என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    செங்கல்பட்டு மாவட்டத்தில் 131 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 59 ஆயிரத்து 770 ஆக உயர்ந்துள்ளது.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 131 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 59 ஆயிரத்து 770 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 56 ஆயிரத்து 257 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை 2377 பேர் உயிரிழந்துள்ளனர். 1136 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 33 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70 ஆயிரத்து 990 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 69 ஆயிரத்து 334 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1199 ஆக உயர்ந்துள்ளது. 457 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    மறைமலைநகரில பஸ் மோதி பெட்ரோல் நிலைய பெண் ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை நாகல்கேணி மகாத்மா காந்தி தெருவை சேர்ந்தவர் பத்மா (வயது 44), இவர் மறைமலைநகரில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் பணி முடிந்து ரெயில் மூலம் வீட்டுக்கு செல்வதற்காக மறைமலைநகர் நகராட்சி மைதானம் அருகே உள்ள ஜி.எஸ்.டி. சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி பஸ் பத்மா மீது பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    கடந்த 2006 -ம் ஆண்டு டெல்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில் இருந்து வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு பீஷ்மர், அனு என்ற ஒரு ஜோடி வெள்ளைப்புலிகள் கொண்டுவரப்பட்டன.
    வண்டலூர்:

    கொரோனா தொற்று 2-வது அலை காரணமாக சென்னையை அடுத்த வண்டலூர் பூங்கா கடந்த ஏப்ரல் மாதம் 20-ந் தேதி முதல் பார்வையாளர்கள் பார்ப்பதற்கு தடை செய்யப்பட்டு மூடப்பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த மே மாதம் 26-ந்தேதி பூங்காவில் உள்ள சில சிங்கங்கள் சோர்வுடன் காணப்பட்டதால், 11 சிங்கங்களுக்கு சளி மாதிரிகள் சேகரித்து மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஐ.சி.ஏ.ஆர். உயர் பாதுகாப்பு விலங்குகள் நோய்கள் தேசிய நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதில் 9 வயதுடைய நீலா என்ற பெண் சிங்கம், அன்றைய தினமே உயிரிழந்தது. சில நாட்களுக்கு பிறகு 12 வயதுடைய பத்மநாபன் என்ற ஆண் சிங்கம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

    இந்த நிலையில் விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் கடந்த 2006 -ம் ஆண்டு டெல்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில் இருந்து வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு பீஷ்மர், அனு என்ற ஒரு ஜோடி வெள்ளைப்புலி கொண்டுவரப்பட்டன. பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த இந்த வெள்ளைப்புலி ஜோடி இரண்டும் அடிக்கடி இணை சேர்ந்து 5-க்கும் மேற்பட்ட வெள்ளைப்புலி குட்டிகளை ஈன்றுள்ளது.

    இந்த நிலையில் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 17 வயதுடைய பீஷ்மர் ஆண் புலி  நேற்று திடீரென உயிரிழந்துள்ளது. இந்த வெள்ளைப்புலி வயது முதிர்வு காரணமாக இறந்ததா? கொரோனா தொற்றால் இறந்ததா? என்பது குறித்து பிரேத பரிசோதனை மற்றும் ஆய்வு முடிவுகளில் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் 139 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 59 ஆயிரத்து 430 ஆக உயர்ந்துள்ளது.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 139 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 59 ஆயிரத்து 430 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 55 ஆயிரத்து 762 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,374 உயர்ந்துள்ளது. இதில் 1,294 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 39 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70 ஆயிரத்து 921 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 69 ஆயிரத்து 235 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.

    நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,195 ஆக உயர்ந்துள்ளது. 491 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் நகரின் மையப்பகுதியில் உள்ள நீளமான பாறை மீது இயற்கை எழில் கொஞ்ச அமைந்துள்ளது. 120 ஆண்டுகள் பழமை வாய்ந்த கலங்கரை விளக்கம். இது 1887-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இந்த கலங்கரை விளக்கம் செயல்பட்டு வருகிறது.

    வங்கக்கடலில் பயணிக்கும் கப்பல் மற்றும் படகுகள் மாமல்லபுரம் கடல் பகுதியை அறிந்து விலகி செல்லவும், மாலுமிகளுக்கு அடையாளம் காட்டவும் இந்த கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டது. இந்த கலங்கரை விளக்கத்தில் தொடக்கத்தில் மண்எண்ணெய் மூலம் விளக்கு எரிக்கப்பட்டது. கடந்த 1940-ம் ஆண்டு் மின்னணு கருவிகள் பொருத்தப்பட்டு, நவீன தொழில் நுட்பத்தில் இந்த கலங்கரை விளக்கம் இயங்கி வருகிறது.

    குறிப்பாக தமிழகத்தில் கடற்கரை பகுதிகளில் பல இடங்களில் அமைந்துள்ள கலங்ரை விளக்கங்கள் அனைத்தும் தரைதளத்தில் அமைக்கப்பட்டதாகும். ஆனால் தமிழகத்தில் மலைக்குன்றின் மீது அமைக்கப்பட்ட ஒரே கலங்கரை விளக்கம் மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் என்ற தனிச்சிறப்பை பெற்றதாகும். இது மலைக்குன்றில் இருந்து 130 அடி உயரத்தில் அமைக்கப்பட்டதாக உள்ளது. இந்த கலங்கரை விளக்கத்தின் உச்சியில் ஏறி மாமல்லபுரம் அழகினையும், வரலாற்று புராதன சிற்பங்களையும் கண்டுகளிக்க உள்நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ரூ.10-ம் வெளிநாட்டு பயணிகளுக்கு ரூ.25-ம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநில பள்ளி மாணவர்களுக்கு மட்டும் இங்கு இலவச அனுமதி உண்டு.

    அவர்களுக்கு என தனியாக கட்டணம் வசூலிக்கப்பட மாட்டது. இந்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அதிக அளவில் கொரோனா தொற்று பரவி வந்த காரணத்தால் இந்த கலங்கரை விளக்கம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பார்வையாளர் அனுமதி ரத்து செய்யப்பட்டு மூடப்பட்டது. இந்த நிலையில் கொரோனா தொற்று தற்போது படிப்படியாக குறைந்து வருவதால் தமிழக அரசு சுற்றுலாவுக்கு விதித்த தடையை நீக்கி மாமல்லபுரத்துக்கு பயணிகள் வருவதற்கு அனுமதி வழங்கி உள்ளது.

    இந்த நிலையில் 3 மாதமாக மூடப்பட்ட இந்த கலங்கரை விளக்கம் விரைவில் திறக்கப்பட உள்ளதால் தற்போது கலங்கரை விளக்கத்தின் உச்சியில் உள்ள குமிழ் பகுதியில் பாதுகாப்பு கம்பி வேலிகள், உச்சியில் இரும்பினால் ஆன குமிழ் பகுதிகள் உப்பு காற்றால் பாதிக்கப்பட்டு துருபிடித்து உள்ள நிலையில் அதனை வண்ணம் தீட்டி புதுப்பிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. உச்சி பகுதியில் வண்ணம் தீட்டி அழகு படுத்தும் பணிகள் முடிந்தபின் உள் பகுதியிலும் வண்ணம் தீட்டும் பணிகள் தொடங்கப்பட உள்ளன.

    இந்த பணிகள் முடிந்தபிறகு அடுத்த வாரம் மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் புதுப்பொலிவுடன் திறக்கப்பட்டு பார்வையாளர்கள் கண்டுகளிக்க அனுமதிக்கப்பட உள்ளனர்.
    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 51 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70 ஆயிரத்து 683 ஆக உயர்ந்துள்ளது.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 175 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 58 ஆயிரத்து 380 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 54 ஆயிரத்து 290 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர்.

    இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,372 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,718 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 51 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70 ஆயிரத்து 683 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 68 ஆயிரத்து 960 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 3 பேர் உயிரிழந்தனர். இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,190 ஆக உயர்ந்துள்ளது. 533 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    ஒரகடம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    படப்பை:

    அசாம் மாநிலம் பங்சியபரா பகுதியை சேர்ந்தவர் ஜியாருல்மியா (வயது 20). இவர் காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டு கிராமம் மேட்டுத்தெரு பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்து ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். வழக்கம் போல வேலை முடிந்து நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்தார். தனது அறையில் செல்போனுக்கு சார்ஜ் போட்டுவிட்டு படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.

    இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒரகடம் போலீசார் ஜியாருல்மியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
    பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்ற 17 வயது சிறுமிக்கு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
    திருப்போரூர்:

    சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 19). கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரது நண்பரின் பிறந்த நாள் விழா கோவளத்தில் உள்ள பண்ணை வீட்டில் நடந்தது. விழாவில் கலந்து கொள்வதற்காக தன்னுடைய நண்பர்கள் மற்றும் தேனாம்பேட்டையை சேர்ந்த தோழியான 17 வயதான பிளஸ்-2 மாணவியை அழைத்து கொண்டு சென்றார். பிறந்த நாள் விழா முடிந்ததும் சந்தோஷின் நண்பர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் திரும்பி விட்டனர்.

    சந்தோசும், பிளஸ்-2 மாணவியும் தனிமையில் இருந்தனர். அப்போது சந்தோஷ் அந்த மாணவிக்கு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்துள்ளார்.

    சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்த அந்த மாணவியை சந்தோஷ் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. போதை தெளிந்த மாணவி நடந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

    வீட்டுக்கு சென்ற மாணவி தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து தாயாரிடம் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய தாயார் இது குறித்து தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சந்தோஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 188 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 188 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 57 ஆயிரத்து 847 ஆக உயர்ந்துள்ளது.

    இவர்களில் 1 லட்சத்து 53 ஆயிரத்து 803 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சைப் பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,368 உயர்ந்துள்ளது. இதில் 1,677 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று மட்டும் 53 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70 ஆயிரத்து 584 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 68 ஆயிரத்து 792 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சைப் பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,185 உயர்ந்துள்ளது. 607 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    சுற்றுலா பயணிகள் வருகையால் 2 மாதங்களுக்கு பிறகு கடற்கரை சாலையில் உள்ள கடைகளில் வியாபாரம் களைகட்டியது.
    மாமல்லபுரம்:

    நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல் அதிகரித்து உயிரிழப்புகள் ஏற்பட்டதால் மத்திய சுற்றுலா, கலாசாரத்துறை அமைச்சகம் நாடு முழுவதும் தொல்பொருள் கட்டுப்பாட்டில் உள்ள புராதன சின்னங்களை மூட அறிவுறுத்தி இருந்தது.

    இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன சின்னங்கள் கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் கடந்த 2 மாதமாக மூடப்பட்டு பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதையத்து சுற்றுலாவுக்கான தடை நீக்கப்பட்டு மாமல்லபுரம் புராதன சின்னங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.

    இதையடுத்து 2 மாதங்களுக்கு பிறகு ஞாயிற்றுகிழமையான நேற்று மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்திருந்தனர். ஏராளமான சுற்றுலா வாகனங்களும் வந்ததால் கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    கடற்கரையில் பொழுதை கழிக்க ஏராளமானோர் குடும்பத்துடன் திரண்டனர். பலர் கடலில் குளித்து மகிழ்ந்தனர். ஆபத்தை உணராமல் சிலர் ஆழ்கடல் பகுதியில் குளித்த போது போலீசார் அவர்களை அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பினர்.

    கடற்கரை கோவில் ஐந்துரதம், அர்ச்சுணன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்களை பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் ஆன்லைன் மூலம் நுழைவு சீட்டு பதிவு செய்து, கண்டுகளித்துவிட்டு சென்றனர். சுற்றுலா பயணிகள் வருகையால் 2 மாதங்களுக்கு பிறகு கடற்கரை சாலையில் உள்ள கடைகளில் வியாபாரம் களைகட்டியது.
    வஞ்சுவாஞ்சேரி அருகே விபத்தில் சமையல்காரர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    படப்பை:

    செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் முள்ளிப்பாக்கம் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 44). சமையல்காரர். இவர் காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சாலமங்கலம் லட்சுமி நகர் பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் சரவணன் தனது மோட்டார் சைக்கிளில் வஞ்சுவாஞ்சேரி அருகே சாலையில் திரும்பும் போது ஒரகடம் பகுதியில் இருந்து வண்டலூர் நோக்கி வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சரவணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 198 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 198 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 57 ஆயிரத்து 85 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 52 ஆயிரத்து 827 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,361 ஆக உயர்ந்தது. இதில் 1,897 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 71 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70 ஆயிரத்து 342 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 68 ஆயிரத்து 460 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர். இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,178 ஆக உயர்ந்துள்ளது. 704 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    ×