என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • பூஞ்சேரியில் இதுவரை ரூ.1.5 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியர் தகவல்
    • நரிக்குறவ பெண் அஸ்வினி சேகர் உள்ளிட்ட 12 பேருக்கு கடன் வழங்க ஆணை தயார் நிலையில் உள்ளது.

    செங்கல்பட்டு:

    முதல்வர் வழங்கிய கடனுதவி தனக்கு இன்னும் கிடைக்கவில்லை என பூஞ்சேரியைச் சேர்ந்த நரிக்குறவ பெண் அஸ்வினி சமீபத்தில் புகார் கூறியிருந்தார். முதல்வர் அறிவித்த ஒரு லட்சம் ரூபாய் லோன் யாருக்கும் கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். அவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில், அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், நரிக்குறவ பெண் புகாரை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் விளக்கம் அளித்துள்ளார். பூஞ்சேரியில் நரிக்குறவர் மற்றும் இருளர் குடும்பங்களுக்கு இதுவரை ரூ.1.5 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், 54 இலவச வீட்டுமனை பட்டாக்கள், 35 சாதி சான்றிதழ்கள், 6 முதியோர் உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    'அஸ்வினி சேகர் உள்ளிட்ட 12 பேருக்கு கடன் வழங்க ஆணை தயார் நிலையில் உள்ளது. அஸ்வினி சேகருக்கு ரூ.5 லட்சமும், மற்றவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் கடன் வழங்க ஆணை உள்ளது. ஆனால் மற்றவர்களோடு சேர்ந்துதான் கடனை பெறுவேன் என அஸ்வினி சேகர் தெரிவித்ததால், தாமதம் ஆகிறது. அஸ்வினி சேகருக்கு கடை ஒதுக்கீடு செய்ய தயார் நிலையில் இருந்தது. ஆனால் அவர் அதை நிராகரித்துவிட்டார். நலத்திட்ட உதவிகளை செயல்படுத்துவதற்கு அப்பகுதி மக்களின் ஒத்துழைப்பு தேவை' என்றும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    • முதல்வர் வழங்கிய கடனுதவி தனக்கு இன்னும் கிடைக்கவில்லை என நரிக்குறவ பெண் அஸ்வினி கூறியிருந்தார்.
    • புகாரை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் விளக்கம் அளித்துள்ளார்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம் பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்த 282 பேருக்கு வீட்டுமனை பட்டாக்கள், வங்கிக் கடனுதவிகள் ஆகியவற்றை தீபாவளியன்று முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். மேலும், கோவில் அன்னதானத்தின்போது அவமதிக்கப்பட்ட நரிக்குறவர் இனப் பெண் அஸ்வினிக்கும் கடனுதவி ஆணையை வழங்கினார்.

    ஆனால், முதல்வர் வழங்கிய கடனுதவி தனக்கு இன்னும் கிடைக்கவில்லை என அஸ்வினி சமீபத்தில் புகார் கூறியிருந்தார். முதல்வர் அறிவித்த ஒரு லட்சம் ரூபாய் லோன் யாருக்கும் கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

    அவர் பேசிய வீடியோ பதிவை பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்து, அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.

    "விளம்பரங்களில் மட்டுமே ஆர்வம் காட்டி வரும் இந்த திமுக அரசு, தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வில்லை தேர்தலுக்குப் பின் கொடுக்கும் வாக்குறுதிகளையும் மறந்து விடுகிறார்கள். இப்படி நம்ப வைத்து ஏமாற்றுவது தான் உங்கள் சமூக நீதியா?' என அண்ணாமலை கூறி உள்ளார்.

    நரிக்குறவ பெண் புகாரை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் விளக்கம் அளித்துள்ளார். பூஞ்சேரியில் நரிக்குறவர் மற்றும் இருளர் குடும்பங்களுக்கு இதுவரை ரூ.1.5 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், 54 இலவச வீட்டுமனை பட்டாக்கள், 35 சாதி சான்றிதழ்கள், 6 முதியோர் உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    • வகுப்பு நேரங்களில் பாலியல் தொல்லை கொடுத்ததாக 3 மாணவிகள் புகார் கூறினர்.
    • போராட்டம் நடத்தியதை அடுத்து தமிழ் ஆசிரியர் மணிமாறனை போலீசார் கைது செய்தனர்.

    செங்கல்பட்டு:

    கல்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்த புரட்சி மாறன் என்கிற மணிமாறன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியச் செயலாளராகவும் உள்ளார். இவர், வகுப்பு நேரங்களில் பாலியல் தொல்லை கொடுத்ததாக 3 மாணவிகள் புகார் கூறினர்.

    மாணவிகளின் பெற்றோரும், உறவினர்களும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, மணிமாறனை போலீசார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில், பள்ளியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதற்காக ஆசிரியர் மணிமாறனை பள்ளி நிர்வாகம் நிரந்தரமாக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

    • உதிரி பாகங்களை திருடி கொண்டு கம்பெனியில் இருந்து வெளியே சென்றபோது, அவரை நிர்வாகத்தினர் கையும் களவுமாக பிடித்து மறைமலைநகர் போலீசில் ஒப்படைத்தனர்.
    • கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அறிவொளியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலையில் சென்னை ஜாபர்கான்பேட்டை சேர்ந்த அறிவொளி (வயது 56) என்பவர் பணிபுரிந்து வந்தார்.

    இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் கம்பெனியிலிருந்து உதிரி பாகங்களை திருடி அவரது மொபட் சீட்டுக்கு அடியில் வைத்துக் கொண்டு கம்பெனியில் இருந்து வெளியே சென்றபோது, அவரை நிர்வாகத்தினர் கையும் களவுமாக பிடித்து மறைமலைநகர் போலீசில் ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அறிவொளியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்த ஸ்மார்ட் கார்டு வடிவிலான, 37 ஆர்.சி., புத்தகங்கள் திடீரென மாயமானது.
    • புத்தகம் மாயமான சம்பவம் தொடர்பாக தாம்பரம் போலீஸ் நிலையத்திலும் புகார் செய்யப்பட்டது.

    தாம்பரம்:

    தாம்பரம், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்த ஸ்மார்ட் கார்டு வடிவிலான, 37 ஆர்.சி., புத்தகங்கள் திடீரென மாயமானது. இது தொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போக்குவரத்து ஆணையர் நிர்மல் ராஜ் அலுவலகத்துக்கு நேரில் வந்து சம்பந்தப்பட்ட அலுவலரிடம் விசாரணை நடத்தினார். மேலும் இது தொடர்பாக தாம்பரம் போலீஸ் நிலையத்திலும் புகார் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் ஆர்.சி. புத்தகம் மாயமானது தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களான வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் நேர்முக உதவியாளர் விஜயகுமார், கண்காணிப்பாளர்கள் பாலாஜி காளத்தி, இளநிலை உதவியாளர்கள் சாந்தி, தாமோதரன் ஆகிய 5 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.

    • மாமல்லபுரத்தை சேர்ந்தவர் சிவகுமார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மனைவி பிரியா, (வயது.24). இவர்களுக்கு கடந்த5 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி பிரியா உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். கீழ்ப்பாக்கம்அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பூஜை அறையில் இருந்து பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 13 பவுன் தங்க நகை திருட்டு போனது தெரிய வந்தது.
    • தங்க நகை திருட்டு போன சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள பாரேரி ஜீவா நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் குப்பன் (வயது 57), இவர் வீட்டை பூட்டிவிட்டு உடல்நிலை சரியில்லாத உறவினரை பார்ப்பதற்காக சென்றார். பின்னர் வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பூஜை அறையில் இருந்து பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 13 பவுன் தங்க நகை திருட்டு போனது தெரிய வந்தது.

    இதுகுறித்து குப்பன் மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • போலீசார் அய்யப்பனை கைது செய்து அவரிடமிருந்து 90 மது பாட்டில்களை கைப்பற்றினர்.
    • பெட்டிக்கடையில் சுதந்திர தினத்தன்று திருட்டுத்தனமாக மது விற்று கொண்டிருந்த ஜெயபாரதி என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள பகத்சிங் நகர் பகுதியில் சுதந்திர தினத்தன்று திருட்டுத்தனமாக ஒரு வீட்டின் அருகே மதுபான பாட்டில் விற்பனை செய்யப்படுவதாக கூடுவாஞ்சேரி மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து மதுவிலக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் ஆய்வு செய்தபோது அங்கு திருத்தேரி பகத்சிங் பகுதியை சேர்ந்த அய்யப்பன் (வயது 34), என்பவர் திருட்டுத்தனமாக மது விற்று கொண்டிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அய்யப்பனை கைது செய்து அவரிடமிருந்து 90 மது பாட்டில்களை கைப்பற்றினர்.

    இதே போல மறைமலைநகர் சிங்காரவேலு தெருவில் திருட்டுத்தனமாக மது விற்று கொண்டிருந்த சிங்கப்பெருமாள் கோவில் மண்டபத்தெருவை சேர்ந்த ராஜேஷ் ( 32) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 37 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    கூடுவாஞ்சேரி சீனிவாசபுரம் அருகே திருட்டுத்தனமாக மது விற்று கொண்டிருந்த விழுப்புரத்தை சேர்ந்த செல்வம் (வயது 39) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 12 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். கூடுவாஞ்சேரி அடுத்த காவனூர் மெயின் ரோடு அருகே ஒரு பெட்டிக்கடையில் சுதந்திர தினத்தன்று திருட்டுத்தனமாக மது விற்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ஜெயபாரதி (42) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஒரே நேரத்தில் வந்ததால் சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்
    • தாம்பரத்தில் அதிகாலையில் சிறிது நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

    செங்கல்பட்டு:

    கடந்த13-ந்தேதி முதல் நேற்றுவரை தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை என்பதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசித்து வரும் தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர்.

    சென்னையில் இருந்து மட்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை முதலே கார், ரெயில், அரசு மற்றும் ஆம்னி பஸ் மூலம் சென்று இருந்தனர். இதற்காக சிறப்பு பஸ்களும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் விடுமுறை முடிந்து நேற்று மாலை முதலே வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்பி வரத்தொடங்கினர். ஆயிரக்கணக்கான வாகனங்கள் நள்ளிரவில் சென்னை நோக்கி ஒரே நேரத்தில் வந்ததால் சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இன்று அதிகாலை சென்னையின் நுழைவு வாயிலான பரனூர் சுங்கச்சாவடியில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதைத்தொடர்ந்து வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில் அதிகாலை 3 மணிமுதல் காலை 7 மணிவரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்காமல் வாகனங்களை அனுப்பினர். இதனால் நெரிசல் தவிர்க்கப்பட்டது. தாம்பரத்தில் அதிகாலையில் சிறிது நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. போலீசார் வாகன போக்குவரத்தை சரி செய்தனர்.

    கோயம்பேட்டில் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் கோயம்பேடு பஸ் நிலையத்தை சுற்றி உள்ள முக்கிய சாலைகளில் 3 போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் , 8 சப்- இன்ஸ்பெக்டர்கள், 15 போலீசார் என 30க்கும் மேற்பட்டோர் அதிகாலை 4மணி முதல் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதன் காரணமாக தேவையற்ற வாகனங்கள் சாலைகளில் நிறுத்தப்படுவது தவிர்க்கப்பட்டது. போக்குவரத்து நெரிசலும் குறைந்தது.

    • மூன்று நாட்கள் தொடர் விடுமுறை, சர்வதேச விழா, புராதன சின்னங்களை பார்க்க இலவசம் என்பதால் பஸ் பயணிகளும் மாமல்லபுரத்தில் குவிந்தனர்.
    • பட்டம் விடும் விழாவின் மைதானம் அருகில் பிரமாண்ட மேடை அமைத்து அதில் இரவு நேர கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த தேவநேரி கிழக்கு கடற்கரை சாலையில் தமிழ்நாடு சர்வதேச பட்டம் விடும் திருவிழா நேற்று முன்தினம் தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது. இந்த பட்டம் விடும் திருவிழா நேற்று நிறைவடைந்தது.

    நிறைவு நாளான நேற்று மட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்தனர். இதனால் தேவநேரி முதல் மாமல்லபுரம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    மூன்று நாட்கள் தொடர் விடுமுறை, சர்வதேச விழா, புராதன சின்னங்களை பார்க்க இலவசம் என்பதால் பஸ் பயணிகளும் மாமல்லபுரத்தில் குவிந்தனர்.

    அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த பட்டம் விடும் கலைஞர்கள் திருவள்ளுவர், சூப்பர்மேன், யானை, குதிரை, விநாயகர், ஆல்டோபஸ், கதகளி, விநாயகர், கார்ட்டூன் வகைகள் என 100-க்கும் மேற்பட்ட பட்டங்களை பறக்க விட்டனர்.

    சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், பட்டம் விடும் விழாவின் மைதானம் அருகில் பிரமாண்ட மேடை அமைத்து அதில் இரவு நேர கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. பட்டம் விட கலந்து கொண்ட உள்நாட்டு, வெளிநாட்டு கலை ஞர்களுக்கு சுற்றுலாத்துறை சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    கடந்த 3 நாட்களில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பட்டம் விடும் திருவிழாவை கண்டு ரசித்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபடும்போது அந்த வழியாக ஆட்டோவில் வந்த ஒரு கும்பல் தப்பி ஓட முயன்றது‌.
    • செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜராக வரும் 2 பேரை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டியது தெரிய வந்தது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே ஆட்டோவில் பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் சுற்றி கொண்டிருப்பதாக மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து பொத்தேரி பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபடும்போது அந்த வழியாக ஆட்டோவில் வந்த ஒரு கும்பல் தப்பி ஓட முயன்றது‌.

    உடனே போலீசார் ஆட்டோவை மடக்கி பிடித்து அதில் இருந்த 3 பேரை விசாரித்த போது ஆட்டோவில் இருந்த அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளித்தனர்‌.

    இதையடுத்து 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்த போது செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜராக வரும் 2 பேரை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டியது தெரிய வந்தது.

    இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்லாவரம் காமாட்சி நகர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 20), மடிப்பாக்கம் சத்தியமூர்த்தி (23), மூவரசம்பட்டு பகுதியை சேர்ந்த மணிகண்டன் (30) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து ஆயுதங்களை கைப்பற்றினர். பின்னர் 3 பேரையும் செங்கல்பட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். நீதிபதி 3 பேரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

    • புராதன சின்னங்களை கௌரவிக்கும் வகையில் அர்சுனன்தபசு அருகே ஹேண்ட் இன் ஹேண்ட் தொண்டு நிறுவன தன்னார்வலர்கள் 1,000 பேர் ஒன்று கூடி, தேசியக் கொடியின் மூவர்ண கலரில் டீ-சர்ட் அணிந்து ஊர்வலம் சென்றனர்.
    • இன்று காலை செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளை சேர்ந்த 15 வயது முதல் 60 வயதுடைய 350 பேர் கலந்து கொண்ட சுதந்திர தின மாரத்தான் போட்டி பூஞ்சேரி டோல்கேட் ஓ.எம்.ஆர் சாலையில் இருந்து பண்டிதமேடு வரை 6.மீ, தூரத்திற்கு நடத்தப்பட்டது.

    மாமல்லபுரம்:

    இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை தமிழக அரசு "சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவாக" மாநிலம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி கொண்டாடி வருகிறது. மாமல்லபுரத்தில் தொடர்ந்து 3 நாட்களாக வீடுதோறும் தேசியக்கொடி இலவசமாக கொடுக்கப்பட்டது.

    புராதன சின்னங்களை கௌரவிக்கும் வகையில் அர்சுனன்தபசு அருகே ஹேண்ட் இன் ஹேண்ட் தொண்டு நிறுவன தன்னார்வலர்கள் 1,000 பேர் ஒன்று கூடி, தேசியக் கொடியின் மூவர்ண கலரில் டீ-சர்ட் அணிந்து ஊர்வலம் சென்றனர்.

    இன்று காலை செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளை சேர்ந்த 15 வயது முதல் 60 வயதுடைய 350 பேர் கலந்து கொண்ட சுதந்திர தின மாரத்தான் போட்டி பூஞ்சேரி டோல்கேட் ஓ.எம்.ஆர் சாலையில் இருந்து பண்டிதமேடு வரை 6.மீ, தூரத்திற்கு நடத்தப்பட்டது.

    மாரத்தான் போட்டியை மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் ருக்மாந்தகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகம், மாமல்லபுரம் கலங்கரை விளக்கம், தொல்லியல்துறை, தீயணைப்பு துறை, மாமல்லபுரம் பேரூராட்சி, காவல்துறை, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட பகுதிகளில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

    ×