search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்டிரல் ரெயில் நிலையம்"

    • ரெயில் நிலைய ஒலிபெருக்கி பயன்பாட்டில் இருக்காது என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது.
    • உத்தரவை திரும்ப பெறக்கோரி மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

    சென்னை:

    சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில்கள் புறப்படும் நேரம், வந்து சேரும் நேரம், நடைமேடை குறித்த தகவல்களை தெரிவிக்கும் ஒலிபெருக்கி நடைமுறை கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு திடீரென நிறுத்தப்பட்டது. ரெயில்கள் தொடர்பான அனைத்து தகவல்களும் ரெயில் நிலையத்தில் உள்ள டிஜிட்டல் திரையில் மட்டுமே ஒளிபரப்பப்படும் எனவும், இனிமேல் ரெயில் நிலைய ஒலிபெருக்கி பயன்பாட்டில் இருக்காது என்றும் ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது.

    இந்த அறிவிப்புக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த உத்தரவை திரும்ப பெறக்கோரி மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

    இதையடுத்து பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு சோதனை முறை திட்டத்தை கைவிடுவதாகவும், மீண்டும் சென்டிரல் ரெயில் நிலையத்தில் பழைய முறையில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புகள் வெளியாகும் என்றும் தெற்கு ரெயில்வே அறிவித்தது. இந்த அறிவிப்பு நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது. இனி சென்டிரல் ரெயில் நிலையத்தில் ஒலிப்பெருக்கி மூலம் அறிவிப்புகளை பயணிகள் கேட்கலாம்.

    • திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் நடைமேடையில் வந்து நின்றது.
    • ரெயிலை சோதனையிட்ட போலீசார், கருப்பு நிற தோள்பை ஒன்று படுக்கை வசதி பெட்டியில் கேட்பாரற்ற நிலையில் கிடப்பதை கண்டனர்.

    சென்னை:

    சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் நடைமேடையில் வந்து நின்றது. அதில் படுக்கை வசதி கொண்ட பெட்டியில் பயணம் செய்த கேரள மாநிலத்தை சேர்ந்த சிபு ஜார்ஜ் (வயது 45) என்பவர் தான் வைத்திருந்த தோள் பையை, ரெயிலிலேயே தவறவிட்டு சென்றுவிட்டார்.

    இதற்கிடையே அந்த ரெயிலை சோதனையிட்ட போலீசார், கருப்பு நிற தோள்பை ஒன்று படுக்கை வசதி பெட்டியில் கேட்பாரற்ற நிலையில் கிடப்பதை கண்டனர். அந்த பையை கைப்பற்றி நடத்திய விசாரணையில் அந்த பை சிபு ஜார்ஜ் உடையது என்பது தெரியவந்தது. அந்த பையில் கை கடிகாரம், ஹெட்செட், வங்கி புத்தகம், 32 ஜி.பி.மெமரி கார்டு, செல்போன் உள்பட ரூ.88 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் அந்த தோள்பையை அதில் இருந்த பொருட்களுடன் பத்திரமாக, பைக்கு உரியவரான சிபு ஜார்ஜிடம் ஒப்படைக்கப்பட்டது.

    ×