என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    2-வது அணு உலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த 23-ந்தேதி காலை முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் 2-வது அணு உலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த 23-ந்தேதி காலை முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது., தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்ட நிலையில் நேற்று இரவு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. முதல்கட்டமாக 110 மெகா வாட் மின் உற்பத்தியை தொடங்கி படிப்படியாக முழு உற்பத்தி திறனை அடையும் என அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

    • பஸ் படிகட்டில் தொங்கியபடி ‘பந்தா’ காட்டும் மாணவர்களை போலீசார் எச்சரித்தும் இது தொடர்கதையாகி வருகிறது.
    • மேல்மருவத்தூர் அருகே இன்று காலை பஸ்சின் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற மாணவர் ஒருவர் நடுரோட்டில் தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மதுராந்தகம்:

    பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், பஸ்களில் படிக்கட்டில் தொங்கியபடி செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

    இதனை கண்டிக்கும் பஸ் டிரைவர்கள் கண்டக்டர்கள் மற்றும் பயணிகளிடம் அவர்கள் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற சம்பவம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தினந்தோறும் நடந்து வருகின்றன.

    பஸ் படிகட்டில் தொங்கியபடி 'பந்தா' காட்டும் மாணவர்களை போலீசார் எச்சரித்தும் இது தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் இன்று காலை மேல்மருவத்தூர் அருகே பஸ்சின் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற மாணவர் ஒருவர் நடுரோட்டில் தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    செய்யூரில் இருந்து அச்சரப்பாக்கம் நோக்கி இன்று காலை அரசு பஸ் (எண்.19) சென்றது. இதில் தனியார் பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் பஸ்சின் இரண்டு பக்க படிக்கட்டிலும் தொங்கியபடி பயணம் செய்தனர்.

    மேல்மருவத்தூர் பஸ் நிலையம் அருகே சென்றபோது பஸ்சின் பின்பக்க படிக்கட்டில் தொங்கியபடி வந்த சோத்துப்பாக்கத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவர் ஒருவர் தவறி நடுரோட்டில் விழுந்தார். அதிர்ஷ்டவசமாக பின்னால் வேறு வாகனங்கள் வராததால் அந்த மாணவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

    மாணவர்கள் பஸ்சில் தொங்கியபடி பயணம் செய்வதை பின்னால் வாகனத்தில் வந்த ஒருவர் செல்போனில் வீடியோ பதிவு செய்தார். அப்போது மாணவர் தவறி விழும் பதைபதைக்கும் காட்சியும் பதிவானது.

    இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கவுன்சிலர்கள் சொல்வதை மாநகராட்சி அதிகாரிகள் கேட்பதில்லை.
    • அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த திட்டங்களை வேண்டுமென்றே மூடுகிறார்கள்.

    மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க. கவுன்சிலர்கள் மன்றத்துக்கு வெளியே நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது கவுன்சிலர் கே.பி.கே.சதீஷ்குமார் கூறியதாவது:-

    கவுன்சிலர்கள் சொல்வதை மாநகராட்சி அதிகாரிகள் கேட்பதில்லை. மக்கள் பிரச்சினை குறித்து அவர்களிடம் தெரிவிக்கும்போது அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

    அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த திட்டங்களை வேண்டுமென்றே மூடுகிறார்கள். அம்மா உணவகம், அம்மா கிளினிக் போன்றவற்றை படிப்படியாக மூடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    இன்றைய மாநகராட்சி கூட்டத்தில் நிலைக்குழு தலைவர்கள், மண்டலக்குழு தலைவர்கள் பங்கேற்கவில்லை. தி.மு.க.வில் உட்கட்சி தேர்தல் நடப்பதால் மக்கள் பிரச்சினை பேச வரவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வந்த முதியவர் ஏற்கனவே 3 முறை தற்கொலைக்கு முயன்று இருந்தார்.
    • முதியவர் தொடர்ந்து தற்கொலை செய்யப்போவதாக கூறினார். அவரை குடும்பத்தினர் சமாதானப்படுத்தி வந்தனர்.

    சேலையூர்:

    சேலையூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் மனோகரன்(வயது64). உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவர் ஏற்கனவே 3 முறை தற்கொலைக்கு முயன்று இருந்தார். மேலும் அவர், தொடர்ந்து தற்கொலை செய்யப்போவதாக கூறினார். அவரை குடும்பத்தினர் சமாதானப்படுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் வீட்டில் உள்ள ஜன்னலில் மனோகரன் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சேலையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திமுக மாநகர செயலாளர்கள்- நிர்வாகிகள் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் அதில் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் பட்டியலை தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது.
    • தூத்துக்குடி, நெல்லை, நாகர்கோவில் ஆகிய ஊர்களுக்கான மாநகர செயலாளர், நிர்வாகிகள் பட்டியலும் வெளியாகி உள்ளது.


    தி.மு.க. மாநகர செயலாளர்கள்- நிர்வாகிகள் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் அதில் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் பட்டியலை தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது.

    தாம்பரம் மாநகர செயலாளர்-எஸ்.ஆர். ராஜா எம்.எல்.ஏ., அவைத் தலைவர்- கோ.காமராஜ், துணை செயலாளர்கள்-நரேஷ் கண்ணா, சதாசிவம், வசந்த குமாரி, பொருளாளர்-விஜயரங்கன், மாவட்ட பிரதிநிதிகள்- நெப்போலியன், ஆதிமாறன், சங்கர், தேவேந்திரன், த.ராஜா ராமன், டில்லி, நாகலிங்கம், க.ரமேஷ், தாமோதரன், தனசேகரன்.

    ஆவடி மாநகர செயலாளர்- ஆசிம்ராஜா, அவைத் தலைவர்-சண்.பிரகாஷ், துணைச் செயலாளர்கள்- சிங்காரம், சேகர், மகேஸ்வரி, பொருளாளர்-உதயகுமார், மாவட்ட பிரதிநிதிகள்- ஜோன்ஸ் மேன்யல், அபீப், ஜம்பு, காண்டீபன், ஹரி, ஜெகநாதன், சரத்குமார், வினோத், சரவணன், நரேஷ்.

    காஞ்சிபுரம் மாநகர செயலாளர்- தமிழ்ச்செல்வன், அவைத் தலைவர்-செங்குட்டுவன், துணைச் செயலாளர்கள்- முத்துசெல்வம், ஜெகநாதன், நிர்மலா, பொருளாளர்- சுப்பராயன், மாவட்ட பிரதிநிதிகள்- சுகுமாறன், விஸ்வநாதன், சுரேஷ், சங்கர், ரவிக்குமார், வரதராஜன், பாலமுருகன், பிர காஷ், சேகர், மாமல்லன்.

    இதேபோல் வேலூர், கடலூர், கும்பகோணம், தஞ்சை, திருச்சி, கரூர், சேலம், ஓசூர், திருப்பூர், ஈரோடு, சிவகாசி, தூத்துக்குடி, நெல்லை, நாகர்கோவில் ஆகிய ஊர்களுக்கான மாநகர செயலாளர், நிர்வாகிகள் பட்டியலும் வெளியாகி உள்ளது.

    • திருக்கழுக்குன்றத்தை சேர்ந்தவர் செல்லம்மாள்.
    • திருக்கழுக்குன்றம் போலீசார் கைது செய்தனர்.

    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றத்தை சேர்ந்தவர் செல்லம்மாள் (70). இவர் கல்பாக்கத்தில் இருந்து திருக்கழுக்குன்றத்திற்கு அரசு பஸ்சில் வந்தார்.

    அப்போது அருகில் அமர்ந்து இருந்த 2 பெண்கள் நைசாக அவரது 3பவுன் தங்க செயினை திருடி சென்று விட்டனர்.

    இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் செங்கல்பட்டு, கல்பாக்கம், திருக்கழுக்குன்றம், பகுதிகளில் கைவரிசை காட்டிய பழைய பெண் குற்றவாளிகள் பட்டியலை வைத்து தேடிவந்தனர்.

    இந்த நிலையில் செல்லம்மாளிடம் செயினை திருடியது தொடர்பாக திருப்பத்தூர் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த மோனிஷா (40), காயத்ரி (28), இருவரையும் திருக்கழுக்குன்றம் போலீசார் கைது செய்தனர்.

    • மோகன் அணுபுரத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில் நண்பர்களுடன் கலந்து கொண்டார்.
    • ராட்சத அலை மோகனை கடலுக்குள் இழுத்து சென்றது.

    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றம் அடுத்த நெரும்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பாரத்தசாரதி. இவரது மகன் மோகன் (வயது17). அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை மோகன் அணுபுரத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில் நண்பர்களுடன் கலந்து கொண்டார்.

    பின்னர் அவர் நண்பர்களுடன் சேர்ந்து கல்பாக்கம் சென்று அங்குள்ள கடலில் குளித்தார். அப்போது ராட்சத அலை மோகனை கடலுக்குள் இழுத்து சென்றது. நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.

    இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உதவியுடன் கடலில் மூழ்கி மாயமான மோகனை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் அதே பகுதி கே.வி.பள்ளி அருகே மோகன் உடல் கரை ஒதுங்கியது. கல்பாக்கம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கத்தை சேர்ந்தவர் யுவராஜ், (வயது.50). இவர் கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

    இவருக்கும், மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் கோபம் அடைந்த அவரது மனைவி நேற்று முன்தினம் அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மன உைளச்சலில் இருந்து வந்த யுவராஜ் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கல்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே உள்ள எருமையூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ்.
    • போலீசார் கைது செய்து அவர்களிடம் தீவிரமாக விசாரித்தனர்.

    வண்டலூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே உள்ள எருமையூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 25). அவரது தாய் கடந்த மே மாதம் மறைமலைநகர் போலீசில் புகார் செய்திருந்தார்.

    இந்த நிலையில் மாயமான பிரகாஷை வெட்டிக்கொன்று திருமுடிவாக்கம் அருகே உள்ள ஒரு கிணற்றில் வீசியது தெரியவந்தது. இதனைடுத்து பிரகாஷை வெட்டி கொலை செய்த வழக்கில் நேற்று முன்தினம் திருமுடிவாக்கத்தை சேர்ந்த மோசஸ் (20), தமிழ்மணி (23) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடம் தீவிரமாக விசாரித்தனர்.

    இந்த நிலையில் பிரகாஷ் கொலை வழக்கில் மண்ணிவாக்கத்தை சேர்ந்த கட்டிங் சிவா என்கிற சிவா (22), திருமுடிவாக்கத்தை சேர்ந்த கருப்பு என்கிற தமிழ் அழகு (24), சூரியா என்கிற சூரியன்(20) ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட 3 பேரை மறைமலைநகர் போலீசார் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி 3 பேரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

    • விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
    • இந்து அமைப்புகளுக்கும், பொதுமக்களுக்கும் கலெக்டர் ராகுல்நாத் அறிவுரை வழங்கினார்.

    செங்கல்பட்டு:

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந் தேதி கொண்டாடப்படுகிறது. செங்கல்பட்டில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம் மற்றும் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தப்பட உள்ளது.

    இந்த நிலையி்ல் செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவமனை கூட்டரங்கில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு அரசு அறிவுறுத்தியுள்ள விதிமுறைகளின்படி முறையாக பின்பற்றி கொண்டாடுவது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பு பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் ராகுல் நாத் தலைமையில் நடைபெற்றது.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங், தாம்பரம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் சக்கரவர்த்தி, செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் சூப்பிரண்டு பொன்ராம் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் அரசு அறிவுறுத்தி உள்ள விதிமுறைகளை பின்பற்றி விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும் என்று இந்து அமைப்புகளுக்கும், பொதுமக்களுக்கும் கலெக்டர் ராகுல்நாத் அறிவுரை வழங்கினார்.

    • செஸ் ஒலிம்பியாட்டில் மேலும் ஒரு மணி மகுடமாய் அமைந்தது, யோகா பயிற்சி.
    • மன புத்துணர்ச்சி பெறவும், செஸ் வீரர்களை உற்சாகமாக வைக்கவும் தமிழக அரசால் ஏற்பாடு செய்யப்பட்டது.

    செஸ் ஒலிம்பியாட் மூலம் உலக அரங்கில் தமிழகத்தின் மீதான பிம்பம் அதிகரித்துள்ளது. பிரம்மாண்டமும், பாரம்பரியமும் இணைந்திருந்தது. நம் நாட்டவர் மட்டுமல்ல வெளிநாட்டினரும் வாய் பிளந்து, ரசித்து, ருசித்து செஸ் ஒலிம்பியாட்டை ஒரு திருவிழாவாக கொண்டாடி தீர்த்தோம். நேப்பியார் பாலம் முதல் தம்பி சிலை வரை ஒவ்வொன்றும் சுவாரஸ்யம் என்றால் அது மிகையாகாது. செஸ் ஒலிம்பியாட்டில் மேலும் ஒரு மணி மகுடமாய் அமைந்தது, யோகா பயிற்சி. மன புத்துணர்ச்சி பெறவும், செஸ் வீரர்களை உற்சாகமாக வைக்கவும் தமிழக அரசால் ஏற்பாடு செய்யப்பட்டது. அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லுரியின் பேராசிரியர் இந்திரா தேவி மேற்பார்வையில் செஸ் வீரர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

    அது குறித்த ஒரு நேர்காணல்!

    யோகா மூலம் என்னென்ன நோய்களை குணப்படுத்தலாம்?

    யோகா என்பது மருந்தில்லா மருத்துவம். சர்க்கரை நோய், ரத்தகொதிப்பு, உடல் பருமன் போன்ற பிரச்சனைகளுக்கு யோகா மூலமும், இயற்கை உணவின் மூலமுமே சரி செய்து விடுவோம். குறிப்பாக ஐடி துறையிலும், உட்கார்ந்து கொண்டே வேலை பார்ப்பவர்களுக்கும் சீக்கிரம் சர்க்கரை, உடல் பருமனுக்கு உள்ளாகின்றனர் அவர்களுக்கு நிச்சயம் இந்த யோகா வரப்பிரசாதம் தான்.

    செஸ் ஒலிம்பியாட்டில் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் வாய்ப்பு எப்படி கிடைத்தது?

    ஆயுஷ் என்ற மத்திய அரசு நிறுவனத்தின் மூலம் தமிழக அரசு எங்களை அணுகியது. சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி தான் யோகாவில் தலைமையகம் என்பதால், வீரர்களுக்கு பயிற்சி அளிக்க எங்களுக்கு வாய்ப்பு கொடுத்தது. 187 நாடுகளில் இருந்து வீரர்கள் செஸ் ஒலிம்பியாட்டிற்கு தமிழகம் வந்தனர். கிட்டத்தட்ட 2000 வீரர்கள். அவர்கள் யோகா பயிற்சியில் மிகவும் ஆர்வமுடன் பங்கேற்றனர். நாங்கள் 21 குழுக்களாக பிரிந்து வீரர்களுக்கு பயிற்சி அளித்தோம். சுமார் 60 யோகா மருத்துவர்கள் இதில் பங்கேற்றோம்.

    வெளிநாட்டு வீரர்கள் யோகாவில் எப்படி தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்?

    ஆரம்பத்தில் கொஞ்சம் பேர் தான் இதில் பங்கேற்றனர். யோகா பயிற்சியை பற்றி அறிந்ததும் நிறைய பேர் இதில் பங்கேற்க துவங்கினர். இது அவங்களுக்கு புதுவித அனுபவமா இருந்ததா சொன்னாங்க. ஸ்ட்ரெஸ் ரிலீபா இருந்ததாகவும், புத்துணர்ச்சியுடன் இருந்ததாகவும் சொன்னாங்க.

    எத்தனை நாட்கள் அவங்களுக்கு யோகா பயிற்சி அளித்தீர்கள்?

    செஸ் வீரர்கள் யோகா கத்துக்கிறதில ரொம்பவும் ஆர்வம் காட்டினாங்க. நம்ம தமிழக அரசு இலவசமாகவே யோகா பயிற்சி அளித்ததை வியந்து பார்த்தாங்க. எங்க நாட்ல யோகா மிகவும் காஸ்ட்லியானது. இங்கு இலவசமாக சொல்லிக் கொடுப்பது ஆச்சரியமாக இருப்பதாக கூறினர். செஸ் ஒலிம்பியாட் நடந்த 14 நாட்களுமே நாங்க யோகா வகுப்பு எடுத்தோம். காலை 8 மணி முதல் 12 மணி வரை நாங்க யோகா பயிற்சி சொல்லிக் கொடுத்தோம்.

    எந்த நாட்டினர் ஆர்வமுடன் யோகா கத்துக்கிட்டாங்க?

    நைஜீரியா, அமெரிக்கர், உகாண்டா இவங்க ரொம்ப ஆர்வமா கத்துக்கிட்டாங்க. ஜார்ஜியா, டான்சானியா, டொமினிகா, ஸ்பெயின், உக்ரைன் இந்த நாடுகளில் இருந்தும் யோகா கத்துக்கிட்டாங்க. அவங்க அனுபவங்களை வீடியோவா எங்க கிட்ட பகிர்ந்திக்கிட்டாங்க.

    செஸ் வீரர்களுக்கு யோகா எந்தளவுக்கு பயனுள்ளதா இருந்தது?

    முதல்ல செஸ் வீரர்களுக்கு ஏன் யோகா முக்கியம்னு சொல்றேன். மத்த விளையாட்டுக்கள் மாதிரி செஸ் கிடையாது. இது மைண்ட் கேம்ஸ். ஒரே இடத்தில் உக்கார்ந்து மூளைக்கும், கண்களுக்குமான ஒரு விளையாட்டு. இதனால், சீக்கிரமாவே அவங்க உடலும், மனமும் சோர்வடைந்துவிடும். புது இடம்ங்கிறதால தூங்குவதற்கும் சிரமம்பட்டிருப்பாங்க. யோகா பண்ணுவதால் நல்லா தூங்கினதா சொன்னாங்க. விளையாட்டுல நல்லா கவனம் செலுத்தினாங்க.

    என்னென்ன யோகா பயிற்சி அவங்களுக்கு சொல்லிக் கொடுத்தீங்க…

    யோகா ஆசனங்கள், மூச்சுப்பயிற்சி, தியானம், தாரன பயிற்சி, யோக நித்திரை பயிற்சி அளித்தோம். பிராண முத்திரை, இருதய முத்திரை, கைகளை தட்டுவதையும், சிரிப்பு யோக சிகிச்சையும் கொடுத்தோம். திராட்டகா என்ற கண்களுக்கான பயிற்சியும் அளித்தோம்.

    யோகா பயிற்சி பெற்ற வீரர்கள் என்ன சொன்னாங்க…

    யோகா பண்ணிட்டு போனதால தான் எங்களால நல்லா விளையாட முடிந்ததுனு சொன்னாங்க. தூங்கி எழுந்து புத்துணர்ச்சியோட இருந்ததா சொன்னாங்க. தன்னம்பிக்கையும், உற்சாகமும் இருந்ததாகவும் சிந்திக்கும் திறமை அதிகப்படுத்தியதுனு சொன்னாங்க.

    கொரோனா சமயத்தில் உங்களின் பங்களிப்பு எப்படி இருந்தது?

    கொரோனா சமயத்தில், எங்கள் மருத்துவக் குழு மருத்துவமனைக்கே சென்று நோயாளிகளுக்கு மூச்சுப் பயிற்சி, தியானம் சொல்லிக் கொடுத்தோம். ஆக்சிஜன் அளவு உடலில் குறையும் நோயாளிகளுக்கு நாங்கள் அளித்த மூச்சுப் பயிற்சியின் மூலம் அவர்களின் உடலில் இயற்கையான முறையில் ஆக்சிஜன் அளவு அதிகரித்தது.

    • ரெயில்வேயில் மூத்தகுடி மக்களுக்கு நிறுத்தப்பட்ட பயண சலுகைகளை திரும்ப வழங்க வேண்டும்.
    • தாம்பரம் ரெயில் நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    தாம்பரம்:

    ரெயில்வேயில் மூத்தகுடி மக்களுக்கு நிறுத்தப்பட்ட பயண சலுகைகளை திரும்ப வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தாம்பரம் ரெயில் நிலையத்தில் ஓய்வூதியதாரர்கள் நல சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி ரெயில் நிலைய மேலாளரிடம் வழங்கினர். இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    ×