என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

விதிமுறைகளை பின்பற்றி விநாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டும்- இந்து அமைப்புகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
- விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
- இந்து அமைப்புகளுக்கும், பொதுமக்களுக்கும் கலெக்டர் ராகுல்நாத் அறிவுரை வழங்கினார்.
செங்கல்பட்டு:
விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந் தேதி கொண்டாடப்படுகிறது. செங்கல்பட்டில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம் மற்றும் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தப்பட உள்ளது.
இந்த நிலையி்ல் செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவமனை கூட்டரங்கில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு அரசு அறிவுறுத்தியுள்ள விதிமுறைகளின்படி முறையாக பின்பற்றி கொண்டாடுவது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பு பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் ராகுல் நாத் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங், தாம்பரம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் சக்கரவர்த்தி, செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் சூப்பிரண்டு பொன்ராம் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் அரசு அறிவுறுத்தி உள்ள விதிமுறைகளை பின்பற்றி விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும் என்று இந்து அமைப்புகளுக்கும், பொதுமக்களுக்கும் கலெக்டர் ராகுல்நாத் அறிவுரை வழங்கினார்.






