என் மலர்
உள்ளூர் செய்திகள்

தொழிற்சாலையில் உதிரிபாகங்கள் திருடிய ஊழியர் கைது
- உதிரி பாகங்களை திருடி கொண்டு கம்பெனியில் இருந்து வெளியே சென்றபோது, அவரை நிர்வாகத்தினர் கையும் களவுமாக பிடித்து மறைமலைநகர் போலீசில் ஒப்படைத்தனர்.
- கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அறிவொளியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலையில் சென்னை ஜாபர்கான்பேட்டை சேர்ந்த அறிவொளி (வயது 56) என்பவர் பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் கம்பெனியிலிருந்து உதிரி பாகங்களை திருடி அவரது மொபட் சீட்டுக்கு அடியில் வைத்துக் கொண்டு கம்பெனியில் இருந்து வெளியே சென்றபோது, அவரை நிர்வாகத்தினர் கையும் களவுமாக பிடித்து மறைமலைநகர் போலீசில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அறிவொளியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






