் கூறினார். அப்போது 28 பேரில் 9 பேர் மட்டும் இ.பாஸ் வைத்திருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.

    இதனையடுத்து இன்ஸ்பெக்டர் இ.பாஸ் வைத்திருந்த 9 பேரை மட்டும் தனியாக தமிழக அரசின் மாநகர பஸ்சில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். மற்ற 19 பேரை அவரவர் ஏற்கனவே தங்கி பணிபுரியும் இடத்திற்கு போலீசார் வாகனம் மூலம் திருப்பி அனுப்பி வைத்தனர்.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 462 ஆக உயர்ந்துள்ளது.
    செங்கல்பட்டு:

    தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10,108 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 2,599 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 ஆயிரத்து 435 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது.
     
    அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 309 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5,946 ஆக அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 450 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 462 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 68 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
    கல்பாக்கம் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கல்பாக்கம்:

    செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தை அடுத்த குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வெண்ணிலா (வயது 18). பெற்றோரை இழந்த இவர் தனது சகோதரி சித்ரா ஆதரவில் அவருடைய வீட்டில் வசித்து வந்தார்.

    நேற்று மதியம் வெண்ணிலா எப்போதும் போல செல்போன் பார்த்து கொண்டிருந்தார். இதனை பார்த்த அவரது சகோதரி சித்ரா, எப்போதும் செல்போனை பார்த்து கொண்டிருக்கிறாயே என கேட்டு வெண்ணிலாவை கண்டித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனம் உடைந்த வெண்ணிலா விஷம் குடித்துள்ளார். இதில் மயக்கம் அடைந்த அவரை உடனடியாக சிகிச்சைக்காக மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சதுரங்கப்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    செங்கல்பட்டு:

    தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 9,674 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 2,240 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
     
    அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 363 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5,637 ஆக அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 451 ஆக உயர்ந்துள்ளது. 
    சென்னை, திருவள்ளூரை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட் டத்தில் நேற்று புதிதாக 35 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 391 ஆக அதிகரித்துள்ளது.

    இதில் 25 பேர் கோயம்பேடு சந்தையுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆவர். மற்றவர்களுக்கு கொரோனா பாதித்தவர்களுடன் உள்ள தொடர்பால் நோய் தாக்கி உள்ளது.

    கடந்த வாரம் 6-ந்தேதி நிலவரப்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் வெறும் 145 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருந்தது. ஒரு வாரத்தில் 246 பேருக்கு நோய் பரவி உள்ளது. கோயம்பேடு சந்தையுடன் உள்ள தொடர்பே நோய் தொற்றுக்கு காரணம் ஆகும்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று 24 பேருக்கு புதிதாக நோய் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 156 ஆக அதிகரித்து உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் கூடுதலாக 27 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 467 ஆக உயர்ந்துவிட்டது.

    செங்கல்பட்டில் 52 வயது முதியர்வர் ஒருவர் கொரோனா வைரசுக்கு பலியானார்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த 52 வயது நபர் நீரிழிவு நோயால் அவதிப்பட்டார். சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையறிந்த அவர், அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

    பின்னர் அவரை காவல்துறையினர் தேடி கண்டுபிடித்து செங்கல்பட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கொரோறா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்த முதியவர், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.

    இதன்மூலம் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    செங்கல்பட்டு:

    தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 8,002 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 2,051 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
     
    அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4,371 ஆக அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இன்று தொற்று உறுதியான 32 பேரில் 25 பேர் கோயம்பேடு தொடர்புடையவர்கள் ஆவர். இதனால் அம்மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 388ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் மாவட்டத்தில் மொத்தம் பாதிக்கப்பட்ட 388 பேரில் 150 பேர் கோயம்பேடு தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
    செங்கல்பட்டில் தூய்மை பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதை கண்டித்து தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    செங்கல்பட்டு:

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் செங்கல்பட்டு நகராட்சியில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் நேற்று செங்கல்பட்டு நகரம் ரேடியோ மலை பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அங்கு மதுபோதையில் இருந்த 3 பேர் தூய்மை பணியாளர்களை தரக்குறைவாக பேசி கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் நகராட்சிக்கு சொந்தமான வாகனத்தை சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

    இது குறித்து நகராட்சி சார்பில் செங்கல்பட்டு டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் ஒருவரை மட்டும் கைது செய்ததாக கூறப்படுகிறது.

    மீதமுள்ள 2 பேரை கைது செய்ய வலியுறுத்தியும், தூய்மை பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்றும் கூறி 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலக வாயிலில் அமர்ந்து பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து தூய்மை பணியாளர்கள் பணிக்கு சென்றனர். இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் காய்கறி வியாபாரிகள் உள்பட 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
    தாம்பரம்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 145 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று மேலும் 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம், சண்முகம் சாலையில் உள்ள மார்க்கெட் மூடப்பட்டு காந்தி சாலையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டு உள்ளது. அங்கு பழைய ஸ்டேட் பாங்க் காலனி பகுதியைச் சேர்ந்த 41 வயது வியாபாரி ஒருவர் கோயம்பேடு மார்கெட்டில் இருந்து காய்கறிகளை வாங்கி வந்து விற்பனை செய்து வந்தார்.

    சமீபத்தில் கோயம்பேடு மார்கெட் வியாபாரிகள் உள்பட மார்க்கெட்டுடன் தொடர்புடைய வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டதில் நேற்று அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

    இதேபோல் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி வாங்கி வந்து மாடம்பாக்கம் ஏ.எல்.எஸ். நகரில் வைத்து விற்பனை செய்த பெரிய பாளையத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அண்ணன்- தம்பி இருவருக்கும் நேற்று தொற்று உறுதியானது. இதையடுத்து தாம்பரம் தற்காலிக மார்கெட்டில் கடை அமைத்துள்ள வியாபாரிகள், மாடம்பாக்கம், பெரிய பாளையத்தம்மன் கோவில் தெருவில் வசிப்பவர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுபோல் கோவிலம்பாக்கம் பகுதியில் கோயம்பேட்டில் காய்கறிகளை வாங்கி வந்து விற்ற வியாபாரிக்கும், ஒரு பெண்ணுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிப்பட்டனர். இவர்கள் தவிர செங்கல்பட்டு நகர், சிறுகுன்றம், நெசக்குப்பம், நாவலூர் பகுதிகளில் தலா ஒருவரும், அச்சரப்பாக்கத்தில் 2 பேர் உள்பட 13 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்த தொழிலாளர்கள், வியாபாரிகள் ஆவர். இவர்களுடன் சேர்த்து செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 158 ஆக உயர்ந்தது.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று 38 பேருக்கு உறுதி செய்யப்பட்டதையடுத்து கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 136 ஆக உயர்ந்துள்ளது.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று கொரோனா தொற்று 38 பேருக்கு உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 136 ஆக உயர்ந்துள்ளது.

    நேற்று மட்டும் நசரத்புரத்தில் 18 பேருக்கும், மதுராந்தகத்தில் 5 பேர், நந்திவரம் 4 பேர், பம்மல் 3 பேர், ஜமீன் பல்லாவரம்- ரங்கநாதபுரத்தில் தலா ஒருவர் மற்றும் மேற்கு தாம்பரம், பெரும்பாக்கத்தில் தலா 2 பேருக்கு புதிதாக நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    செங்கல்பட்டு:

    சென்னையில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்துள்ள நிலையில், சென்னையை அடுத்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்திலும் தற்போது கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது. செங்கல்பட்டில் இன்று ஒருநாளில் மட்டும் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

    நசரத்புரத்தில் 18 பேர், மதுராந்தகத்தில் 5 பேர், நந்திவரத்தில் 4 பேர், பம்மலில் 3 பேர், திருநீர்மலையில் 2 பேர் ரங்கநாதபுரத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கிழக்கு தாம்பரத்தில் 2 பேர், ஜமீன் பல்லாவரத்தில் ஒருவருக்கு இன்று கொரோனா உறுதியாகியுள்ளது.  செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 133 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 
    2 ஏக்கர் பரப்பளவில் பயிரிட்ட பூசணி 3 மாத உழைப்புக்கு பின் 10 டன் அளவுக்கு காய்த்துள்ளது. பூசணிக்காய்களை குறைந்த விலைக்காவது விற்று வாங்கிய கடனை கொடுத்து விடவேண்டும் என்று விவசாயி பரிதவித்து வருகிறார்.
    திருப்போரூர்:

    திருப்போரூர் அருகே கோனேரிக்குப்பம் கிராமத்துச் சாலை....

    கண்ணுக்கு எட்டிய தூரம் வரை படர்ந்து கிடக்கும் பூசணி கொடிகள். அதில் உருண்டு திரண்டு காய்த்து காட்சி தரும் பூசணிக்காய்கள்....

    பார்ப்போருக்கு பரவசம் அளிக்கிறது. ஆனால் அதை பயிரிட்ட விவசாயி ராஜகோபால் பரிதாபத்தோடு வயல்கரையிலேயே கண்ணீருடன் காத்திருக்கிறார். பொழுது புலர்ந்ததும் வயல்கரைக்கு வந்து விடுகிறார். அந்த வழியாக யாராவது வியாபாரிகள், புதுமுகங்கள் சென்றால் அய்யா, இது என் தோட்டம் 10 டன் அளவுக்கு பூசணிக்காய் உள்ளது.

    கிலோ 4 ரூபாய்க்கு கூட தர தயாராக உள்ளேன். யாராவது இதை வாங்கி என்னை காப்பாற்றுங்கள் அய்யா என்று அவர் கெஞ்சுவதை பார்க்க பரிதாபமாக உள்ளது. ராஜகோபாலும் அவரது மனைவியும் 3 மாதங்களுக்கு முன்பு 2 ஏக்கர் பரப்பளவில் வழக்கம் போல் பூசணி பயிரிட்டுள்ளார்கள். இதற்காக உரம், பூச்சி மருந்து வாங்குவது, வேலை செய்வது என்று ரூ.50 ஆயிரம் வரை கடன் பெற்றுள்ளார்.

    எப்படியாவது பூசணிக்காய் நமக்கு கை கொடுக்கும் என்ற நம்பிக்கையோடு வயற்காட்டில் கணவன்-மனைவி இருவரும் கஷ்டப்பட்டு உழைத்து இருக்கிறார்கள். அவர்கள் உழைப்புக்கு நல்ல பலனும் கிடைத்தது. பூசணிக்காய் அற்புதமாக காய்த்து விளைந்தது. ஆனால் எங்கிருந்தோ வந்த கொரோனா ராஜகோபாலின் விவசாயத்தோடும் விளையாடி விட்டது. வழக்கமாக கிலோ 10 ரூபாய் முதல் 12 ரூபாய்க்கு விற்பனை செய்வார். ஆனால் இப்போது வாகன போக்குவரத்து இல்லாமலும், வாங்குவதற்கு ஆட்கள் இல்லாமலும் அப்படியே செடியில் கிடக்கிறது.

    குறைந்த விலைக்காவது விற்று வாங்கிய கடன் 50 ஆயிரம் ரூபாயையும் கொடுத்து விட வேண்டும் என்று தவித்துக்கொண்டிருக்கிறார். வழக்கமாக பூசணிக்காய் கொடுக்கும் கோயம்பேடு சந்தைக்கு தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். ஆனால் வியாபாரிகளோ விவசாயியின் வயிற்றில் அடித்து அடிமாட்டு விலைக்கு அதாவது கிலோ 1 ரூபாய்க்கு எடுத்துக் கொள்கிறேன்.

    ஆனால் கோயம்பேட்டுக்கு உன் செலவில்தான் அனுப்பி வைக்க வேண்டும் என்று சொல்லி உள்ளார்கள். லாரி வாடகை, ஏற்று கூலி, இறக்கு கூலி, இதர செலவுகள் அனைத்தையும் கணக்கிட்டால் விற்ற காசை விட கூடுதலாக அவர் கையில் இருந்துதான் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால் தற்போது கோயம்பேட்டில் ஒரு கிலோ பூசணிக்காய் ரூ.8 முதல் ரூ.10 வரை விற்கிறது.

    கொரோனா தாக்கத்தில் சிரமப்படும் ஒவ்வொருவருக்கும் தன்னால் இயன்ற உதவிகளை செய்பவர்களும் இருக்கிறார்கள். அதே நேரத்தில் மரணம் துரத்தும் இந்த நேரத்திலும் பணத்துக்காக விவசாயிகளின் வயிற்றில் அடிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    யாராவது கை கொடுப்பார்களா? என்று ராஜகோபால் காத்துக் கொண்டிருக்கிறார். முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதாக சொல்வதுண்டு. ஆனால் இந்த பரிதாபத்துக்குரிய விவசாயி தன் முழு சோகத்தை மறைக்காமல் சொல்லி விட்டார். நல்ல மனம் படைத்த வியாபாரிகள் அல்லது நிறுவனங்கள் இவருக்கு கை கொடுப்பார்களா? தொடர்புக்கு-98844 82094.
    ×