என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    மண்ணிவாக்கத்தில் கடைக்காரரை மிரட்டி பணம் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் உமர்பரூக் (வயது 43), இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கடையை மூடிவிட்டு வீட்டுக்கு செல்லும்போது 3 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து கத்தி முனையில் மிரட்டி ரூ.3 ஆயிரத்தை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

    இதுகுறித்து ஓட்டேரி போலீசில் உமர்பரூக் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை தேடி வருகிறார்.
    கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் பகுதியில் சாலையில் நடந்து சென்ற 2 பெண்களிடம் 8½ பவுன் நகை பறிக்கப்பட்டது.
    வண்டலூர்:

    காஞ்சீபுரம் மாவட்டம் மாடம்பாக்கம் பெரிய தெரு பகுதியை சேர்ந்தவர் சுசீலா (வயது 58), இவர் கூடுவாஞ்சேரி சீனிவாசபுரத்தில் உள்ள அழகு நிலையத்தில் வேலை செய்து வந்தார்.

    நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் என்.ஜி.ஓ. காலனி அருகே சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் சுசீலா அணிந்திருந்த 3½ பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இது குறித்து சுசீலா கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பெரியாழ்வார் தெருவை சேர்ந்தவர் அமுல்யா (24), இவர் நேற்று முன்தினம் இரவு தாயுமானவர் தெருவில் உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் அமுல்யா அணிந்திருந்த 5 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்று விட்டார்.

    இது குறித்து அமுல்யா மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
    சிறையில் உள்ள சிவசங்கர்பாபாவுக்கு சிறையில் சிறப்பு வகுப்பு அறை வழங்கக்கோரி செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டில் சிவசங்கர் பாபா தரப்பில் கடந்த 22-ந்தேதி மனு அளித்திருந்தனர்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷணல் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து பள்ளியின் தாளாளர் சிவசங்கர் பாபா போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இவர் மீது 3 போக்சோ வழக்குகள் உள்ள நிலையில் ஜாமீன் கேட்டு கடந்த வாரம் செங்கல்பட்டு கோர்ட்டில் சிவசங்கர் பாபா தரப்பில் அவரது வக்கீல் மனுதாக்கல் செய்திருந்தார். அப்போது அவருக்கு ஜாமீன் தர மறுத்து செங்கல்பட்டு கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதனையடுத்து சிறையில் உள்ள சிவசங்கர்பாபாவுக்கு சிறையில் சிறப்பு வகுப்பு அறை வழங்கக்கோரி செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டில் சிவசங்கர் பாபா தரப்பில் கடந்த 22-ந்தேதி மனு அளித்திருந்தனர். இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று நடந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதி தமிழரசி சிறையில் சிறப்பு வகுப்பு அறையை வழங்க அனுமதி மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
    மாமல்லபுரத்தில் முககவசம் அணியாத சுற்றுலா பயணிகள் 50 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் கொரோனா 3-வது அலை பரவாமல் தடுக்கும் வகையில் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உத்தரவின்பேரில், பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அரசின் வழிகாட்டி நெறிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படுகின்றன.

    இந்நிலையில் மாமல்லபுரம் கடற்கரை கோவில் புராதன சின்னங்களை கண்டுகளிக்க வந்த சுற்றுலா பயணிகள் பலர் முககவசம் அணியவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து கடற்ரை கோவில் நுழைவு வாயின் பகுதியில் முககவசம் அணியாமல் வந்த 50 சுற்றுலா பயணிகளை மடக்கிய மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாக இயக்குனர் வி.கணேஷ், சுகாதார ஆய்வாளர் ரகுபதி, சுகாதார மேற்பார்வையாளர் தாமோதரன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் பயணிகள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.200 அபராதம் விதித்தனர். பிறகு பேரூராட்சி சார்பில் அபராதம் விதிக்கப்பட்டவர்களுக்கு முககவசம் வழங்கிய அவர்கள் அதனை அணிந்து பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடித்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் 99 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 99 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 61 ஆயிரத்து 323 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 57 ஆயிரத்து 732 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று சிகிச்சை பலனின்றி 3 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,395 ஆக உயர்ந்துள்ளது. 1,196 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 35 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 71 ஆயிரத்து 457 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 69 ஆயிரத்து 807 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 1,201 பேர் உயிரிழந்துள்ளனர். 449 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    மதுராந்தகம் அருகே தூங்கி கொண்டிருந்த பெண்ணின் காலை பிடித்து இழுத்ததால் ஏற்பட்ட தகராறு காரணமாக தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
    மதுராந்தகம்:

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த காவாதூர் ஊராட்சியில் வசிதது வந்த 30 வயது பெண் குடும்பத்தினருடன் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி புருஷோத்தமன் (38) அங்கு தூங்கி கொண்டிருந்த அந்த பெண்ணின் காலை பிடித்து இழுத்தாக தெரிகிறது. அவர் இது குறித்து அவர் தனது கணவரிடம் கூறியுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் புருஷோத்தமன் தாக்கியதில் அவரது கணவர் மயக்கம் அடைந்தார். பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த புருஷோத்தமன் ஆம்புன்சுக்கு தகவல் தெரிவித்தவர் மற்றும் அவரது தாயை தாக்கியுள்ளார்.

    இதுகுறித்து சித்தாமூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் வழக்குப்பதிவு செய்து புருஷோத்தமனை கைது செய்து செய்யூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

    செங்கல்பட்டு அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். உறவினரை போலீசார் தேடி வருகின்றனர்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அடுத்த அம்மனம்பாக்கம் இருளர் பகுதியை சேர்ந்தவர் கன்னியம்மாள். இவரது 3-வது மகளான அனிதாவின் கணவர் முரளி (வயது 25). இவரது தாய்மாமா தினேஷ் (வயது 35). அரக்கோணம் தாலுகா ராணிப்பேட்டையை சேர்ந்தவர். சென்னையில் வேலை தேடலாம் என்று கூறி முரளி, தாய்மாமா தினேஷை அம்மனம்பாக்கத்திற்்கு வரும்படி அழைத்தார்.

    இதையடுத்து தினேசும் அம்மனம்பாக்கத்திற்கு வந்தார். நேற்று தினேஷ், முரளி இருவரும் ஒன்றாக சேர்ந்து முரளி வீட்டில் இருந்து மது குடித்தனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் முரளி வீட்டில் இருந்த கத்தியால் தினேஷின் தலையில் வெட்டியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த தினேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    மாலை முரளியின் மாமியார் கன்னியம்மாள் வீட்டுக்கு வந்தபோது வீடு பூட்டப்பட்டிருந்தது. இது குறித்து அக்கம்பக்கத்தினரிடம் கேட்டார். யாரும் சரியாக பதில் சொல்லாததால் வீட்டின் பூட்டை உடைத்து பார்த்தார்.

    அப்போது போர்வை போர்த்தப்பட்டு ஒருவர் படுத்திருப்பதை கண்டு போர்வையை விலக்கி பார்த்தார். ரத்த வெள்ளத்தில் தினேஷ் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த கன்னியம்மாள் செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான முரளியை வலைவீசி தேடி வருகின்றனர்.
    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிங்கங்களுக்கு தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தை சேர்ந்த மருத்துவ குழுவினர் மற்றும் பூங்கா மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வந்தனர்.
    வண்டலூர்:

    கொரோனா தொற்று 2-வது அலை காரணமாக சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா கடந்த ஏப்ரல் மாதம் 20-ந் தேதி முதல் பார்வையாளர்கள் பார்ப்பதற்கு தடை செய்யப்பட்டு மூடப்பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த மே மாதம் 26-ந் தேதி பூங்காவில் உள்ள சில சிங்கங்கள் சோர்வுடன் காணப்பட்டதால், 11 சிங்கங்களுக்கு சளி மாதிரிகள் சேகரித்து மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஐ.சி.ஏ.ஆர். உயர் பாதுகாப்பு விலங்குகள் நோய்கள் தேசிய நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதில் 9 வயதுடைய நீலா என்ற பெண் சிங்கம், 12 வயதுடைய பத்மநாபன் என்ற ஆண் சிங்கம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதனையடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிங்கங்களுக்கு தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தை சேர்ந்த மருத்துவ குழுவினர் மற்றும் பூங்கா மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 9.7.2021 அன்று பூங்காவில் உள்ள 3 சிங்கங்களுக்கு நாசி மற்றும் மலக்குடல் திரவ மாதிரிகள் ஆய்வுக்காக விலங்கு நோய்களுக்கான தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் ஆய்வு நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அனைத்து மாதிரிகளும் ஆய்வு செய்ததில் சார்ஸ் கோவிட்-2 எதிர்மறை நெகட்டிவ் நோய் பாதிப்பு இல்லை என கடந்த 14.7.2021 அன்று விலங்கு நோய்களுக்கான தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 17.7.2021 அன்று பூங்காவில் உள்ள 5 சிங்கங்களின் நாசி மற்றும் மலக்குடல் திரவ மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பி வைத்ததில் அவை அனைத்துமே (சார்ஸ் கோவிட்-2 வைரஸ்) இல்லை நெகட்டிவ் என்று நேற்று 23.7.2021 தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் நிறுவனம் தெரியப்படுத்தியுள்ளது. எனவே வண்டலூர் உயிரியல் பூங்காவில் தற்போது உள்ள 13 சிங்கங்களும் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு நல்ல நிலையில் உள்ளன.

    இருந்தபோதிலும் கொரோனா தொற்று பரவுவதை கருத்தில் கொண்டு சிங்கங்களின் உடல் நிலையை மிகவும் உன்னிப்பாக வண்டலூர் உயிரியல் பூங்கா டாக்டர்கள் மற்றும் களப்பணியாளர்கள் தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் 98 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 61 ஆயிரத்து 33-ஆக உயர்ந்துள்ளது.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 98 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 61 ஆயிரத்து 33-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 57 ஆயிரத்து 341 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார்.

    இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23,89- ஆக உயர்ந்துள்ளது. 1,303 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 41 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 71 ஆயிரத்து 335-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 69 ஆயிரத்து 674 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 1.201 பேர் உயிரிழந்துள்ளனர். 460 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் 118 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 118 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 60 ஆயிரத்து 488- ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 56 ஆயிரத்து 879 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 385 பேர் ஆக உயர்ந்துள்ளது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 48 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 71 ஆயிரத்து 164-ஆக உயர்ந்துள்ளது. நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1201- ஆக உயர்ந்துள்ளது.
    திருப்போரூர் அருகே வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்போரூர்:

    திருப்போரூர் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் ரவி. கூலித்தொழிலாளி. இவரது மகன் அஜித் (வயது 23). நேற்று முன்தினம் வீட்டை வீட்டு வெளியில் சென்றார். ஆனால் திரும்பி வரவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. மாயமாகி விட்டார்.

    இந்த நிலையில் நேற்று காலை ஆமூர் பெரிய ஏரிக்கரை வழியாக சென்றவர்கள் காயங்களுடன் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பது குறித்து மானாமதி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    விரைந்து வந்த போலீசார் வாலிபரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அவர் அஜித் என்பது தெரியவந்தது.

    ஆமூர் ஏரிக்கரையில் உள்ள முள்புதரில் மர்ம நபர்கள் அஜித்தை கல்லால் தாக்கி கொலை செய்துவிட்டு உடலை வீசிச்சென்றது தெரியவந்தது.

    கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இது தொடர்பாக மானாமதி போலீசார் தொடர்நது விசாரித்து வருகின்றனர்.
    செம்மஞ்சேரியில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சோழிங்கநல்லூர்:

    சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரி சுனாமி நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடப்படுவதாக செம்மஞ்சேரி போலீஸ் நிலையத்திற்கு புகார்கள் வந்தன. இதையடுத்து செம்மஞ்சேரி சப்-இன்ஸ்பெக்டர் ஜமேஷ் பாபு தலைமையில் போலீசார் அடங்கிய தனிப்படையினர் புகார்கள் வந்த இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஜனா என்ற ஜனார்த்தனன் (வயது 19), அஜித் (24) சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த தனிப்படை போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் இருவரும் சேர்ந்து மோட்டார் சைக்கிள்கள் திருடியதை ஒப்புக்கொண்டனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    ×